17 ஜூலை, 2010

மதுமிதா..

கடவுளின் காதலி 
இன்னொரு ஆண்டாள் 
அல்லது 
பக்த மீரா.. 

உன் கோபங்கள் 
நியாயமானவை என்று 
நீ நம்புகிறாய்..
உன் கடவுள் (இருப்பார் எனில்)
எனக்கும் அவரே கடவுள் 
நீ நேசிக்கும் அவர் 
என்னை நேசிக்க மறுப்பது ஏன்?

முகம் பல கொண்ட கடவுள் மேல் 
பாசமும் 
முகம் அறியா என் மேல் 
கோபமும் கொண்டவளே..
ஒரே கடவுள் 
வேறு வேறு பார்வை..

விமர்சனங்களை தாங்க மறுக்கும் 
பெண் நீ ..
நாளையே நான் கடவுளாக
மாறலாம் 
அல்லது நீ கடவுளை 
மறுக்கலாம் 
மாற்றமே மாறாதது..

உன்னையும், என்னையும் 
படைத்த கடவுள் 
நீ பாராட்டவும் 
நான் வெறுக்கவும்..

பின்னூட்டங்களில் வெறுப்பை 
உமிழும் சகோதரியே..
நான் உனக்கு எதிரியும் 
அல்ல 
நீ கடவுளின் காவலும் அல்ல..

என்னை வெறுக்க 
பன்னாடை 
நாதாரி 
..யிரு
இப்படியாக,
உங்கள் கடவுளின் மேல்
கல்லெறிகிறீர்கள்..

என் பதிவில் 
எனக்கு விமர்சனம் வை..
எதிப்பைக் காட்டவென்றே 
நீ 
எழுதும் பின்னூட்டங்கள் 
நகைப்பைத்தான் தருகிறது..

மீண்டும் ஒருமுறை 
சத்தமாக சொல்கிறேன்..

கடவுள் இல்லை.. கடவுள் இல்லை ..
கடவுள் இல்லவே இல்லை..
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி 
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்..
                                               - பெரியார்...

75 கருத்துகள்:

Bibiliobibuli சொன்னது…

செந்தில், எங்கிருந்து இப்படி படம் எல்லாம் கண்டுபிடிக்கிறீர்கள்?

Bibiliobibuli சொன்னது…

//பின்னூட்டங்களில் வெறுப்பை
உமிழும் சகோதரியே.//

பெரியார் இப்படி கூடவா எழுதினார்?

முனியாண்டி பெ. சொன்னது…

கே. ஆர்.பி. செந்தில், பதில்கூட இவ்வளவு அழகாக சொல்லமுடியுமா?

முகம் தெரியாத கடவுள் பக்தை, உன் கடவுள் நல்லவர் என்றால்? உன்னை இவ்வளவு கீழ்த்தரமாக பேசவைத்தது ஏன்? உன் வழியில் இருக்கிறார் என்றாள் உன்னையும் தண்டிப்பார் தானே இவ்வாறு பேசியதற்கு. தண்டிக்கவில்லை என்றால் கடவுள் இல்லைதானே?

க ரா சொன்னது…

யாருன்னா அது.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//என்னை வெறுக்க
பன்னாடை
நாதாரி
..யிரு
இப்படியாக,
உங்கள் கடவுளின் மேல்
கல்லெறிகிறீர்கள்..//
..??

Unknown சொன்னது…

????

என்ன நடக்குதுன்னு யாராவது சொல்லுங்களேன்...

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கடவுள் இல்லை என்பதை தான் நானும் சொல்கிறேன் நீங்களும் சொல்கிரீகள்....வாழ்க நம் சிந்தனை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

செந்தில்..என்னது இது...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மறுபடியும் புனைவா?ஐ இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜாலியா பொழுது போகும்...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

மாற்றுக் கருத்தாளர்களிடையே பரஸ்பர மதிப்பும் அன்பும் வளரட்டும் ...

நீங்கள் கையை நட்புடன் நீட்டியிருக்கிறீர்கள்...

கைகுலுக்க சகோதரியை அன்புடன் வேண்டுகிறேன் !

துளசி கோபால் சொன்னது…

என்ன நடக்குது??????
ஒன்னும் புரியலை:(
தலைப்பைப் பார்த்து உள்ளே வந்தேன்.......

ஜோதிஜி சொன்னது…

செந்தில் இந்த கேள்விகளுக்கு உங்களிடம் இருந்தாவது பதிலை எதிர்பார்க்கின்றேன்.

முதலில் ரதி சொன்னது போல் எப்படி இது போன்ற படங்கள் உங்கள் கண்களுக்கு மட்டும் தென் படுகிறது?

பெரியார் முதல் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் இன்றைய அரசியல் வியாதிகள் வரைக்கும்
சொன்ன அத்தனை கருத்துக்களும் எடுபடாமல் ஏன் இந்த சமூகம் வருடம் வருடம் ஆன்மீகம்
பக்கம் செல்லும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

சொன்ன கருத்துக்கள் தப்பா?

சொன்னவர்களின் சுய நல கொள்கைகள் காரணமா?

இல்லை சரியான விதத்தில் கொள்கைகளை கொண்டு செல்ல இன்று வரையிலும் ஆள் இல்லையா?

எங்கே செல்லும் இந்த பாதை?

Unknown சொன்னது…

கடவுள் இல்லவே இல்லை, நிச்சியமாக நல்ல பதிலும் கூட

துளசி கோபால் சொன்னது…

ஜோதிஜி,

படங்கள் எங்கே கிடைக்குதா?

இதுக்கும் ஒரு பதிலைக் 'கடவுள்' சொல்லி இருக்கார்.

தேடுங்கள். கண்டடைவீர்கள்!!!!!

சௌந்தர் சொன்னது…

கடவுள் இல்லை.. கடவுள் இல்லை ..
கடவுள் இல்லவே இல்லை..
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்..// இந்த வரி நான் பெரியார் படத்தில் கேட்டு இருக்கிறேன்

சௌந்தர் சொன்னது…

இந்த வரி நான் பெரியார் படத்தில் கேட்டு இருக்கிறேன்...எனக்கு ரொம்ப புடித்த வரியும் கூட,

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

// தேடுங்கள். கண்டடைவீர்கள்!!!!! //

" தேடுவதை நிறுத்துங்கள் ...தேடுவது கிடைக்கும் "-ஓஷோ

Unknown சொன்னது…

அண்ணன் ஜோதி கணேசனுக்கு..
//முதலில் ரதி சொன்னது போல் எப்படி இது போன்ற படங்கள் உங்கள் கண்களுக்கு மட்டும் தென் படுகிறது?//
இன்னும் நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளேன்... தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன்.. பெரும்பாலும் நண்பர்கள் அனுப்பி வைக்கும் படங்கள்தான்..

//பெரியார் முதல் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் இன்றைய அரசியல் வியாதிகள் வரைக்கும்
சொன்ன அத்தனை கருத்துக்களும் எடுபடாமல் ஏன் இந்த சமூகம் வருடம் வருடம் ஆன்மீகம்
பக்கம் செல்லும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.//

மக்களுக்கு பிரச்சினை அதிகமாகிக் கொண்டே வருகிறது.. தீர்வுகளை எளிய வழிகளில் தேடுகிறார்கள்.. அதில் ஒன்றுதான் கடவுளின் உதவியை நாடுதல்.. ஆனால் உண்மையில் இவர்கள்தான் கடவுளை பராமரிக்கிறார்கள்..அந்த பெயரை சொல்லி ஏமாற்றும் பொறுக்கிகளின் பின்னால் சென்று பணத்தை மட்டுமல்லாது நிறைய விசயங்களை இழக்கின்றனர்..

இன்னும் இரண்டு தலைமுறை தாண்டி பெரியாரையும் கடவுளாக்கினாலும் ஆச்ச்யர்ப்பட ஒன்றும் இல்லை..

ஆனாலும் எங்களைப் போன்ற ஆட்களும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்போம்..

இங்கு மிகப்பெரிய முட்டாள்தனமே விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் அறியாமைதான்.. தான் நம்பும் விசயங்களை மட்டுமே ஆதரிப்பது, அறிவை சுருங்கவே செய்யும்.. மேலும் கடவுள் எந்த மதமாக இருந்தாலும் ஏற்கும் மக்களைப் போல் எதிர்க்கும் மக்கள் இருப்பதையும் வரவேற்க வேண்டும்..

எனக்கு தெரிந்து கலைஞர், வீரமணி இருவரும் இந்த மக்களுக்கு இனிமேல் நாம் சொல்லி புரிய வைப்பதைவிட புள்ளை குட்டிகளுக்கு சொத்து சேர்த்து வைத்தால் நாளை தலைமுறையாவது மிஞ்சும் என ஒதுங்கி விட்டனர்..

முன்பெல்லாம் வழிபாட்டு தளங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இருக்கும்.. முறையான..அர்பணிப்பு தன்மையுடன் கூடிய மனிதர்கள் கடவுள் சேவையில் ஈடுபட்டு வந்தனர்.. இப்போது பெட்டிக் கடை போல நினைத்த இடங்களில் எல்லாம் வந்துவிட்டது.. கடவுள் பெயரை சொல்லியே மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் திருடர் கூட்டம் மிகுந்து விட்டது..

இது கடவுள் பற்றிய சிந்தனையை கட்டாயம் மக்களை யோசிக்க வைக்கும்.. மாற்றம் வந்தே தீரும் ..

ஜோதிஜி சொன்னது…

எனக்கு தெரிந்து கலைஞர், வீரமணி இருவரும் இந்த மக்களுக்கு இனிமேல் நாம் சொல்லி புரிய வைப்பதைவிட புள்ளை குட்டிகளுக்கு சொத்து சேர்த்து வைத்தால் நாளை தலைமுறையாவது மிஞ்சும் என ஒதுங்கி விட்டனர்..


சிரித்துக் கொண்டேயிருக்கின்றேன்?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

யாரு...யாரு....யாரு....யாரு...யாரு...யாரு...அது
..
என்ன நடக்குதுன்னு யாராவது சொல்லுங்களேன்...

Unknown சொன்னது…

எல்லோரும் கேட்பதற்காக..

வாரம் ஓரு பதிவர். கே.ஆர்.பி. செந்தில்


http://rasikan-soundarapandian.blogspot.com/2010/07/blog-post_11.html

Prathap Kumar S. சொன்னது…

தலைவா யாரு அது சொல்லுங்க தூக்கிருவோம்... ஏன் இவளோ சூடு....???

Karthick Chidambaram சொன்னது…

கே. ஆர்.பி. செந்தில், பதில்கூட இவ்வளவு அழகாக சொல்லமுடியுமா?

தமிழ் உதயம் சொன்னது…

ஜனத்தொகை கூட கூட பக்தர்களின் எண்ணிக்கையும், கோவில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும். கூடவே கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதொடு, நாத்திகத்தை வெறுப்பேற்ற வழிப்பாட்டுதலங்களுக்கு செல்வோரும் உண்டு. ஆத்திகர்களால் கடவுள் நம்பிக்கையை அழிப்பது இயலாத காரியம்.

தமிழ் உதயம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜெயந்தி சொன்னது…

aஎதிர்ப்பைக்கூட கவிதையால் சந்திக்கும் உங்களை சகோதரர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

இவரு பெரிய obavama? மயிரு ஒரு மண்ணும் தெரியாது
இவனை போய் meet பண்ணி இருகீங்களே boss
இவன் கடவுளை கும்பிடா விட்டால் என்ன? செத்தால் என்ன?
இந்த மாதிரி அரை வெக்காடுகளை அப்படியெ விட்டு விடனும் boss
இவனை பத்தி எழிதி time waste பன்னாதீங்க
பேரை பாருங்ங... VGP Golden Beach மாதிரி KRPசெந்தில்
நாதாரி பய boss அவன்
விடுங்க

மதுமிதா
madhumidha1@yahoo.com

-translated by mathumitha_supporters_group :)

சசிகுமார் சொன்னது…

கடவுள் என்பதே ஒரு நம்பிக்கையை உருவாக்க படைக்கப்பட்டதே நாளைடவில் அதுவே அனைத்து மூட நம்பிக்கைகளுக்கு காரணாமாக ஆக்கி விட்டார்கள் நம் மக்கள்

பெயரில்லா சொன்னது…

கடவுள் இல்லை என்று நாம் குரல் கொடுக்க , கடவுள் இருக்கிறான் என்று அவர்கள் குரல் கொடுக்க - உலகில் மேலும் இரண்டு பிரிவு உருவாகும் மோதலுக்கு.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

மீண்டும் ஒருமுறை
சத்தமாக சொல்கிறேன்..

கடவுள் இல்லை.. கடவுள் இல்லை ..
கடவுள் இல்லவே இல்லை..
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்..
- பெரியார்...

shortfilmindia.com சொன்னது…

rightu..rightu..

Hai சொன்னது…

ஒன்று சொல்ல விரும்புகிறேன் செந்தில்.
ஒரு வாசகம் எங்கோ படித்தது. improve your arguement not your voice.
உன்னுடைய விவாதத்தை வலுப்படுத்து உன்னுடைய குரலை அல்ல
என்று தமிழ்ப்படுத்தலாம்.
எனவே இவ்வாறு வெறும் குரலை உயர்த்துபவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுப்போவதை போல வேறு அருமையான காரியம் வேறில்லை.
நேற்றுதான் தமிழ் ஓவியாவின் வலைப்பூவில் பெரியாரின் மொழிகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_6497.html
அதிலிருந்து சில வரிகள்
தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் “இராமசாமிக் கழுதைக்கு செருப்படி” என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுக வில்லை இங்கும் “இராமசாமிக் கழுதை செத்துவிட்டது” என்றும் “இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி” என்றும் எழுதி இருந்தது. “இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும்” என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் “இராமசாமிக் கழுதை செத்துப் போய் விட்டது” என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அதுபோலவே, “இராமசாமி மனைவி கற்புக்கரசி” என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழை வரச் செய்து பயன் பெற்று இருந்தால் “இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி” என்பதற்கு நான் விசனப்பட வேண்டும். ஆகவே, அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளி லிருந்து ஒரு அளவுக்கு நான் ‘வெற்றி பெற்று விட்டேன்’ என்பதை மாத்திரம் உணருகிறேன்.
நாகையில் 03..10.1931 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள்
இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது நீங்களும் பெயர் பெற்றுவிட்டீர்கள் என்றே.
இவர்களுக்கு பதிலாளிப்பதோ அல்லது அதற்காக வருந்துவதோ போன்ற அற்ப காரியங்கள் வேறில்லை. நீர் என்னவென்றால் அவரகளது பெயரும் ரும் முகவரியும் வைத்துக் கொண்டு அலைந்துகொண்டிருக்கிரீர்.

Hai சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Hai சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Hai சொன்னது…

ஒரே கருத்து மீண்டும் மீண்டும் இணைய பிழை காரணமாக வெளியிடப் பட்டதால் அவற்றை நீக்கியிருக்கிறேன்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

அந்த லிங்கையும் படிச்சேன் , யார் அந்த பொண்ணு ?

jothi சொன்னது…

சகோதரர் கே ஆர் பி செந்தில் அவர்களுக்கு,

உங்கள் ஆதங்கம், கோபம் கவிதையில் நன்கு பிரதிபலிக்கிறது. கடவுளை நம்புகிறோம் என்று இருந்த கூட்டம் இப்போது அந்த பேரை பெரிது படுத்தி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தின் பின்னால் ஓடி கொண்டு இருக்கிறது...., எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலே... ?

rvelkannan சொன்னது…

அருமை நண்பரே , எவ்வளோ சொல்லியாயிற்று என்ன செய்வது... இனியும் சொல்லிக்கொண்டே இருப்போம் ...

ராசராசசோழன் சொன்னது…

உரக்க சொன்னாலும்...கேட்காத உலகம் இது...

பெயரில்லா சொன்னது…

[உன்னையும், என்னையும்
படைத்த கடவுள்
நீ பாராட்டவும்
நான் வெறுக்கவும்..]

நல்ல வரிகள்.......

'பரிவை' சே.குமார் சொன்னது…

Right... Rightuuuuuuu..!

priyamudanprabu சொன்னது…

கடவுள் இல்லை.. கடவுள் இல்லை ..
கடவுள் இல்லவே இல்லை..
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்..
- பெரியார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மதுமிதா சூப்பர் பிகர். அந்த பிகர யாராவது கலாய்ச்சீங்கன்னா சட்டம் தன கடமையை செய்யும் என்பதை ஜொள்ளிக்கொள்கிறேன்

இதையும் மீறி யாராவது குடிச்சுட்டு வந்து Program எழுதினா drink & write act படி தண்டிக்கப்படுவார்கள்.

vasan சொன்னது…

எவ்வ‌ள‌வு தாண்டி, இங்கு வ‌ந்திருக்கிறீர்க‌ள்.
இத்த‌கு பொக்கு பின்னோட்ட‌ங்க‌ளால், புண்ப‌ட‌லாமா?
ஏமாற்றி விட்டீர்க‌ள், செந்தில். ப‌ண்ப‌ட்ட‌ நில‌ம்,
குப்பைக‌ளையும் உர‌மாக்கும் திற‌ம் கொள்ளுங்க‌ள்.

ஜோதிஜி சொன்னது…

ப‌ண்ப‌ட்ட‌ நில‌ம்,குப்பைக‌ளையும் உர‌மாக்கும் திடம் கொள்ளுங்க‌ள்.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அ.முத்து பிரகாஷ் சொன்னது…

"ivan kadavulai kumbitta vittal enna? setthaal enna?"
இனிப்பு இருக்க கசப்பு கவர்ந்தற்று ...
கசப்பும் ஒரு சுவை தான் தோழர் ...
அளவு மிஞ்சினால் ...
போகட்டும் ...
மனம் திறந்து பரஸ்பரம் தழுவிக் கொள்வோம் ...வாருங்கள் தோழர் ...
இந்த தளத்திற்கோ அல்லது தோழர் ரசிகனின் தளத்திற்கோ ...
தயக்கங்கள் வேண்டாம் தோழர் ...
வந்து மனம் விட்டு விவாதியுங்கள் ...
அல்லது திட்டுங்கள் ...
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது போதும் தோழர் ...
வாருங்கள் மதுமிதா !!!
மனம் விட்டு பேசினால் எஞ்சுவது புன்னகைகள் மட்டுமே !
வாருங்கள் சண்டையிடுவோம் கட்டிப்புரள்வோம் புன்னகைப்போம் கைகுலுக்குவோம் மதுமிதா !!!Welcome my Sweety!!!

Unknown சொன்னது…

வணக்கம் வாசன் அண்ணே,
அன்பிற்கு மிக்க நன்றி.. நண்பர்களின் வேண்டுகோளுக்காக எழுதினேன்,

எனக்கு நன்றாக தெரியும் கூடிய விரைவில் அவர்கள் என்னைப்போல் மாறுவார்கள்.. நான் ஒரு காலத்தில் தீவிர கடவுள் நேசிப்பாளன் ஆகவே இருந்தேன்..

எல் கே சொன்னது…

nanabre , avar avar nambikkai avar avaruku, ithil etharkku tevayattra sandai

ராஜா பேசுகிறேன் ... சொன்னது…

யாரு மாமா அது.. இந்த கடவுளின் காதலிக்கு ஒன்று சொல்லுகிறேன் நான் கடவுளின் அவதாரம்,சீடன் என்று கூறிகொள்ளும் நிறைய சுஹாநந்தாக்கள்,அடிகளார்களெல்லாம் இருக்கிறார்கள் அவர்களிடம் தாங்கள் வெறுப்பை காட்டவேண்டியதுதானே...
(அங்க போனாதான் பொத்துன்னு விழுந்துடுவோமே கால்ல)

செல்வா சொன்னது…

அருமை அண்ணா ..!! விவாதங்கள் செய்வதும் கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் . இதில் நாகரிக மற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவரின் மனதை புண்ணாக்குவோருக்கு அந்த கடவுள் கூட உதவ மாட்டார். நான் கடவுளை நம்புகிறேன் , அது எனது விருப்பம் . அதற்காக கடவுளை நம்பிக்கை அற்றவர்களை விமர்சிப்பது கேவலமானது. அதிலும் நாகரீகமற்ற முறையில் பின்னூட்டமிடுவது என்பது எந்த கடவுள் சொல்லிக்கொடுத்தாரோ...?

Jey சொன்னது…

கூட்டுங்கப்பா.. பஞ்சாயத்த.. பேசி பைசல் பண்ணிரலாம்.

( ரத்தகளரி எல்லாம் வேண்டாம், என்னமாதிரி நொம்ப பேருக்கு அலர்ஜி..)

பெயரில்லா சொன்னது…

படம் கலர்புல்லா இருக்கு..உங்க எழுத்து ஜிவ்வுன்னு இருக்கு

ரமேஷ் வீரா சொன்னது…

கடவுள் இல்லை.. கடவுள் இல்லை ..
கடவுள் இல்லவே இல்லை..
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்..
- பெரியார்...
நான் நேசித்த வரிகள் ...................
நான் நேசித்த தலைவரின் வரிகள் ...................






ஒரு உண்மையை வெளிபடையாக சொல்லும்போது பல பல விமர்சனங்கள் வரும் அண்ணா , ஆனால் அவற்றை பற்றி கவலை படாதிர்கள் ................உங்கள் கொள்கையை பின்தொடர எங்களை போன்ற எண்ணற்ற இளைய தலைமுறையினர் உள்ளோம் ................

ஹேமா சொன்னது…

கடவுள் இருந்தா காட்டுங்க யாராச்சும்.நிறைய இருக்கு கேக்கணும் கேள்விகளும் தேவைகளும் !

vinthaimanithan சொன்னது…

அதுசரி அண்ணா, இவங்களுக்கெல்லாம் நேரம் மெனக்கெட்டு கவிதை எழுதணுமா? அப்துல் ரஹ்மான் சொன்னமாதிரி அம்மிகொத்த சிற்பி எதற்கு?

Unknown சொன்னது…

மதுமிதா என்ற பெயரில் ஒரு மண்ணாங்கட்டி பேசுவதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாம். அடுத்தவரை வம்பிலுத்துப் பார்ப்பதே சிலருக்கு முழுநேர வேலை. நிஜ முகத்துடன் வந்தால் நிறைய பேசலாம். நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.


பொறுமையாய் கவிதையில் பதில் சொன்ன விதம் அழகு. விட்டுத்தள்ளுங்கள் அண்ணா. நம் வேலையை பார்ப்போம்.

ரோஸ்விக் சொன்னது…

நீ என் தோழன்.
பதிவும், பின்னூட்டங்களில் பலவும் மிகவும் சிறப்பு செந்தில்.
விட்டுத்தள்ளுங்க...

dheva சொன்னது…

நான் யாரென்று சொல்ல மாட்டேன்......ஆனால் நான் பெரிய சிந்தனைவாதி.....! மிகப்பெரிய ஆன்மீக வாதி....ஹா...ஹா...ஹா...செந்தில் இவர்களுக்கும் கடவுளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. பிறப்பின் அடையாளம் முகம் அதைகாட்ட மறுக்கும் வீராதி வீரர்கள்....

கடவுளுக்கே இவர்கள் பாதுகாப்பு கொடுக்கிறார்களாம்.....அறிவிலிகள்....! மெல்ல புறம் தள்ளி விடுவோம் செந்தில் இவர்களை....! மேற்கொண்டு நாம் பதில் சொல்லி நமது தகுதிகளைகுறைத்துக் கொள்ளக் கூடாது.

ஆன்மீக ரீதியான தர்க்கமா? வாருங்கள்.....பேசுவோம்....
பகுத்தறிவு ரீதியான வாதம? வாருங்கள் விவாதிப்போம்....
அறிவியல் ரீதியான பயணமா...வாருங்கள்.....பயணிப்போம்...


இது எதுவுமே தெரியாது ஒளிந்திருந்து பின்னூட்டம் மட்டும்தான் போடுவீங்களா...? போங்க பாஸ் போய் டைம் வேஸ்ட் பண்ணாம புள்ள குட்டிகளை படிக்க வைங்க....! கஷ்டப்படுற ஏழைகளுக்கு உதவி பண்ணுங்க..... இல்லேன்ன பெரிய தொழிலதிபர் ஆவேன்னு ஒரு லட்சியம் வைத்து முன்னேறுங்க......சும்மா வந்து பின்னூட்டம் போட்டு ஒண்ணும் சாதிக்கப் போறதில்லை...!

அடுத்தவரை பாயின்ட் அவுட் பண்றதுக்கு முன்னால நம்ம அருகதை பற்றி யோசிக்கணும்...!



Senthil...........You Keep going boss.....! Nothing can stop us............and the sky is the limit........!

வினோ சொன்னது…

பதிவு முதல் தடவை படிக்க வந்துட்டு போனப்ப‌ 32 இப்போ 58...KPR அண்ணே எனக்கு ஒரு ஐயம்..இவ்வளவு கடுமையான கவிதைக்கு/பதிலுக்கு அவுங்க தகுதியா?

Unknown சொன்னது…

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், உங்கள் ஆதரவிற்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்....

ரமேஷ் வீரா சொன்னது…

கடவுள் உண்டு என்று சொல்பவர்களுக்கும் ,
கடவுள்தான் எல்லாவற்றையும் காப்பாற்றுகிறார் என்று வாதிடுபர்களுக்கும்,
எங்கலின்(கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் ) சார்பாக சில கேள்விகள் .......... முடிந்தால் சரியான பதிலை தாருங்கள் .........................................
1 - எது கடவுள் ?
2 - எதற்கு இத்தனை பெயர்கள் உங்கள் கடவுளுக்கு ?
3 - உங்கள் கடவுள் எதனை பேர் ?
4 - எல்லாவற்றையும் காக்கும் உங்கள் கடவுளை காப்பாற்ற எதற்கு வெளியில் பெரிய கதவுகள் ?
5 - தன்னையே காப்பற்றி கொள்ள முடியாத உங்கள் கடவுள் எப்படி எல்லாவற்றயும் காப்பாற்றுவார் ?
பதில் ???????????????????? ?????????????????????????????????????????

ரமேஷ் வீரா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

செந்தில் அண்ணணிடமிருந்து இப்படி ஒரு தாக்குதல் பதிவை எதிர்பார்க்கவில்லை.

கடவுளை நிரூபிக்க சொல்லி ஆதாரம் கேட்போருக்கு >>>> காற்றைக் கண்ணால் கண்டபின் தான் நான் சுவாசிப்பேன் என்று ஏன் உங்களால் சொல்லமுடியவில்லை (செத்துவிடுவோம் என்ற பயமா???). காற்றினை தோல் திசுக்கள் உணர்வதைப் போல தெய்வத்தை ஆன்மாவினால் உணரத்தான் முடியும். அதற்கு முழு மனதுடனான தேடுதல் வேண்டும்.

செந்தில் அண்ணணுடன் இக்கருத்தில் நான் வேறுபடுவது எனக்கு கொஞ்சம் வருத்தமே... என்ன செய்ய...

Unknown சொன்னது…

அன்பின் ஜூனியர் தருமி,
காற்றை எப்போதும் கண்ணால் காணவே முடியாது.. இது அறிவியல் உண்மை..
கடவுளையும் உணரத்தான் வேண்டுமெனில் இத்தனை சடங்குகள் எதற்கு என்பதே என் கேள்வி..

மற்றபடி மரண பயமற்றவன் நான் என்பது என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.. பிறந்தால் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் இதில் பயமெதற்கு..

மிகப் பெரிய தேடுதலின் காரணமே கடவுளிடம் இருந்து என்னை விலக வைத்தது..

நீங்கள் நிறைய படிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.. நான் உங்களுக்கு சிபாரிசு செய்யும் முதல் புத்தகம் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய "வால்காவிலிருந்து கங்கைவரை"...

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

முதலாவது என்னுடைய பின்னூட்டம் உங்களை மட்டும் நோக்கியது அல்ல. உங்களுடைய பதிவில் பின்னூட்டிய மற்ற நண்பர்களுக்கும் தான்.

///கடவுளையும் உணரத்தான் வேண்டுமெனில் இத்தனை சடங்குகள் எதற்கு என்பதே என் கேள்வி..///

கடவுளை கண்டடைய விரும்புகிறவன் மற்றவர்கள் செய்து கொண்டிருக்கும் சடங்குகளைப் பார்த்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய தேடலில் தொடர்ந்து செல்லும்போது, நிச்சயம் ஓர் நாள் நாம் அறிந்துகொள்வோம்.

///மற்றபடி மரண பயமற்றவன் நான் என்பது என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.. ////

மரண பயம் இல்லா மனிதரில்லை. (ஏதோ ஒரு படத்தின் வசனம் நினைவுக்கு வருகிறது, வீரம் என்பது பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான் என்று.)

///கடவுளிடம் இருந்து என்னை விலக வைத்தது.. ///

இல்லாத ஒன்றிடம் இருந்து எப்படி விலக முடியும். கடவுள் இருப்பதை எப்படி நிரூபிக்க முடியவில்லையோ, அப்படித்தான் இல்லையென்பதையும் நிரூபிக்க முடியவில்லை.

பல "பகுத்தறிவாதிகள்" என்று சொல்லிக்கொள்பவர்கள், கண்மறைவில் அவர்களையே மறுதலித்துக் கொள்கின்றனர்.

பெயரில்லா சொன்னது…

நாகரிகமற்ற முறையில் விமர்சித்த சகோதரி கை குலுக்க வரவேற்பது பாரட்டுகுரியது

மததின் பெயரில் நடக்கும் சடங்குகளையும்,அதை தொடர்ந்து வரும் முட நம்பிக்கைகளையும்,நடைப்பெற்று கொண்டு இருக்கும் அவலங்களையும் கொடுமைகளையும் பார்த்து கடவுள் இல்லை என்ற நிலைக்கு வருகிறிர்கள்.அதை தாண்டி எவ்வள்வோ விசயங்கள் இருக்கின்றன கடவுளின் தன்மை உணர

பெயரில்லா சொன்னது…

Hi krpSenthil,
I disagree with you. If you can't see things means you can't accept, right?
if i say "relationship doesn't exist" because you can not see/define relationship. This will question love/mother/father/children relationships.
how will we solve this situation?

- mathumitha_supporters_group

sweet சொன்னது…

என்னை வச்சு இவ்வளவு காமெடி நடக்குதா?

கடவுளை இவர் மட்டம் தட்டும் போது பார்த்து கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்?

நம்ம வீட்டில் இருக்கிறவங்களை யாராவது திட்டினா சும்மா போவமா?

சும்மா கடவுள் இல்லை பெரியார் வெங்காயம் என்று சொல்வதை விடுத்து கொஞ்சம் யோசிங்க

சரி இந்த உலகம் எப்படி வந்தது என்று கேட்டா அறிவியல் புண்ணாக்கு என்று சொல்லுவீங்க

கேட்டா நிருபணம் ஆச்சு என்று சொல்லுவீங்க

அறிவியலையும் தாண்டி நெறைய விஷயம் இருக்கிறது என்று யானை காலுக்கு கீழே இருக்கிற எறும்புக்கு எப்படி தெரியும்? அந்த நிலைமை தான் உங்களோடது

கண்ணியமா உங்கள் கருத்துகளை சொல்லணும். அப்படி இல்லாம சகட்டு மேனிக்கு சொன்னா நாங்களும் மூக்குடைப்பது போல தான் பேசுவோம்

இதை எங்களுக்கு கடவுள் சொல்லி தர வில்லை

உங்க அப்பா அம்மா மேல இருக்கிற பாசம் மாதிரி எங்களுக்கு கடவுள் மேல

இது எங்கள் கருத்து

எங்களுடைய நம்பிக்கைகளை குறை சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை, எந்த உரிமையும் இல்லை

நாங்க பண்ணுவது தப்பு என்று சொல்ல நீங்கள் யார்?

சோ நாங்க எங்க வழியில் போறோம்

சொன்னா புரியுரவங்களுக்கு சொல்லலாம்

சொல்லியும் புரியாதவர்களுக்கு சொல்லியும் no use

இப்படிக்கு
madhumidha,sandhya,kalai selvi,dhana sundari,mega
madhumidha1@yahoo.com

Unknown சொன்னது…

மதுமிதா..Drunken Programmer இருவருக்கும் இத்துடன் கமல்ஹாசன் கடவுளைப் பற்றி சொல்லியிருக்கிற விசயங்களுக்கு பதில் சொல்லுங்கள்...

http://www.youtube.com/watch?v=GT22H7SLEWU&feature=related

http://www.youtube.com/watch?v=8YdAnIlio_A&feature=related

மற்றபடி மதுமிதா சகோதரிகள் என்னை விமர்சிப்பதை வரவேற்கிறேன்.. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில்தான் நான் உடன்படவில்லை..

பெயரில்லா சொன்னது…

நன்றி.. தோழரே..

sweet சொன்னது…

see

sweet neraya sappidatha entru solpavargal sweet neraya sappidadharvagalalaaga irukkanum

oorukku matthum ubadesam entru irukkiravan paechai naan kekka mudiyadhu

parrkkavum maatten

Thagudhi irukkanum

avanukku adhu illai appuram vera enna solla?

TC

பெயரில்லா சொன்னது…

i guess, you got enough comments!. will you post next article?