தேவதைகள் வரங்களை மட்டுமே தருபவை
அசுரர்கள் வீரமாய் போரிட்டு இறுதியில் மடிவார்கள்
கடவுள்கள் சரியான செயலுக்கு பரிசும்
தவறுகளுக்கு தண்டனைகளும் தருபவர்கள்
வடையின் மூலம் சொல்லப்படும் நீதிக்காக
காகமும், நரியும்
முயற்சியின் அவசியத்தையும் சொல்வதற்காக
ஆமையும், முயலும்
சாகா வரம் பெற்றன,
ஒரு ஊர்ல
என ஆரம்பித்து தேசங்களை
கடந்து போன சரித்திரங்களும்,
சிங்கமாகவும், புலியாகவும்
யானைகளாகவும்
எம்மை மாற்றி காட்டுக்குள்
நடந்த விலங்குகளின் திருவிழாக்களும்,
இனிக்
காணவே முடியாது
தாத்தாக்களும், பாட்டிகளும்
சின்னத்திரைகளிலும், காப்பகங்களிலும்
சிறைபட்ட நாள்முதலாய்..
50 கருத்துகள்:
அருமை செந்தில் :)
Kavithai vazhkkaiyai pirathi palikkirathu... arumai.
Photo Kalakkal. enga anna edukkireinga... solla mudiyuma?
good One Sir :)
//Photo Kalakkal. enga anna edukkireinga... solla mudiyuma?//
வணக்கம் குமார்.. அந்த போட்டோ பிகாஸா ஆல்பத்துல இருந்து கிடைத்தது..
கவிதை அருமைங்க...!
நமக்கு கிடைத்த பல நல்ல விஷயங்களை முற்றிலும் இழந்து விட்டார்கள் தற்கால குழந்தைகள்....
//இனிக்
காணவே முடியாது
தாத்தாக்களும், பாட்டிகளும்
சின்னத்திரைகளிலும், காப்பகங்களிலும்
சிறைபட்ட நாள்முதலாய்..//
காப்பகம்!எங்கேயிருந்து முளைத்த காளான் இது?
அருமையான கவிதை.,
கதை சொல்ல தாத்தா,
பாட்டிக்கும் நேரம் இல்லை..
அதை கேக்க குழந்தைகளும்
ரெடி இல்லை..
தொலைத்த வரங்கள்:(
இனி காணலாம் தாத்தாக்களையும்,பாட்டிகளையும். தொலைக்காட்சிகளில் கதைபடிப்பதை/.
நல்லா இருக்குங்க.
வலி..........+ ஏக்கம்............ + விரக்தி........... = ?
கவிதை அருமை....
பாட்டிக் கதைககளின் ஊற்றுக்கண்களை ஆண்டனாக்கள் அடைத்துவிட்டது என்று எழுதினான் எங்கள் கவி லட்சுமிகாந்தன்.அதற்குச் சற்றும் குறையாத காரக் கவிதை இது.படங்கள் எங்கிருந்து பிடிக்றீங்க செந்தில்.ரெண்டும் அருமை .வாழ்த்துக்கள்.
//இனிக்
காணவே முடியாது
தாத்தாக்களும், பாட்டிகளும்
சின்னத்திரைகளிலும், காப்பகங்களிலும்
சிறைபட்ட நாள்முதலாய்..//
//பாட்டிக் கதைககளின் ஊற்றுக்கண்களை ஆண்டனாக்கள் அடைத்துவிட்டது //
நல்லா இருக்கு சார்
நா கொஞ்சம் எங்க பாட்டிகிட்ட போயிட்டேன் நினைவுகளில்.........
பலநூறு
கதைச்சொல்லி
கானாகத்தை
காட்டுவாள்
கற்பனையிலே..
நுனியிலேயே
வளர்த்திடுவாள்
நம் சிந்தனையை
சிதைக்காமல் நம்
முதல் ஆசிரியை
அவள்.........
super annaa..
அருமை செந்தில்
கவிதை மனதைத் தொடுகிறது...
தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும் தினம் தினம் சீரியல் கதைகளைப் பேசுவதற்கே நேரம் போதவில்லை. அதைக் குழந்தைகளையும் பார்க்க வைத்துக் கெடுக்காமல் இருந்தால் சரி.
//தாத்தாக்களும், பாட்டிகளும்
சின்னத்திரைகளிலும், காப்பகங்களிலும்
சிறைபட்ட நாள்முதலாய்..//
ஆமாம்..உண்மை... கதை சொன்ன பாட்டிகள் போய் டி.வி யில் கதை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
அருமையாக உள்ளது வரிகள் வாழ்த்துகள் நண்பா
மறுக்க முடியாத உண்மை அண்ணா... !!!
"...தாத்தாக்களும், பாட்டிகளும் சின்னத்திரைகளிலும், காப்பகங்களிலும் சிறைபட்ட நாள்முதலாய்..."
மறந்து போன, கனவில் கலந்த காலங்கள்....
"இனிக்
காணவே முடியாது
தாத்தாக்களும், பாட்டிகளும்
சின்னத்திரைகளிலும், காப்பகங்களிலும்
சிறைபட்ட நாள்முதலாய்"
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
அருமை.
இந்த கவிதைக்கு கருத்து சொல்றதுக்கு கூட எனக்கு தகுதி இருக்கணு தெரியல ஆனாலும் கவிதை அருமை,சூப்பர்,நச்.
செந்தில் சார்! என்ன சொல்றதுன்னு தெரியல.... இனிவரும் தலைமுறைகளுக்கு ராஜகுமாரங்கள், தேவதைகள் ஒன்னும் தெரியாது கூட.... கனக்குது மனசு!!!
அறிவு சார்ந்த விஷயங்களையும் , கவிதை போன்ற எமோஷனல் விஷயங்களியும் ஒன்றாக கையாள்வது கடினம்..
நீங்கள் இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறீர்கள்...
பாராட்ட வேண்டிய விஷயம்...
என்னை பொருத்த வரை, உங்கள் கட்டுரைகளை சற்று அதிகமாக ரசிக்கிறேன்
அருமை மாம்ஸ்!
அட்டகாசம்ணே!
உங்க கவிதைக்கெல்லாம் புகைப்பட தேர்வு அருமை!
கதை சொல்லி என்கிற வார்த்தை இன்னும் சில நாட்களில் தொலைந்து போகுமோ??
எனக்குள்ளும் இந்த ஆதங்கம்.
இன்னுமொன்றும் செந்தில்....நான் பாட்டியானால் எனக்கு எந்தக் கதையும் தெரியாது.என்ன சொல்லிக் கொடுப்பேன் என் பேரப்பிள்ளைகளுக்கு !
ரொம்ப அருமையா இருக்கு அண்ணே!
//வானம்பாடிகள் சொன்னது…
தொலைத்த வரங்கள்:( //
ரிப்பீட்டு!
கவிதையும் அந்த பாட்டியின் கண்களும் 1000 உணர்சிகளை காட்டுகின்றன
உங்கள் கவிதைக்கு நான் போட்ட 50 வது ஒட்டு வாழ்த்துக்கள்
மாறனும் சார்
அருமையான கவிதை..
நல்லா இருக்கு
பாட்டிகளும் தாத்தாக்களும் முதியோர் இல்லத்தில்
குழந்தைகள் பிளே ஸ்கூலில்
nice krp san
வாய்ப்பே இல்லை அண்ணா ., சத்தியமா கலக்கல் ..
அதே மாதிரி இந்த டிவில வர்ற கதைகளால அவ்ளோ சந்தோசத்தை சத்தியமா கொடுக்க முடியாது ..!!
அருமையான கவிதை..
எவ்வளவு சொல்கிறது இந்த கவிதை.குழந்தைகள் கதைகளை இழந்ததை மட்டுமல்ல, பெரியவர்கள் இழந்த பாசத்தையும் சேர்த்து தான் சொல்கிறது.
அருமையான கவிதை.
அருமை செந்தில்..
உண்மைதானுங்க..குழந்தையின் அழுகை
நிறுத்த சின்னத் திரையல்ல காட்டுகிறார எங்க வீட்டு பாட்டி.
//இனிக்
காணவே முடியாது
தாத்தாக்களும், பாட்டிகளும்
சின்னத்திரைகளிலும், காப்பகங்களிலும்
சிறைபட்ட நாள்முதலாய்..///
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்
அருமை அண்ணா
நிஜம்..
வலி....
உறுத்தல்...
சூழ்நிலை....
காலம்........
காலவெள்ளம்! காட்டுவெள்ளம்.
அது அடித்து செல்கிறது சுவடொன்றும் விட்டு செல்லாமல்..
மாற்றத்தின் சீற்றத்திற்கு முன் நாம் என்ன வெறும் தூசிகள் தானே...
மடிந்தவைகளை புதைத்துவிடுவோம்...
கருத்துரையிடுக