31 அக்., 2011

கால சர்ப்பம்...

அவர்கள் அப்படித்தான்
கொள்கை பேசுவார்கள் ..

நேற்று அதுவாக இருந்ததை

இன்று இதுவாக இருக்கிறது
என்பார்கள்..

தலைவன்

தலைவி
யாராவது ஒருவர்
அவர்களுக்கு தேவை
ப்படுவார்
பின்
தலைவன் மகன்
பேரன்
கொள்ளுப்பேரன்
அவர்கள் வீட்டு நாய்குட்டி என
மேடையில் சிலாகிக்க,
இப்போது
தமிழ்
குஷ்பூவின் தமிழ்..

தலைவிக்கு

தூய அன்பு உள்ளம்
நேற்றுகளை மறந்த
இன்றைய தமிழனுக்கு
போதி தர்மன்
பிரபாகரன்
சூர்யா
காசு கொடுத்து
கைதட்டி ரசிப்பான்..

ஆட்சிகளும் மாறும்

காட்சிகளும் மாறும்
ஆட்களும் மாறுவார்கள்
அதே சாலை
அதே பேரூந்து
அதே வாழ்க்கை
சகித்து சகித்து
மானம்கெட்டு
வாழப் பழகிவிட்டான்
டாஸ்மாக் தமிழன்..

நேர்மை

நியாயம்
நீதி
வீதியில் கிடக்கும்
மிதித்து பழகுங்கள்..   

4 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

//
தலைவிக்கு
தூய அன்பு உள்ளம்
நேற்றுகளை மறந்த
இன்றைய தமிழனுக்கு
போதி தர்மன்
பிரபாகரன்
சூர்யா
காசு கொடுத்து
கைதட்டி ரசிப்பான்..
//
நச்சுனு சொன்னுணிக்க

SURYAJEEVA சொன்னது…

நேர்மை நீதி நியாயம் எங்கும் இல்லையா, நீங்கள் உட்பட?

'பரிவை' சே.குமார் சொன்னது…

.....தலைவிக்கு
தூய அன்பு உள்ளம்
நேற்றுகளை மறந்த
இன்றைய தமிழனுக்கு
போதி தர்மன்
பிரபாகரன்
சூர்யா
காசு கொடுத்து
கைதட்டி ரசிப்பான்.....



அருமையா சொன்னீங்க...
சாட்டையடி கவிதை...
நாம மாறுவோங்கிறீங்க... ம்..க்கும்... அது மட்டும் நடக்காது.
அதே வாழ்க்கையானாலும் பாலாபிஷேகமும்... பன்னீராபிஷேகமும் பண்றதை விடமாட்டோமுல்ல...

அ. வேல்முருகன் சொன்னது…

நேர்மை
நியாயம்
நீதி
வீதியில் கிடக்கும்
மிதித்து பழகுங்கள்..

அருமை தோழர்

மாற்றுவோம் இந்நிலையை