15 அக்., 2011

புறம் பேசுதல் ...

ரகசியங்கள்
நிரம்பி வழிகிற 

வாழ்வின் பயணங்களில் 
எதிர்ப் படும் 
உங்களிடம் இருக்கும் கதைகள்
என்
திசைகளை மாற்றிவிடுகிறது..

எல்லாக் கதைகளிலும்
உண்மை 
இருப்பதில்லை 
உண்மையாகவும்
இருப்பதில்லை
எனினும்
அவைகள்
என் மனக்கூட்டில்
திரையிடுகிற
சோகங்களை 
சுமக்க முடியவில்லை..

எதிர்பார்க்காவிட்டாலும்  
கேட்கும் மனங்கள் அவசியமாகின்றன 
சில பொழுது போக்கு 
சில வம்பு 
சில கள்ளக் காதல் என 
விரும்பப்படுகின்ற கதைகள்
மட்டுமே
சுவாரஸ்யம் கூட்டுகின்றன..

அவன், இவன் 
நீ, நான் 
எவனுமே சரியில்லை 
டீக்கடை 
சாக்கடை..

சினிமாவோ
அரசியலோ
பக்கத்து வீட்டுக்காரனோ, காரியோ
கிசுகிசுக்கள்
புனிதமானவை..

யார் கதைகளையோ
நாம் பேச,
நம் கதைகளை
யாரோ பேச
பேசப் பேச
பொய்கள்
உண்மையாகிவிட
சிலர்
விலகவோ
நெருங்கவோ
கதைகளே காரனம்..

கவனமாக இருங்கள்
இன்று உங்களை பாராட்டும்
அதே ஆள்தான்
நாளை உங்களை
தூற்றக்கூடும்
நேற்றைய நண்பர்கள்தான்
நம் இன்றைய எதிரிகள்..

17 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

குடும்ப பிரச்சினைய இப்படி இழுத்து விடாதீங்க பாஸ்

rajamelaiyur சொன்னது…

//
எல்லாக் கதைகளிலும்
உண்மை
இருப்பதில்லை
உண்மையாகவும்
இருப்பதில்லை
எனினும்
அவைகள்
என் மனக்கூட்டில்
திரையிடுகிற
சோகங்களை
சுமக்க முடியவில்லை..///


அருமையான வரிகள்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

பெயரில்லா சொன்னது…

Data Entry Jobs இப்பொழுது இலவசமாகவும் கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com

Unknown சொன்னது…

புகைப்படம் பின்னுது...கதை கதையாம் காரணமாம்....

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

கடைசியில் சொல்லப்பட்டிருப்பது நடக்க 90 சதவீத வாய்ப்புண்டு

குறையொன்றுமில்லை. சொன்னது…

கவனமாக இருங்கள்
இன்று உங்களை பாராட்டும்
அதே ஆள்தான்
நாளை உங்களை
தூற்றக்கூடும்
நேற்றைய நண்பர்கள்தான்
நம் இன்றைய எதிரிகள்..




ஆமா சரியா சொன்னீங்க.

Philosophy Prabhakaran சொன்னது…

"அந்த" பிரபல பதிவரின் அணுகுமுறையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பது புரிகிறது... சரி ஃப்ரியா விடுங்க...

Sivakumar சொன்னது…

Got it.

நேசமித்ரன் சொன்னது…

நீங்க கலக்குங்க தலைவரே :)

Narmi சொன்னது…

True one.

'பரிவை' சே.குமார் சொன்னது…

//யார் கதைகளையோ
நாம் பேச,
நம் கதைகளை
யாரோ பேச
பேசப் பேச
பொய்கள்
உண்மையாகிவிட
சிலர்
விலகவோ
நெருங்கவோ
கதைகளே காரனம்..
//

அருமையான வரிகள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

//யார் கதைகளையோ
நாம் பேச,
நம் கதைகளை
யாரோ பேச
பேசப் பேச
பொய்கள்
உண்மையாகிவிட
சிலர்
விலகவோ
நெருங்கவோ
கதைகளே காரனம்..
//

அருமையான வரிகள்

சேக்காளி சொன்னது…

//கவனமாக இருங்கள்
இன்று உங்களை பாராட்டும்
அதே ஆள்தான்
நாளை உங்களை
தூற்றக்கூடும்
நேற்றைய நண்பர்கள்தான்
நம் இன்றைய எதிரிகள்//
அதுக்காக நட்பு பாராட்டாமல் இருக்கவா முடியும்?.எத்தனையோ பேரிடம் வழி கேட்டு தானே இங்கே வந்து சேர்ந்திருக்கிறோம்.

ஹேமா சொன்னது…

பட்ட அனுபவக் கவிதை !

சுப்பு சொன்னது…

சரியான கருத்துக்கள்

சுப்பு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.