3 ஜூலை, 2010

உங்கள் குழந்தைகளை அடிமைகளாக மாற்றுகிறீர்களா..?


                                      
பள்ளியில் ஆசிரியரோ, அல்லது நம் வீட்டுக்கு வரும் நபர்களோ நம் பிள்ளைகளை நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்டால் எல்லாப் பிள்ளைகளும் சொல்லி வைத்தார்போல் டாக்டர், எஞ்சினியர், பைலட் என்று சொல்லும்.. எந்த பிள்ளையாவது நான் தொழில் செய்யபோகிறேன் என்று சொல்லுமா?

பெரும்பாலும் அதாவது நூறில் தொண்ணூற்று ஐந்து பேர் தன் பிள்ளைகளை நீ நன்றாக படி, முதல் மதிப்பெண் வாங்கு, அப்போதுதான் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க முடியும் என்று சொல்லி சொல்லியே அவர்களை ஒரு சிறந்த அடிமை ஆக்குகிறார்கள். எலாவற்றிற்கும் அளந்தே செலவு செய்து பிள்ளைகளையும் அதற்கு பழக்கபடுத்துகிறார்கள், இது ஒரு வகையில் நல்ல செயல் என்றாலும், அது ஒரு சிறந்த மனிதனை உருவாக்குமா?

மனிதர்களில் பணக்காரர் ஆகவே பிறந்து பணக்காரர் ஆகவே செத்துப் போகிறவர்கள் ஒரு விதம். ஏழைகளாக பிறந்து ஏழைகளாக செத்து போகிறவர்கள் இன்னொரு விதம்.. ஏழையாக பிறந்தாலும் பணம் சம்பாதிக்க வேண்டும் தொழில் செய்ய வேண்டும் அதற்கு என்ன செய்யலாம்..

ROBERT T. KIYOSAKI யின் "RICH DAD POOR DAD" என்ற புத்தகம் ஒரு பணக்கார பையனையும் ஒரு நடுத்தர பையனையும் வைத்து மிகவும் அற்புதமாக பாடம் நடத்துகிறார்.. தன் பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என கனவு காணும் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய நூல் இது.. இவர் நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார் , பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்..

இந்த புத்தகத்தில் சொல்லப்படும் இரண்டு சிறுவர்களும் தொழில் துவங்க வேண்டிய அடிப்படை பயிற்சிகளில் எல்லோருக்கும் தேவையான கருத்தை புகுத்தியிருக்கிறார்..

இவரின் முக்கியமான சுலோகம் "நீ பணத்திற்காக வேலை செய்யப் போகிறாயா? இல்லை உனக்காக பணம் வேலை செய்ய வேண்டுமா?" என்பது,  இதிலேயே அடங்கிப் போய்விடுகிறது அனைத்தும். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.. அதன் உள்ளடக்கம் நிறைய உள்ளதால் விரிவாக பேசமுடியவில்லை...

இவரை பற்றிய எதிமறை கருத்துகளும் இருக்கிறது..என்றாலும் அவரின் "Rich Dad Poor Dad" நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்..

இவர் எழுதிய மிக முக்கியமான QUOTES:


I have a problem with too much money. I can't reinvest it fast enough, and because I reinvest it, more money comes in. Yes, the rich do get richer.Robert Kiyosaki - Money - Investing - Rich -



A lot of people are afraid to tell the truth, to say no. That's where toughness comes into play. Toughness is not being a bully. It's having backbone.

Robert Kiyosaki - Truth - Fear - Leadership - Strength -
Academic qualifications are important and so is financial education. They're both important and schools are forgetting one of them.

Robert Kiyosaki - Knowledge - Learning -

Money is kind of a base subject. Like water, food, air and housing, it affects everything yet for some reason the world of academics thinks it's a subject below their social standing.

Robert Kiyosaki - Money - Knowledge - Learning -

We go to school to learn to work hard for money. I write books and create products that teach people how to have money work hard for them
.Robert Kiyosaki - Money - Investing - Rich - Knowledge -



இணைப்புகள்:
About Rich Dad Poor Dad..
http://johntreed.com/Kiyosaki.html
Website:
http://www.richdad.com/default.aspx

Wikipedia
http://en.wikipedia.org/wiki/Robert_Kiyosaki

Opposite Talk:
http://normanlivla.blogspot.com/2005/10/is-robert-kiyosaki-fraud.html

25 கருத்துகள்:

Unknown சொன்னது…

செந்தில் யோசிக்க வேண்டிய விடயம்.

dheva சொன்னது…

மிக அருமையான புத்தக அறிமுகத்திற்கு நன்றிகள் செந்தில்....! புத்தகம் படித்து முடித்தவுடன். நமது முட்டாள்தனங்கள் எல்லாம் அறியவருவது தவிர்க்க முடியாது....அதிக பிரதிகள் விற்று சாதனை புரிந்திருக்கும் இந்த புத்தகத்திற்கு இரண்டாவது பாகமும் இருக்கிறது செந்தில்....முடிந்தால் அதற்குள்ளும் சென்று பாருங்கள்...

மீண்டும் வாழ்த்துக்கள்!

Paleo God சொன்னது…

அருமையான பகிர்வு செந்தில்! நன்றி.

ஜோதிஜி சொன்னது…

இதில் உள்ள பொன் மொழிகளை தமிழ் மொழியாக்கி விடுங்கள். பலருக்கும் சென்று சேர உதவும்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல பகிர்வு.

ஜெய்லானி சொன்னது…

உண்மைதான்.நிறைய யோசிக்க வைக்குது.

@@@ஜோதிஜி--//இதில் உள்ள பொன் மொழிகளை தமிழ் மொழியாக்கி விடுங்கள். பலருக்கும் சென்று சேர உதவும்.//

ரிப்பீட்ட்ட்ட்

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ அறிமுக‌ம்...ப‌கிர்விற்கு ந‌ன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்ல பகிர்வு அண்ணா

http://rkguru.blogspot.com/ சொன்னது…

ஆங்கில புலமை எனக்கு கொஞ்சம் குறைவு...இருந்தும் நீ பணத்திற்காக வேலை செய்யப் போகிறாயா? இல்லை உனக்காக பணம் வேலை செய்ய வேண்டுமா?"என்று அவர் கூறிய வார்த்தைகளை உள்வாங்கமுடிகிறது. எனக்கும் பணம் அதிகமா சம்பாதிக்கவேண்டும் என்று ஆசை..அது ஆசையுடனே நிற்கிறது...

Kousalya Raj சொன்னது…

காலத்திற்கு தேவையான பதிவு. அந்த புத்தகங்கள் படிக்க வேண்டிய ஒன்றுதான். பகிர்வுக்கு நன்றி

Prasanna சொன்னது…

நல்ல பகிர்வு.. அந்த புகைப்படமும் நல்லா இருக்கு..

ஹேமா சொன்னது…

தேவையான பலரும் மனதில் பதிக்க வேண்டிய பதிவு செந்தில்.

ஜோதிஜி சொன்னது போல அந்தப் பொன்மொழிகளைச் சரியான தமிழாக்கித் தாருங்களேன்.
எனக்கு வேணும்.

Ranjithkumar சொன்னது…

நல்ல பகிர்வு.
நன்றி..
நல்வாழ்த்துக்கள்....

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

பயனுள்ள பதிவு....கூடி, பேசி, கலைவதல்ல நோக்கம்., பயனுள்ள பேச்சாக இருக்க வேண்டும் என்பார் நாராயண குரு.
மேற்கத்திய சிந்தனையாளர்கள் ஸ்மித் வழிதோன்றல்களாக மட்டுமே பெரும்பாலும் வெளிபடுகிறார்கள். அவற்றை வேதங்களாக எடுத்துக்கொண்டால் பயன்களை விட சமுதாய பாதிப்புகள் அதிகம். நில்., கவனி,செல் என்பது அவர்களின் நூல்களுக்கும் பொருந்தும்.
என்றும் பிரியத்துடன் ....தம்பி சாமித்துரை

ரமேஷ் வீரா சொன்னது…

"நீ பணத்திற்காக வேலை செய்யப் போகிறாயா? இல்லை உனக்காக பணம் வேலை செய்ய வேண்டுமா?"

இந்த வரிகளே படிக்கும்போது ஏதோ ஒரு இனம் புரியாத தூண்டுதல் மனதில் எழுகிறது அண்ணா .......................................................

Syed Vaisul Karne சொன்னது…

You can buy this book in tamil

http://www.infibeam.com/Books/info/robert-t-kiyosaki/panam-purinthavan-tamil/9788184025620.html

Book Name:
Panam Purinthavan
Author:
Robert T. Kiyosaki
Price: Rs. 150

அண்ணாமலை..!! சொன்னது…

நண்பரே! நீங்கள் இன்னும் கூட கொஞ்சம் விவரித்திருக்கலாம்.
தவிரவும், அந்தப் பொன்மொழிகளை தமிழ்ப்படுத்தினால்
இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!

கபிலன் சொன்னது…

அன்பின் செந்தில்.....

பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அடிப்படை குணங்களை இழந்து விடாதிருக்க,
சக மனிதனுக்கு இயன்ற உதவிகள் செய்ய
நம் குழந்தைகளை பழக்க வேண்டும்.
நம் பயனுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று
நம்மை ஆட்டிவைப்பதில் எனக்கு எப்போதும் தீரா எரிச்சல் உண்டு.
மனிதர்கள் கண் எதிரிலேயே மாறுவதை கண்டிருக்கிறேன்.
என் குழந்தையை அதன் வழியிலேயே விட்டுவிட யோசித்திருக்கிறேன்.
அந்த புத்தகத்தை படித்து விட்டு வருகிறேன்.

அன்புடன் கபிலன்.

santhanakrishnan சொன்னது…

ஆம்.
நிச்சயம்
படிக்க வேண்டிய
புத்தகம் தான்.
நன்றி.

அத்திரி சொன்னது…

நல்ல பதிவு செந்தில்

காமராஜ் சொன்னது…

நல்ல பதிவு செந்தில்.
சில இடங்களில் சந்தேகம் இருக்கிறது. நெருக்கமாக பேசலாம்.

அன்பரசன் சொன்னது…

//"நீ பணத்திற்காக வேலை செய்யப் போகிறாயா? இல்லை உனக்காக பணம் வேலை செய்ய வேண்டுமா?"//

ஒவ்வொருத்தரும் யோசிக்க வேண்டிய வரிகள் அண்ணே!
நல்ல பதிவு.

Joe சொன்னது…

அருமையான புத்தக அறிமுகத்திற்கு நன்றி செந்தில்!

Geetha6 சொன்னது…

we need to think a lot!!

Fawzdeen சொன்னது…

மிக சரியான ஒரு புத்தகத்த அறிமுக படுத்தியிருக்கீங்க...வெல்டன்.