28 ஜன., 2011

நகரத்து மிருகம்...

அய்யனார் கோயில் ஆலமரத்து ஊஞ்சல்
அன்றாடம் முங்கு நீச்சலுக்கு
ஆறுமுகக்கோனார் கம்மா
இச்சிலிபிச்சிலி ஒளிஞ்சு வெளையாட்டு
கெராமத்துப்பெரிசுகளின்
தீராப்பெருங்கதைகள்
அங்காளி பங்காளி அரும பெரும
மாமன் மச்சான் குடும்பப்பெரும
தாவணி மறைக்கும் தாமரைமொட்டுங்க
திருவிழாக்கடையின் கலர் சர்பத்து
திருட்டுக்கள்ளு தெவிட்டா சாராயம்
இன்னும் இனிக்குது
எம்புட்டோ நெனப்புங்க

ஆனாலும் கிராமத்தில
அரைநாளுக்கு மேல
இருப்புக் கொள்ளாது வெளிக்கிளம்பும்
மனசுக்குள் முயங்கும் நகரத்து
மிருகம்..


25 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

மண்ணின் மணம் கமழும் கவிதை!..

சக்தி கல்வி மையம் சொன்னது…

கலக்கல் தல....நம்ம பக்கம் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு ...??

சக்தி கல்வி மையம் சொன்னது…

நருக்குனு 2 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

Unknown சொன்னது…

கிராமத்து மிருகம் என்பதில் யாரெல்லாம் சேர்த்தியோ? You too...

Jana சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் வரும் நேரம் மண்மணக்குது!!
இறுதிவரிகள்..மனிதத்தை தெரிந்துகொண்டே தொலைத்துவிட்டு மிருகத்திடம் மிதிபடும் அபிலாசைகளின் வெளிப்பாடு.

Unknown சொன்னது…

பணத்தின் பின்னோடும் வாழ்க்கையில், ஒவ்வொரு மணித்துளியும் டாலர் மதிப்பாக மாற்றப்பட்டு விற்க்கப்பட்டுக் கொண்டிருக்கையில், கிராமத்து வாழ்க்கை என்பது இழந்துவிட்ட சொர்க்கம் என்பது "நரக"மனிதனுக்கு "நாற்பதுகளில்" மட்டுமே தெரியவரும்..

Unknown சொன்னது…

//கெராமத்துப்பெரிசுகளின்
தீராப்பெருங்கதைகள்
அங்காளி பங்காளி அரும பெரும
மாமன் மச்சான் குடும்பப்பெரும//

நீளநீள பேச்சுக்கள்... திண்ணைப்பேச்சுக்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஆனாலும் கிராமத்தில
அரைநாளுக்கு மேல
இருப்புக் கொள்ளாது வெளிக்கிளம்பும்
மனசுக்குள் முயங்கும் நகரத்து
மிருகம்//

வலி......................
அருமையா இருக்கு..

மாணவன் சொன்னது…

கிராமத்து நிகழ்வுகளை அப்படியே வரிகளில் பதிவு செஞ்சீருக்கீங்க அருமை அண்ணே,

வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....

VELU.G சொன்னது…

நகரத்து மிருகம் இழுக்கத்தான் செய்யுது இருந்தாலும் கொஞ்சம் கிராமத்து பந்தமும் இருக்கத்தான் செய்யுது

நல்லாயிருக்குங்க கவிதை

raja சொன்னது…

நகரத்து மிருகம் தலைப்பே ஆழமாக இருக்கிறது.. உங்களது சிந்தனை தளத்தில் குறிப்பிடும்படியான நகர்வு இந்த கவிதை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ஆனாலும் கிராமத்தில
அரைநாளுக்கு மேல
இருப்புக் கொள்ளாது வெளிக்கிளம்பும்
மனசுக்குள் முயங்கும் நகரத்து
மிருகம்..


இது நூத்துக்கு நூறு உண்மை! என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்! நாம் என்னதான் கிராமங்களைப் பற்றி உயர்வாக எழுதினாலும் பேசினாலும், நம்மால் ஒரு நாள் கூட கிராமத்தில் தங்க முடியுமா? அருமையான கவிதை!

சத்ரியன் சொன்னது…

//மனசுக்குள் முயங்கும் நகரத்து
மிருகம்..//

செந்தில்,

எவ்வளவுதான் “சொர்க்கத்தை” எண்ணி ஏங்கினாலும் “ நரகத்தில்” தானே வாழ்வைக் கழிக்க வேண்டியிருக்கிறது...?

க ரா சொன்னது…

அற்புதம்..

PB Raj சொன்னது…

உண்மை செந்தில்,

உங்கள் விஜய் டிவி பேச்சு அருமை,,ஆனால் நிறைய கருத்துகள் ஒளிபரப்ப வில்லை..

பெயரில்லா சொன்னது…

சொர்க்கமே என்றாலும் நம்மூரை போலாகுமா

Bibiliobibuli சொன்னது…

கவிதை என்று பார்த்தால் நல்லாருக்கு. கிராமத்தில் மனிதனாய் இருந்துவிட்டு நகரத்தில் இயந்திரவாழ்க்கை வாழ்வது.

எது ஒன்றுக்கு நாம் நம் விருப்பத்தையும் மீறி பழக்கப்படுத்தப்படுகிறோமோ அதுக்கு நாம் முடிவில் நம்மையும் அறியாமல் பழகிப்போகிறோம் (conditioned).

Unknown சொன்னது…

அருமை

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நல்லா இருக்குங்க்கோ

செந்திலின் பாதை சொன்னது…

இருப்புக் கொள்ளாது

Chitra சொன்னது…

அந்த படத்தையே ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன். அருமை....

பெயரில்லா சொன்னது…

>>> CLASSIC.

Yaathoramani.blogspot.com சொன்னது…

நல்ல படைப்பு சொற்களை பயன்படுத்தியுள்ள விதம்
சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள்

சசிகுமார் சொன்னது…

வர விருப்பம் இல்லாவிட்டாலும் பொழப்ப பார்க்க வந்தாக வேண்டியுள்ளதே செந்தில் சார்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

மிக அருமையாய் எதார்த்தத்தைப் பதிவு செய்திருகீர்கள்