18 பிப்., 2011

மீனவன் - பயோடேட்டா...


பெயர்                                   : தமிழக மீனவன்
இயற்பெயர்                        : படகோட்டி 
தலைவர்                             : முன்னொரு காலத்தில் எம்.ஜி.ஆர்  
துணைத் தலைவர்              : வட்டிக்குப் பணம் தருபவர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள்  
  : சிதறிக்கிடக்கும் மீனவசங்கத் தலைவர்கள்
வயது                                   : சிங்களக் கடற்படையைப் பொறுத்தது
தொழில்                              : சிங்களத் துப்பாக்கிகள், வலையறுக்கும் நவீனக்
                                                   கப்பல்களுக்கு சாகசமாய்த் தப்பிப் பிழைப்பதும்,
                                                   மிச்ச நேரத்தில் மீன் பிடிப்பதும் 
பலம்                                     : கடலை ஆளும் தைரியம்
பலவீனம்                             : இன்னும் கடலை மட்டுமே நம்பி இருப்பது
நீண்ட கால சாதனைகள்        : சுனாமிக்குச் சோர்ந்துவிடாதது  
சமீபத்திய சாதனைகள்           : ஒருவேளை வரும் தேர்தலில் செய்யக்கூடும்!
நீண்டகால எரிச்சல்                : கச்சத்தீவு
சமீபத்திய எரிச்சல்                   : கலைஞரும், சோனியாவும்
மக்கள்                                  : இன்றைய பொழுதுக்கு உயிரோடு இருப்பவர்கள்
சொத்து மதிப்பு                          : கோபத்தில் எரியும் வயிறும், 
                                                             கிழிந்துபோன வலைகளும்
நண்பர்கள்                                  : இந்தியக் கடற்படையினர் அல்ல
எதிரிகள்                                      : மீன்பிடித் தொழிலில் இறங்கும் 
                                                           கார்ப்பரேட் கம்பெனிகள்
ஆசை                                           : "வங்கக்கடல் முழுதும் தொழில் செய்குவோம்" 
                                                           என்று பாட
நிராசை                                       :  "வங்கக்கடல் முழுதும் உயிர் கொல்லுவோம்" 
                                                             என்று மாற்றிப்பாடப் படுவது
பாராட்டுக்குரியது                    : நாளை பற்றிய நம்பிக்கையை இன்னும் 
                                                              கைவிடாமல் இருப்பது
பயம்                                             : இனி கரையில்தான் மீன்பிடிக்க வேண்டுமோ?
கோபம்                                        : சாவிலும் சம்பாதிக்க நினைக்கும் 
                                                          அரசியல்வியாதிகள்மேல்
காணாமல் போனவை              : இந்திய இறையாண்மையைத் 
                                                                 தேடிக் கொண்டிருக்கிறார்கள்
புதியவை                                    : உதயமாகும் ஒவ்வொரு நாளும்
கருத்து                                        : # tnfisherman சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
டிஸ்கி                                          : முள்ளெடுத்து மீன் தின்னும் இந்திய 
                                                           அதிகாரவர்க்கம், ஒரு வில்லெடுத்து 
                                                           சிங்களவன் திசை நீட்டக் கூடாதோ?
  

கூடுதலாய் இரண்டு வலைப்பக்கங்கள்..
  
பெண்கள், வயசானவங்க- இதப் படிக்காதீங்க -

லாக் அவுட் பண்ணிட்டு வாக் அவுட் பண்ணு ! (வியாபாரச் சிறுகதைகள்-1)

28 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

// வயது : சிங்களக் கடற்படையைப் பொறுத்தது

பலவீனம் : இன்னும் கடலை மட்டுமே நம்பி இருப்பது

சமீபத்திய சாதனைகள்: ஒருவேளை வரும் தேர்தலில் செய்யக்கூடும்!

சொத்து மதிப்பு: கோபத்தில் எரியும் வயிறும், கிழிந்துபோன வலைகளும்

பாராட்டுக்குரியது: நாளை பற்றிய நம்பிக்கையை இன்னும்
கைவிடாமல் இருப்பது
பயம் : இனி கரையில்தான் மீன்பிடிக்க வேண்டுமோ?
கோபம் : சாவிலும் சம்பாதிக்க நினைக்கும் அரசியல்வியாதிகள்மேல் //

யதார்த்தம்.. அருமையான வரிகள்..

தமிழ் உதயம் சொன்னது…

மீனவன் -பயோடேட்டாவை வாசித்த போது, இந்த வார ஆனந்தவிகடனில் வந்த மாலதி மைத்ரி எழுதிய கெடுக சிந்தை கடிது இவள் துணிவே எனகிற தலைப்பில் வந்த கவிதை ஞாபகத்துக்கு வந்தது.

vinthaimanithan சொன்னது…

நல்ல தருணத்தில் நல்ல முறையில் வெளியிடப்பட்டுள்ள பயோடேட்டா...

பயோடேட்டா படிக்கும் நண்பர்கள் யாவரும் அவர் குறிப்பிட்டுள்ள "கற்றது தமிழ்" இயக்குநர் ராமின் காட்சி வலைப்பூவிலுள்ள "பெண்கள், வயசானவங்க- இதைப் படிக்காதீங்க" கட்டுரையைத் தவறாது படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

செந்திலண்ணனுக்கு,

நானும் பார்த்தாவும் இணைந்து துவங்கியுள்ள கதைவனம் வலைப்பூவிற்கு அறிமுகம் கொடுத்ததற்கு நன்றி!

Bibiliobibuli சொன்னது…

//பலம்: கடலை ஆள்வது//

மீனவர்கள் எங்கே கடலை ஆள்கிறார்கள். கடலையும் ஆளுபவர்கள் வேறோ யாரோ தான்.

மதுரை சரவணன் சொன்னது…

பயோடேட்டா.... சூப்பர்.வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் சொன்னது…

பயோடேட்டா.... சூப்பர்.வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

பெயரில்லா சொன்னது…

நல்லாயிருக்கு

Chitra சொன்னது…

சோகமே வாழ்க்கை என்று அவர்களுக்கு ஆகி விட்டது... கண்ணீர் துடைப்பவர் யாரோ?

ஹேமா சொன்னது…

ஒவ்வொன்றும் உறைக்குது மனசில.உறைக்கணுமே சம்பந்தப்பட்டவங்களுக்கு !

Philosophy Prabhakaran சொன்னது…

Nice...

Philosophy Prabhakaran சொன்னது…

@ விந்தைமனிதன்
// "கற்றது தமிழ்" இயக்குநர் ராமின் காட்சி வலைப்பூ //

இது தெரியாம போச்சே... பாத்துடுறேன்...

ஜோதிஜி சொன்னது…

உங்கள் ஆக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மிக சிறந்த படைப்பு இது.

இவர்கள் தங்களின் பலத்தை இன்னமும் கூட உணராமல் இருப்பது.

சக்தி கல்வி மையம் சொன்னது…

தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

Sriakila சொன்னது…

//முள்ளெடுத்து மீன் தின்னும் இந்திய
அதிகாரவர்க்கம், ஒரு வில்லெடுத்து
சிங்களவன் திசை நீட்டக் கூடாதோ?//

'நச்!'

ஈரோடு கதிர் சொன்னது…

//சிங்களக் கடற்படையைப் பொறுத்தது\\

ப்ச்!!


ஆகச்சிறந்ததொரு பயோடேட்டா

ஆர்வா சொன்னது…

இந்த பயோடேட்டா வலிக்கிறது

கவிதை காதலன்

Balakumar Vijayaraman சொன்னது…

நிதர்சனம்.

அம்பிகா சொன்னது…

\\மக்கள் : இன்றைய பொழுதுக்கு உயிரோடு இருப்பவர்கள்
சொத்து மதிப்பு : கோபத்தில் எரியும் வயிறும்,
கிழிந்துபோன வலைகளும்\\

Jana சொன்னது…

உண்மைதான். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் மிக உன்னிப்பாக கவனித்தால், இரண்டு பகுதி தமிழ் மினவர்களையும் மோதிக்கொள்ளவைத்து, இரு நாட்டு தமிழர்கள் மத்தியிலும் பரிவினைகளை உண்டாக்கும் .ரகசிய கூட்டுச்சதி ஒன்று அரங்கேறிவருவதை அனைவரும் உன்னிப்பாக கவனித்து, செயற்படவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

அஞ்சா சிங்கம் சொன்னது…

வலி நிறைந்த வரிகள் .............

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கலங்க வைக்கும் வரிகள்
என்று மாறுமோ மீனவர் நிலை..

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

மீனவர்களுக்கான பயோடேட்டா நீங்க வெளியிடுவீங்கனு எதிர்பார்த்தேன்.நிறைவேறிவிட்டது. பன்ச்.

பெயரில்லா சொன்னது…

அருமை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

யதார்த்தம்.

Unknown சொன்னது…

//துணைத் தலைவர் : வட்டிக்குப் பணம் தருபவர்கள்//

நிஜம்..

Unknown சொன்னது…

//சொத்து மதிப்பு : கோபத்தில் எரியும் வயிறும், கிழிந்துபோன வலைகளும்//
//வயது : சிங்களக் கடற்படையைப் பொறுத்தது//


இது கே.ஆர்.பி.யின் பிரத்யோக ஸ்டைல்

Unknown சொன்னது…

//ஒவ்வொன்றும் உறைக்குது மனசில.//