10 அக்., 2011

கேபிள் சங்கர் ...

பதிவுலகின் No.1 பிளாக்கரான கேபிள் சங்கரை எனக்கு கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாகத்தான் தெரியும். நான் தி.நகரிலும், அவர் சைதாப்பேட்டையிலும் இருந்தாலும் நான் அவரை பதிவுகளில் பார்ப்பதுடன் சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அந்த சமயங்களில் நான் அதிகம் சிங்கப்பூர், மலேசியா என சுற்றிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு சிங்கப்பூரில் இருந்து வந்தபிறகு அவர் சிங்கப்பூர் சென்றபோது அவர் BUZZ ல் தன் சிங்கப்பூர் வருகையை பகிர்ந்துகொண்டபோதுதான் அவருக்கு போனினேன். அங்கு மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் எனக்குப் போனும்படி சொன்னேன். ஆனால் சிங்கை நண்பர்களின் அமோக கவனிப்பால் ( கேலாங் உள்ளிட்ட) என் உதவி அவருக்கு தேவைப்படவில்லை. அதன்பிறகு அவர் டைகர் ஏர்வேஸில் ஊருக்கு வந்த அதே நாள் என் நண்பனும் அதே ஏர்வேஸில் எனக்காக GLENFIDDICH விஸ்கியுடன் வருவதாக சொன்னதும் அவனை முக்கியமாக அந்த விஸ்கிக்காய்  ஏர்போர்ட் சென்றபோது நமது பதிவுலக தானைதலைவன் (அ) தானே தலைவன் வந்தார். அவரை அடையாளம் கண்டு ஒரு அலோ சொன்னதும் என்ன ஆட்டோகிராஃப் வேனுமான்னார். அண்ணே நானும் பிளாக்கர்தான்னு சொல்லி என் பேரை சொன்னதும் அவர் கையிலிருந்த பாட்டிலின்மேல் என் பார்வை சென்றதும் இன்னொரு நாள் பார்க்கலாம் தலைவா என விடைபெற்றார்.

அதன்பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு பாரில்வைத்து பரஸ்பரம் அறிமுகமாகி அதன்பிறகு ஒருநாள் இரவு எனக்கு போனியபோது இன்னோரு முக்கியமான நபர் என்னுடன் பேச விரும்புவதாக சொன்னார். அவர் பதிவுலக பஸ்ஸுலக அண்ணன் ( இன்னும் புரியலியா?) அப்புறம், அண்ணனுக்கு நேரம் கிடைக்கும்போதும் ஸ்ரீதேவி ஓட்டலில் சந்திப்புகள் தொடர்ந்து அண்ணன் அண்ணன் அல்ல தம்பி என்று தெரிந்தபின்னும் அவரை அண்ணன் என்றே அழைத்து வருவது தனிக்கதை. இதற்கு மேல் எழுதினால் அண்ணன் அப்துல்லா அவர்கள் என் நட்பினை (மறு)பரீசலனை செய்யக்கூடும் என்பதால் மறுபடியும் தானைத்தலைவன் பற்றி...

அதன்பிறகு தினசரி இரவு 9.30 க்கு எங்கைய்யா இருக்கேன்னு போனுவார். ரெண்டு பேரும் சினிசிட்டி போயி கையில் இருப்பு வைத்திருந்த கடைசி சொத்து அழியும்வரை குடித்து இருக்கிறோம். அதன்பிறகு கிடைத்த நூரு ரூவாய்க்கு ஒரு குவாட்டர் வாங்கி வீட்டு மொட்டைமாடியில் அடிப்போம் அதன்பிறகு புரவலர்கள் அழைக்காத நாட்களில் மட்டும் குடிப்பதை நிறுத்தி வைத்தோம்.

இத்தனை மாதங்களில் கேபிளின் ஆளுமையை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். எத்தகைய ரகசியத்தையும் அவரிடத்தில் பகிர்ந்துகொள்ளலாம். அவரது சிறுகதைகளில் மறைமுகமாக வருமே தவிர நம்பிக்கைகு உரிய ஆள் அவர். தனக்கு இருக்கும் சிரமங்களை நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லமாட்டார். ஒரு சம்பவத்தை சிறுகதையாக்கும் அபாரமான லாவகம் அவரிடம் இருக்கிறது. அவர் எடுக்க முடிவுசெய்திருக்கும் மூன்று படங்களின் திரைகதையும் நான் முழுவதும் கேட்டிருக்கிறேன். அதனால் அது கண்டிப்பாக வெற்றிபெரும் என எனக்குத்தெரியும்.

ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என நினைத்து இவரின் ”மீண்டும் ஒரு காதல் கதை” யை வெளியிட்ட போதுதான் அவரின் உண்மையான மதிப்பீடு தெரிந்தது. அதற்குபிறகு நான்கு புத்தகங்கள் வெளியிட்டு நாங்கள் பதிப்பக துறையில் நுழையும்போதே லாபத்துடன் நுழைந்ததற்கு கேபிள்தான் காரனம். எந்தவொரு விசயத்தையும் வியாபார நோக்கத்தில் அனுகும்போது வரக்கூடிய பிரச்சினைகளை முன் கூட்டியே கணிக்கக் கூடிய புத்திசாலி, அதேபோல் அவரை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், கோபித்துக்கொள்ளவே மாட்டார்.

அவர் மட்டும் சினிமா தவிர்த்து வேறு வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தால் இன்னேரம் வெற்றிக்கொடி நாட்டியிருப்பார். ஆனாலும் சினிமாவின் வீச்சு அவருக்கு தெளிவாக தெரியும் என்பதால் ஓடு மீன் ஓட காத்திருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயணுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

இவரின் சமீபத்திய வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரனம் யுடான்ஸ்  திரட்டி ஆரம்பித்த சில வாரங்களில் அதன் வளர்ச்சி அபாரமானது. அதில் மற்ற திரட்டிகளில் இல்லாத அனேக அம்சங்கள் இருக்கிறது. குறிப்பாக டி.வி மற்றும் வீடியோ பிளாக்கிங் வசதிகள் பதிவுலகிற்கு புதியது. இன்னும் ஏகப்பட்ட அம்சங்களை அதில் கூடுதலாக வைக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்.

இத்தனை பன்முக திறமைகள் வாய்ந்த அவர் எப்போதும் கர்வமின்றி இருப்பதுதான் அவரின் பெருமையே. . அதேபோல் புதிதாக வருகிற பிளாக்கராக இருக்கட்டும், எந்த நேரத்தில் போனுகிற ஒரு வாசகனாக இருக்கட்டும் அந்த நேரத்தில் அவர்களுடன் பேச முடியாவிட்டாலும் நேரம் கிடக்கும்போது அவர்களுடன் பேசிவிடுவார்.

என் நெருங்கிய நண்பரும் சீனியர் பிளக்கருமான நரேன் கேபிளைப்பற்றி சொன்னார் : “ கேபிள் தி.மு.க வில் இருந்த எம்.ஜி.ஆரைப்போல, அவரின் பலம் அவருக்குத் தெரியல” என்றார். அதுதான் உண்மையும் கூட.... 

26 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

அட!

கை கட்டி நின்னிருக்கிற பவ்யமே அவர் “யார்” எனச் சொல்லுதே!

பகிர்விற்கு நன்றிங்க செந்தில்.

அப்பாதுரை சொன்னது…

சென்னை வந்த போது உங்களைச் சந்திக்கலாம் என்றிருந்தேன். வாய்ப்பு சரியாக அமையவில்லை.
கேபிள் அவ்வப்போது பின்னூட்டங்களில் சந்திப்பதோடு சரி. அடுத்த சென்னைப் பயணத்தில் உங்களையும் அவரையும் சந்திக்க வேண்டும்.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த முறை ஸ்காச்சில் எனக்கும் கொஞ்சம் விட்டு வையுங்கள்.

Unknown சொன்னது…

அருமையா சொல்லிருக்கீங்க மிக்க நன்றி

நிகழ்காலத்தில்... சொன்னது…

பழகுவதில் எளிமையும், கிண்டல் அடித்தால் கூட கூடவே கம்பெனி கொடுக்கும் ஏற்புத்தன்மையும் கேபிளின் சிறப்பு.. என்றால் அது மிகையில்லைதான்..

வாழ்த்துகள்

அப்பாதுரை சொன்னது…

யுடான்ஸ் சுட்டியை முடிந்த போது திருத்திவிடுங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தானிய தலைவன், பிரபல பதிவர், பன்முக கலைஞர் கேபில்ஜி வாழ்க..

நல்லா கூவிட்டேன் ஏதாச்சும் பார்த்து போட்டு கொடுங்க

Unknown சொன்னது…

யுடான்ஸ் என்ற வார்த்தைக்கு தவறாக லிங்க் கொடுத்திருக்கிறீர்கள் சரி செய்யுங்கள் கே ஆர் பி.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பூ வுடன் சேர்ந்து நாரும் மணப்பது போல நாமும் மணப்போம்
கேபிளுக்கு வாழ்த்துகள்

! சிவகுமார் ! சொன்னது…

//பதிவுலகின் No.1 பிளாக்கரான கேபிள் சங்கரை//

என்னாது நம்பர் ஒண்ணா? அருவாள சாண புடிச்சி ரொம்ப நாள் ஆச்சி...

! சிவகுமார் ! சொன்னது…

//ஒரு சம்பவத்தை சிறுகதையாக்கும் அபாரமான லாவகம் அவரிடம் இருக்கிறது//

தோசை பஹுத் சோட்டா ஹை.

! சிவகுமார் ! சொன்னது…

எல்லாத்தையும் எழுதிட்டு கடைசில உடான்ஸ்ல இணைக்காம விட்டுட்டீங்க. இது உள்குத்து பதிவுன்னு கன்பர்ம் ஆயிருச்சி.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

கேபிள் சங்கர் அவர்கள் வாழும் நூற்றாண்டில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Unknown சொன்னது…

யுடான்ஸ் சுட்டியின் லின்கை இப்போது சரி செய்துவிட்டேன்..

தவறை சுட்டிக்காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

Cable சங்கர் சொன்னது…

ரொம்ப வெட்கமா இருக்குங்க.. செந்தில்..:))

'பரிவை' சே.குமார் சொன்னது…

கேபிள் அண்ணா பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

செந்தில் அண்ணா உங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும். கிடைக்குமா?

குறையொன்றுமில்லை. சொன்னது…

கேபிள் சங்கர் பற்றி அருமையா பகிர்ந்து கொண்டிருக்கீங்க நன்றி

Unknown சொன்னது…

//செந்தில் அண்ணா உங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும். கிடைக்குமா?//

krpsenthil@gmail.com

SURYAJEEVA சொன்னது…

ok

! சிவகுமார் ! சொன்னது…

@ சே. குமார்

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' போர்ட் கிட்ட நின்னு கே.ஆர்.பி. அண்ணனை பாக்கனும்னு மட்டும் சொல்லுங்க. அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு.

அஞ்சா சிங்கம் சொன்னது…

சங்கர் நாராயண் @ Cable Sankar சொன்னது…

ரொம்ப வெட்கமா இருக்குங்க.. செந்தில்..:))////////////////
தமாசு தமாசு ...........அண்ணன் வெக்கபடுறாரு டோய்............

சசிகுமார் சொன்னது…

செந்தில் அண்ணே இன்னும் வாழ்த்தி இருக்கலாம் அதற்க்கான தகுதி அவரிடம் உண்டு....

சசிகுமார் சொன்னது…

நான் பார்க்க நினைக்கும் பதிவர்களில் கேபிள் அண்ணனும் ஒருவர்...

செங்கோவி சொன்னது…

கர்வமில்லாத எளிய மனிதர் கேபிளார்..பார்த்தவுடன் நெடுநாள் நண்பர்போல் பழகும் குணம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை..தல தல தான்!

RK நண்பன்.. சொன்னது…

பெரிய தல பத்தி சின்ன தல... கலக்குங்க..

பகிர்வுக்கு நன்றி... அனைவருக்கும் பிடித்த நபர் கேபில் அண்ணா... யூத் ஐகான்..

நானும் பேசி இருக்கேன்.. அருமையான மனிதர்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

nanri anna... viraivil thodarpil varukirean.

nellai ram சொன்னது…

“ கேபிள் தி.மு.க வில் இருந்த எம்.ஜி.ஆரைப்போல, அவரின் பலம் அவருக்குத் தெரியல” என்றார். அதுதான் உண்மையும் கூட....