தேடல்களும்
தேடல்களைப் பற்றிய தேடல்களுமாய்
உன்னில் மூழ்கியது உலகம்.
எந்த வரமும் அருளும் கடவுள்..
காணிக்கை வசூலிக்காத கடவுள்..
உண்மையோ, பொய்யோ
உள்ளதை உள்ளபடி
தருவோர் அல்லது பெறுவோர்
விரும்பும்படி அருளும் கடவுள்..
சீனாவின் குறுங் கண்களுக்கு
இப்பேரழகி தெரியவில்லை ஏனோ..
கவிதைஎன்பதே
தேடல் தானே..
தேடல் தானே..
கூகுளை கவிதையென்பேன்..
"கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு"
"துயசுடர் வானொளியெ! தேடலமுதே! என் கண்ணம்மா"
என பாடியிருப்பார் பாரதி இன்றிருந்தால்..
"கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு"
"துயசுடர் வானொளியெ! தேடலமுதே! என் கண்ணம்மா"
என பாடியிருப்பார் பாரதி இன்றிருந்தால்..
கட்டுடைக்கும்
காட்டாறு வெள்ளமென
கட்டுபாடுகள் இன்றி
தகவல் தரும் கூகுள்
தேடித் தீர்க்க முடியாத காமம்
பாரில் அடங்காத போதை
உலகப் பேரழகி கூகுள்..
எம் பிழைப்பே நீதான்
உனையன்றி யார் எமை காப்பார்..
ஓம் கூகுளாய நமக...
39 கருத்துகள்:
1st
Nice
arumai senthil
சூப்பர் கவிதை.. :-))
கூகிள் வாழ்க...!!
தேடித்தேடித்தேடி........ வாழ்க்கை தொலைகிறது.
தேடித் தீர்க்க முடியாத காமம்
பாரில் அடங்காத போதை
hahaha, சூப்பர்:)
Nice :-)
nice senthil.
கூகிள்ல எல்லாம் தேடலாம்... நீங்க படம்போட்டிருக்கிற பொண்ணு வாயில கூகிளையே தேடலாம் போல... :-))
சூப்பருங்கோ....
எப்புடியெல்லாம் கவிதை எழுதுறாங்க ..!!
நரபலி யாசிக்காக் கடவுள்
நாம் தினமும் நாடும் கூகிள்! கவிதை இனிமை.
ஸ்ரீ....
super
கவிதை நல்லா இருக்கு செந்தில் அண்ணா.... இணையத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக வலம் வருவது கூகுள் தான்..
கவிதைஎன்பதே
தேடல் தானே..
கூகுளை கவிதையென்பேன்.........
அருமையான வரிகள் ..........................கவிதையும் அருமை .......
//எம் பிழைப்பே நீதான்
உனையன்றி யார் எமை காப்பார்.//
ஹா ஹா ஹா
கூகிள் பற்றி ஓரு கவிதையா கலக்கல் அண்ணா
"கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு"
"துயசுடர் வானொளியெ! தேடலமுதே! என் கண்ணம்மா"
என பாடியிருப்பார் பாரதி இன்றிருந்தால்..
...... அட, அட.... உங்களுக்குள் தூங்கி கொண்டு இருந்த "பாரதியை" தட்டி எழுப்பிட்டாங்களே!
Good one....Mr. Senthil..
கூகுளன்றி அமையாது இணையஉலகம்...
கூகுளுக்கு ஒரு பூஜைய...KPR அண்ணே super...
கலக்கிட்டீங்க. கூகுள் ஆண்டவர் துணை இருப்பாராக
நல்லாயிருக்கு கவிதை. கூகுளாண்டவர் வாழ்க வாழ்க.
//"கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு"
"துயசுடர் வானொளியெ! தேடலமுதே! என் கண்ணம்மா"
என பாடியிருப்பார் பாரதி இன்றிருந்தால்..//
அட அட செந்தில்....!
கூகிளுக்கும் கவிதை !
aamaam. கூகிளாய நமஹ:))
//எந்த வரமும் அருளும் கடவுள்..
காணிக்கை வசூலிக்காத கடவுள்..//
நல்லதொரு கடவுள் வாழ்த்து..
பாரதியை நினைவு கூர்ந்தது அருமை.
கவிதை மிக நல்லத் தேடல்.
//உங்களுக்குள் தூங்கி கொண்டு இருந்த "பாரதியை" தட்டி எழுப்பிட்டாங்களே! //
என்னது பாரதி தூங்கிட்டாரா?
நகைச்சுவையுடன் கூடிய அருமையான கவிதை
"Headphones connected to the iPhone, iPhone connected to the Internet, connected to the Google, connected to the government."
கூகிள் பற்றி M.I.A வின் பாடல் வரிகள் தான் ஏனோ ஞாபகம் வருகிறது.
hi senthil ...its nice ya...i sent your kavithai to all my contacts with your blog link...
கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு" oooooooooooooooo podu....
அன்பின் செந்தில்
கூகுளண்டவரை நம்பியோர் கை விடப்படார் - அவரைப் பற்றிய கவிதை அருமை
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க கவிதை..
googleக்கு ஒரு கவிதையா?
நைஸ்..
நகைசுவையுடன் கவிதை ரசிக்கும்படி இருந்தது.
கூகுள் காதலரே வாழ்க உங்கள் காதல்.
இது நல்லா இருக்கே
சூப்பருங்கோ....
வீட்டுச் சாவி காணாமப்போச்சுன்னாக்கூட கூகுள்ல தேடுற காலமாயிருச்சி நண்பா.
கூகுளைப் பற்றிய கவிதை மிக நன்று.
கருத்துரையிடுக