12 ஜூலை, 2010

என் காலடிச் சுவடுகள் ...

என் காலடிச்  சுவடுகள் எனும் தலைப்பில் தம்பி ரமேஷ்குமார் ஒரு கவிதை கேட்டான்..

ஓர் ஒற்றை துளியில் 
துவங்கும் நதியாய் 
ஒற்றை அணுவில் துவங்கிய 
வாழ்க்கை 
மெல்ல தவழ 
நடை பயில பின் 
பள்ளி செல்ல விரியும் உலகம் 
ஒரு ஆச்சர்யம் ..

சற்றே பிரயத்தனப்பட்டு 
வாங்கும் 
முதல் மதிப்பெண் தக்கவைக்க 
இயலாது தோற்று போகிற 
ஒற்றை மதிப்பெண்ணில் 
தவறி விட்டது 
பாதை..

தினம் புகையோடும் 
பகிரும் மதுவோடும் 
சில 
காதலோடும் 
கடந்து வந்த  பள்ளியின் 
இறுதியாண்டோடு
துவங்குகிறது வாழ்க்கைக்கான 
பாடங்கள்..

பெருநகர வாழ்வில் சிறு தூசென 
மாறியபோது 
மேம்பட்டது தற்கொலை 
எண்ணங்கள்...

அன்னிய தேசங்களில் 
பணம் பெற்ற மகிழ்வில் 
இன்னொரு திசையை 
எளிதாய்க்  கடந்தேன்..

ஆன்மீக நாட்டங்களில் 
ஆழமாய் ஈடுபட்டு 
செல்வங்களை இழந்து 
வாழ்வின் இலக்கணம் 
தவற விட்ட நாட்கள் 
வறுமையினும் கொடிது.. 

வழியில் எதிர்பட்ட எல்லா 
நட்பிலும் 
கற்றதும், பெற்றதும் 
இன்னொரு பரிமாணம் ..

காதலை புதைக்க இயலா ஒரு 
தருணத்தில் 
வாழ்வை பங்கு கொண்டவளிடம் 
மனதை பங்கு போட முடியாமல் 
தவித்த பொழுதுகளில் 
கிடைத்த செல்வம் 
அகில் ஆதித்தன் இன்னொரு 
வரம்...

இழந்து கொண்டே இருக்கிறேன் 
ஏதும் இனி இல்லை 
என்ற தருணத்தில் பூத்த தனயன் 
அருண்மொழி புதிய 
வரம்.. 

இனி என் செய்வேன் 
என 
தனியே நின்றபோது 
இனி நீதான் 
செய்ய முடியும் 
என
கண்முன் நிற்கும் இம்மூவருக்குமாய் 
மீண்டும் தொடரும் 
என் பயணம் 
அசோக் நகர் வீதியில் ..
ஒரு சூப் கடையுடன் ..

நட்பில் ஜெயித்தவன் 
வார்த்தைகளை காப்பாற்ற 
தன்னையே இழந்தவன் 
இன்று 
எழுத்தில் சில 
இதயங்களை தொடுபவன் 
ஒரு புரட்சி செய்யப் போகிறேன்..

இன்னும் நீளும் என் 
காலடிச் சுவடுகளில் 
காலம் என் பெயர் 
பொறிக்கும்...

34 கருத்துகள்:

Syed Vaisul Karne சொன்னது…

Excellent!

ஜோதிஜி சொன்னது…

நிச்சயம் ஜெயிப்பீர்கள்....

dheva சொன்னது…

ஒவ்வொரு வரி கடக்கும் போதும் இதயத்தின் பட படப்பினை நிறுத்த முடியவில்லை...செந்தில்...

சுவடுகள்...சுவடு பதித்திருக்கிறது ..என் நெஞ்சிலும்...! அருமை செந்தில்!

சௌந்தர் சொன்னது…

இன்னும் நீளும் என்
காலடிச் சுவடுகளில்
காலம் என் பெயர்
பொறிக்கும்..//

கண்டிப்பா அண்ணா...

jothi சொன்னது…

very experience life

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்...நல்லாயிருக்குங்க...வாழ்த்துக்கள் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

super annaa

சசிகுமார் சொன்னது…

சூப்பர் நண்பா கலக்கல் கவிதை உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ahamed irshad சொன்னது…

நல்லாயிருக்கு..

நாடோடி சொன்னது…

க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதைக‌ள்... கொஞ்ச‌ம் க‌ர‌டு முர‌டுதான்.. சிக‌ர‌ம் தொடுவீர்க‌ள்.. வாழ்த்துக்க‌ள்

அருண் பிரசாத் சொன்னது…

நெகிழ்ச்சியான கவிதைங்க. என்ன சொல்லுறதுனு தெரியலை

தமிழ் உதயம் சொன்னது…

சுயசரிதை ஒன்று கவிதையாக - பாடங்கள் பல புகட்டியப்படி.

vasan சொன்னது…

//காதலை புதைக்க இயலா ஒரு
தருணத்தில்
வாழ்வை பங்கு கொண்டவளிடம்
மனதை பங்கு போட முடியாமல்
தவித்த பொழுதுகளில்
கிடைத்த செல்வம்
அகில் ஆதித்தன் இன்னொரு
வரம்...//

(காத‌லை (வி)புதைக்க‌,
மிக‌ச்சரியான‌ இட‌ம்
ம‌ணைவியின் ம‌டிதான்.)


//நட்பில் ஜெயித்தவன் வார்த்தைகளை காப்பாற்ற தன்னையே இழந்தவன் //

(பார‌த‌க் க‌ர்ண‌ன் பார்க்கும் தூர‌த்தில்,
கொஞ்ச‌ம் துய‌ர‌த்தில்)

ஒரு புரட்சி செய்யப் போகிறேன்..
இன்னும் நீளும் என் காலடிச் சுவடுகளில் காலம் என் பெயர் பொறிக்கும்...
வாழ்த்துக்க‌ள், செந்தில்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லாயிருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

இடறில்லா பாதை பார்ப்பது கஸ்டம் செந்தில்.வாழ்வில் வெற்றிகளோடுதான் இவ்வளவு துரப்பயணமும்.இன்னும் தொடருங்கள் உற்சாகத்தோடு.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பெருநகர வாழ்வில் சிறு தூசென
மாறியபோது
மேம்பட்டது தற்கொலை
எண்ணங்கள்...//

அடச்சே...

மாம்ஸ் ஏன்யா நீ ஜெயிக்கபிறந்தவன்யா...

அன்புடன் நான் சொன்னது…

உங்க சுவடு... கல்வெட்டாகும்!
கவிதை மிக நல்லாயிருக்கு!

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து!

Jey சொன்னது…

எனக்கு கவிதகளை புரிந்துகொள்வது கடினம், படிச்சி அனுபவிச்சி பின்னூட்டம் போடமுடியல.

காமராஜ் சொன்னது…

நம்பிக்கையை மிக வீர்யமாக விதைக்கிற கவிதை இது. சுவடுதான் இது. செவ்வணக்கம் செந்தில்.

பெயரில்லா சொன்னது…

//இன்னும் நீளும் என்
காலடிச் சுவடுகளில்
காலம் என் பெயர்
பொறிக்கும்...//

தன்னம்பிக்கை பிரகடனம். அசத்திட்டீங்க தல.

கபிலன் சொன்னது…

என்ன செந்தில் சார்.... இப்படி....
காலம் கனியும் உங்களுக்கு.....

எங்களை உரித்து எடுத்தாற்போல் ஒரு கவிதை...
மழலைகளுக்கு என் வாழ்த்துக்கள்...
நேரில் சந்திக்க விழைகிறேன்...

அன்புடன் கபிலன்....

Unknown சொன்னது…

//இன்னும் நீளும் என்
காலடிச் சுவடுகளில்
காலம் என் பெயர்
பொறிக்கும்...//

நிச்சயம் நடக்கும்
வாழ்த்துக்கள் அண்ணா.

Karthick Chidambaram சொன்னது…

வெற்றி உங்களிடத்தில் சில நேரங்களில் நொண்டி இடலாம்.
ஆனால் அது உங்கள் காலடியில் மண்டியடவே விரும்பிகிறது செந்தில்.

ரமேஷ் வீரா சொன்னது…

வழியில் எதிர்பட்ட எல்லா
நட்பிலும்
கற்றதும், பெற்றதும்
இன்னொரு பரிமாணம் ..
மிக்க நன்றி அண்ணா , தங்களின் கவிதையில் என்னுடைய வாழ்க்கையை பார்கிறேன் , நிச்சியம் நாம் காலடி இல் ஒருநாள் பணம் மண்டிஇடும்....................................................................

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அசத்திட்டீங்க

Sugirtha சொன்னது…

மிக எளிமையா அருமையா சொல்லியிருக்கீங்க.

வினோ சொன்னது…

செந்தில் அண்ணே, கவிதை அருமை அருமை... வாழ்க்கை உங்களுக்கு நிறைய துயரம் தந்தது போல் இன்பமும் தரும்... வேண்டிக்கொள்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

//இனி என் செய்வேன்
என
தனியே நின்றபோது
இனி நீதான்
செய்ய முடியும்
என
கண்முன் நிற்கும் இம்மூவருக்குமாய்
மீண்டும் தொடரும்
என் பயணம்
அசோக் நகர் வீதியில் ..
ஒரு சூப் கடையுடன் ..//

அருமையான எதார்த்தம்..

வலியுடன் கூடிய பாராட்டுக்கள்.

vasu balaji சொன்னது…

ஈரக் கடல்மண்ணின் காலடித்தடம் போல்
கால் வைத்துப் பார்த்தேன்
நானும் கடந்த சுவடுகள் அச்சாக

Unknown சொன்னது…

இந்த வரிகள் எனக்கு உரமூட்டுகிறது நண்பரே கலக்குங்கள் வாழ்க்கையே போராட்டம் தானே வீரனே! நிச்சியம் வெற்றி விரைவில்

Riyas சொன்னது…

நல்லாயிருக்கு என்ற ஒரு வார்த்தையுடன் நிறுத்த முடியவில்லை.

வாழ்வின் ஒவ்வொரு நிலைகளையும் தொட்டுச்சென்றது அருமை..

Riyas சொன்னது…

நல்லாயிருக்கு என்ற ஒரு வார்த்தையுடன் நிறுத்த முடியவில்லை.

வாழ்வின் ஒவ்வொரு நிலைகளையும் தொட்டுச்சென்றது அருமை..

ஜெயந்தி சொன்னது…

வாழ்க்கையை அழகா சொல்லியிருக்கீங்க.