15 பிப்., 2011

கடவுள் பேசுகிறேன்...


பரபரப்பான 
காலை வேளையொன்றில் 
கடைவீதியின் டீக்கடையில் 
அரசியல் விவாதங்களோடு 
புகைந்து கொண்டிருக்கும் 
விரல்களுடன் நிற்கையில் 
எங்கள் முன்  தோன்றினார்
கடவுள்!

வெறுமனே எங்களை உற்றுப் பார்த்த 
அவரிடம் 
”டீ வேணுமா என்றான்” நண்பன் 
தலையாட்டிவிட்டு 
உரிமையுடன் இரண்டு வடைகளும் 
எடுத்துக்  கொண்டார் கடவுள்!

நண்பன் நீட்டிய சிகரெட்டை 
மறுத்து 
டீ குடித்தபின் 
ஒரு சுருட்டைப் பற்றவைத்தார்..

அதன்பின்
எங்காவது எதிர்ப்படுவார்  
கொடுக்கும் காசை 
வாங்கிக்  கொண்டு சிறிய புன்னகை 
தருவார்!

பின்னொரு நாளில் 
’டாஸ்மாக்’ ஒன்றின் வெளிப்புறமாக 
முகமெல்லாம் ஈக்கள் விளையாட 
இறந்து கிடந்தார்
கடவுள்!...

25 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

vadai

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கவிதையிலும் உங்கள் ஆட்சி...
கவிதை மிக மிக அருமை..

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்க கவிதை மனசை ஏதோ பன்னுது சார். ஒரு கவிதைன்னா ஒரவித தாக்கத்தை உருவாக்கனும். அந்த தாக்கம் இந்த படைப்பில் இருக்கு சார்..
அருமை...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

யதார்த்த கவிதை வாழ்த்துக்கள்...
என்றும் என் ஆதரவும் வாக்குகளும் உங்களுக்கு உண்டு..

அஞ்சா சிங்கம் சொன்னது…

கலக்கல் கவிதை கொஞ்சம் கணம் அதிகம் ...............

Unknown சொன்னது…

கடவுளை அடைந்த கடவுள். அருமையான கவிதை.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

இதுமாதிரி (கடவுள்)n இருக்காங்கள்ள செந்தில்.

மாணவன் சொன்னது…

யதார்த்த வரிகள்...

சூப்பர்

Chitra சொன்னது…

ஏழையின் சிரிப்பில் மட்டும் அல்ல, ஏழையின் துன்பத்திலும் கடவுளை கண்டு இருக்கீங்க.... ம்ம்ம்.....

அன்பரசன் சொன்னது…

//முகமெல்லாம் ஈக்கள் விளையாட
இறந்து கிடந்தார்
கடவுள்!...//

உருக்கமான வரிகள்..
செம செம..

ஹேமா சொன்னது…

பாவமான கடவுள்கள் நிறையப்பேர் !

test சொன்னது…

அருமை பாஸ்!

Unknown சொன்னது…

செயற்கை கடவுளின் இயற்கை மரணம்..

Unknown சொன்னது…

அண்ணே உங்களின் இந்தக் கவிதையை கவிதை உலகம் தொகுப்பில் ஏற்கனவே படித்துள்ளேன்.நல்கவிதை.

Unknown சொன்னது…

இது மீள் பதிவு தானே. ஏன் குறிப்பிடவில்லை, உங்கள் மீது அவை மரபை மீறியதற்க்காக சு.சுவாமி அல்லது சோ மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது # சபாநாயகர்.

காமராஜ் சொன்னது…

படித்து முடித்ததும்
ஒரு மௌனம் வந்து கவ்விக்கொள்கிறது.

அம்பிகா சொன்னது…

//முகமெல்லாம் ஈக்கள் விளையாட
இறந்து கிடந்தார்
கடவுள்!...//

ஆங்காங்கே நிறைய கடவுள்கள் இது போல.

ராஜ நடராஜன் சொன்னது…

வலு என்பேனா?
வலி என்பேனா?

Anisha Yunus சொன்னது…

மிக அருமை செந்திலண்ணா,

வலிகளை உணர்த்தும் யதார்த்தம்.

Jana சொன்னது…

அப்ப கடவுளும் அப்படித்தான் என்றீங்கபோல!!

வினோ சொன்னது…

வார்த்தைகள் இல்லாமல் பேசிவிட்டு போகிறார்கள்....

Philosophy Prabhakaran சொன்னது…

அப்புறம் அந்த கடவுளை அடக்கம் பண்றதுக்காவது பக்தகேடிகள் யாராச்சு வந்தாங்களா...

ஈரோடு கதிர் சொன்னது…

கடவுளே!!!

ம.தி.சுதா சொன்னது…

vrey nice touch bro... i'm feel..

அருண் சொன்னது…

அருமை,ஒரு வித தாக்கம் படிச்சு முடித்தவுடன் இருக்கு.
-அருண்-