22 நவ., 2010

மேய்ப்பனைத் தேடும் மந்தைகள்...


ஆனைமுகனுக்கு அருகம்புல், தோப்புக்கரணம் 
அளவாய்ப் பிடித்த கொழுக்கட்டை
ஆண்டி முருகனுக்கு பஞ்சாமிர்தக்காவடி 

அம்மனுக்கு கூழும், வேப்பிலையும்
திருப்பதிக்குப் போனா மொட்டை காணிக்கை
குலசாமிக்கு கவிச்சி மணக்க கெடாவெட்டு, சாராயமும்

முப்பெரும் கடவுளுக்கு சமஸ்கிருதம் தாய்மொழியாம்
சில்லறைகள் தீர்மானிக்கும்
சிதறும் மந்திரங்களை..


அல்லாவுக்கு ஜும்மா கட்டாயம் 
ஏசுவுக்கு ஞாயிறு பிரார்த்தனை,

அப்புறம்
வசதிக்கு தக்க விரதமோ,நேர்த்திக்கடனோ 
இல்லாவிட்டாலும் இருக்கின்றன
வழிநெடுக மரங்கள் 
மஞ்சள் குளித்தபடி...
எப்போதும் மிச்சமிருக்கும்
ஏதேனும் ஒரு வேண்டுதலும்
ஏதேனும் ஒரு காணிக்கையும்
எந்தக்கடவுளும் கொடுத்ததே இல்லை
எதையும் இன்றுவரைக்கும் ..
ஆனாலும் சொல்கிறோம்
"எல்லாம் அவங் கொடுக்குறது!"

அதன்பிறகும்
ஆனந்தாக்களின் கைகளும்
கால்களும் நீளும்
சாம்பல் பூசிவிடவும்
பாதம் கழுவப்படவும்...
"சிவாய நம!"



பெறும் 
(ஆ)சாமிகள்
தருவதில்லை எப்போதும்...

நம்பிடவும்
தாள்பணியவும்
மந்தைகள் எப்போதும்
மேய்ப்பனைத் தேடி....

33 கருத்துகள்:

அன்பரசன் சொன்னது…

படம் உங்கள மாதிரி போட சான்ஸே இல்லங்க.
கவிதை அருமை.

Unknown சொன்னது…

முதல் பின்னூட்டத்தை நான் வழிமொழிகிறேன்.

VELU.G சொன்னது…

//நம்பிடவும்
தாள்பணியவும்
மந்தைகள் எப்போதும்
மேய்ப்பனைத் தேடி....
//

உண்மைதான் நண்பரே

இயலாமயை பயத்தை தணிக்க ஒரு மேய்ப்பனைத் தேடிக்கொண்டுதானிருக்கின்றனர்

மாணவன் சொன்னது…

//எப்போதும் மிச்சமிருக்கும்
ஏதேனும் ஒரு வேண்டுதலும்
ஏதேனும் ஒரு காணிக்கையும்
எந்தக்கடவுளும் கொடுத்ததே இல்லை
எதையும் இன்றுவரைக்கும் ..
ஆனாலும் சொல்கிறோம்
"எல்லாம் அவங் கொடுக்குறது!"//

அருமை அண்ணே,வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்கத்தூண்டுகின்றன...

கவிதைகளுக்கேற்ப படங்களின் தேர்வும் அற்புதம்...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//படம் உங்கள மாதிரி போட சான்ஸே இல்லங்க.
கவிதை அருமை.//

Repeat

காமராஜ் சொன்னது…

//
எந்தக்கடவுளும் கொடுத்ததே இல்லை
எதையும் இன்றுவரைக்கும் ..
ஆனாலும் சொல்கிறோம்
"எல்லாம் அவங் கொடுக்குறது!"//

நச்.செந்தில்

vasu balaji சொன்னது…

அந்தக் கண்ணில் தெரியும் பீதி கவிதைக்கு மகுடம். :)

அம்பிகா சொன்னது…

கவிதை அருமை.
படம் அதைவிடவும்...

test சொன்னது…

//நம்பிடவும்
தாள்பணியவும்
மந்தைகள் எப்போதும்
மேய்ப்பனைத் தேடி....//
Super!! :)

ஹரிஸ் Harish சொன்னது…

வழக்கம்போல் அருமை..

ஹேமா சொன்னது…

செந்தில்...அப்பிடிப்போடுங்க.சாமி சரியாயிருந்தா ஏன் அந்தக் கண்ணில இவ்ளோ பயம் !

மோகன்ஜி சொன்னது…

//சில்லறைகள் தீர்மானிக்கும்
சிதறும் மந்திரங்களை..// நல்ல கருத்து.
அழகான படம்

Philosophy Prabhakaran சொன்னது…

கலக்கீட்டிங்க சார்...

PB Raj சொன்னது…

சில்லறைகள் தீர்மானிக்கும்
சிதறும் மந்திரங்களை..


கலக்குங்க.....

பெயரில்லா சொன்னது…

அண்ணே செம சூப்பர்..
ஆனந்தாக்கள் தேடி ஓடும் கூட்டத்துக்கு சவுக்கடி

Unknown சொன்னது…

அருமையான பதிவு மற்றும் படம்.

நன்றி

சௌந்தர் சொன்னது…

வழிநெடுக மரங்கள்
மஞ்சள் குளித்தபடி...
எப்போதும் மிச்சமிருக்கும்////

இருங்க எங்க வீட்டில் ஒரு மரம் இருக்கு அதுக்கு நான் மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு வரேன்

கவி அழகன் சொன்னது…

சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்
உங்களுக்குவாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////எப்போதும் மிச்சமிருக்கும்
ஏதேனும் ஒரு வேண்டுதலும்
ஏதேனும் ஒரு காணிக்கையும்
எந்தக்கடவுளும் கொடுத்ததே இல்லை
எதையும் இன்றுவரைக்கும் ..
ஆனாலும் சொல்கிறோம்
"எல்லாம் அவங் கொடுக்குறது!"////

அல்டிமேட் தல.....!

சசிகுமார் சொன்னது…

அவ்ளோ கிட்ட போயி படம் எடுத்து இருக்கீங்களே உங்கள சாமி கண்ணா குத்தலையா

'பரிவை' சே.குமார் சொன்னது…

//சில்லறைகள் தீர்மானிக்கும்
சிதறும் மந்திரங்களை..//

ரசித்தேன்... கவிதை அருமை.
படம் எங்கேயிருந்து அண்ணா கிடைக்குது... அந்த ரகசியத்தை சொல்லுங்க.

அன்புடன் நான் சொன்னது…

பொய்யேதும் இல்லாதா சவுக்கடியான கவிதைங்க....பாராட்டுக்கள் (எழுதி ஒட்ட வகை குறைந்த.... வாடகை கணினி... எனவே சுருக்கமாக)

Unknown சொன்னது…

உங்களுக்கு பிடித்திருக்கிறதோ, இல்லையோ
மனிதனுக்கு இறைவன் என்ற ஒன்று இன்றைய
தேவை. அந்த ஒன்று எது என்பதில் இங்கே பிரச்சனை இருக்கிறது.

இறைவன் என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அதில் மூட நம்பிக்கைகள் நுழைந்தது துரதிஷ்டமே..

இந்த கவிதை சாடுவது மூட நம்பிக்கைகளை மட்டுமே என நம்புகிறோம்.

நம்பிக்கைகளை என்றால் வருத்தமே...


தேவைப்படும் இறைவனின் பெயரால் ஆசாமிகள்
நிகழ்த்தும் கூத்துக்கள், நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்.

இறைவன் என்பது நீண்ட பயணத்தின் உளவியல் இளைப்பறுதல் மட்டுமே.

யார் கண்டது திரு.செந்தில் அவர்களுக்கும் கூட ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு , அந்த இளைப்பறுதல் தேவைப்படலாம்...

ராஜ நடராஜன் சொன்னது…

யாராவது பாட்டுக்கு மெட்டுப்போட்டா நல்லாயிருக்கும்.(ஆகா!இந்த சமய்த்தில் நினைவுக்கு வருவது பதிவுலகில் அனைத்து திறமைகளும் வெளிப்படுகின்றன.ஆனால் ஒரு இசையமைப்பாளரைக்கூட காணோமே?)
---------------------------
பெறும்
(ஆ)சாமிகள்
தருவதில்லை எப்போதும்...

நான் இதுக்கு மட்டும் (ஆ)மா சாமி(ராசா) போட்டுக்கிறேன்.

க ரா சொன்னது…

அண்ணே .. என்னனு சொல்ல..

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

சில்லறைகள் தீர்மானிக்கும் சிதறும் மந்திரங்களை . நெத்தியடி வரிகள்
தௌசண்ட்ஸ் பெரியார்ஸ் வந்தாலும் நம்மள திருத்த முடியவே முடியாது .
http:www.grajmohan.blogspot.com

Chitra சொன்னது…

புகைப்படங்களை நீங்களே எடுக்கிறீர்களா? தத்ரூபமாக இருக்கிறதே.

வெங்கட் சொன்னது…

கவிதை அருமை..,
அந்த படம் Excellent..!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமையான பதிவு

ஜெயந்தி சொன்னது…

அருமையான கவிதை.

vinthaimanithan சொன்னது…

//இறைவன் என்பது நீண்ட பயணத்தின் உளவியல் இளைப்பறுதல் மட்டுமே.
//

இதைதான் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் மிகத் தெளிவாக..
"மதம் என்பது மக்களுக்கு அபின் போன்றது!" என்று! மதமும் இறைவனும் துயரப்படும் மக்களுக்கு ஒரு கற்பனையான சுவர்க்கத்தைக் காட்டி ஆற்றுப்படுத்தவே! இவற்றை உதறி இம்மண்ணில் சொர்க்கத்தைப் படைக்க முயலலாமே!

Muruganandan M.K. சொன்னது…

"..நம்பிடவும்
தாள்பணியவும்
மந்தைகள் எப்போதும்..." இருப்பதால் கடவுளருக்கும், அவர்தம் ஏவலர்கள் காட்டில் எப்பொழுதே மழைதான்.
நல்ல பதிவு

http://rkguru.blogspot.com/ சொன்னது…

பக்தி கொடுமை என்றுதான் தீருமோ