23 ஜூலை, 2010

காதல் என்பது ....

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் என் நண்பரை மதுரைக்கு அனுப்பிவிட்டு திரும்பும்போது நான் நினைக்கவில்லை கீதாவை சந்திப்பேன் என்று. ஒரு கணம் ஆடிப்போனேன் ...அவளும்தான்.. சுதாரித்துக்கொண்டு பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம். அவளின் விமானம் இரண்டு மணி நேரம் தாமதம் என அறிவித்ததால்  இரண்டாம் தளத்தில் உள்ள சாகர் உணவகத்திற்கு சென்று காப்பி சொல்லிவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்..

என் நண்பன் வீட்டிற்கு நான் போனபோது அங்கு வந்திருந்த அவன் தங்கையின் தோழிதான் கீதா..பார்த்த கணத்திலேயே எனக்கு காதல் பூத்துவிட்டது.அதற்க்கு அப்புறம் கவனமான திட்டமிடல்களுடன் அவளை நெருங்கிவிட்டேன்.. ஒரு தனிமையான சந்திப்பில் என் காதலை சொல்ல உடனே அவளும் சம்மதம் சொல்ல அந்தக் கணத்தில் உலகமே அழகாகிப் போனது.. அதன் பின் மிகவும் பிரசித்து பெற்றது எங்கள் காதல்.. ஊரில் இதற்க்கு எத்தனை எதிர்ப்புகள்..

கிராமப் பஞ்சாயதாரான என் தந்தை சாதி வெறியர்.. காதல் வேகத்தில் அவளின் சாதி அறியவில்லை நான். மெல்ல காதல் எங்கும் பரவி என் வீட்டில் வந்து நின்றபோது அதற்கு முதல் பலியே என் நண்பனின் குடும்பம்தான்.அங்குதான் எங்கள் சந்திப்பு நடப்பதாக போட்டுக் கொடுத்ததால் நண்பனின் தந்தைக்கு அடுத்த வாரமே மாற்றல் உத்தரவு பறந்தது.. அவரும் விசயம் அறிந்து என் தந்தையிடம் வந்து நின்றார்.. அப்பா யோவ் இன்னிக்கு வந்து நிக்க தெரிகிற உமக்கு உன் வீட்டில் என்ன நடக்கிறது என ஏன் தெரியாம போச்சு என அவரின் பரம்பரையையே கேலியாக பேச, கூனிக் குறுகிய அவர் மறுபேச்சு பேசாமல் ஊரைக் காலி செய்தார். என் தந்தையின் செல்வாக்கு அப்படி..

அடுத்த பலி நான்தான்.. அம்மா மற்றும் தங்கைகளை கூப்பிட்டு அவர்கள் முன்னாடியே நான் இனி அவளை பார்த்தாலே குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார்.. அம்மா அழுதாள், தங்கைகள் கதறினார்..என் தந்தை கண்டிப்பாக செய்வார். அவருக்கு கவுரவம் முக்கியம்.. அதன்பின் அம்மா இனி அவளை பார்க்க மாட்டேன் என ரகசியமாக என்னிடம் சத்தியம் வாங்கினார்.. கடைசி முறையாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருகிறேன் என கீதாவை பார்க்க வந்தேன்..

அவள் புரிந்துகொண்டாள்.. சேர்ந்தால்தான் காதலா.. நான் உன்னை எப்போதும் காதலிப்பேன் இது மாறாது..என அழுதாள். ஒருகணம் அவளை அழைத்துக் கொண்டு ஓடிவிடலாம் எனத் தோன்றியது, அவளிடம் சொல்லவும் செய்தேன். அவள் மறுத்துவிட்டாள், மேலும் என் தந்தை அவள் வீட்டிற்கும் ஆளனுப்பி விஷயத்தை சொல்லி கண்டிக்க சொல்லியிருப்பதால் அவள் வீட்டிலும் மிகுந்த கலவரம் ஆகிவிட்டிருக்கிறது.. 

சட்டென மீண்டும் சுயநினைவுக்கு வந்தபோது காப்பி ஆறிவிட்டிருந்தது. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. இருவரும் எதுவுமே பேசவில்லை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவளை பார்த்தது இல்லாத கடவுளை நேரில் கண்டது போலிருந்தது எனக்கு. 

சார் வேற எதுவும் வேணுமா? என ஹோட்டல் பையன் கேட்டதும்தான் இருவரும் மீண்டு வந்தோம்..

அதன்பின் அவள் என்னை விசாரிக்க நிறைய யோசித்துவிட்டு  என் திருமணம் குழந்தைகள் பற்றி சொன்னேன். வீட்டிற்கு வரசொல்லி சொன்னேன், அவள் மறுத்தாள் இப்படியே இருப்பதுதான் சரியாக இருக்கும் என்றாள்.. அவளைப்பற்றி கேட்டதற்கு கணவர், குழந்தைகளுடன் சந்தோசமாக இருப்பதாக சொன்னாள்.. சொல்லும்போதே அவளின் கண்ணீரை அவளால் கட்டுபடுத்த முடியவில்லை.. அதற்குள் அவளின் விமான நேரம் வந்துவிட அவசரமாக உள்ளே அனுப்பி வைத்தேன்.. அவள் உள்ளே சென்றவுடன்தான் அடடா அவள் தொலைபேசி என் கூட வாங்கவில்லையே என வருத்தமாக இருந்தது.

வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் சாப்பாடு வேண்டாம் என சொல்லிவிட்டு மாடியில் என் தனியறைக்கு சென்று வெகுநேரம் அழுதேன்.. அம்மா கதவை தட்டினார்கள். திறந்தபோது என்ன ஆச்சுப்பா ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு ஏதாவது பிரச்சினையா என்று கேட்கவும்.. என்னால் மீண்டும் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.. அழுது முடிக்கட்டும் எனக் காத்திருந்த அம்மாவிடம் விமான நிலையத்தில் கீதாவை பார்த்ததை சொன்னேன்.. அம்மா ஆவலுடன் அவளைப பற்றி விசாரித்தாள்.. நடந்தவற்றை அப்படியே சொன்னேன்..

ஆழ்ந்த பெருமூச்சுடன் அவள் .. பாருப்பா அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆகிபோச்சு.. நீ இன்னமும் அவளையே நெனசுகிட்டு இருந்தா எப்படி.. உனக்கு ஒண்ணுமா இல்ல..உன் அத்தை பொண்ணு இருக்கு கேட்டா மறுக்கவா போறாங்க.. எனக்கும் வயசாச்சு.. என்னால சமைக்க கூட முடியல, கொஞ்சம் யோசிப்பா.. என சொல்லவும்.. சரிம்மா உங்க இஷ்டம் என்றேன். பரபரன்னு சந்தோசம் ஆன அம்மா, என் தந்தைக்கு போன் செய்யப்போனாள்..

ஒரு வகையில் கீதாவிடம் நான் பொய் சொல்லியது சரிதான் எனத் தோன்றியது.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனக்கேட்டால் பதறியிருப்பாள். நிச்சயமா அவளுக்கு திருமணம் ஆகியிருக்கும்.. அவள் மனதை புண் படுத்தக்கூடாது, என யோசித்துதான் அப்படி ஒரு பொய்யை அவளிடம் சொன்னேன். இப்ப என் சம்மதம்  நம் வீட்டிலும் சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கு..

விமானம் தரைவிட்டு மேலுழும்பி பறக்க ஆரம்பித்தது.. கீதாவிற்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.. அவரிடம் தன் திருமணம் பற்றி பொய் சொல்லியிருக்ககூடாது என நினைத்தாலும், பொய் சொன்னது சரிதான் உண்மையை சொல்லியிருந்தால்  அது அவரை குற்ற உணர்ச்சியில் தள்ளியிருக்கும் எனத் தோன்றியது. நல்லவேளை அவர் போன் நம்பரைக் கூட வாங்கிக் கொள்ளவில்லை. வாங்கியிருந்தால் அது அவரிடம் நாம் பேசப்போக மீண்டும் அவர் வீட்டில் அதனால் பிரச்சினை ஏற்படலாம். இத்தனை நாளும் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கெஞ்சும் தன் சக அலுவலக நண்பனின் கோரிக்கையை ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என நினைத்தாள்.. நினைக்கும்போதே அவனின் முகம் சந்தோசமாக மனக்கண்ணில் தெரிந்தது.. 

விமானம் இன்னும் மேலேறிப் பறக்க ஆரம்பித்தது...

32 கருத்துகள்:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நான் உங்க எழுத்துகளில் படித்து மேலேயே பறந்துவிட்டேன் மெய்மறந்துவிட்டேன்.....

சௌந்தர் சொன்னது…

ரொம்ப நல்ல இருக்கு அண்ணா இது உங்க கதையோ என்று நினைத்து விட்டேன்...

Chitra சொன்னது…

வாவ்! கௌரவ பிரச்சினைக்கு, வித்தியாசமான முடிவு. சந்தோஷமாக நிறைவு பெற்று இருக்கிறதே..... :-)

Ranjithkumar சொன்னது…

super...
உண்மையான காதல் இதுதான்....

Madhavan Srinivasagopalan சொன்னது…

கதை நல்லா இருக்குது..
உணர்ச்சி பூர்வமாய் இருக்குது..

//வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் சாப்பாடு வேண்டாம் என சொல்லிவிட்டு மாடியில்//

இந்த வரிகளை படிக்கும் போதே, அவனுக்கு திருமணம் ஆகியிருக்காது என, என்னால் ஊகிக்க முடிந்தது. அதே போல அவளும் பொய் சொல்லியிருக்கலாம் என நினைக்க முடிந்தது..

அருண் பிரசாத் சொன்னது…

அருமை அண்ணா,

முடிவு யூகித்தேன். ஆனால் நீங்கள் சொல்லியவிதம் அருமை

Jey சொன்னது…

வெரி நைஸ்.

வினோ சொன்னது…

KPR அண்ணே காலை வணக்கம்...
முடிவு அருமை... ஆனா கொஞ்சம் பழைய கரு மாதிரி இல்ல?

முனியாண்டி பெ. சொன்னது…

சொன்னவிதம் அருமை. மிகவும் ரசித்தேன் உங்கள் எழுத்து நடையை. உங்கள் நடையால் காட்சி விரிந்தது என் கண்முன்.

Riyas சொன்னது…

ம்ம்ம் நல்லாயிருக்குங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்ன சொலரதுன்னே தெர்ல அண்ணா

Karthick Chidambaram சொன்னது…

அருமையான கதை. நல்ல நடை. முடிவு - சொன்னவிதம் அருமை.

ராஜவம்சம் சொன்னது…

உண்மையோ என பதறிவிட்டேன்.
அருமை வாழ்த்துக்கள்.

virutcham சொன்னது…

கதையின் போக்கை முன் கூட்டியே புரிந்து கொள்ள முடிந்தது.
காதலில் எல்லாக் காதலும் இதற்குள் கதையாகி இருக்கும் என்று தான் தோன்றுகிறது. புதுமையா யோசிக்கிறது கஷ்டம்

Jackiesekar சொன்னது…

நைஸ்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இதுக்குத்தான் , எங்கும், எப்போதும்..என்னைப்போல உண்மை(?) பேசவேண்டும்!!!..

பதிவு கலக்கல் பாஸ்..

செல்வா சொன்னது…

அருமையா இருக்குண்ணா...!!
//இருவரும் எதுவுமே பேசவில்லை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவளை பார்த்தது இல்லாத கடவுளை நேரில் கண்டது போலிருந்தது எனக்கு///
அருமையான வரிகள் .. எனக்கும் பாதிவரை கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்தது .. ஆனா முடிவு வரவேற்கத்தக்கது..

நேசமித்ரன் சொன்னது…

இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்கலாமோ :)

dheva சொன்னது…

செந்தில்....இது நடந்த கதையா? ஏன்னா பர்ஸ்ட் ரெண்டு மூணு பாரால நான் பரவாகோட்டைக்குள்ளேயே போய்ட்டு வந்துட்டேன்.....

நிஜமாதாங்க....! கதை எனக்கு பிடிச்சிருக்கு செந்தில்.... நிஜமா இருந்த சொல்லுங்க...ஹா.ஹா...ஹா...! அடுத்த தடவை வரும்போது அப்பாவ பயப்படாம பார்ப்பேன்ல...!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நல்லாருக்கு மாம்ஸ்

இன்னும் நிறைய முடிவு வைக்கலாம் மாம்ஸ் இந்த கதைக்கு...

கதாநாயகன் பேரே எழுதாம கதை சொல்லியிருக்கீங்க குட்...

vinthaimanithan சொன்னது…

என்னாச்சு உங்களுக்கு????!!!! i didn't expect this from u... க்ளிஷே ரொம்ப இருக்குண்ணா... உங்க திசை வேற.. டைவர்ட் ஆகவேண்டாமே?

ஜெய்லானி சொன்னது…

//சேர்ந்தால்தான் காதலா.. நான் உன்னை எப்போதும் காதலிப்பேன் இது மாறாது.//

?????????????

!!!!!!!!!!!!!

நாடோடி சொன்னது…

க‌தை ந‌ல்லா இருந்த‌து செந்தில் அண்ணா..

ஹேமா சொன்னது…

இதுதான் உண்மையான அன்பின் ஆழம்.சேர்ந்தால்தான் காதலா.
என்றும் வாழும் காதல்.

க ரா சொன்னது…

நல்லா இருக்குண்ணா :)

Unknown சொன்னது…

நல்லாயிருக்குங்க.....
ஆனா கதையில் வரும் காதலெல்லாம் ஒண்ணு சேராமல் இருந்த தான் அழகோ...?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

க‌தை ந‌ல்லா இருந்த‌து செந்தில் அண்ணா..

Kousalya Raj சொன்னது…

நானும் உங்க கதைதானோ என்று எண்ணியே படித்து கொண்டு வந்தேன்...?!

மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள், படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

Aathira mullai சொன்னது…

சேர்ந்தாலும் சேராவிட்டாலும் கண்களில் கருவாகி கருத்தில் நிலையாக இருப்பது காதல் என்று உணர்த்தியுள்ளீர்கள்..அருமை..

ரமேஷ் வீரா சொன்னது…

இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்கலாமோ......





அண்ணா , தங்களின் அனுபவத்தோடு இதை ஓபிட்டு பார்க்கும் போது எனக்கும் இப்படித்தான் தோன்றியது ................ சரிதானே அண்ணா ...............

அன்பரசன் சொன்னது…

கதை சூப்பர் தல

vasan சொன்னது…

செந்தில்,
இந்த‌ காத‌ல் என்ப‌தில்,
எவ்வ‌ள‌வு புனைவு
எவ்வ‌ள‌வு நினைவு?
ந‌னைவ‌து இருவ‌ரின் க‌ண்க‌ள்.
(பார்த்து அக‌ல‌ விரிந்து
வ‌லையை விரித்து,
வீழ்த்திய‌து அது தானே.)