30 ஜூலை, 2010

கேபிள் சங்கரின் பிறந்த நாளும், என் நகரத்தின் கவிதையும் ...

இன்றைக்கு நம் பதிவுலக யூத் கேபிள் சங்கரின் பிறந்த நாள்... இந்த வருடம் அவர் திரைப்படம் இயக்கி, திரையுலகிலும் யூத் எனப் பெயரெடுக்க உங்களுடன் நானும் வாழ்த்துகிறேன்...

நகரத்து சாலைகளில்...
உனக்கு நீ பேசுவது நியாயம் 
எனக்கு நான் பேசுவது நியாயம் 
சமாதனம் செய்ய வந்தவன் பேசியது மட்டும் 
இருவருக்கும் அநியாயம்...

காகம் கரைகிறது,
கவுளியும் ஆமோதிக்கிறது 
விருந்தினர் வராத 
நகரத்து வீட்டில்..

நகரத்து டீக்கடைகளில் 
எப்போதாவது கிடைக்கும் 
ஒரு நல்ல டீ...

எல்லா பெட்ரோல் பங்குகளிலும் 
இலவசமாய்க் காற்றடிக்க 
ஒரு ரூபாயாவது  தர வேண்டும்..

தொலைதூர பயணங்களில் 
இடை நிற்கும் உணவகத்தில் 
வெந்நீரை டீ என்பான் 
நம்பித்தான் குடிக்கவேண்டும்...

கிராமங்களைப்போல் 
நகரங்களில் மனிதர்கள் 
சிரித்தால் சிரிக்காமல் 
சந்தேகமாய் பார்ப்பார்கள்...

முக்கிய சாலைகளில் 
நடக்கும் இடங்கள் 
மாமூலாக 
சிறு வியாபாரிகளுக்கே..

நகர பேரூந்தில் 
எப்போதும் வாங்க முடிவதில்லை 
மீதி சில்லறை ..

நகரத்து ஆட்டோக்களில் 
மீட்டர் இருக்கும் 
பேரம் பேசித்தான் வருவார்கள்..

மேல் வீட்டுக்காரன் பைக்குக்கு 
கீழ் வீட்டுக்காரன் இடம் தர மறுப்பான், 
கீழ் வீட்டு டாய்லெட் அடைத்துக் கொண்டால் 
மேல் வீட்டில் பத்து தரம் போவான்...

இப்படியாக வாழும் எனக்கு 
பிடித்துதான் இருக்கிறது 
நகரங்களின் மனிதர்களை...

53 கருத்துகள்:

க ரா சொன்னது…

இனிய பிற்ந்த நாள் வாழ்த்துகள் கேபிள் அண்ணனுக்கு.. கவிதை சூப்பர் :)

நேசமித்ரன் சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவரே :)

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

கேபிளாருக்கு அன்பின் வாழ்த்துக்கள் !

வினோ சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் அண்ணே...

/நகரத்து ஆட்டோக்களில்
மீட்டர் இருக்கும்
பேரம் பேசித்தான் வருவார்கள்../

மாறவே மாறாது. கவிதை super KPR அண்ணே.

Unknown சொன்னது…

/பிடித்துதான் இருக்கிறது
நகரங்களின் மனிதர்களை/

எனக்கும்.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

// இப்படியாக வாழும் எனக்கு
பிடித்துதான் இருக்கிறது
நகரங்களின் மனிதர்களை... //
நவீன தர்மர் KRB?

பா.ராஜாராம் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துகள் தல! :-)

// எல்லா பெட்ரோல் பங்குகளிலும்
இலவசமாய்க் காற்றடிக்க
ஒரு ரூபாயாவது தர வேண்டும்//

fantastic 1!

Chitra சொன்னது…

கேபிள் சங்கர் சாருக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

/////நகரத்து சாலைகளில்...
உனக்கு நீ பேசுவது நியாயம்
எனக்கு நான் பேசுவது நியாயம்
சமாதனம் செய்ய வந்தவன் பேசியது மட்டும்
இருவருக்கும் அநியாயம்.../////

...... இது நியாயமான பேச்சு!

vinthaimanithan சொன்னது…

அய்யய்யோ! பார்ட்டி கொண்டாட நான் இல்லாம போயிட்டேனே! என்ன கொடுமைங்க இது?

கூப்பிய கரங்களுக்குள் கத்தியை மறைப்பது கிராமமாய் இருந்தாலென்ன? நகரமாயிருந்தாலென்ன? எல்லா இடங்களிலும் பொதுதான்.... அங்கங்கே ரொம்ப தேடித்தான் மனிதர்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது... மற்றபடி குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!!!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே..

ஜீவன்பென்னி சொன்னது…

மேல் வீட்டுக்காரன் பைக்குக்கு
கீழ் வீட்டுக்காரன் இடம் தர மறுப்பான்,
கீழ் வீட்டு டாய்லெட் அடைத்துக் கொண்டால்
மேல் வீட்டில் பத்து தரம் போவான்...

சரியாச் சொன்னீங்க.

vasu balaji சொன்னது…

கேபிளாருக்கு வாழ்த்துகள். நகர நரகம் அருமை:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நகர நரகம் கலக்கல்..

அப்படியே... கேபிள் சாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அங்கத நடையைல் உங்க கவிதை அருமை.1000 குறைகள் இருந்தாலும் நாம் வாழும் வசிப்பிடத்தை விட்டுக்கொடுக்க முடியாது

a சொன்னது…

கேபிள்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
!!!

கவிதை அருமை....

Unknown சொன்னது…

இனிய பிற்ந்த நாள் வாழ்த்துகள் கேபிள் அண்ணனுக்கு.. கவிதை சூப்பர்.

Karthick Chidambaram சொன்னது…

இனிய பிற்ந்த நாள் வாழ்த்துகள் கேபிள் அண்ணனுக்கு..
//மேல் வீட்டுக்காரன் பைக்குக்கு
கீழ் வீட்டுக்காரன் இடம் தர மறுப்பான்,
கீழ் வீட்டு டாய்லெட் அடைத்துக் கொண்டால்
மேல் வீட்டில் பத்து தரம் போவான்...//

கவிதை சூப்பர் :)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கேபிளாருக்கு வாழ்த்துகள் !

பெயரில்லா சொன்னது…

//எல்லா பெட்ரோல் பங்குகளிலும்
இலவசமாய்க் காற்றடிக்க
ஒரு ரூபாயாவது தர வேண்டும்..//
மாறவே மாறாது :(
நல்ல கவிதை...

நட்புடன்,
பாலாஜி

ஜானகிராமன் சொன்னது…

அருமையான கவிதை. ஒவ்வொறு கருத்தும் நேரே நெஞ்சில் உரைக்கிறது. ஆனால் கடைசியில், "இப்படியாக வாழும் எனக்கு
பிடித்துதான் இருக்கிறது
நகரங்களின் மனிதர்களை..." என்ற முடிவு இயலாமையை சுட்டுகிறதா வேறு சுவாரசியமான கருத்தை சுட்டுகிறதா எனத் தெரியவில்லை. சட்டென முடிந்தது போல் இருந்தது. (நான் விமர்சகன் இல்லைங்க செந்தில். கவிதையை படித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணம்)

sathishsangkavi.blogspot.com சொன்னது…

கேபிளாருக்கு அன்பின் வாழ்த்துக்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நகர நரகம் கலக்கல்..

கேபிள் சங்கர் சாருக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சௌந்தர் சொன்னது…

கேபிள் சங்கர் அண்ணனுக்கு இனிய பிற்ந்த நாள் வாழ்த்துகள்

தேவன் மாயம் சொன்னது…

கேபிளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஸ்ரீ.... சொன்னது…

கவிதை அருமை. நகர வாழ்வின் நகலாக இருந்தது. இணையத்தின் நிரந்தர இளைஞர் கேபிள் சங்கருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஸ்ரீ....

Paleo God சொன்னது…

கேபிளுக்கு வாழ்த்துகளும்
கவிதைக்கு அசத்தலும்..! :))

அருண் பிரசாத் சொன்னது…

கேபிள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு கவிதையும் சரவெடி!

மரா சொன்னது…

கேபிளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் சொன்னது…

இப்படியாக வாழும் எனக்கு
பிடித்துதான் இருக்கிறது
நகரங்களின் மனிதர்களை...

வேறு வழி... பிடித்து தானே ஆக வேண்டும்.

ஈரோடு கதிர் சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே

Ravichandran Somu சொன்னது…

தலைவர் கேபிள் சஙகருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

நம்ம மாதிரி கிராமத்து மஞ்சள் பை ஆள்களுக்கு நகரம் நரகம்தான் தம்பி:)

கவிதை நல்லாயிருக்கு... வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

அருண் சொன்னது…

//மேல் வீட்டுக்காரன் பைக்குக்கு
கீழ் வீட்டுக்காரன் இடம் தர மறுப்பான்,
கீழ் வீட்டு டாய்லெட் அடைத்துக் கொண்டால்
மேல் வீட்டில் பத்து தரம் போவான்...//
அருமையான வரிகள்.
கேபிள் ஷங்கர் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஜெயந்தி சொன்னது…

கேபிள் சங்கர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
எதார்த்தக் கவிதை. பஸ்சில் சில்லரையை நான் பெரும்பாலும் விட மாட்டேன்.

dheva சொன்னது…

நகரத்து வாழ்வின் துல்லியங்களை கவிதையாக்கி இருக்கிறீர்கள்.

//கிராமங்களைப்போல்
நகரங்களில் மனிதர்கள்
சிரித்தால் சிரிக்காமல்
சந்தேகமாய் பார்ப்பார்கள்...//

மனிதம் தொலைந்த இடம்.

//காகம் கரைகிறது,
கவுளியும் ஆமோதிக்கிறது
விருந்தினர் வராத
நகரத்து வீட்டில்..
//

மூட நம்பிக்கை உடைந்த இடம்.

//நகரத்து டீக்கடைகளில்
எப்போதாவது கிடைக்கும்
ஒரு நல்ல டீ...//

ஏக்கம் நிறைந்த இடம்.

நகரத்து சாலைகளில்...
உனக்கு நீ பேசுவது நியாயம்
எனக்கு நான் பேசுவது நியாயம்
சமாதனம் செய்ய வந்தவன் பேசியது மட்டும்
இருவருக்கும் அநியாயம்...//

புரிதல் வரவேண்டிய இடம்.

//தொலைதூர பயணங்களில்
இடை நிற்கும் உணவகத்தில்
வெந்நீரை டீ என்பான்
நம்பித்தான் குடிக்கவேண்டும்...//

கோபம் கொப்பளிக்கும் இடம்.

//முக்கிய சாலைகளில்
நடக்கும் இடங்கள்
மாமூலாக
சிறு வியாபாரிகளுக்கே..//

மாமூல் வாங்கப் பட்ட இடம்

//மேல் வீட்டுக்காரன் பைக்குக்கு
கீழ் வீட்டுக்காரன் இடம் தர மறுப்பான்,
கீழ் வீட்டு டாய்லெட் அடைத்துக் கொண்டால்
மேல் வீட்டில் பத்து தரம் போவான்...//

சுயனலம் முகுந்த இடம்


உணர்வுகள்...உணர்வுகள்..உணர்வுகள்....அருமை செந்தில், மேலும் சங்கர் அண்ணாவிற்கு வாழ்த்துகளும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இனிய பிற்ந்த நாள் வாழ்த்துகள் கேபிள் அண்ணனுக்கு

செல்வா சொன்னது…

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ..!!

////தொலைதூர பயணங்களில்
இடை நிற்கும் உணவகத்தில்
வெந்நீரை டீ என்பான்
நம்பித்தான் குடிக்கவேண்டும்...
///
உண்மை அண்ணா ..!!

//நகர பேரூந்தில்
எப்போதும் வாங்க முடிவதில்லை
மீதி சில்லறை ..
///
50 காசு தரவே மாட்டாங்க ..!!!

எல் கே சொன்னது…

//இப்படியாக வாழும் எனக்கு
பிடித்துதான் இருக்கிறது
நகரங்களின் மனிதர்களை..//

murannagai??

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கேபிள் சங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.......அவருக்கு 29 வயதாகிறது என்று கேள்வி பட்டேன். என்னால நம்வானே முடியலா ...இவ்வளவு ஒரு தாத்தவ இருக்காரு அவருக்கு போய்யி.....நான் 40 மேல இருக்கும் என்று நினைத்தேன் என் நினைப்பு பொய்யானது

pichaikaaran சொன்னது…

superb

'பரிவை' சே.குமார் சொன்னது…

கேபிள் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


//தொலைதூர பயணங்களில்
இடை நிற்கும் உணவகத்தில்
வெந்நீரை டீ என்பான்
நம்பித்தான் குடிக்கவேண்டும்...//

Excellent.

ரோஸ்விக் சொன்னது…

கேபிளாருக்கு அன்பின் வாழ்த்துக்கள் !

நிதர்சனங்கள் செந்தில்.... :-)


தேவா இடம் போட்டு வித்துபுட்டீங்க... :-)))

சசிகுமார் சொன்னது…

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

கேபிள் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.நல்ல படமாய் எடுக்கச் சொல்லுங்கோ செந்தில் !

நகர வாழ்க்கையை மிகவும் ரசிக்கிறிங்க.அதான் ஒவ்வொரு விஷயமும் கவிதையாய் கொட்டிக்கிடக்குது.எல்லாமே சூப்பர்.

ராசராசசோழன் சொன்னது…

யதார்த்தமான...நல்ல கவிதை...

நாடோடி சொன்னது…

கேபிள்ஜிக்கு வாழ்த்துக்க‌ள்...

தனி காட்டு ராஜா சொன்னது…

//இப்படியாக வாழும் எனக்கு
பிடித்துதான் இருக்கிறது
நகரங்களின் மனிதர்களை..//

எனக்கு பிடிக்கவில்லை ......ஆனால் கவிதை பிடித்து இருக்கிறது

ஜோதிஜி சொன்னது…

ரொம்ப தாமதம் செந்தில் ஆனால் தரமான கவிதை. தரமான வாழ்த்துகள்.

32 வது குத்திய ஓட்டு போல 16 + 16 செல்வம் பெற்று வாழ்த்துகள் சங்கர்.

படைபட்டளாம் ரொம்பவே இருக்கு.
சட்டியில உள்ளத எல்லாம் காலிசெய்துடுங்க.............

vijayakumar சொன்னது…

Krpsenthil ....கவிதை மிக அருமை ,,,,,

cable .....I WISH YOU TO BUY YOUR NEW CAR THIS YEAR .....
Happy birthday cable sir....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்.

ஜில்தண்ணி சொன்னது…

கேபிள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

கவித செம செம

அன்பரசன் சொன்னது…

சூப்பர் தல..
நகர வாழ்க்கையை அருமையா சொல்லிட்டீங்க.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

என் நகரத்தின் கவிதைக்கு
என் நகரா வாழ்த்துக்கள்.செந்தில்...
கேபிள் ஜீக்கு இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள்...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்

அனைத்துக் கவிதைகளுமே அருமை - நகரம் மட்டுமல்ல - கிராமப் புறங்களிலும் மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக தொலைகிறது.

அன்பின் கேபிளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்