நான் எழுதிய இமிக்ரேசன் அனுபவங்கள்- வாக்களர் அடையாள அட்டை பதிவு அதில் சம்பந்தப்பட்ட நண்பர் கேட்டுக் கொண்டதால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது, மீண்டும் பின்னொரு நாளில் பதிவேற்றுகிறேன்...
எனவே வழக்கம்போல் இன்றைக்கு காலை மட்டும் ஒரு கவிதை.. மாலை Human Nature பற்றி எழுதுகிறேன்.. தயவு செய்து தடங்கலுக்கு மன்னிக்கவும்..
டீக்கடையில் நின்றிருந்தபோது
எதிர் சந்தில் நுழைந்தது
அவள்தானா?
அவளாகவே இருந்தாலும்
என்ன செய்ய முடியும்
டீக்காசை கொடுத்துவிட்டு
ஓங்கி மிதித்து
வண்டியை கிளப்பினேன்..
30 கருத்துகள்:
அவள்தானா?
'அவள்' துரோகம் இழைத்தவளா? அன்பு செய்தவளா?
//'அவள்' துரோகம் இழைத்தவளா? அன்பு செய்தவளா?//
ரெண்டும் செய்தவளோ ?
//அவளாகவே இருந்தாலும்
என்ன செய்ய முடியும்///
காசு கொடுக்க வில்லை என்றால் நாயர் சட்டையைப் பிடிப்பான்
yar antha aval??
நிஜ வாழ்க்கையின் எதார்த்தம்.
அருமை..
யதார்த்தமான வரிகள்..
அப்ப நீங்க கூடிய சீக்கிரம் அந்த வண்டியை விக்க வேண்டியது தான்
"அவள்" நல்லவளா? கெட்டவளா? :-)
ஆமாங்க அவளே தான்...
எல்லோரது வாழக்கையிலும்
அவளும் இருக்கிறார்கள்.
அவனும் இருக்கிறார்கள்.
avalethaan. thookkidalaamaa?
ஆகா, ஆளாளுக்கு கிளம்பிட்டாங்கயா.
கே ஆர் பி அண்ணா, உங்களை ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போல
அருமை..
யதார்த்தமான வரிகள்..
டீக்கடையில் நின்றிருந்தபோது இந்த கவிதை தோன்றியதா
அவள் - அழகு :)
சரியாப் புரியலை...
அருமை
டீ குடிச்சீங்களா இல்லையா?
சார் , நான் இன்னைக்கு தான் வந்தேன் , தமிழ்மணம் நட்சத்திர பதிவரானதர்க்கு வாழ்த்துக்கள்
அவளா..?
ஒண்ணுமே பேசாம போறது பார்த்தா, நீங்க அவுங்களுக்கு கடன் திருப்பி கொடுக்கணும் போல? KPR அண்ணே கொஞ்சம் உண்மைய ஊருக்கு சொல்லுங்க....
(:
வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சிங்களா?
//ஓங்கி மிதித்து வண்டியை கிளப்பினேன்..//
அதில் தெறிக்கிறது/தெரிகிறது
ஏதோ ஒரு
இயலாமையின் கோபம்.
(தமிழ்மணம் நட்சத்திர பதிவாளர்க்கு வாழ்த்துக்கள்)
எனக்கு தெரியாது அண்ணா ..!!
பயமா...இல்லாட்டி
பார்த்தால் மனம் சங்கடப் படுமேன்னா !
இரண்டு பாராக்காள் தான் செந்தில்....எட்டு வரிகள்தான் ....ஆனால்...எங்கோ பின்னோக்கி இழுத்துச் சென்றது உங்கள் வரிகள் அது உங்களுக்குத் தெரியுமா?
அழுந்த அழுந்த மிதித்து விரட்டிச் சென்று வெறுமனே திரும்ப வருதலும், காத்திருந்து கண்டு விட்டு பின் அழுத்தும் உற்சாக அழுத்தலும், காணாமல் வெறுமனே அழுத்தும் ஒரு விரக்தி அழுத்தலும்...
இப்போது நீங்கள் கவிதை வடிவமாய் சொல்லியிருக்கும் வரிகளின் நீட்சிகள்...!
படம் ரொம்ப சூப்பர் செந்தில்....! படத்தை பார்த்தவுடனேயே அழுத்தி மிதிக்க சைக்கிளைத் தேடுகின்றன என் கால்கள்....!
சூப்பர்ப்!
என்னா இது தல
அண்ணே நீங்க ஓங்கி மிதித்து கிளப்பிகிட்டு போனது என்னோட வண்டி... நானும் உங்களுக்கு பக்கத்துல நின்னு டீ குடிச்சுகிட்டு இருந்தேன்...
ஆங்... சொல்ல மறந்துட்டேன்... அவ... அவளே தான்...
அன்பின் செந்தில்
எதிர்பாராமல் நிக்ழும் இயல்பான செயல் அவளிக் கண்டது - அதன் விளைவு கோபத்தின் உச்சம் - என்ன செய்வது ... இவை எல்லாம் வாழ்வின் அங்கங்கள்
நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
கருத்துரையிடுக