நான் வழக்கமாக சினிமா விமர்சனம் எழுதுகிற ஆள் இல்லை. ஆனால் நேற்று பதிவர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு போயிருந்தேன். அண்ணன் உ.த தொலைபேசியில் தம்பி உன் ஆளுங்களையும் (அதாவது ஜூனியர் பிளாக்கர்ஸ்) கூட்டிட்டு வான்னார்!. அட பதிவுலகில் நமக்கு இப்படி ஒரு இடமா? என நான் அசந்துபோய் போன் செய்து பேசியவர்களில் சிவக்குமார் போனையே எடுக்கவில்லை. செல்வின் மட்டும் பிரபாகரனை அழைத்துவருகிறேன் என்றார். உ.த வுக்கு வாக்கு கொடுத்துவிட்டோமே என எனது பதிவுலகம் சாராத நண்பர்கள் ஐவரை அழைத்து வந்தேன்.
வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது. ஜாக்கி மற்றும் சில பதிவுலக, முக நூலுலக நண்பர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். தானைத்தலைவன் அல்லது தானே தலைவன் கேபிள் தனது உடாண்ஸ் டிவிக்காக எல்லோரையும் பேட்டி எடுத்தார். அப்போது தன் வீட்டில் உடான்ஸ் டிவி தெரியலை என சிரிப்பு போலீஸ் புகார் செய்தார். மணிஜி இணைய மிருக கெட்டப்புடன் வந்திருந்தார். டாக்டர் புருனோ சுறா எஃபெக்ட்டில் வந்து அதே எஃபெக்டில் படம் முடியும்வரை கலாய்த்தார். லக்கியும் தி.மு.க வின் இன்றைய நிலைக்கான காரனங்களை அடுக்கினார். என் தலைவருக்கு அவர் தலைவர் வாய்ப்பு வழங்கமாட்டார் என்று சொல்லிவிட்டதால் நான் இப்போது உ.பி யாகும் வாய்ப்பு தள்ளிப்போகிறது. அதிஷாவை கேபிள் தனியாக அழைத்துப்போய் பேட்டி எடுத்தார். காரனம் கேட்டதற்கு லைட் வெளிச்சம் போதலைன்னு சொன்னார்.
சாருசங்கர் கலக்கலாக என்ஃபீல்டில் வந்திறங்கினார். அவரை சுற்றி சுற்றி வந்து கேபிள் படம் எடுத்தார். அநேகமாக இது உடான்ஸில் வராது. ஆமாம் உடான்ஸ்னா என்னன்னு கேட்டா எப்புடி போடுவாங்களாம். காவேரி கனேஷ், தினேஷ், பட்டர்ஃப்ளை சூர்யா, மயில், க +, நரேன், ஆகியோர் வந்திருந்தனர். ஞானி வந்திருந்தார். முகநூல் நண்பர்கள் பதிவர்களைவிடவும் அதிகமாக வந்திருந்தனர்.

கரு.பழனியப்பனின் பார்த்திபன் கனவு, சிலப்பதிகாரம் இரண்டும் எனக்குப் பிடித்த படங்கள். மந்திரப் புன்னகையில் கூட வசனத்தில் அசத்தியிருப்பார். ஆனால் சதுரங்கத்தில் முதல் காட்சியில் துவக்கிவைத்த டெம்போவை போகப்போக வலுவிழக்கச் செய்து படம் முடியும்போது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு படம் எடுத்து அது இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிற நிலையில் அதனை இதற்கு மேல் என்னால் விமர்சிக்க முடியவில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு நல்ல யோசனை என்னவெனில் இனி இப்படி தனிக்காட்சி போடுவதை தவிர்கலாம். காரனம் அது கரு.பழனியப்பனுக்கே தெரியும்.
நிகழ்சியை ஒருங்கினைத்த உண்மைதமிழன் அண்ணனுக்கு என் நன்றிகள்..

7 கருத்துகள்:
இத்தனை நாள் கழித்து படம் வந்தால் பெயர் சரி மாற்றினால் பருவாயில்ல ஆனாலும் கெட்டிக்காரர் கரு பழனியப்பன் !
//காரனங்களை அடுக்கினார்.
காரனம் கேட்டதற்கு
காரனம் அது கரு.பழனியப்பனுக்கே தெரியும்.
நிகழ்சியை
ஒருங்கினைத்த //
தலைவரே, என்ன ஆச்சு?
அருமையான தகவல் நண்பா
போங்கண்ணே நைட் சாப்பாடு மிஸ் ஆயிடுச்சு. கரு.பழனியப்பன் கிட்டயாவது வாங்கிடலாம்ன்னு அவர்கிட்ட பத்து மணி வரைக்கும் மொக்கை போட்டும் ஒன்னும் தேறலை :)
// சிவக்குமார் போனையே எடுக்கவில்லை//
சீனியர் ப்ளாக்கருக்கு நேரில் வந்து அழைப்பு விடுக்காமல் இருந்தால் அதற்கு அவ'ர்' என்ன செய்வா'ர்'.
// முதல் காட்சியில் துவக்கிவைத்த டெம்போவை//
ஆக்சன் படமாண்ணே?
சதுரங்கம் இப்ப தான் ரிலீஸ் ஆகுதா?
கருத்துரையிடுக