புனிதர்களின் விளக்கங்கள்
தீர்க்கமானவை
பழய மொந்தையில் புதிய கள்,
தலையாட்டு,
பின் பற்று,
பற்றுகள் இருந்தால் எழுதிவை .
அயோத்தியின் தீ
சீதையை சலவை செய்து
ராமனை அழுக்காக்கியது.
கறைபட்ட கணவனால் கைவிட்ட
காரிகை
ஒற்றைத் துணியுடன்,
இழுத்து வாவென்றவன்
கொடையாளி..
பதி, வதியின் காதல் கொன்ற
மதி கெட்ட மன்னன்
காணாமல் போனான்
கம்பனும்..
மெரினா சுடுமணலில்
குடையின் கீழ்
காதல் பார்த்தால்
மிரட்டிவை காவலா என்றான்
இந்நாள் மன்னன் ..
அடங்காவிட்டால்
அமாவாசை, பவுர்ணமி
அலையும் மனதின் கூச்சல்
பைத்தியம் என்று பெயரிடு
விவாகரத்து சுலபமே..
மார்க்கம் சொன்ன
மார்க்கம்
கணவனின் மனைவிமார்கள்
முக்காடுகள் சுமந்தவாறே..
பாதிரிமார்கள் புனிதர்கள்,
இன்னொரு மீட்பன் வருவான்
கன்னியாஸ்த்ரீகளின் கருப்பையில்
பிறப்பெடுக்க..
ஆதி சிவன் பாதி தந்தான்,
பெண்மை தாய்மை
கொண்டாடி கொன்று போடு...
23 கருத்துகள்:
பாராட்ட வார்த்தைகள் இல்லை
அண்ணே !
vazhakkam pola present sir
//ஆதி சிவன் பாதி தந்தான்,பெண்மை தாய்மைகொண்டாடி கொன்று போடு..//
சூப்பர்.
//அடங்காவிட்டால்
அமாவாசை, பவுர்ணமி
அலையும் மனதின் கூச்சல்
பைத்தியம் என்று பெயரிடு
விவாகரத்து சுலபமே..//
இந்த கவிதையை மீண்டும் பதிவு இடத்திற்கு நன்றி
செந்தில்.:)
அருமை வாழ்த்துகள்
//அயோத்தியின் தீ
சீதையை சலவை செய்து
ராமனை அழுக்காக்கியது.//
அருமை அருமை...
வரிகள் ஒவ்வொன்றும் நச்
குழந்தையின் படம் கலக்கல்...
//அடங்காவிட்டால்
அமாவாசை, பவுர்ணமி
அலையும் மனதின் கூச்சல்
பைத்தியம் என்று பெயரிடு
விவாகரத்து சுலபமே..//
உயிர் தொடும் உண்மை வரிகள்....
அருமை...
நல்லாருக்கு செந்தில்...........
செந்தில்...எந்த விஷயத்தையும் முரண்பட்டே பார்க்கிறீர்கள்.சரியாகத்தான் இருக்கிறது !
எப்படிச் சொல்வது எல்லா வரிகளும் அருமை அண்ணா.
செந்தில்!படித்து விட்டு சிலையாய் சமைந்து விட்டேன். அந்த பாரதி கிழவன் தன் ரௌத்திரக் கனலின் ஒரு கங்கு உன்னிடத்தில் கனன்று கொண்டிருக்குதடா என் தம்பி! உச்சிமுகர்ந்து வாழ்த்து சொல்ல துடிக்குது நெஞ்சம்.
//அயோத்தியின் தீ
சீதையை சலவை செய்து
ராமனை அழுக்காக்கியது.//
இப்படி ரொம்ப இடத்தில்
தீப்பிடிக்கிறது. இதில் கொஞ்சம்
அனல் கூடுதலா அடிக்கிறது.
ரொம்ப அனல் கவிதையில்!
//மெரினா சுடுமணலில்
குடையின் கீழ்
காதல் பார்த்தால்
மிரட்டிவை காவலா என்றான்
இந்நாள் மன்னன் ..//
நெசமாவா?
என்று படித்தாலும் காரம் குறையாமல் இருக்கும் கவிதை! பேஷ்!
//ஆதி சிவன் பாதி தந்தான்,
பெண்மை தாய்மை
கொண்டாடி கொன்று போடு...//
:))
அருமையான வரிகள் அண்ணா.
நல்லாயிருக்கு.
//ஆதி சிவன் பாதி தந்தான்,
பெண்மை தாய்மை
கொண்டாடி கொன்று போடு.//
கலக்கல் அண்ணா ..!!
கருத்துரையிடுக