காரணங்களை ஒளித்துவைத்துவிட்ட
நம் கை கோர்ப்பில்
ஊர் மெல்லும் பெருங்கதைகள்..
கனன்று எரியும் காமத் தீ
ஊர் வைத்ததுதான்..
சாத்தியங்கள் இல்லாத சாட்சியங்கள்,..
புனைகதைகளில் வரும்
மூர்க்கத்தனங்களை யாரும்
கைவிடத் தயாரில்லாத நாளில்
நாம்
ஊரை விட்டு ஓடிப்போனோம்..
கள்ளக் காதல் என்று செய்திவரும்,
உன் கணவன் என் மனைவி
காவல் நிலையம் செல்வார்கள்,
நம் குழந்தைகள் நடு சாலையில் கதறும் ,
இன்னும் சில வருடங்கள் ஊரில் சுழலும்
நம் கதைகள்..
அதனால் என்ன
நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில்
இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம்
வா..
37 கருத்துகள்:
"அதனால் என்ன
நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில்
இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம்
வா.."
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல..:-)
//நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில்
இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம்//
என்ன இது .... ?
ஆஆஆஆ.ஆஹா
காமத்தை காதலாக்கி இருந்தால் - அவர்களாவது உயர்ந்தவர்களாகி இருப்பார்கள்.
/நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில்
இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம்//
என்ன இது .... ?
enn evvallavu karam ungal elluthukaleal
Nice
//அதனால் என்ன
நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில்
இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம்
வா..//
Athusari....
அண்ணே! என்னாச்சு?
நிறைய நண்பர்கள் கேள்வி கேட்பதால்... ஒரு புரிதலுக்காக இதை எழுதுகிறேன்...
சமீபத்தில் ஓடிப்போன பெண்ணின் மூன்று குழந்தைகளுடன் அவள் கணவனும் தற்கொலை செய்து கொண்டதாக ஆனந்த விகடனில் படித்தேன்.. அதன் விளைவே இக்கவிதை..
சமூகத்தின் முன் தம் குடும்பம் எத்தனை பாடுபடும் என்று கவலைபடாமல் இத்தகைய செயலை செய்யும் அவர்களின் நியாயம் காமம் மட்டுமே...
அதனால் பொதுப்படையாக சாடியிருக்கிறேன்...
காமம் எதை பற்றியும் கவலைபடுவதில்லை
//நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில்
இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம்
வா..///
எல்லாம் மூன்று நாளைக்கு தான்.... அப்புறம்?..
சமீபத்தில் ஓடிப்போன பெண்ணின் மூன்று குழந்தைகளுடன் அவள் கணவனும் தற்கொலை செய்து கொண்டதாக ஆனந்த விகடனில் படித்தேன்.. அதன் விளைவே இக்கவிதை..
சமூகத்தின் முன் தம் குடும்பம் எத்தனை பாடுபடும் என்று கவலைபடாமல் இத்தகைய செயலை செய்யும் அவர்களின் நியாயம் காமம் மட்டுமே...
அதனால் பொதுப்படையாக சாடியிருக்கிறேன்...
..... சுய நலத்துக்காக, தன் குடும்ப நலனை கூட மறந்து விடும் அவல நிலை... ம்ம்ம்...
மிக நேர்த்தியான கவிதை.. ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு...
ஒரு செய்தி...கவிதையாக மாறி உள்ளங்களை தைக்கிறது....
பத்திரிக்கை செய்தியின் பாதிப்பு கவிதையில் தெரிகிறது....
பத்திரிக்கையின் செய்தி உங்கலை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறது.காமமே முதன்மையாக இருந்ததால் அதன் விளைவுகளை பற்றி யோசிக்க வில்லை.இதற்கு யார் காரணம்.ஒரு வேளை உங்கள் பார்வையில் கடவுளா.... இல்லை சமுகமா.இக்கவிதைக்கு பாரட்டுகள்
"உன் கணவன் என் மனைவி
காவல் நிலையம் செல்வார்கள்,
நம் குழந்தைகள் நடு சாலையில் கதறும்" ,
நல்ல அழமான கருத்து வரிகள்
உங்கள் புரிதல் சிறப்பானது. இதுவே காதலைக்குறித்த என் எண்ணமும் கூட.
கவிதை ரொம்ப அருமை.
nadaimurai
என்ன தல, இந்த மாதிரி வில்லங்கமா?
நல்லா இருக்கு.
Ada unga vilakathai padikaati naane thappa thaan nenachurupen. Kaamam patriya kannottam muthalil maara vendum ingu...
அண்ணே நான் கொஞ்சம் லேட்... உங்க பின்னோட்டம் படித்த பின், என்ன சொல்லறதுன்னு தெரியல... கண் மறைக்கும் காமம் - வினைகள்... யோசிக்க முடியல... கவிதை அருமை...
கவிதை ரொம்ப அருமை.
கவிதை வரிகள் அட்டகாசம்........
அட நம்ம மாம்ஸ் நட்சத்திரம் வாழ்த்துக்கள் மாம்ஸ்...
நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்
நட்சத்திர வாழ்த்துக்கள்.
நாம கோவப்பட்டு என்ன பிரயோஜனம். :(
பாசக்கார கோபக் கார பயபுள்ள செந்திலுக்கு நட்சத்திர வாழ்த்துகள்.
நல்ல கருத்திற்காக எழுதப்பட்டுள்ள கவிதை. அருமை
உங்கள் கோபம் புரிந்துகொண்டேன்
கருத்து சொல்லும் கவிதை ...!!
நட்சத்திர பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்.
காமம் இல்லையேல் மனிதர்கள், மிருகங்கள்,பறவைகள், ஊர்வன.. இப்படி எதுவுமே இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அதன் வரைமுறை மீறப்படும் போது ஏற்படும் விளைவுகள் பாரதூரமானதயிருக்கும்.
பின்புழம் புரிந்தவுடன் தான் கவிதையில்
ஒன்றிப்போகிறேன்
அன்பின் செந்தில்
படித்த ஒரு செய்தியின் தாக்கம் - கோபத்தில் எழுந்த அழகிய கவிதை - காமம் படுத்தும் பாடு .....
//உன் கணவன் என் மனைவி காவல் நிலையம் செல்வார்கள்,நம் குழந்தைகள் நடு சாலையில் கதறும் ,இன்னும் சில வருடங்கள் ஊரில் சுழலும் நம் கதைகள்..
அதனால் என்ன நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில் இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம் வா..
//
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
நியாமான கோபத்தின் வெளிப்பாடு கவிதையில் மெல்ல மெல்ல வெளிப்பட்டு அப்படியே உக்கிரமாகிறது.
//சாத்தியங்கள் இல்லாத சாட்சியங்கள்,..//
இது புரியலை
காம தீய வீட்டுல அணைக்க முடியாததால .... நகரத்தின் வெளியே போய் அணைகிறாங்க..
வீட்டுல தீய அணைக்காதது தப்பு தானே ..
அநியாய கோவம் ..
கருத்துரையிடுக