4 அக்., 2011

காக்கைகள்...

நான்
மரங்கள் நிறைந்த
ஒரு கிராமத்து வீட்டில்
வாழ்ந்திருந்தேன்
அணில்களோடு
சிறு பறவைகள்
அதிகமாய் காகங்கள்
அப்புறம் வீட்டு விலங்குகள் 

என
காடு பற்றிய புரிதல் இல்லாமலேயே
காட்டுவாழ்வின் சில பக்கங்களை
வாசிக்க முடிந்தது..

பின்

பிழைப்புக்காக 

நாடி வாழ்ந்த
நகரத்தில்
மரங்கள்
மிக சொற்பமாகவே இருந்தன
அவைகளில்
அணில்களே இல்லை
ஆனால் 

காகங்கள் மிகுதியாக இருந்தன
அவை 

வாழ்தலின் மிச்சமாகவும்
நான்
வாழ்தலின் உச்சமாகவும்
இந்த நகரத்தை
பங்கு போட்டுகொண்டோம்,
சக மனிதர்களிடம்
அல்லது
மனிதர்களால்
காட்டு வாழ்க்கையின்
எதிர்மறையான பக்கங்களை
வாசிக்க முடிந்தது..

நேற்று

ஒரு காட்டுக்குப்போனேன்
வழிதவறிய
என் பயனத்தில்
வழியெங்கும் காடுகள்
மரங்கள் நிறைந்த
மனிதர்கள் இல்லாத காடுகள்
அங்கு நான் விலங்குகள் எதையும்
பார்க்கவில்லை
அணில்களையும் பார்க்கவில்லை
பெயர் தெரியாத பறவைகளொடு
அதிகமாய் காகங்களையும்
பார்த்தேன்
வழிதவறிய பதட்டத்தில்
காட்டின் நிஜமான பக்கங்களை
வாசிக்கத் தவறினேன்..

வழி கண்டுபிடித்து

வீடு வந்து சேர்ந்த
உறக்கம் தொலைத்த
இரவில்
மனசெல்லாம் காடுகள்
விலங்குகள் இல்லா
காடுகள்,
காடென்றால்
விலங்குகள் இருக்குமே
என நான்
யோசிக்கத் துவங்கியபோது
கனவைக்கலைத்து
ஒரு
நகரத்தின் நாளினை
துவக்கிவைத்ததன
பால்கனியில் வந்தமர்ந்த
காக்கைகள்..

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

நண்பா அருமை...அருமை

SURYAJEEVA சொன்னது…

correct...

பெயரில்லா சொன்னது…

பல கனவுகள் கலையும் இந்த காக்கைகளாலே...அவை நிஜமாக மணியடித்து எழுப்புகின்றனவோ...

சீனுவாசன்.கு சொன்னது…

அட!நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
நல்லா பழகுவோம்!

vasan சொன்னது…

நீங்க‌ள் எந்த‌ காக்கையைச் சொல்கிறீர்க‌ள்?