16 ஜூலை, 2010

அஞ்சலி...( கும்பகோண தீ விபத்தில் பலியான செல்வங்களுக்கு...)

இன்று கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் நினைவு நாள்... 

வருடங்கள் ஓடிவிட்டன 
நீங்கள் எங்களைவிட்டு 
மறைந்து 
அங்கெ மெழுகுவர்த்தியுடன் சில 
அன்பு உள்ளங்கள் 
பிரார்த்திக்கின்றன..

நாங்கள் 
சுலபமாக மறந்துவிட்டோம் 
உங்களை..
இதன் பின்னும் 
குளத்தில் விழுந்த வேனில்
இன்னும் சில பிள்ளைகள்..

பள்ளிக்கு அனுப்பி
பலியாக்கினோம்.

எத்தனை கனவுகள் 
உங்கள் மேல்,
அத்தனையும் கருகின 
அலட்சியத்தால்..

தேவதைகளும் 
தேவன்களும் நீங்கள்..
மனித குலத்தின்
மாறாத பிழை நாங்கள் ...

யாரையும் குறை கண்டு 
என்ன ஆகப்போகிறது
நீங்கள் இல்லை இப்போது..

எம் செல்வங்களே 
படிப்பில் உங்களை 
முன்னுதாரணம் 
ஆக்குவீர்கள் என்றுதானே 
பள்ளிக்கு அனுப்பி வைத்தோம்..
எங்களுக்கு 
படிப்பினை ஆகிவிட்டு 
பறந்து விட்டீர்களே..

எப்போதும் சிரிக்க வைத்த 
மழலைகளே 
இப்போது அழுகிறோம்
குற்ற உணர்ச்சியில்...

40 கருத்துகள்:

கபிலன் சொன்னது…

முற்றிலுமாக நினைவில்லை செந்தில் சார்...
என்ன செய்யலாம் இந்த மனத்தை...
கொடிது கொடிது..குழந்தைகள் மரணம்....
கடவுளின் மீதான நம்பிக்கைகள் முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது.....அதன் பின்..

அன்புடன் கபிலன்.

kavisiva சொன்னது…

இளந்தளிர்களுக்கு கண்ணீர்த் துளிகளோடு ஆழ்ந்த அஞ்சலிகள்.

மனம் கனக்க வைக்கும் கவிதை

Karthick Chidambaram சொன்னது…

அன்றைய நாள் நினைவில் உள்ளது நண்பரே.
எங்கள் இதயம் வலிக்க - அந்த பிஞ்சுகளின் நிழற்படங்களை பார்த்து உண்மையில் கண்ணீர் விட்ட நிமிடங்கள்.
நாளை ஊர் மெச்ச பேர்வாங்க வேண்டிய பிள்ளைகள் ... தீக்கு இரையான கொடூரம்.

அச்பெச்டோஸ் பள்ளிக்கூடங்கள். கூரை வகுப்புக்கள் இன்னும் உள்ளதென்றே நினைக்கிறேன்.
இந்த நிகழ்வு மறக்காமல் இருப்பது நல்லது - அப்போதுதான் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய அக்கறை இருக்கும்.

ஆழ்ந்த அஞ்சலிகள்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தலைப்பை பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டன...நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் தங்கலுடன் அஞ்சலி செலுத்துகிறேன்

காமராஜ் சொன்னது…

எத்தனை கனவுகள்
உங்கள் மேல்,
அத்தனையும் கருகின
அலட்சியத்தால்..


தேவதைகளும்
தேவன்களும் நீங்கள்..
மனித குலத்தின்
மாறாத பிழை நாங்கள் ...


யாரையும் குறை கண்டு
என்ன ஆகப்போகிறது
நீங்கள் இல்லை இப்போது..



கோபம்,வஞ்சனை,பதிலுக்குப்பதில் எல்லாவற்றையும் விட இந்த ஆற்றாமை ஆழவேரோடித்தாக்குகிறது.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கண்ணீர்த் துளிகளோடு ஆழ்ந்த அஞ்சலிகள் :(((

vasu balaji சொன்னது…

அஞ்சலியில் உங்களோடு நானும்:(. இதற்குப் பின்னரும் எத்தனை பள்ளிகள் இதே கட்டமைப்பில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

முனியாண்டி பெ. சொன்னது…

எவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டோம்...உண்மையில்

//இப்போது அழுகிறோம்
குற்ற உணர்ச்சியில்...
///

Ahamed irshad சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள்.

சௌந்தர் சொன்னது…

இதை இப்போது நினைத்தாலும் மனது வலிக்கிறது அண்ணா

ஜோதிஜி சொன்னது…

செந்தில் இந்த பாதிப்பை பார்த்த பிறகாவது ஜனநாயக காவலர்கள் திருந்தினார்களா?
சட்டம் தான் இன்றுவரையிலும் தன் கடமையைச் செய்து கொண்டு இருக்கிறதா?

Riyas சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள் அனைவருக்கும்..

இனிமேலும் இப்படி நடக்காமலிருக்க வழியமைப்போம்..

VELU.G சொன்னது…

நல்ல கவிதை

குழந்தைகளுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி

jothi சொன்னது…

மனதை கனக்க வைத்து விட்டது உங்களது வரிகள்... இனி இப்படி ஒரு துயரம் வேண்டவே வேண்டாம்..... யாரிடம் சொல்ல....?? !

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

துளிராமலே துளிர்த்துவிட்ட பிஞ்சுகுழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி

ஈரோடு கதிர் சொன்னது…

காலம் பலவற்றை கரைத்துப் போகும், சிலவற்றை அடர்த்தியாக்கிப் போகும். கும்பகோணம் விபத்தின் சோகம் அதில் தொடர்பில்லாத எல்லோருக்குள்ளும் கிட்டத்தட்ட கரைந்தே போய்விட்டது, ஆனால் அதே காலம் நீதி கிடைக்காமல் அலையும் அந்த பெற்றோர்களின் மனதில் இயலாமையையும் சேர்த்து சோகத்தை அடர்த்தியாக்கிக் கொண்டுதானே இருக்கின்றது?

என்றுதான் தணியும் இந்தச் சோகம்?

அம்பிகா சொன்னது…

கண்ணிர் அஞ்சலிகள்.
கண்ணிர் சிந்தவைத்த கவிதை.

Prathap Kumar S. சொன்னது…

மிகவேதனையான ஒரு நிகழ்வு...
மழலை தெயவங்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

வினோ சொன்னது…

இன்னும் மாற்றம் இல்லை...இது அவமானம்...கண்ணீர் கவிதை KRP அண்ணே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

குழந்தைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Prasanna சொன்னது…

அந்த கடைசி நொடிகள் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்..? கண்ணீர் அஞ்சலிகள்..

அன்புடன் நான் சொன்னது…

கருகிய மொட்டுகளுக்கு... என் அஞ்சலி.

Ranjithkumar சொன்னது…

! ஆழ்ந்த அஞ்சலிகள் !

ஜெயந்தி சொன்னது…

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத நிகழ்வு.

ஆழ்ந்த அஞ்சலிகள்!

செல்வா சொன்னது…

அந்த கொடூரத்தை நினைத்தாலே மனம் வலிக்கிறது ..!!
குழந்தைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..!!

http://rkguru.blogspot.com/ சொன்னது…

இந்த விபத்து எல்லோருக்கும் தெரிந்த விபத்து மனதை நோகடித்த விபத்து அதனால் இந்த நினைவு நம்ம மனதின் நீங்க வடுவாகி போனது....ஆனால் நித்தம் நித்தம் பச்சில குழந்தைகள் தினம் தினம் ஏதோ ஒரு காரணத்தில் தெரியாமல் செத்துகொண்டுதான் இருக்கின்றது.

பெயரில்லா சொன்னது…

மறந்து தான் போய் விட்டது.. உங்கள் பதிவு அந்த மறதியை தீயாய் சுடுகிறது..
வெட்கப்படுகிறேன்..
சிறப்பான பதிவு.. வாழ்த்துக்கள்.

அன்பரசன் சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்

R.Ulages சொன்னது…

அரசியல்வாதிகளின் உதவியுடன் தற்போதும் இதுமாதிரியான பள்ளிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இறந்த குழந்தைகளை மனதில் நிறுத்தி, மேலும் மேலும் இது மாதிரி நிகழ்வுகள் நடக்காமலிருக்க, முறையான அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியபடுத்தி நடவடிக்கை எடுக்க நாம் உறுதி கொள்வோம். கும்பகோணம் தீ விபத்தில் மற்றும் வேதாரன்யத்தில் குளத்தில் வேன் கவிழ்ந்து இறந்த குழந்தைகளின் நினைவாக என்றும் ............

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள்.

Jey சொன்னது…

பிஞ்சுகளின் ஆத்மாக்களுக்கு, அஞ்சலிகள்.

பெயரில்லா சொன்னது…

þó¾ þÆôÒ ¿ÁìÌ ®Î¦ºö Óʾ ¦À¡¢Â þÆôÒ ÁðÎõ «øÄ þ¾ý ÓÄõ ¿ÁìÌ ´÷ À¡¼ò¨¾ ÌÆ󨾸ø ¿ÁìÌ ¸üÀ¢òÐ þÕ츢Ã÷¸û «Ð ÀÇÇ¢¸Ç¢ø «øÄÐ ÀûÇ£ º¡üó¾ þ¼í¸Ä¢ø ²¾ÅÐ ¾ÅÚ¸û ¿¼ó¾ø ¯¼ÉÊ¡¸ ºõÁó¾ôÀð¼ ÀûǢ¢ý ¾Ä¨Á¬º¢¡¢Â÷ «øÄÐ «Ð º¡ü¾¸øÅ¢ ¯Âþ¢¸¡¡¢ «Å÷¸ÙìÌ ¸ÅÉ ®÷Ò ¸Ê¾õ «øÄÐ Ò¸÷ «ÛôÀ¦ÅñÎõ þо¡ý «Å÷¸éìÌ ¿¡õ ¦ºöÔõ ¯ÇÒ÷ÅÁ¡É «ïºÄ¢

பெயரில்லா சொன்னது…

þó¾ þÆôÒ ¿ÁìÌ ®Î¦ºö Óʾ ¦À¡¢Â þÆôÒ ÁðÎõ «øÄ þ¾ý ÓÄõ ¿ÁìÌ ´÷ À¡¼ò¨¾ ÌÆ󨾸ø ¿ÁìÌ ¸üÀ¢òÐ þÕ츢Ã÷¸û «Ð ÀÇÇ¢¸Ç¢ø «øÄÐ ÀûÇ£ º¡üó¾ þ¼í¸Ä¢ø ²¾ÅÐ ¾ÅÚ¸û ¿¼ó¾ø ¯¼ÉÊ¡¸ ºõÁó¾ôÀð¼ ÀûǢ¢ý ¾Ä¨Á¬º¢¡¢Â÷ «øÄÐ «Ð º¡ü¾¸øÅ¢ ¯Âþ¢¸¡¡¢ «Å÷¸ÙìÌ ¸ÅÉ ®÷Ò ¸Ê¾õ «øÄÐ Ò¸÷ «ÛôÀ¦ÅñÎõ þо¡ý «Å÷¸éìÌ ¿¡õ ¦ºöÔõ ¯ÇÒ÷ÅÁ¡É «ïºÄ¢

க ரா சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள்.

செ.சரவணக்குமார் சொன்னது…

ஆற்ற முடியாத துயரம் இது.

கவிதை அஞ்சலி மிக நன்று செந்தில்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கண்ணீர்த் துளிகளோடு ஆழ்ந்த அஞ்சலிகள் :(((

மங்குனி அமைச்சர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

//எப்போதும் சிரிக்க வைத்த
மழலைகளே
இப்போது அழுகிறோம்
குற்ற உணர்ச்சியில்...//

:((

ரமேஷ் வீரா சொன்னது…

எப்போதும் சிரிக்க வைத்த
மழலைகளே
இப்போது அழுகிறோம்
குற்ற உணர்ச்சியில்...




மறதி என்பது நம் தேசிய வியாதி அண்ணா , இதற்கு காரணமான அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறக்கலாம் அண்ணா , ஆனால் நம்மை போன்ற நல்ல உள்ளங்கள் என்றும் மறவாது ........................... இன்று நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வெல்லம்...............................

Unknown சொன்னது…

கருகிய மொட்டுகளுக்கு... என் அஞ்சலி