25 பிப்., 2011

தெ.மு.தி.க-வும், கேபிளு சங்கருலுவும்...

நேற்று நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தபோது 'கேப்புட்டன்' கட்சில தெலுங்கு பேசத்தெரிந்த ஆளுகளுக்கு அல்லது பூர்வாசிராம மக்களுக்கு பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படுவதாக சொன்னார். எனக்கோ ஆச்சர்யம் என்னடா இது 'கேப்புட்டன்' பச்சை தமிலனாச்சே.. டமிலைத் தவிர வேற்று மொழிப்படங்களில் கூட நடிக்க மறுத்த ஆளாச்சே என விசயகாந்து பக்கம் இருந்த நியாயத்த பேசுனேன்.

ஆனா கவரை நாயுடு பிரிவை சேர்ந்த 'கேப்புட்டன்' அவரது மச்சான் குடும்பம் எல்லாம் வீட்டில் சுந்தரத் தெலுங்கில் மாட்லாடுவதாக சொன்னார். டமிலை காப்பாற்ற தன் 'நைனா' மேல் சத்தியம் செய்துவிட்டு கட்சியை தொடங்கியிருக்கும் 'கேப்புட்டன்' நாளது தேதி வரைக்குமே மக்களின் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியது என்னவோ பேருக்குதான் என்றாலும்

தன் கட்சியில் இருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்கள்?? படையைக் கட்டி ஆள தெலுங்கர்களால் மட்டுமே முடியும் என்பதில் வியப்பொன்றும் இல்லை.

எனக்குத் தெரிந்து நம்ம பதிவர்களில் நன்றாக தெலுங்கு பேசும் ஆள் நம்ம கேபிள்தான் எனவே இந்த அதி சிறப்பான தகுதி அவருக்கு இருப்பதால் அவரின் பெயரை 'கேபிளு சங்கருலு' என்று மாற்றிக்கொண்டு சைதாப்பேட்டை தொகுதியில் நிக்க வைத்தால் அமோக வெற்றி பெற்று தன் கேபிள் நெட்வொர்க்கில் 'கேப்புட்டன்' நடித்த அத்தனை தமில் படங்களையும் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டு மக்களை மகிழ்விப்பார்.

தெ.மு.தி.கவில் சீட்டு கேட்பவர்கள் தங்கள் பெயர்களுடன் 'லு' சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக முன்னுரிமை கிடைக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே போஸ்ட்டர்களில் 'சுதிச்லு' காரு 'பிரேமலதாலு' காரு எனப்புகழ் பாடுங்கள்.

ஆகவே வரும் தேர்தலில் "கேப்புட்டன்' கட்சிக்கு வாக்களித்து தமிழகத்தில் தெலுங்கை வாழவைக்குமாறு 'வந்தாரை வாழவைக்கும்' கூமுட்டை தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அதென்ன தெ.மு.தி.க என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது அது உங்களுக்கே தெரிந்திருக்க வேண்டாமா?...

48 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம்..

sathishsangkavi.blogspot.com சொன்னது…

தெ.மு.தி.க நல்ல பெயர்...

Unknown சொன்னது…

தெலுங்கர்கள் முன்னேற்ற திருட்டு கழகம்

சக்தி கல்வி மையம் சொன்னது…

என் தாய் மொழி தெலுங்குதா தரைவரே... எனக்கு சீட் கிடைக்குமா?

அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..

Unknown சொன்னது…

எவ்வளவு பேர வாழ வச்ச தமிழ் நாடு இவர்களை கைவிட்டுவிடுமா?
வாக்களிப்போம்.... வாழ வைப்போம்..

Sukumar சொன்னது…

டாக்டர் கேப்டன்லு வாழ்க வாழ்க...!!!

மாயாவி சொன்னது…

ஏம்பா இதே ரெஞ்சுல போனா

சீமான் - சைமன் என்கிற கிற்ஸ்டியன்
வைகோ - தெலுங்கு நாயக்கர்.

என்று சொல்லுவீர்கள் அப்பறம் நம்ம தமிழ் ஈன தலைவருக்கு செளகிரியம் ஆகிவிடும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

டாக்டர்லு கேப்டன்லு வாழ்கலு வாழ்கலு

Unknown சொன்னது…

எப்படியோ சைக்கிள் கேப்புல, ஒரு பச்ச குழந்த பேர மாத்தி, அதோட மனசுல அரசியல் ஆசையை விதைச்சுட்டீங்க.. நடக்கட்டும்.

எவ்வளவோ பொறுத்துக்குறோம், இத பொறுத்துக மாட்டோமா?

Unknown சொன்னது…

//வணக்கம்..//

தப்பா சொல்லிட்டேன்..
வணக்கமுலு,
சந்தோஷமுலு...

வினோ சொன்னது…

சரியா போச்சு.. எத்தனை பேரைத்தான் வாழவைக்கிறது?

மாணவன் சொன்னது…

டாக்டர்லு கேப்டன்லு வாழ்கலு வாழ்கலு

:)

vinthaimanithan சொன்னது…

ஆமா... உங்களைக் கூட ஊருல செந்தி'லு' அப்டீன்னுதானே கூப்பிடுவாங்க? :))

பாட்டு ரசிகன் சொன்னது…

அப்படியே ஆகட்டும்...

CS. Mohan Kumar சொன்னது…

கேபிளு எம். எல். ஏ ஆகிட்டா அப்புறம் நம்மள பிடிக்க முடியாதே

Unknown சொன்னது…

வந்தனமுலு,

இந்த கேபிள் காரு சிங்கப்பூர்ல உந்தியா இல்ல பழனியில உந்தியா? # ஜஸ்ட் டவுட்டுலு :))

ராஜவம்சம் சொன்னது…

பஸ்ஸில் நடந்த ஒருவரி உரையாடலில் ஒரு அழகியப்பதிவு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தெ.மு.தி.கவில் சீட்டு கேட்பவர்கள் தங்கள் பெயர்களுடன் 'லு' சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக முன்னுரிமை கிடைக்கும்//

நீறு எவருலு......ஆகாரம் சேசியா செப்பண்டி....

Unknown சொன்னது…

தெலுங்கு மேல் ஏன் இந்த கொலைவெறி??

பெயரில்லா சொன்னது…

"இண்டியாலோ செகண்ட் லார்ஜஸ்ட் ஸ்பீக்கிங் லாங்குவேஜ் எதி தெரியுமா?"

"தமிழ்"

"இல்லை..தெலுங்கு..அதுக்கு அப்புறம்தான் தமிழ்"

"நான் ஆந்திராவுல இருந்து வந்து இவ்ளோ அழகா தமிழ் பேசறேன். நீங்க தமிழ் நாட்லே இருந்துகிட்டு இங்கிலீஸ்ல பேசறீங்க..அப்பறம் எப்படி ஐயா தமிழ் வாழும்"

கே.ஆர்.பி. அண்ணே..நீங்க டெர்ரிபிக் சயன்டிஸ்ட்டா..இல்ல சயின்டிபிக் டெர்ரரிஸ்ட்டா..

குடுகுடுப்பை சொன்னது…

விசயகாந்தை விமர்சிப்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களை 400 வருடத்திற்கு முன்னமே இங்கே வந்தவர்கள், அவர்களும் இனி இந்த மண்ணின் மைந்தர்களே. வைகோவை எடுத்துக்கொள்ளுங்கள் உதாரணத்திற்கு

Arun Ambie சொன்னது…

உங்கள் பெயர் சுலபமாக இருக்கும். முயன்று பாருங்கள், செந்திலு. ஏற்கனவே தெ.மு.தி.க. கட்சியில் இருந்தீர்களானால் என் அரசியல் சிற்றறிவை மன்னிக்கவும்....

செந்திலான் சொன்னது…

இது தமிழர் நாடு என்று சொன்னவுடன் உடனே இங்குள்ள மற்ற இனத்தவர் என்ற கேள்வி வந்து விடுகிறது. இந்த நம்பிக்கை அவர்கள் மனதில் ஏற்பட்டவுடன் இந்த மண்ணின் மீதான அவர்களின் பற்றுதலும் போய்விடுகின்றது. ஆனால் இது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் பொருந்துவதில்லை வைகோ-சிதம்பரத்தை உதாரணம் எடுக்கலாம்."விஷ" ய காந்து இந்த சாதி இனப் பாசத்தாலே வீழ்வார்

vasu balaji சொன்னது…

:)))

surivasu சொன்னது…

என்ன வேணா எழுதனும்னு எழுதாதிங்க. உங்க ப்ளாகையே எல்லா தமிழ் தெரிஞ்ச மற்ற மொழிக்காரங்களும் படிக்கிறாங்க என்பதை மனசில வச்சிக்கிங்க. நம்ம தமிழ் மக்களுக்கு மட்டும் தான் தமிழ தவிர வேற மொழி கத்துக்கற ஆர்வம் சுத்தமா இல்ல.

VELU.G சொன்னது…

அப்படியா விஷயம்

அஞ்சா சிங்கம் சொன்னது…

என்ன தல இந்த பதிவுக்கு நீங்க ஏன் +18 போடல என்னை மாதிரி இளகிய மனம் படைத்தவர்கள் அந்த படத்தை பார்த்தால் என்ன ஆகும் ?

அட காத்து வேகமா அடிச்சா எண்ண பண்றது முதலில் எங்களை இப்படி பயம் காட்டுறதை நிறுத்துங்க அப்புறம் அந்த ஆளை கீழ எறங்கி உக்கார சொல்லுங்க .

தேர்தல்ல நின்னா போதும் இப்படி கேமரா மேல எல்லாம் ஏறி நிக்க கூடாதுன்னு சொல்லுங்க ....................

செந்திலான் சொன்னது…

ஒரு மொழி பேசுவோர் நீண்ட காலமாக வேறு ஒரு மொழி பேசும் இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்ததாலேயே அவர்கள் அந்த மண்ணில் மைந்தர்களாகி விடுவார்களா? தெலுங்கு பேசுவோர் இன்று தமிழ் நாட்டில் தங்களது அடையாளத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள்
தமிழ்நாடு தெலுங்கர் கூட்டமைப்பு என்று ஒரு அமைப்பு உள்ளது அதில் தெலுங்கைத்தான் முதலில் குறிப்பிடுகிறார்கள் கோவையில் தெலுங்கு படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் (அதை தமிழர்கள் யாரும் பார்ப்பதில்லை என்ற போதிலும்)
இது ஏன் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவதில்லை ? கருநாடகத்தில் எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் சரி தமிழன் தமிழனாகவே பார்க்கப் படுகிறான்.இதே நிலை தான் ஆந்திராவிலும்,கேரளாவிலும் இது ஏன்?
இன்றுவரை திரைத்துறையில் தமிழ் நாட்டில் மட்டுமே தென்னிந்தியா நடிகர் சங்கம் தொழிலாளர் சங்கம் என்று இருக்கிறது மற்ற மாநிலங்களில் அவரவர் மாநில அளவிலான சங்கங்கள்.
அவர்கள் நம்மளை அவ்வாறு நடத்தும்பொழுது தமிழனுக்கு மட்டும் பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் எதற்கு ? இப்படி சொல்வதால் நான் ஒன்றும் தமிழ் வெறியனல்ல ஆனால் மற்ற மொழிக்காரர்கள் அப்படி இல்லாத போது தமிழன் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?

Jana சொன்னது…

:)தெ.மு.தி.க

shortfilmindia.com சொன்னது…

krp காரு.. ஏமி இதி.. இன்க கொஞ்சம் டவுன்லோ போட்டோ வேஸேஸ்திண்டாரோ.. நா பேப்ப்புடன் ஜட்டிலு தெலுசுதுந்தி.. :((

ஈரோடு கதிர் சொன்னது…

அட இதுதான் ”தெ”வா?

vasan சொன்னது…

கூட்டைக் க‌லைக்கிறிங்க‌ளே.
க‌ருணாநிதியையும் தெலுங்க‌ர்ன்னு
நம்ம‌ ப‌திவாள‌ர் ஒருவ‌ர் ச‌வுக்கு வ‌லையில் காட்டமாக க‌ட்ட‌ம் க‌ட்டுவார்.

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

ராவணன் சொன்னது…

அய்யா கூமுட்டை,

தென்னாட்டில் அனைத்தும் தமிழ் மொழியே. கன்னடமோ, தெலுங்கோ, மலையாளமோ அனைத்தும் ஒரு காலத்தில் தமிழின் வட்டார மொழிகள்.

கோவைத்தமிழ் நாளை கொங்கு என்று அழைக்கப்படலாம், நெல்லைத் தமிழ் நாளை நெல்லு என்று வரலாம்.சென்னைத் தமிழ் நாளை கூவம் என்று மாறலாம். அவர்களும் எதிரிகளா?

பாண்டிய நாட்டில் பிறந்து வளர்ந்த நான், மற்ற நாட்டினர் பேசும் தமிழை ரசிப்பதில்லை. சோழநாட்டில் வெறும் சோற்றால் அடித்த பிண்டங்கள் மட்டுமே உண்டு, கருணாநிதி உட்பட.

தென்னாட்டில் அனைத்து வட்டார மொழிகளிலும் நான் பேசுவேன். சும்மா காமடி என்றால் நீங்கள் எழுதுவது அனைத்தும் காமடியே.

தமிழை இகழ்பவன் தமிழனாக இருக்கமுடியுமா?
காமடி என்ற பெயரில் தமிழை கொச்சைப் படுத்தாதீர்கள். மனிதர்களின் மனதில் ஆயிரம் எச்சங்கள் இருக்கலாம். மொழி என்ன செய்யும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஏண்ணே இப்படி ஒரு ப்டத்த போட்டிருக்கீங்க..... சின்னப் பசங்க நிறையப் பேரு இருக்காங்கண்ணே......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சாலப் பாகுந்தி....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நீக்குத் தெல்சா?

க ரா சொன்னது…

nakalu :)

Chitra சொன்னது…

நக்கலு - சூப்பருலு!

குடுகுடுப்பை சொன்னது…

ஒரு மொழி பேசுவோர் நீண்ட காலமாக வேறு ஒரு மொழி பேசும் இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்ததாலேயே அவர்கள் அந்த மண்ணில் மைந்தர்களாகி விடுவார்களா? தெலுங்கு பேசுவோர் இன்று தமிழ் நாட்டில் தங்களது அடையாளத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள்
தமிழ்நாடு தெலுங்கர் கூட்டமைப்பு என்று ஒரு அமைப்பு உள்ளது அதில் தெலுங்கைத்தான் முதலில் குறிப்பிடுகிறார்கள் கோவையில் தெலுங்கு படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் (அதை தமிழர்கள் யாரும் பார்ப்பதில்லை என்ற போதிலும்)
இது ஏன் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவதில்லை ? கருநாடகத்தில் எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் சரி தமிழன் தமிழனாகவே பார்க்கப் படுகிறான்.இதே நிலை தான் ஆந்திராவிலும்,கேரளாவிலும் இது ஏன்?
இன்றுவரை திரைத்துறையில் தமிழ் நாட்டில் மட்டுமே தென்னிந்தியா நடிகர் சங்கம் தொழிலாளர் சங்கம் என்று இருக்கிறது மற்ற மாநிலங்களில் அவரவர் மாநில அளவிலான சங்கங்கள்.
அவர்கள் நம்மளை அவ்வாறு நடத்தும்பொழுது தமிழனுக்கு மட்டும் பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் எதற்கு ? இப்படி சொல்வதால் நான் ஒன்றும் தமிழ் வெறியனல்ல ஆனால் மற்ற மொழிக்காரர்கள் அப்படி இல்லாத போது தமிழன் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?
//
நானூறு வருடம் முன்னால் வந்தவர்களை என்ன செய்யமுடியும், அவர்களுக்கு இதுதான் மண். அரவிந்த் மருத்துமனை ஓனர் தெலுங்கர் என்பதால ஆந்திராவிலா திறந்தார். தமிழர்களாகியா நாம் எங்கே இருந்தாலும் தமிழர் என்றே நினைக்கிறோம் அதே விதி 400 வருடம் முன் வந்த தெலுங்கர்,கன்னடருக்கும் உண்டுதானே.ஆனாலும் அவர்கள் தங்களை தமிழர்களாகவே உணர்கின்றனர் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களின் குறுகிய புத்திக்கு 400 வருடத்திற்கு முன்னமேயே குடியேறியவர்களை தண்டிக்கமுடியாது.

பெயரில்லா சொன்னது…

அப்படியா சங்கதி !!! அச்சோ அச்சோ எனது கொள்ளுத் தாத்த தப்பு பண்ணிட்டாரே ! தமிழ்நாட்டில் பெண்ண்டுக்கும் போது பச்சைத் தமிழன் என்று பேசி தெலுகு மொழியையே மறந்துட்டாங்க ..... இப்படி எதாவது கதையைச் சொல்லி. எனது பெயரையும் இனிமேல் இக்பாலு செல்வனுலு என்று மாற்றிக் கொள்கிறேன் ... வரும் தேர்தலில் கிழக்கு சென்னைத் தொகுதியிலோ ( மெரினா பீச் மக்களுக்காக), கோயம்புத்தூர் பக்கமா பாலக்காடு பக்கமா எங்கயாவது நிக்கலாமுனு இருக்கேன். என்ன பாஸ் சொல்றீங்க.....

பெயரில்லா சொன்னது…

ஒன்று சொல்லுகிறேன் நல்லா கேளுங்க.... பல ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் ஆட்சியில் தென்னிந்தியா முழுதும் பரவிய தெலுங்கர்கள் .... ஆங்காங்கே செட்டில் ஆனார்கள். கேரளாப் பக்கமாய் போன் தெலுகர்கள் ( நாயக்கர் ) நாயர்களாக, காட்டுநாயக்கர்களாக - மலையாளிகளாக மாறிவிட்டனர். அதே போல சிங்கள நாட்டில் குடியேறிய நாயக்க தெலுங்கர்கள் நாயக்கே என்ற பெயரில் சிங்களவர்களாக மாறிவிட்டனர். ஆனால் - தமிழ்நாட்டிலும் பல காலம் வாழ்ந்த இவர்கள் தம்மை தமிழர்களாக மாற்றிக் கொள்ளாமல் இருப்பது, எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை உருவாக்கம். மீண்டும் தம்மை தெலுங்கர்களாக அடையாளப்படுத்த முயன்றால்... மண்ணில் இருந்து அந்நியப்பட்டுப் போவார்கள்...... இந்த நிலை ஈழத்தமிழர்களுக்கு வந்தது ஒரு எடுத்துக்காட்டு எனலாம். ஈழத்தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு பகுதியில் வசிப்பவர்கள். ஆனால் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் கலந்து வசிப்பவர்கள் ... ஆகவே இது இப்போதே களையப்படவேண்டிய ஒரு விசயம். கூடுமானவரை தெலுங்கர்கள் தெலுங்கர்களாக அரசியலில் வந்தால் அவர்களை புறக்கணிப்பது நல்லது. இல்லாவிட்டால் இது தமிழுக்கு ஆபத்தாய் அமையும்......

Unknown சொன்னது…

அண்ணே உங்களுக்கும் சீட் கெடைக்கும். ஏன்னா நீங்க செந்திலு...

Sridharan சொன்னது…

கேப்ட்டன் ஒரு காமடி பீசு... வெத்துவேட்டு....நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்...

Prathap Kumar S. சொன்னது…

//பாரத்... பாரதி... சொன்னது…
எப்படியோ சைக்கிள் கேப்புல, ஒரு பச்ச குழந்த பேர மாத்தி, அதோட மனசுல அரசியல் ஆசையை விதைச்சுட்டீங்க.. //

ஹஹஹஹ... சூப்பர்லு

செந்தில் ஜீலு... நீங்க நல்வருலுவா? கெட்வருலுவா ?? :))

அஹோரி சொன்னது…

இத்தாலிக்கு தெலுகு பரவா இல்ல தல.

ஈன தலைவன் ஜெயிக்காம இருந்தா போதும். சரியா ?

இரா.கதிர்வேல் சொன்னது…

எனக்கு இந்தப் போட்டோ ரொம்ப புடிச்சிருக்குங்க.

அத்திரி சொன்னது…

கிகிகி.......................................