7 ஜூலை, 2010

இப்படியும் ஒரு ரசனையா..? 18+

பொதுவாக டாட்டூ வரைந்து கொள்பவர்களை பார்த்து இருப்போம்.. உடல் முழுதும் வரைந்து கொண்டவர்களும் உண்டு.. இந்த படங்களில் உள்ள பெண் டாட்டூ வரைந்து கொள்வதை பாருங்கள்.. எனக்கு இது ஒரு பைத்தியக்காரத்தனமாய் தோன்றியது.. உங்களுக்கு..?


                          படங்கள் உதவி : சண்முகம் கணேசன், சிங்கப்பூர் 

41 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாக்கவே பயமாவும் அருவருப்பாவும் இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எனக்கும் உங்களை மாதிரி பைத்தியக்காரத்தனமாய் தோன்றியது. (உங்களை மாதிரி, பைத்தியக்காரத்தனமாய் பிரித்து படிக்கவும். சேர்த்து படித்தால் நான் பொறுப்பல்ல)

க ரா சொன்னது…

ரொம்ப கேவலமா இருக்கு.

சசிகுமார் சொன்னது…

இது தான் சொந்த செலவில் சூனியம் வசிக்கிறதோ, நல்லா வச்சிக்கிராங்கையா

ஹேமா சொன்னது…

இப்பிடி நிறையப் பைத்தியங்கள் கோடை காலத்தில்
இங்கு நிறையவே உலவும் !

தனி காட்டு ராஜா சொன்னது…

இப்படியும் ஒரு ரசனை !!

ஷர்புதீன் சொன்னது…

டிஸ்கவரி சானலில் காட்டினார்கள் ., ஆதிவாசிகள் இதை போன்று ஒன்றை சடங்காக செய்துகொள்கிறார்கள்,

dheva சொன்னது…

நாகரீமாம் செந்தில்.....! நமக்கு ரொம்பவே கடுப்பா இருக்குல்ல பாக்குறதுக்கு.... எப்படித்தான் செஞ்சுக்குதுங்களோ...? அதுக்கு ஒரு நியாயம் சொன்னாலும் சொல்லுவாக....!

தமிழ் உதயம் சொன்னது…

நாகரீகம் என்கிற பெயரில் சில அருவருக்கத்தக்க செயல்கள். என்ன செய்வது.

ஜோதிஜி சொன்னது…

ஏன் செந்தில் இவங்களை வரப்பட்டிக்காட்டுக்குள்ளே பத்து நாளைக்கு திரிய விட்டா எப்படியிருக்கும்?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

பைத்தியக்காரத்தந்தான்...

நாடோடி சொன்னது…

ரெம்ப‌ ம‌ட்ட‌மான‌ ர‌ச‌னை..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

பார்க்கவே அருவெறுப்பா இருக்குங்க..
சுத்த பைத்தியக்காரத்தனமே தான்...

கமலேஷ் சொன்னது…

பார்க்கவே கொடுமையா இருக்கு...

Admin சொன்னது…

சிரிப்புத்தான் வருகிறது இந்த பைத்தியங்களை பார்க்கும்போது :)

Unknown சொன்னது…

என்ன கொடுமை சார் இது... சீ

சஞ்சயன் சொன்னது…

அவரின் உடல் அது பற்றிய பிரக்ஞ்ஞை அவருக்கு இருக்க வேண்டும். சில வேளை அது சற்றே அதிகமாய் இருந்திருக்குமோ? எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவரின் ரசனையை குறை சொல்லலாமா? தனிமனித சுததந்திரத்தை தடைபோட நாம் யார்?

இப்படியெல்லாம் கேட்கிறது என் மனது... நீங்க கோவிக்கப்படாது.. என்ன?

Unknown சொன்னது…

நண்பர் விசரனுக்கு, இதில் கோவிக்க என்ன இருக்கு.. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்..

ஆனாலும் இந்த முட்டாள்தனத்தை சகித்து கொள்ள முடியாதது என்பதே எங்கள் கருத்து.. தன் உடலை அழகாக்கி காட்ட இம்மாதிரி செய்துகொள்வது கொடிய நோய்களை வரவேற்கும் செயல்..

மாறுபட்ட பார்வைகொண்ட கருத்து உங்களுடையது.. மகிழ்ச்சி..

Santhini சொன்னது…

பக்தி என்ற பெயரில் நம் ஊரில் நாக்கை குத்தி, வேல் சொருகி, முருகா என்று கண் சொருகி .....
என் தாத்தா பாட்டிகளில் உடலில் பாதி அளவுக்கேனும் மிக ஒழுங்குடனும், நேர்த்தியுடனும் வரையப்பட்ட பச்சை கோலங்கள் இருக்கும். அந்த காலத்து பாட்டிகளின் காதுகளில் ஆறேழு ஓட்டைகளுடன் விதம் விதமாய் காதணிகள் அல்லது மாபெரும் ஓட்டை கண்டிப்பாய் உண்டு.
உடல் மேல் வரையப்படும் ஓவியம் என்பது முற்றும் புதிதான நாகரீகம் இல்லை.
எல்லா காலத்திலும் சுழன்று வரும் கலையின் ஒரு வடிவமே உடல் ஓவியங்கள்.
ரத்தத்தையும், அதில் உரித்து எடுக்கப்பட்ட தோலையும் பார்த்தவுடனே ஏன் அருவெறுப்பு உணர்வு உண்டாகிறது?
ரத்தமும், சதையும், தோலும் கலந்து விளையாடும் ஒரு இதய அறுவை சிகிச்சை பற்றிய படம் இதே போன்ற அருவெறுப்பை உருவாக்குமா?
ஒவ்வொரு மனித மனதுக்கும் அதற்கே உரிய வகையில் ஏதேனும் கலை குறித்த வெளிப்பாடு உண்டாகும்.
அதை மதிக்கவும், ஆராதிக்கவும் முடியாத மனங்களில் சகிப்புத்தன்மையும் இல்லாமலாகி வெறுப்பின் துளி தன் விஷத்தை தடவிக் செல்கிறது.
மனிதனின் மனம், அவன் வரலாறு அறியுங்கள். ரசிக்கவும் முடியும் மனிதனை அவனின் எல்லா கூறுகளோடும்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பாக்கவே அருவருப்பா இருக்கு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

பார்க்கவே கொடுமையா இருக்கு..!

jothi சொன்னது…

அருவருப்பாக இருக்கு......!!

சௌந்தர் சொன்னது…

இது எல்லாம் ஓரு வேலை என்று செய்து கொண்டு இருக்கிறார்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இதுல என்ன 18+ மட்டும் ?..

எல்லா பயபுள்ளையும் தெரிஞ்சுக்கட்டுமே பாஸ்...

IKrishs சொன்னது…

Senthil..Label lla yethavadhu yecharikkai koduthu rukkalaam... Adhukkaagave
-ve pottuten..
Thappa yeduthu kaatheenga..

Karthick Chidambaram சொன்னது…

எனக்கு இந்த பெண்களின் செய்கையில் உடன்பாடு இல்லை.

ஜில்தண்ணி சொன்னது…

அடக் கொடுமையே இப்டி எல்லாமா ஒட்டுவாங்க

காஞ்சி முரளி சொன்னது…

அடங்... கொக்கமக்கா...!
இதெல்லாம் ஊர்லே நடமாடிட்டிருக்கு பாரு...!
இத சிலபேர் ஆதரித்து கருத்துக்கள் போட்டாங்கப் பாரு....!
அவகளச் சொல்லணும்...

எது தனிமனித சுதந்திரம்...!
இப்படி சொல்லி... சொல்லியே... இந்த உலகத்த கெடுத்துடான்கப்பா...!

வால்பையன் சொன்னது…

//மனிதனின் மனம், அவன் வரலாறு அறியுங்கள். ரசிக்கவும் முடியும் மனிதனை அவனின் எல்லா கூறுகளோடும்.//

அவரது உடலை காயபடுத்தி அவரளவில் அழகு படுத்தி கொள்கிறார் என்பது அவரது தனிபட்ட விசயம் தான், அதே நேரம் தனிபட்ட விசயம் என்பதற்காக அரசு தற்கொலையை ஆதரிக்கவில்லையே!

செயல் அறிந்து செய்கிறார் என்பதற்காக தான் இம்மாதிரி சில விசயங்கள் அனுமதிக்கப்படுகின்றன! ஆனால் மரபுரீதியாக என்றும், இது எங்கள் கலாச்சாரம் என்றும் செய்யும் மூடநம்பிக்கைகள் ஏற்று கொள்ளக்கூடியவையா!?

ஜெயந்தி சொன்னது…

நல்லா தின்னுபுட்டு என்ன செய்றதுன்னு தெரியாம திரியுங்க போல.

Santhini சொன்னது…

///செயல் அறிந்து செய்கிறார் என்பதற்காக தான் இம்மாதிரி சில விசயங்கள் அனுமதிக்கப்படுகின்றன! ஆனால் மரபுரீதியாக என்றும், இது எங்கள் கலாச்சாரம் என்றும் செய்யும் மூடநம்பிக்கைகள் ஏற்று கொள்ளக்கூடியவையா!?///

கலை என்று நம்பப்படும் ஒரு விஷயத்திற்கு ஏன் மூட நம்பிக்கை எனும் சாயம் பூச வேண்டும்?
இன்னும்கூட வலித்தாலும் காது குத்திக்கொள்கிறோம். கனமாய் இருந்தாலும் ஆபரணங்கள். சுட்டெரிக்கும் வெயிலிலும் காஞ்சி பட்டு. காதில் தொங்கி ஆடுகிற லோலாக்கை நீங்கள் ரசிப்பதில்லையா? காது குத்தும்போது வரும் ரத்தத்தை போட்டோ எடுத்து போட்டால், இதுவா ரசனை என்று அபிப்ராயம் சொல்வோமா? அல்லது மூடநம்பிக்கை என்று ஒதுக்கி வைத்துவிட்டு போவோமா?
நமக்கு ஒரு நீதி மற்றவர்க்கு ஒரு நீதியா? ஒரு துளி ரத்தம் என்றால் பரவாயில்லை....நிறைய ரத்தம் என்றால் மூடத்தனமா??
நாள் கணக்கில், மாதக்கணக்கில் கஷ்டப்பட்டு (ஓவியம் , சிலை ) தனக்கு ஒரு அடையாளம் தேவை என்பதை ஒவ்வொரு மனித மனமும் விரும்புகிறது. ஏதேனும் ஒரு வகையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. அதன் வெளிப்பாடுகளே வெவ்வேறு விதமான கலை வடிவங்கள். சிலர் வியர்வை சிந்துகிறார்கள், மற்றும் சிலர் ரத்தம் சிந்துகிறார்கள்.
இது ஏன் அருவெறுப்பு தருகிறது? இது ஏன் மூட நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது??

ஜெய்லானி சொன்னது…

@@@ஜெயந்தி--//நல்லா தின்னுபுட்டு என்ன செய்றதுன்னு தெரியாம திரியுங்க போல.//

ரிப்பீட்ட்ட்ட்ட்

வால்பையன் சொன்னது…

//சிலர் வியர்வை சிந்துகிறார்கள், மற்றும் சிலர் ரத்தம் சிந்துகிறார்கள்.
இது ஏன் அருவெறுப்பு தருகிறது? இது ஏன் மூட நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது?? //

அவர்கள் விருப்பபட்டு செய்வதை ஒன்றும் சொல்வதற்கில்லை! நான் கேட்க நினைத்தது தீ மிதிப்பது போன்ற மூடநம்பிக்கைகளை!

அன்பரசன் சொன்னது…

பாக்கவே அருவருப்பா இருக்குங்க

ரமேஷ் வீரா சொன்னது…

என்ன செய்வது அண்ணா , மனம் என்பது ஒரு குரங்குதானே! . ஒரு சில வேளைகளில் இப்படியும் மனம் விரும்பும் போல ....................

பெயரில்லா சொன்னது…

இதில் என்ன சந்தேகம்.இது சுத்த பைத்தியகாரதனம் தான்

மதிபாலா சொன்னது…

அவுங்களுக்குப் புடிக்குது செஞ்சுக்கறாங்க...

நாக்குலயும் , காதுலயும் அலகு குத்திக்கிறோம்னு ஓட்டை போடுற நாட்டுலேர்ந்துட்டு நமக்கு இதையெல்லாம் பேசத் தகுதி இருக்கான்னு பாத்துக்கணும்கறேன்..

பச்சை குத்துறது நம்மூருக்கு அப்பாற்ப்பட்ட விடயம் இல்லியே...நம்ம தாத்தா பாட்டி எல்லாம் கையேகமா குத்திகிட்டுதானே இருந்தாங்கன்றேன். மற்றபடி ஹெல்த் ரிலேட்டட் ப்ராப்ளMஸ் பத்தி தெரிஞ்சவங்க சொன்னா தேவலை....

நன்றி..

து. பவனேஸ்வரி சொன்னது…

இதில் அருவருக்கத்தக்க விடயம் என்ன இருக்கிறது? இரசனை, கலை, ஆத்ம திருப்தி ஆகியவற்றைக் கொண்டு இப்பெண்ணின் செய்கையை நோக்கினால் நலம் என்று தோன்றுகிறது. அவரது செய்கையை ‘பைத்திரக்காரத்தனம்’ என்றோ ‘அருவருக்கத்தக்கது’ என்றோ சிறுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

Piththa_ Piraisoodi சொன்னது…

Hollow bamboo has it's own message of zen those .who know are blessed

Piththa_ Piraisoodi சொன்னது…

Hollow bamboo has it's own message of zen those .who know are blessed

குணசேகரன்... சொன்னது…

எனக்கும் பைத்தியக்காரத்தனமாய் தோன்றியது