10 நவ., 2010

வியாபாரம் - முதலீட்டின் அளவு ...


Almost all quality improvement comes via simplification of design, manufacturing... layout, processes, and procedures. -Tom Peters 

ஒரு தொழிலதிபர் ஆகவேண்டும் என்று பெரும்பாலோருக்கு கனவு இருக்கும். சற்று மாற்றாக சிலருக்கு சினிமாக்கனவுகளும், அரசியல் கனவுகளும் இருக்கும். ஒரு தொழிலின் நுணுக்கங்கள் அறிந்தவருக்கு தொழில் துவங்கும் எண்ணம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் எல்லோருக்கும் இருக்கும் தலையாய பிரச்சினை அதற்க்கான முதலீட்டை திரட்டுவதுதான். பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்குவது சாதரணமான விசயம் அல்ல. இந்திய தேசத்தில் கடன் வாங்குவது ஒரு படத்தில் வடிவேல் கிணறுவெட்ட கடன் வாங்கிய நிலைமைதான். அரசியல்வாதிகள், பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு வாராக் கடன்களில் சேர்த்துவிடும் வங்கிகள் நியாயமாய் ஒருவர் அதற்க்கான அத்தாட்சிகளுடன் கடன் கேட்டாலே கையூட்டு கொடுக்காமல் கடன்பெற இயலாது. இதனாலேயே நம் ஆட்கள் தம் தொழில் கனவை மூட்டை கட்டி வைத்துவிடுகின்றனர். இந்தியா தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு சிறிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்காததே காரணம்.

தொழில் செய்வது என்று முடிவெடுத்தால் பெரும்பாலனவர்கள், கடை வைப்பதையும், வாகனம் வாங்கி வாடகைக்கு விடுவதையும், உணவகம் நடதுவதையும்தான் தேர்வு செய்கின்றனர். இதில் தப்பேதும் இல்லை, ஆனால் இந்த மூன்று தொழில்களுமே சற்று சிரமப்பட்டு நடத்த வேண்டியவை என்பது நிறைய பேருக்கு தெரியாது. எப்போதும் தொழில் பின்னணி இல்லாமல் புதிதாக தொழில் செய்ய விரும்புகிறவர்கள் முதலில் மிகச்சிறிய முதலீட்டினைக்கொண்டு ஆரம்பிக்க கூடிய தொழில்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் வியாபார நெளிவு, சுளிவுகள் அத்துபடியாகும். எந்த தொழிலை செய்தாலும் அந்த தொழில் பற்றிய போதுமான தகவல்களை பெற்றபின்பே தொழிலைத் துவங்கவேண்டும். மேலும் ஆறு மாதங்களுக்கு அதனை கைக்காசு போட்டுதான் நடத்த வேண்டி வரும். அதற்கான முன்னேற்பாடுகளுடன்தான் தொழிலைத் துவங்கவேண்டும். ஒருவேளை உங்களுக்கு அந்த தொழிலை பற்றி விரிவான அறிவு தேவையெனில் அதற்கான ஆலோசகர்களை அணுகினால் செயல் திட்டங்களை துல்லியமாக வடிவமைத்து தருவார்கள். 

உங்கள் தொழிலை ஒரு பத்து வருடங்களுக்கு திட்டமிடுங்கள், அப்படி திட்டமிட்டால் உங்களின் தொழிலின் எதிர்காலம்பற்றி உங்களுக்கு தெரிந்துவிடும். ஒரு காலத்தில் இருந்த தையலகங்கள், STD மற்றும் இணைய சேவை மைய்யங்கள், போட்டோ ஸ்டுடியோக்கள் பிரபலமான தொழிலாக இருந்தது. இப்போது அதன் தேவையும், வடிவமும் மாறிவிட்டன. இதைபோல மாறக்கூடிய சாத்தியம் உள்ள  தொழில்களை தவிர்த்துவிட வேண்டும். பொதுவாகவே உணவும், தண்ணீரும் எதிர்காலத்தில் முக்கிய வியாபாரம் என்பதால் சிறிய அளவிலான உணவுப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டால் அதற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. உணவு பொருளில் தரமும், நல்ல அழகான உறையிலிட்டு பார்க்க பளிச்சென இருக்கும்படி இருந்தால், குறைவான விளம்பரம் மூலம் ஓரளவிற்கு சந்தையை பிடித்துவிடலாம். தரம் நம்மை மேலே கொண்டுபோய் சேர்த்துவிடும்.

தொழில் துவங்குவது என முடிவு செய்தபின் வரவு. செலவு பற்றி கண்டிப்பாக கணக்கு பைசா சுத்தமாக வைத்திருக்கவேண்டும், பெரும்பாலோர் தவறுவது இதில்தான். தங்கள் சொந்த தொழில்தானே என கணக்கு பார்க்காமல் எடுத்து செலவு செய்வது, அடுத்து எல்லா நபர்களும் பணத்தைக் கையாளுவது, இதனால் ஒரு கட்டத்தில் தொழில் நலிந்து வேலை செய்தவர்களை சந்தேகப்பட்டும், குடும்பதினருக்குள் சண்டை வந்தும் தொழிலுக்கு மூடுவிழா நடத்திய பல நபர்களை எனக்குத்தெரியும். ஒரு தொழில் துவங்கிய பிறகு கண்டிப்பாக கணக்குகளை கையாள ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும். கணினி கைகொடுக்கும் இந்த நாட்களில் தினசரி தெரிந்து கொண்டுவிட வேண்டும். அப்படி செய்யும்போது அன்றைய நிலை அன்றைக்கே தெரிந்துவிடும். எவ்வளவு சிறிய தொழிலாக இருந்தாலும் வாராவாரம் கண்டிப்பாக கூட்டம் நடத்தி அந்தவார பிரச்சினைகளை அலசவேண்டும், அடுத்தவாரதிற்க்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களால் உங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்துவிடலாம். 

முதலீட்டின் அளவு என்று தலைப்பு வைத்துவிட்டு வேறு கதைகள் பேசுகிறான் என நினைப்பீர்கள், மேலே சொன்னவைகள் பற்றி ஒரு தெளிவான சிந்தனை இருந்தாலே உங்கள் தொழிலுக்கான முதலீட்டு அளவு பற்றிய புரிதல் வந்துவிடும். எப்போதும் மற்றவர்கள் சம்பாதிப்பதைப் பார்த்து அதே தொழிலை செய்ய ஆசைப்படாதீர்கள். உன்கள் பகுதியில் நீங்கள் செய்யபோகும் தொழிலின் தேவையையும், அதன் வியாபார அளவையும் பற்றி ஆராயுங்கள். அந்த பகுதியில் இருக்காத தொழிலை செய்வது உத்தமம். ஒருவேளை உங்களுக்கு நன்கு தெரிந்த தொழிலை உங்கள் பகுதியில் நிறைய பேர் செய்கிறார்கள் என்றால், அதே தொழிலை அவர்களைக் காட்டிலும், வித்தியாசமாகவும், சிறப்பாகவும் உங்களால் செய்யமுடியும் என்று தெரிந்தால் ( நம்பினால் அல்ல) உடனே ஆரம்பியுங்கள். எப்போதும் நீங்கள் செய்ய நினைப்பவைகளை துல்லியமாக முன் மாதிரி திட்டங்களை கையில் வைத்து இருந்தால். செயல்வடிவம் கொடுப்பது மிக சுலபமாக இருக்கும்.  

முதன்முதலில் தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் எவ்வளவு நிதானமாக உங்கள் தொழிலை அனுகுகிறீர்களோ, அதன்படிதான் உங்கள் தாக்குபிடிக்கும் திறனும் இருக்கும். ஒரு சோதனைக்காக பத்தாயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்துக்குள் இருக்கும் முதலீடு கொண்ட தொழிலை நடத்திபாருங்கள் நஷ்டம் வந்தாலும் இந்த அனுபவம் அடுத்த தொழிலை துவங்கும்போது இது வெகுவாக கைகொடுக்கும். ஏனென்றால் தொழில் என்பது லாபத்தை மட்டுமே தருவதல்ல சமயத்தில் உன்களை அனைத்தையும் இழக்கவைத்து தெருவில் நிறுத்திவிடும். எனவே ஒருவேளை இந்த தொழில் நடத்த முடியாமல் போனாலோ அல்லது நட்டமானாலோ என்ன செய்யலாம் என முன்கூட்டியே தெரிந்து வைத்துகொண்டு தொழிலை துவங்குங்கள். இந்த மாதிரி நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கும்போதே உங்கள் தொழிலின் இன்னொரு பக்கம் பற்றி நிறைய விசயங்கள் புலப்படும். அதனை பட்டியலிட்டால் உங்களுக்கு நீங்கள் செய்யப் போகும் தொழில் நுணுக்கம் எளிதாகும்..

All The Best...


34 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எவ்வளவு நுணுக்கமான விஷயத்தை, மிக எளிமையாக, மிக அழகாக சொல்லி இருக்கீங்க. மிக சிறந்த பதிவு.

karthikkumar சொன்னது…

எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கு சார் இன்னும் சில மாதத்தில் நிறுவனம் தொடங்க உள்ளேன் நன்றி

ஹரிஸ் Harish சொன்னது…

நல்ல பதிவு..தொழில் முனைவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்

எல் கே சொன்னது…

நல்ல வழிகாட்டி செந்தில். உணவகம் நடத்துவது இன்று அந்த அளவுக்கு இலாபம் தரும் தொழில் அல்ல. சொந்த அனுபவம் உண்டு. அதனால் சொல்கிறேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிக அழகாக சொல்லி இருக்கீங்க.
மிக சிறந்த பதிவு.

அம்பிகா சொன்னது…

தொழில் நுணுக்கங்களை அழகாக கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள். தொழில் தொடங்குபவர்கள் கவனத்தில் கொள்ளலாம்.

பெயரில்லா சொன்னது…

சிறப்பான பதிவு அண்ணா..
ஒரு நல்லா தெளிவான வழிகாட்டுதலும் கூட..

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

அருமையான பகிர்வு.

பெயரில்லா சொன்னது…

உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் வித்தியாசமாக இருந்தாலும் அதற்கேற்ப நீங்கள் வைத்துள்ள புகைப்படங்கள் அருமையோ அருமை..
பதிவுகளைத் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது படங்கள்.
வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

உபயோகமான பதிவு செந்தில்.படங்கள் எங்கு எடுக்கிறீர்கள் !

செல்வா சொன்னது…

//வாராக் கடன்களில் சேர்த்துவிடும் வங்கிகள் நியாயமாய் ஒருவர் அதற்க்கான அத்தாட்சிகளுடன் கடன் கேட்டாலே கையூட்டு கொடுக்காமல் கடன்பெற இயலாது. //

சில நியாயமான வங்கிகளும் இருக்கு அண்ணா ., எங்க ஊர்ல நாங்க வாங்கி இருக்கோம் ..!!

செல்வா சொன்னது…

//அதன் வியாபார அளவையும் பற்றி ஆராயுங்கள். அந்த பகுதியில் இருக்காத தொழிலை செய்வது உத்தமம். //

இது உண்மைலேயே சரிதான் அண்ணா ., ஆனால் இதிலும் சில சிக்கல்கள் இருக்கு ., எப்படின்னு சொன்னா இங்க எங்க ஊர்ப் பக்கம் விசைத்தறிகள் பிரபலம் .. இங்கே விசைத்தறி தொழில் செய்வதே சிறந்ததாக இருக்கிறது ..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மிக சிறந்த பதிவு.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான பகிர்வு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருமையான பகிர்வு.

nis சொன்னது…

தற்போதைய பொருளாதார நிலைக்கும் , நிறுவனங்களிற்கிடையான போட்டிக்கும் ஈடு கொடுப்பது கடினம்.

மிக சிறந்த உபயோகமான பதிவு

என்னது நானு யாரா? சொன்னது…

தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்கள் தந்திருக்கிறீர்கள் அண்ணாச்சி! மிகவும் உபயோகமான பதிவு

Arun Prasath சொன்னது…

பட்டய கெளப்பிடீங்க தல

அலைகள் பாலா சொன்னது…

nalla thagaval..

ரோஸ்விக் சொன்னது…

பேசும்போது உங்களிடம் இருந்து தெரிந்துகொண்ட இந்த விஷயங்களை அழகிய பதிவாக்கியிருக்கிறீர்கள். யோசிச்சு வைங்க தூக்கிருவோம். :-)

ஜோதிஜி சொன்னது…

செந்தில் இந்த தொடக்கத்தையே நான் கேட்டுக்கொண்டுருக்கும் புத்தகத்தின் தொடக்கமாக வைத்தால் சிற்பபாக இருக்கும்.

ஜோதிஜி சொன்னது…

இந்தியாவில் நீங்கள் தொழில் தொடங்க எத்தனை ஆலோசனைகளை வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் பணம், நம்பிக்கை, திறமை போன்ற எல்லாவற்றையும் மீறி இங்குள்ள நடைமுறை எதார்த்தங்களை புரிந்து கொள்பவர் முடிந்தவரைக்கும் மேலேற முடியும். மிகப் பெரிய உதாரணம் அம்பானி. எதையும் உடைக்கத் தெரிந்தால் இந்தியாவில் எல்லாமே எளிது.

ராஜன் சொன்னது…

Good article

Paleo God சொன்னது…

எதையும் உடைக்கத் தெரிந்தால் இந்தியாவில் எல்லாமே எளிது.
//

எப்போது உடைக்கனும் என்பதும் சேர்த்து..

அருமை பாஸ்!

அன்பரசன் சொன்னது…

சூப்பர் பதிவுங்க.
வழக்கமான கேள்வி
உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி படங்கள் எங்கிருந்துதான் கிடைக்குதோ?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//தொழில் துவங்குவது என முடிவு செய்தபின் வரவு. செலவு பற்றி கண்டிப்பாக கணக்கு பைசா சுத்தமாக வைத்திருக்கவேண்டும், பெரும்பாலோர் தவறுவது இதில்தான். //

மிகவும் சரியான பார்வை..

இதை சேமித்திருக்கிறேன் எதிர்காலத்திற்க்கு...

சிறப்பான கட்டுரை அனுபவசாலியிடமிருந்து அனுபவங்களை கேட்டு தெரிந்து தொழில் தொடங்குவதே சாலச்சிறந்தது...

Chitra சொன்னது…

அருமையான பதிவு. பாராட்டுக்கள்!

Philosophy Prabhakaran சொன்னது…

கலக்கல்... இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் செம ஹிட் போல... நானும் என் பங்குக்கு குத்திட்டு போறேன்...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

அடடே ,, நம்பிக்கை ஒளி தெரிகிறதே ?

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

//அதே தொழிலை அவர்களைக் காட்டிலும், வித்தியாசமாகவும், சிறப்பாகவும் உங்களால் செய்யமுடியும் என்று தெரிந்தால் ( நம்பினால் அல்ல) உடனே ஆரம்பியுங்கள்.//

கரெக்ட்.....

//பெரும்பாலோர் தவறுவது இதில்தான்//

ஆம்... நானும் அந்த மாதிரியான நபர்களை பார்த்திருக்கிறேன்...

vimalanperali சொன்னது…

தொழில் ஆலோசனையா சார்,நன்றாக உள்ளது.இந்த உலகமாயம்மாதலில் எதைச் செய்ய?எல்லாமே போட்டிதான்.

a சொன்னது…

தொழில் நுணுக்கங்களை தெளிவாக சொல்லிருக்கீங்க......

PB Raj சொன்னது…

செந்தில்,

எதாவது நல்ல தொழில் வாய்ப்பு இருந்தால் சொல்லும் எத்தனை நாள்தான் தொழிலாளியாக இருபது..


நல்ல பயன் உள்ள செய்தி நன்றி

Unknown சொன்னது…

அருமை