குவாண்டின் டொராண்டினோ இயக்கிய பல்ப் பிக்சன் (PULP FICTION) முதன்முதலில் வந்த நான் -லீனியர் படம். காட்சிகளின் ஒழுங்கற்ற தன்மையுடன் வந்த படம் இன்றுவரை பேசப்படுகிறது. தேர்ந்த சினிமா ரசிகனால் மட்டுமே ரசிக்ககூடிய இப்படம். ஒருமுறை மட்டுமே பார்த்தால் புரியாது.. படத்தை பார்த்துவிட்டு விக்கிபீடியாவில் அதன் விமர்சனம் படித்துவிட்டு மீண்டும் மீண்டும் பார்த்து நான் புரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இப்படம் புத்திசாலித்தனம் மிகுந்த ஒரு இயக்குனரால் தான் புகழின் உச்சத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட படம்..
உச்சபட்ச வன்முறையும், அதீதமான போதைப்பொருள் உபயோகத்தையும், மொத்த சினிமாவிலும் 250 முறைக்கு மேல் FUCK வார்த்தைகளையும் 78 முறைக்கு மேல் SHIT வார்த்தைகளையும் பயபடுத்தி இருப்பார்கள்..
இவற்றையெல்லாம் வாசிக்கவோ அல்லது இந்தப் படத்தை பார்க்கவோ விரும்பாதவர்கள், இந்த வரியுடன் விலகிவிடுங்கள்.. ஏனென்றால் வித்தியாசமான கோணங்களில் சிந்திப்பவர்களுக்கான வித்தியாசமான இயக்குனரின் படம் இது.. பதின்ம வயதினர் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.. ஏனென்றால் இதிலிருந்து தவாறான அணுகு முறைகளை பதின்ம வயதினர் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது..
எனவே ஆழ்ந்த சிந்தனைகளும்.. தேர்ந்த சினிமா ரசிகர்களும் மட்டும் மேலே படியுங்கள் ..
படம்: முழுக்க பிளாக் காமடியை( BLACK HUMOR) பயன்படுத்தி இருப்பார்கள்..CRIME. NON- LINEAR, NEW- NOIR வகை.. முழுக்க வன்முறை இருப்பதால் ஆங்கிலத்தில் R தர வரிசைப்படம். படத்தில் சில கிராபிக்ஸ் வன்முறை, நிர்வாணமாக வருவது, போதைப்பொருட்கள் உபயோகம், வசனங்களில் மற்றும் சில மறைமுகமான உடலுறவு காட்சிகளுடன் இருக்கும்..
இந்தபடத்தினை இயக்குனர் 90 களின் ஸ்டைலில் எடுத்திருப்பார்.. படத்தை பார்ப்பது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்..
கதை: லாஸ் ஏஞ்சலிஸ் தாதாக்களை பற்றியது.
படத்தில் ,John travolta (வின்சென்ட்), Samuel L. Jaksan (ஜூலிஸ்) ,Bruce Willis (பட்ச்), Uma Tharman (மியா -" Kil- Bill Lady" ) போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்..
படத்தின் தரம்: நூறு சிறந்த அமெரிக்க படங்களில் இதுவும் ஒன்று..
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது.
கதையை நான்-லினியர் வகையில் பார்க்கலாம்:
இப்படம் சில தனிகதைகளை கொண்டது, ஒவ்வொன்றும் இன்னொன்றை தொடர்பு படுத்தும் கதைகள். ஒவ்வொரு கதை ஆரம்பித்தும் சடாரென ஒரு திருப்பத்துடன் முடிந்துவிடம்.
கதை 1: வின்சென்ட் மற்றும் ஜூலிஸ் இருவரும் தன் முதலாளியிடம் ப்ரெட் என்பவன் திருடிய பெட்டியை மீட்கப் போகிறார்கள். அவன் தன் முதலாளி மார்சிலசை ஏமாற்றிய ஒரு ஆள். அப்படி போகும்போது வின்சென்ட் தன்னுடைய ஐரோப்பிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டே செல்வான், அப்போது ஜூலிஸ், வின்சென்டிடம் தன் முதலாளியின் மனைவியால் ஒருவன் நான்காம் மாடியில் இருந்து தள்ளப்பட்டான் எனவும். the reason for this "he has given FOOT MASSAAGE to mia" என்றும் குறிப்பிடுவான்..
கதை 2: தாதா மார்சிலஸ் தான் வெளியூர் செல்லவிருப்பதால் தன்னுடைய மனைவி மியாவை வின்சென்டிடம் வெளியில் கூட்டிப் போகச்சொல்வான்.இருவரும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது தன் கோட் பாக்கெட்டில் இருக்கும் ஹெராயினை, கொக்கெயின் என நினைத்து உறிஞ்ச அது இதயத்தை அடைத்துவிட வின்சென்ட் தன் நண்பன் லான்ஸ் வீட்டுக்கு அவசரமாய் கூட்டிபோய் உதவி கேட்க, பரபரப்பான நிமிடங்கள் அது, ADERILAIN மருந்தை நேரிடையாக மார்பில் ஏற்றும் தருணம், நின்ற மூச்சு திடீரென இயங்கும், நமக்கும்தான்..
கதை 3: பட்ச் ஒரு பாக்சர் தன் முதலாளி மார்சிலசுகாக விளையாடுவார், சூதின் தன்மையை பொறுத்தே ஜெயிப்பதா, தோற்ப்பதா என முதலாளி முடிவு செய்ய, ஒரு கட்டத்தில் பட்ச் எதிர் அணியினரிடம் பணம் பெற்றுக்கொண்டு நகரத்தை விட்டு வெளியேறுவார்.
கதை 4: பட்ச் வீட்டுக்கு வந்தவுடன் தன் காதலி பாபினியை தலைமுறைகளாக வைத்திருந்த கைகடிகாரத்தை விட்டுவிட்டு வந்ததற்காக சண்டை போட்டுவிட்டு அதனை எடுப்பதற்காக மீண்டும் நகரத்தில் உள்ள தன் வீட்டிற்க்கே செல்வார்.
காட்சி 5: பட்ச் தன் வீட்டில் கைகடிகாரத்தை எடுக்கும்போது அவரைக் கொள்ள காத்திருந்த வின்சென்ட்டை கொன்றுவிட்டு காரில் வேகமாக வரும்போது முதலாளி மார்சிலசை மோத. அடிபட்ட மார்சிலஸ் பட்சை துரத்த, அங்கிருக்கும் கடையொன்றில் புகுந்த இருவரையும் கடைக்காரன் மேனார்ட் துப்பாக்கி முனையில் கட்டிவைத்து, தன் நண்பன் சேட் என்பவனை அழைத்து மார்சிலசை மட்டும் ரேப் செய்ய.. தப்பிக்கும் பட்ச் மார்சிலசையும் காப்பாற்றி கூட்டிச் செல்கிறான்.
இதனால் மார்சிலஸ் பட்சிடம் தான் அவனை மன்னித்து விட்டுவிடுவதாகவும் ஆனால் இரண்டு வாக்குறுதிகளை அவன் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்க்கிறான். முதலாவது: பட்ச் மீண்டும் லாஸ் எஞ்சலீசுக்கு வரக்கூடாது மற்றொன்று: தன்னை ரேப் செய்த விஷயத்தை அவன் யாரிடமும் சொல்லக் கூடாது என்பதையும்.
கட்சி 6:காரில் போகும் வின்சென்டும், ஜூலிசும் தவறுதலாக இன்பார்மர் மேர்வினை சுட்டுவிட.. ஜூலிஸ் தன் நண்பன் ஜிம்மியிடம் உதவி கேட்டு மேர்வினின் உடலை மறைத்து வைத்துவிட்டு, இரத்தக் கறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
காட்சி 7:பம்கின்னும், ஹனி பண்ணியும் சாதரண திருடர்கள் காபி கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அந்த வசனங்கள் சூப்பர் கிண்டல்..( இந்த ஆரம்ப வசனங்கள் மட்டும் பிரிட்டிஷ் நடையிலும், மற்றபடி படம் முழுதும் அமெரிக்க நடையிலும் வசனங்கள் இருக்கும்) அப்போது அவர்கள் அந்த ரெஸ்டாரண்டை கொள்ளையடிப்பார்கள்.. ஆரம்பக் காட்சியாக வரும் இதன் தொடர்ச்சி முடிவாகவும் வரும் ..
கதையை தொடர்ச்சியாக பார்க்கவேண்டும் எனில்:
முதல் காட்சியில் பம்கின்னும் ஹனிபன்னியும் காபி கடையை கொள்ளையடிக்க திட்டமிடலுடன் ஆரம்பிக்கும் இப்படம் .. ஆரம்ப வசனங்கள் யூதர்களை வறுத்தெடுக்கும். திடீரென முடிவுசெய்து ரெஸ்டாரண்டை கொள்ளையடிக்கும் முடிவு அசாத்தியமானது..
நிழல் உலக தாதா மார்சிலஸ் தன் மனைவி மியாவை தன் அடியாள் வின்சென்டிடம் தான் வெளியூர் போகும்போது அவளை வெளியில் அழைத்துச்செல்லும்படி பணிக்கிறான்..அதன்பிறகு வின்செண்டும், ஜூலிசும் தன் முதலாளியிடமிருந்து ப்ரெட் என்பவன் திருடிய முக்கியமான பெட்டியை மீட்டு வர அனுப்புகிறான்.
அவன் தன் முதலாளி மார்சிலசால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட ஒரு ஆள். அப்படி போகும்போது வின்சென்ட் தன்னுடைய ஐரோப்பிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டே செல்வான், அப்போது ஜூலிஸ், வின்சென்டிடம் தன் முதலாளியின் மனைவியால் ஒருவன் நான்காம் மாடியில் இருந்து தள்ளப்பட்டான் எனவும். அதனை FOOT MASSAAGE என்றும் குறிப்பிடுவான்.. சிரிப்பை அடக்க முடியாது இந்த இடத்தில்.. இந்த சீனைதான் அப்படியே கன்வெர்ட் செய்து மணிரத்னம் தன் ஆய்த எழுத்து படத்தில் மாதவன் சூர்யாவை சுட போகும்போது தன் மனைவியை பற்றி பேசுவதாக மாற்றியிருப்பார். ஜூலிஸ் பெட்டியை எடுக்கும் முன் பைபிளில் உள்ள வாசகத்தை பொறுமையாக சொல்வார்..அது பிரமாதம்..
"The path of the righteous man is beset on all sides by the inequities of the selfish and the tyranny of evil men. Blessed is he who in the name of charity and goodwill shepherds the weak through the valley of darkness, for he is truly his brother's keeper and a finder of lost children. And I will strike down upon thee with great vengeance and furious anger those who attempt to poison and destroy my brothers. And you will know my name is the Lord when I lay my vengeance upon thee." - Jules' version of Ezekiel 25:17
அப்போது பாத்ரூமில் ஒளிந்திருந்த ப்ரெட்டின் ஆள் விசென்டையும், ஜூலிசையும் சுட தப்பித்துக் கொண்ட இருவரும் அவனையும் தீர்ப்பார்கள். அப்போது ஜூலிஸ் வின்சென்டிடம் பாத்தியா கடவுள் நம் மீது பாயவிருந்த புல்லட்டை தடுத்து நிறுத்திவிட்டார் ஏன் பெருமைப்பட வின்சென்ட் அவன் குறிதவறி சுட்டான் அதான் என மறுக்க, ஜூலிசோ விடாப்பிடியாக கடவுள்தான் காப்பாற்றினார் என சண்டை போடுவார்.
ஜூலிசின் கடவுள் நம்பிக்கை அசாத்தியமான கிண்டலுடன் அவர் வரும் சீன் எல்லாம் இருக்கும்..ப்ரேட்டிடம் பெட்டியை மீட்டு இன்பார்மர் மார்வினின் காரில் தப்பி செல்லும்போது வின்சென்டின் துப்பாக்கி தவறுதலாக மார்வினை சுட்டுவிட மார்வினின் ரத்தமும் சதை துணுக்குகளும் இருவரின் மேலும் கார் முழுவதும் ஒட்டிக்கொள்ள ஜூலிஸ் தன் நண்பன் ஜிம்மியின் வீட்டிக்கு சென்று அவனின் உதவியைக் கேட்க ஜிம்மி பயந்து மறுப்பான் அப்போது மார்சிலஸ் வேண்டுகோளுக்கு இணங்கி வின்ஸ்டன் அந்தக் காரை சுத்தம் செய்தும் மார்வினின் உடலை ஒரு ட்ரன்க் பெட்டியும் மறைத்து வைப்பார்கள்..
அதன் பின் வின்செண்டும், ஜூலிசும் ஒரு ரெஸ்டாரன்டிற்கு செல்ல அதே ரெஸ்டாரன்டில்தான் படத்தின் ஆரம்ப காட்சியாக வரும் பம்கின்னும், ஹனிபன்னியும் அந்த ரெஸ்டாரன்டை கொள்ளையடிக்க திட்டமிடுவார்கள்.. படத்தின் இந்த காட்சியின் வசனங்கள் சூப்பர்.. இப்பல்லாம் வங்கிகளை கொள்ளையடிக்க முடிவதில்லை, செக்யூரிட்டிகளை கடுமையாக வைத்துவிட்டனர். யாருடைய பர்சையாவது அடிக்கலாம் என்றால் அதிலும் யாரும் பணம் வைத்துகொள்வதில்லை. இந்த யூதர்களை பார் எங்கு பார்த்தாலும் இப்படி கடை வைத்து சம்பாதிக்கின்றனர்.. ஒரு காப்பி ஐந்து டாலர் விற்கிறார்கள்.. இந்த மேனேஜர் இருக்கானே அவன் ஒரு வேலையும் செய்யாமல் சம்பாதிக்கிறான்..என பேச அவன் காதலி நீ பேசுவது வாத்து கத்துவதுபோல் இருக்கு என்று சொல்லுவாள்.. உடனே அவன் இந்த ரெஸ்டாரன்டையே கொள்ளையடிப்போம் என்பான்.. உடனே துப்பாக்கியை தூக்குவார்கள்..
அதற்க்கு சற்று முன்னதாக வின்சென்ட் டாய்லெட் போய்விட பம்ப்கின்னும், ஹனிபன்னியும் துப்பாக்கி முனையில் எல்லோரையும் மடக்கி, அனைவரின் பர்சையும் மிரட்டி வாங்குவார்கள்.. அப்படியே ஜூலிசிடம் அவன் பர்சை வாங்கிக்கொண்டு அவன் கையில் வைத்திருக்கும் முக்கியமான பெட்டியையும் கேட்க.. சடாரென தன் துப்பாக்கி முனையில் பம்கின்னை மடக்க , அதற்குள் வின்செண்டும் வந்துவிட அப்போது கூட ஜூலிஸ் பம்ப்கின்னிடம் பைபிளின் வாசகத்தை பொறுமையாக சொல்லுவான்.. அதன்பின் அவனை அவன் கொள்ளையடித்த பணத்தோடு அனுப்பிவிடுவார்கள்..
வின்சென்ட் தன் முதலாளி மனைவி மியாவை வெளியில் கூட்டிச் செல்வதற்கு செல்லும் வழியில் தன் நண்பன் லான்ஸ் வீட்டிற்கு சென்று ஹை டோஸ் ஹெராயின் வாங்கிச் செல்வான்.மியாவுடன் 1950 டைப் ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு செல்வான், அங்கு சிறந்த ஜோடிகளுக்கான நடனப்போட்டி வைப்பார்கள் அதில் மியா வின்சென்ட்டை கட்டாயப் படுத்தி ஆடசெய்து பரிசை வெல்வாள். அப்போது நடக்கும் நடனம் அருமை. ஏற்கனவே இருவரும் மிகுந்த போதையில் இருப்பார்கள். மியாவை வீட்டிக்கு கூடிவந்து விட்டவுடன் வின்சென்ட் டாய்லெட் செல்வான் அங்கு மியாவிடம் இருந்து விடைபெற்று செலவதற்கு கண்ணாடிமுன் பேசிப் பழகுவான். அதற்குள் வின்சென்டின் கோட் பாக்கெட்டில் இருக்கும் ஹெராயின் மியாவின் கையில் கிடைக்க அதை அவள் கொக்கெயின் என நினைத்து மூக்கின் வழி உறிஞ்ச அது இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் பாதையில் சென்று அடைத்துக்கொள்ள அவள் மெல்ல மரணத்தை தழுவ ஆரம்பிப்பாள். வின்சென்ட் அவளை தூக்கிக் கொண்டு தன் நண்பன் லான்சின் வீட்டிற்கு காரை வேகமாக ஒட்டிசெல்வான், அங்கு அடிரிளின் மருந்தை ஊசியில் ஏற்றி அவள் மார்பில் நேரிடையாக குத்த, அதன் மூலம் அவள் பிழைப்பாள்.. படத்தில் இந்த சீன் நமக்கு பரபரப்பை ஏற்படுத்தும் முக்கியமான சீன்களில் ஒன்று அதன்பிறகு வின்சென்ட் மியாவை வீட்டில் விடும்போது நடந்த விசயங்களை மார்சிலசுக்கு தெரியப் படுத்த வேண்டாம் என்று சொல்வாள்.
பட்ச் ஒரு பாக்சர் அவன் தன் முதலாளி மார்சிலசிடம் தான் அடுத்த சண்டையில் பங்கேற்க போவதில்லை என்று சொல்கிறான். ஆனால் அடுத்த சண்டையில் பங்கேற்கும்போது எதிர் அணியிடம் பணம் வாங்கிகொண்டு தன் முதலாளி கட்டளைப்படி சண்டையில் தோற்காமல் எதிராளியை கொன்றுவிட்டு, எதிர் அணியினர் தந்த பணத்தை வாங்கிகொண்டு பாக்சர் பட்ச் தப்பித்து வரும்போது டாக்சியின் டிரைவரான பெண்ணுடன் பேசும் வசனங்களும், அதன்பின் தன் காதலி தங்கியுள்ள மோட்டல் வந்தவுடன் தன் இளம் மனைவியுடன் பேசும் வசனங்களும் எதார்த்தம்.. அப்போது ORAL SEX க்கு பிரியப்படும் மனைவியை அவர் திருப்தி படுத்துவதை அவள் முகத்தை மட்டும் காட்டி பிரமாதப் படுத்தி இருப்பார்.. அந்தபின் அவரின் மிக முக்கியமான தலைமுறைகளை கடந்த ஒரு கைகடிகாரத்தினை தன் காதலி மறந்துவிட்டு வந்ததை அறிந்து அவளை திட்டுவான்.. அவள் அழ. அவளை அப்படியே விட்டுவிட்டு நகரத்தை நோக்கி மீண்டும் வருவான்.
நகரத்தில் தன் வீட்டின் பின்புறமாக காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்து கடிகாரத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுமுன் சமையலறை சென்று டோஸ்டரில் பிரட்டை சொருகிவிட்டு காத்திருக்க அப்போது பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்கும், உசாரான பட்ச் சுற்றிலும் கவனிக்க அங்கு ஒரு மெசின் கண் இருக்கும், அதனை கையில் எடுத்துக் கொண்டு பாத்ரூமை குறிவைக்க, அங்கிருந்து பட்சை கொள்ள முதலாளி மார்சிலசால் அனுப்பப்பட்ட வின்சென்ட் வெளியே வர, அதே நேரம் டோஸ்டர் மணியடிக்க ஏதோ என்று பதட்டபட்ட பட்ச் வின்சென்ட்டை கொன்றுவிட்டு காரில் தப்பிக்கிறான்.
காரில் பட்ச் வேகமாக வரும்போது சாலையைக் கடந்த முதலாளி மார்சிலசை பார்த்து பதட்டத்தில் அவனையும் மோதிவிட்டு தப்பிக்க முடியாது கார் சுவற்றில் மோதி பட்சிற்க்கும் அடிபட, தப்பிக்கும் பட்ச் அருகில் உள்ள கடைக்குள் நுழய அங்கும் விரட்டிவரும் மார்சிலசுக்கும், ஜூலிசுக்கும் சண்டை வருகிறது. இருவரையும் துப்பாக்கி முனையில் பிடித்து கட்டிபோடுகிறான் கடைக்காரன் மேனார்ட், தன் நண்பன் ஜெட் என்பவனை அழைத்து அவன் மார்சிலசை தனி அறைக்கு கூட்டிச்சென்று ரேப் (பின்புறம்தான்) செய்ய, தப்பிக்கும் பட்ச் முதலாளி மார்சிலசையும் காப்பாற்றுகிறான்.. மார்சிலஸ் பட்சை அவன் வழியில் போகச்சொல்லி அனுப்பிவிடுகிறான்..ஆனால் இரண்டு வாக்குறுதிகளை அவன் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்க்கிறான். முதலாவது: பட்ச் மீண்டும் லாஸ் எஞ்சலீசுக்கு வரக்கூடாது மற்றொன்று: தன்னை ரேப் செய்த விஷயத்தை அவன் யாரிடமும் சொல்லக் கூடாது என்பதையும்.
மோட்டலுக்கு வந்த பட்ச் தன் காதலி பெபினியிடம் அவளைக் கடிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறான்..
சிறப்பு: இந்த படத்தின் வசனங்கள் மிகசிறப்பானவை..
ஒரு காட்சியில் வசனம்:
ஜூலிஸ் : ஓகே ஹாஷ் பார்ஸ் பற்றி எனக்கு விளக்கமா சொல்லு?
வின்சென்ட் : அதில் உனக்கு எதைப் பற்றி தெரியனும்?
ஜூலிஸ் : அது அங்க சட்டபூர்வமானதா?
வின்சென்ட்:லீகல்தான் ஆனா நூறு சதம் அப்படி சொல்ல முடியாது, ஏன்னா நீ அதை கையில் வைத்துக் கொண்டு உணவு விடுதிகளுக்கு போக முடியாது, போது இடங்களில் புகைக்க முடியாது, உன் வீட்டில் வைத்துக் கொள்ளவும், புகைக்கவும் அனுமதி உண்டு, சில குறிப்பிட்ட இடங்களிலும் அனுமதிப்பார்கள்.
ஜூலிஸ்:குறிப்பிட்ட இடங்கள் என்பது ஹார்ஸ் பார்களா/
வின்சென்ட் : அதை எப்படி சொல்வது? .. அதாவது அம்ஸ்டேர்டாமில் உனக்கு லைசென்ஸ் இருக்கிறது எனில் விற்கலாம், எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம், ஆனால் நீ லைசென்ஸ் இல்லாமல் எடுத்துச் சென்றாலும் அங்கு உன்னை சோதனை போடும் உரிமை அங்குள்ள போலிசுக்கு கிடையாது.
இன்னொரு இடத்தில் :
இது கொஞ்சம் காரம் ஜாஸ்த்தி அதனால் ஆங்கிலத்திலேயே தருகிறேன்.. அது தமிழில்தான் வேண்டுமெனில் பக்கத்தில் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...
Jules: Whoa, whoa, whoa. Stop right there. Eating a bitch out and giving a bitch a foot massage ain't even the same fucking thing.
Vincent: It's not, it's the same ballpark.
Jules: Ain't no fucking ballpark neither. Now, look, maybe your method of massage differs from mine, but you know touching his wife's feet and sticking your tongue in the holiest of holies ain't the same fucking ball park. It ain't the same league. It ain't even the same fucking sport. Look, foot massages don't mean shit.
Vincent: Have you ever given a foot massage?
Jules: Don't be telling me about foot massages, I'm the foot fuckin' master.
Vincent: Given a lot of them?
Jules: Shit, yeah! I got my technique down and everything, I don't be tickling or nothing.
Vincent: Would you give a guy a foot massage?
Jules: [pause] Fuck you.
Vincent: You give them a lot?
Jules: Fuck you.
Vincent: You know, I'm getting kinda tired, I could use a foot massage myself.
Jules: Yo-yo-yo, man, you best back off, I'm getting pissed here. Look, just 'cause I wouldn't give no man a foot massage don't make it right for Marsellus to throw Antoine into a glass motherfucking house fucking up the way the nigga talks. That shit ain't right. Motherfucker do that shit to me, he better paralyze my ass because I'd kill the motherfucker, know what I'm saying?
Vincent: I ain't saying it's right. But you're saying a foot massage don't mean nothing, and I'm saying it does. Now, look, I've given a million ladies a million foot massages, and they all meant something. We act like they don't, but they do, and that's what's so fucking cool about them. There's a sensuous thing going on where you don't talk about it, but you know it, she knows it, fucking Marsellus knew it, and Antoine should have fucking better known better. I mean, that's his fucking wife, man, he ain't have no sense of humor about that shit. You know what I'm saying?
Jules: That's an interesting point.
இந்தப்படத்தை பல்ப் பிக்சன் என்பதற்கு பதில் FUCK பிக்சன் என்று பெயர் வைத்திருக்கலாம், கிட்டதட்ட தனியாகவோ அல்லது மற்ற வசனங்களுடனோ சேர்ந்தோ 250 தடவைக்கும் மேலாக பயன்படுத்தி இருப்பார்கள். மேலும் SHIT வார்த்தையை 78 தடவைக்கு மேலாக பயன்படுத்தி இருப்பார்கள். ஓஷோ FUCK எனும் வார்த்தையை மிக அழகானது என்றும். ஆங்கில மொழி இதற்காக பெருமைப் பட வேண்டும் என்றும் குறிப்பிடுவார்..
படத்தில் FUCK பயன்படுத்தும் இடங்கள்:
நான் பரிந்துரைக்கும் இதர படங்கள்:
Killing Zoe, Reservoir Dogs
Trailer:
Wikipedia:
Directors unofficial website:
33 கருத்துகள்:
நான் தான் முதல்... படிச்சுட்டு வரேன்
இதைதான் பிரிச்சி மேயறதுன்னு சொல்வாங்க தம்பி... அப்படி மேஞ்சி இருக்க...
இதைதான் பிரிச்சி மேயறதுன்னு சொல்வாங்க தம்பி... அப்படி மேஞ்சி இருக்க...
tjala romba perusaa iruku mng padikkaren
எவளவோ பெரிய பதிவு இன்னைக்கு தொடங்கி நாளைக்கு தான் முடியும் போல..சரி நான் நாளைக்கு கமெண்ட் போடுறேன்
தரவிறக்கம் செய்ய வழிஉள்ளதா செந்தில்.
அண்ணே கலக்கல் :) எனக்கும் பிடித்த படம் இது..
கவுண்ட்டிங்க் கனேசன்னு பேர் எடுக்க ஆசையா? துல்லியமா எண்ணீயிருக்கீங்களே?இதைத்தான் சிலர் எண்ணிப்பாருங்கள்னு அடிக்கடி மேடைல சொல்றாங்களோ
samuel jackson, john Travalto இருவரும் அசால்டாக நடித்து இருப்பார்கள். 3 முறை பார்த்தேன்..மிக வித்தியாசமான படம்
தரவிறக்க நிறைய லிங்க் உள்ளது..
http://www.torrentz.com/ea852ef4e719b6c8e09737a70e3c2b723bb0578d
பயங்கர அலசல் நண்பரே... பெரிய பதிவுதான் ஆனால் நல்லா இருக்கு! இந்த நீளம் தேவைதான்.
சரியான தலைப்பு
இந்த படம் பார்க்கவேண்டும் என்று தோணவில்லை
இந்த விமர்சனம் அந்த அளவுக்கு இருக்கு
//சௌந்தர் சொன்னது…
சரியான தலைப்பு
இந்த படம் பார்க்கவேண்டும் என்று தோணவில்லை
இந்த விமர்சனம் அந்த அளவுக்கு இருக்கு
14 ஜூலை, 2010 9:52 pm //
சின்னப்புள்ளைகள பயமுறித்திட்டிங்களோ.
// ஜாக்கி சேகர் கூறியது...
இதைதான் பிரிச்சி மேயறதுன்னு சொல்வாங்க தம்பி... அப்படி மேஞ்சி இருக்க...//
இங்க தம்பி சூட் பி ரிப்லேசுடு வித் அண்ணே.. மிச்ச படி எல்லாம் ரிப்பிட்டு.
செந்தில் அவர்களே இதைத்தான் ரசனை என்பதா....?
//வித்தியாசமான கோணங்களில் சிந்திப்பவர்களுக்கான வித்தியாசமான இயக்குனரின் படம் இது.//
உண்மைதான்..
//எனவே ஆழ்ந்த சிந்தனைகளும்.. தேர்ந்த சினிமா ரசிகர்களும் மட்டும் மேலே படியுங்கள் ..//
எதையும் ரசிப்பவன் என்றபடியால் படிக்கிறேன்..
முழு படத்தையும் பார்த்த உணர்வு..
தங்கள் பதிவு..
நல்ல தெளிவான விமர்சனம் செந்தில்.படம் பார்க்கத் தூண்டுகிறது !
என்னை மாதிரி மரமண்டைகளுக்கு புரியுமா?
படம் எப்படியோ ஆனா விமர்சனம் சூப்பர் அண்ணாச்சி.
பொதுவாக ஆங்கில திரைப்படங்களில் நேரடியாக யாரையும் தாக்கி பேசமாட்டார்கள். இங்கே Quarter Pound Burger- Sprite-Jews வரை நேரடியாகவே தாக்குகிறார்கள். உங்கள் இணைப்புகள் படம் பார்க்க தூண்டுகிறது. நல்ல தேர்வு. நல்ல பகிர்வு.
அப்படியே படத்தை விமர்சனத்தில் கொண்டு வந்துவிட்டீர்கள்.... நல்லா இருக்கு பார்க்கிறேன்.
வித்தியாசமான பதிவு...
அசத்தல் விமர்சனம்...படிப்பதற்கு சுவாரசியம்....
புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்...மீண்டும் ஒருமுறை படிக்கிறேன்...
வித்தியாசமான விமர்சன அணுகுமுறை...வாழ்த்துக்கள்...
அன்புடன் கபிலன்..
அட்டகாசமான விமர்சனம் சார்..
படத்தை பலமுறை பார்த்தும் ஒண்ணும் புரியாம கிடந்தது.(fuck!)
இன்னைக்கு மறுபடியும் பாப்போம்(fuck!!)
புரியும்னு தோணுது(fuck!!!)
:)))
250 முறைக்கு மேல் FUCK வார்த்தைகளையும் 78 முறைக்கு மேல் SHIT வார்த்தைகளையும் பயபடுத்தி இருப்பார்கள்.. ///
என்னா பொறுப்புணர்ச்சி
இந்தப் பதிவு போடுறதுக்கு முன்னாடி உண்மைத்தமிழன்கிட்ட பேசினீங்களா?
நல்ல பதிவு நண்பா
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
என்னை மாதிரி மரமண்டைகளுக்கு புரியுமா?///
எனக்கும் அதே டவுட்டு தான்., என்னை மாதிரி கோமாளிகளுக்கு புரியுமா ..?
ஆனா படம் முழுசா பிரிச்சு போட்டுட்டீங்க ...
தங்களின் விமர்சனத்தை படித்தது ஒரு முழு திரைபடத்தை பார்த்தது போல் உள்ளது .........நன்றி அண்ணா ....
மிகவும் ரசித்த படங்களில் ஒன்று!
//இந்தப் பதிவு போடுறதுக்கு முன்னாடி உண்மைத்தமிழன்கிட்ட பேசினீங்களா?//
இனிமே எல்லாரும் உண்மைத்தமிழனைப் பாத்து "இந்த பதிவு போடுறதுக்கு முன்னாடி கேஆர்பிசெந்தில்கிட்ட பேசினீங்களா?" அப்டின்னு கேக்கப்போறாங்க பாருங்க!!!
//இந்தப் பதிவு போடுறதுக்கு முன்னாடி உண்மைத்தமிழன்கிட்ட பேசினீங்களா?//
இனிமே எல்லாரும் உண்மைத்தமிழனைப் பாத்து "இந்த பதிவு போடுறதுக்கு முன்னாடி கேஆர்பிசெந்தில்கிட்ட பேசினீங்களா?" அப்டின்னு கேக்கப்போறாங்க பாருங்க!!!
நல்ல விமர்சனம்..!
இவ்ளோ தெளிவா எழுதி இருக்கீங்க..
வசனங்கள், சிறந்த காட்சிகள் குறிப்பிட்டது நல்லா இருக்கு..
உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))
http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
கருத்துரையிடுக