3 நவ., 2010

இந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...

ஒரு காலத்தில் திருவிழாக்கள் என்றாலே வள்ளித்திருமணம், ராம நாடகம் , அரிச்சந்திர நாடகங்கள்தான் நடைபெறும், எண்பதுகளில் அது இன்னிசைக் கச்சேரிகளாக மாறியது, தொண்ணூறுகளில் ஊடகங்கள் மலிந்து விட்டதால் முதன்முதலில் மதுரைபக்கம்தான் மேடைகளில் பிரபல நடிகர்களைப்போல் வேடமிட்டு ஆடுவது மதுரை அபிநயா மற்றும் நாட்டியா குழுவினரால் அறிமுகப்படுத்தபட்டது. இவர்களுக்கு கிடைத்த வரவேற்ப்பினை பார்த்து ஆங்காங்கே புதிய குழுக்கள் முளைத்தனர். ஒரு கட்டத்தில் மேடைகளில் அவர்கள் கிட்டத்தட்ட " Live sex " நடத்தும் அளவுக்கு முன்னேறிவிட்டனர். ஒரு காலத்தில் "Record Dance" என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் யாருக்கும் தெரியாமல் நடந்த கூத்துகள், புது வடிவம் எடுத்து பொது மேடைகளில் இப்போது நடக்கிறது. இந்த மாதிரி குழுக்களை அணுகும்போதே பெண்களைக்காட்டி யார் வேண்டும் என தேர்வு செய்து கொள்ளலாம், ஆடைக்குறைப்புக்கும், மேடையில் நிகழ்த்தும் பகிரங்க "செக்ஸ்" அளவைப்பொறுத்தும் கட்டணம் வாங்குகின்றனர். இந்த நடனத்தை கிராமத்தில் இருக்கும் ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஒன்றுகூடி ரசிப்பதுதான் ஆச்சர்யம். இந்தக் கூத்தை நீங்களும் ஒரு முறை பாருங்கள்..

இதற்க்கு மேல் பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் " YouTube" அம்மனை வேண்டினால் 'தாராள' மாக வரம் கிடைக்கும்.

சமீப காலமாக இணையத்தில் கேபிள் சங்கரின் "கொத்து பரோட்டா" ஜாக்கி சேகரின் "சான்வெஜ் & நான்வெஜ்" பார்த்துவிட்டு பொங்கும் தமிழ் கலாசார காவலர்கள், இதற்க்கு என்ன தீர்வு சொல்லபோகிறார்கள்..

57 கருத்துகள்:

Arun Prasath சொன்னது…

Me the first

Arun Prasath சொன்னது…

என்னத்த சொல்ல... காலம் கலி காலம்

அருண் பிரசாத் சொன்னது…

நான் 18+ இல்லைப்பா... நான் பார்கலை

கோவி.கண்ணன் சொன்னது…

//சமீப காலமாக இணையத்தில் கேபிள் சங்கரின் "கொத்து பரோட்டா" ஜாக்கி சேகரின் "சான்வெஜ் & நான்வெஜ்" பார்த்துவிட்டு பொங்கும் தமிழ் கலாசார காவலர்கள், இதற்க்கு என்ன தீர்வு சொல்லபோகிறார்கள்..//

வஞ்சப் புகழ்ச்சியா ? :)

பெயரில்லா சொன்னது…

// பொங்கும் தமிழ் கலாசார காவலர்கள்.. //

யூ டியூபில் டவுன்லோட் போடுவார்கள் ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் சொன்னது…

நான் 18+ இல்லைப்பா... நான் பார்கலை
//

yes. u are 36+

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பாத்துறேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சமீப காலமாக இணையத்தில் கேபிள் சங்கரின் "கொத்து பரோட்டா" ஜாக்கி சேகரின் "சான்வெஜ் & நான்வெஜ்" பார்த்துவிட்டு பொங்கும் தமிழ் கலாசார காவலர்கள், இதற்க்கு என்ன தீர்வு சொல்லபோகிறார்கள்..

//

அவனுங்க கிடக்குறானுங்க.. நீங்க வாங்க பாஸ்.. (இந்த மாதிரி வேற லிங்க் இருக்கா பாஸ்)

Jackiesekar சொன்னது…

நாங்க எழுதறது பொதுவெளி... அது திறந்தவெளி...அம்புட்டுதான்..

Jackiesekar சொன்னது…

பத்தவச்சிட்டியே பரட்டை

ராஜன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராஜன் சொன்னது…

நல்ல கூத்து போங்க சொல்றது இதுதானா !

VJR சொன்னது…

கேள்விப்பட்டிருக்கேன். இப்பதான் பாக்குறேன். நாகரீகம் நாமதான் நாகரீகம்ங்றது சும்மா வாய்ப்பேச்சுதான்னு நெனச்சதுண்டு. இப்ப நம்புறேன்.

செல்வா சொன்னது…

எங்க ஊருக்குப் பக்கத்து ஊருல கோவில் திருவிழாவுல கரக்காட்டம் அப்படின்னு சொல்லிட்டு ஒண்ணு போட்டாங்க .அதிலயும் நடன அசைவுகள் அப்படிங்கிற பேருல இந்த மாதிரியான சில அசைவுகள் தான் இருந்தன அண்ணா .. ! என்ன கொடுமையோ ..?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

காலம் மாறிப்போச்சு... இப்ப திருவிழா என்றாலே இப்படித்தான்...

podang_maan சொன்னது…

//சமீப காலமாக இணையத்தில் கேபிள் சங்கரின் "கொத்து பரோட்டா" ஜாக்கி சேகரின் "சான்வெஜ் & நான்வெஜ்" பார்த்துவிட்டு பொங்கும் தமிழ் கலாசார காவலர்கள், இதற்க்கு என்ன தீர்வு சொல்லபோகிறார்கள்..//

அப்போ ஜாக்கி சேகரோடதும் இது மாதிரி ஆபாச வக்கிரம்னு சொல்றீங்களா இல்ல கிராம ஆபாசத்த அனுமதிக்கிற மாதிரி ஜாக்கி சேகரும் இருந்துட்டு போகட்டும்னு சொல்றீங்களா?

எப்படி பாத்தாலும் ஜாக்கி ஒரு ஆபாசப் பதிவர் என்றுதான் ஈக்குவேசன் வருது. பத்த வைச்சிட்டியே பரட்ட...

Good citizen சொன்னது…

இதைவிட அவிழ்த்து பொட்ட ஆடிவிடலாம், அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது
ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன்
நம்ம கலாச்சார காவலர்கள்,மாதர் சங்கங்கள்( மயிர்புடுங்கி மசால்வடைகள்
எல்லாம் எங்கே போனார்கள் )

ஞாயமான கேள்வி,கலிகாலம் பாஸ்

'பரிவை' சே.குமார் சொன்னது…

கலி காலம்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. சொன்னது…

//சமீப காலமாக இணையத்தில் கேபிள் சங்கரின் "கொத்து பரோட்டா" ஜாக்கி சேகரின் "சான்வெஜ் & நான்வெஜ்" பார்த்துவிட்டு பொங்கும் தமிழ் கலாசார காவலர்கள், இதற்க்கு என்ன தீர்வு சொல்லபோகிறார்கள்..//


அவங்களை நிறுத்தச்சொல்லுங்க நாங்க நிறுத்தறோம்....:))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

என்னத்த சொல்ல

க ரா சொன்னது…

கலாச்சாரம்.. பண்பாடு.... அய்யகோ (:

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஹி,ஹி,ஹி..... செந்தில் சார் , ஹி..ஹி.ஹி.... ஹேப்பி தீபாவளி சார் ,.........

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

எப்படி பாத்தாலும் ஜாக்கி ஒரு ஆபாசப் பதிவர் என்றுதான் ஈக்குவேசன் வருது.

----


அதே.. :)

புரிஞ்சா சரி..

இதை குறித்தான விவாதம் பார்க்க பஸ் ல்...


http://www.google.com/profiles/krpsenthil#buzz

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நம்ம கலாச்சார காவலர்கள்,மாதர் சங்கங்கள்( மயிர்புடுங்கி மசால்வடைகள்
எல்லாம் எங்கே போனார்கள் )

--------

:)

Unknown சொன்னது…

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிகிட்டு நம்ம நடிகர், நடிகையர் திரையில் செய்யுறதுதானே இது? பெரிய வித்தியாசம் இல்ல ரெண்டுக்கும்.

சுடிதார் ஆபாசம் என்று சொன்ன காலமொன்று உண்டு. இப்போ??

இதுவும் பழகிவிடும் நமக்கு. பயபுள்ளைங்கள நமக்குத் தெரிந்த, நமது காலகட்டத்துக்கு ஏற்ற நல்லது கெட்டதுகளைத் தரம்பிரிக்கக் கற்றுக்கொடுப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்??

rajasundararajan சொன்னது…

இது கொச்சையா அது கொச்சையா என்பது அல்ல, கோவில் கொடையில் இது என்ன கூத்து என்பதுதான் பிரச்சனை.

(ஆந்திரப் பிரதேசக் கோவில் விழா ஒன்றில் அவிழ்த்துபோட்டு ஆடுகிற வீடியோவும் பார்க்கக் கிடைக்கறது.)

இனப்பெருக்கு சடங்குகள் (fertility rites) வழக்கில் இருந்த வழிபாட்டு விழாக்களில் இது உள்ளதுதான். உள்ளூர் அம்மன் கோவில் திருவிழா நரிகுறத்தி (குறவன் குறத்தி) ஆட்டத்தில், உடலிச்சை தூண்டும் ஆட்ட அசைவுகளைச் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன்.

இதில், இந்தக் காலத்து உடுப்பில் திரைப்பாடலுக்கு ஆடுவதால் கொச்சையாகத் தெரிகிறது போலும்.

கொச்சையா இது நகைச்சுவையா என்பது பார்வைச் சூழலைப் பொறுத்தது.

raja சொன்னது…

நண்பரே தங்களுடைய அறிவார்ந்த பயோ டேட்டாக்களின் வாசகன் நான்.. இந்த கூத்துக்கள் தமிழகத்தில் பலகாலமாக வெவ்வேறு தொழிட்நுடப்பத்தில் நடக்கிற விஷயங்கள்தான்... இதற்கு நீங்கள் தேடிப்போய் அடையகாட்டி விளம்பரபடுத்துவது... நீங்கள் இதுகாறும் செய்து வந்த பொறுப்பான காரியங்களுக்கு உவப்பானதல்ல. பிற்பாடு உங்களது சக வலைப்பதிவாளர்களுக்கும் ஆதரவையும் கோர முயன்று இருக்கீறீர்கள்.. இம்மாதிரியான எழுத்துகளுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.. நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய தேங்ககியிருப்பதாக எனக்கு படுகிறது.. இந்தியாவின் ஊழல் தன்மை, குடும்பங்களின் ஆட்சி,, வறுமை,நோய்,கீழான் திரைப்படங்கள், மட்டமான ரசனை,விலைவாசி உயர்வு, வீடற்ற ஏழைகளின் பிரச்சினை இப்படியாக பல நூறு தீவிர பிரச்சினைகள் இருக்க.. இதை அடையாளப்படுத்தி, பிறருக்கு வக்காலத்து தேவையில்லாதது.... கணினி என்கிற விஞ்ஞானத்தை இன்னும் மேன்மையான செய்களைய செய்யாலமே..

BoobalaArun சொன்னது…

இதுக்கே இப்படியா?

அப்படின்னா , எங்க ஊரு பக்கம் யாரும் போய்டாதீங்க...

Anisha Yunus சொன்னது…

இப்படியெல்லாம் ஆடறதுக்கும் படறதுக்கும் தூக்கு போட்டுட்டு சாகலாம். இப்படியெல்லாம் ஆட்டத்தை ஊர்வெளில வச்சு பாக்கிறவனுக்கு அடுத்த வீட்டுல இருக்கறது குழந்தையா தெரியாது, ஐட்டமாத்தான் தெரியும். பெங்களூருல பப்புல புடிச்சு தாக்கறவங்களையும், பார்க்குல புகுந்து கணவன் மனைவியா காதலர்களான்னு விசாரிக்காம வெளுத்து வாங்கறவங்களுக்கும் இந்த திருவிழா கலாச்சாரத்தை காட்டி என்ன செய்யப் போறீங்கன்னு கேக்கணும். பத்திகிட்டு வருத, காறித்துப்பணும் போல...!!

dheva சொன்னது…

கருத்து சொல்லியிருக்கிற எல்லோருக்கும் சரி...இனி சொல்லப்போற எல்லோருக்கும் சரி என்னுடைய கேள்வி எல்லாம் ஒண்ணு தான்.....


இத ஸ்டாப் பண்ண முடியாதா?


ஸ்டாப் பண்ண என்ன வழி?????


ப்ளீஸ்..... அது பத்தி யாரச்சும் ஃபர்தரா டிஸ்கஸ் பண்றதாரா இருந்தா நான் இன்ட்ரஸ்டட்ட் டூ. டிஸ்கஸ்!!!!!!

என்னது நானு யாரா? சொன்னது…

என்ன செய்யணும் தேவா! இருக்கிறதிலேயே காம இச்சை தான் எல்லா உயிர்களையும் ஈர்த்துப் பிடிக்கின்ற மகா சக்திவாய்ந்த விஷயம். மனிதர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

காமத்தை சரியானபடி வடிகால் கொண்டுப் பாய்ச்சத்தான் நமது கலாச்சாரம் பலபலப் கட்டுப்பாடுகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகுத்தது. அதெல்லாம் காத்தோடு கலந்து ரொம்ப நாளாச்சு! அதனால கால மாற்றத்தை சகிச்சிக்க வேண்டியது தான்.

vimalanperali சொன்னது…

சினிமாக்களின் தத்துப் பிள்ளைகளாய் இவர்கள்.அதை காண்பிக்க எத்தனை 'யூ ட்யூப்கள்' வேண்டியிருக்கும் எனத் தெரியவில்லை.

dheva சொன்னது…

என்னது நானு யாரா @ நான் சொல்றது இப்படி டான்ஸ் பப்ளிக்கா ஆடுறவங்கள சட்டப்ப்டி தண்டிக்க முடியாதா...? இவ்ளோ கேவல கூத்த பொதுவுல பாத்து ரசிக்கிற வக்ரம் அத விட கொடுமை......

Cann't all complain the same to the police or file a case against that troops.who dances....????????

GSV சொன்னது…

@ Vinoth , பயணமும் எண்ணங்களும்

யாரு எத எழுதனும்ம்னு யாரும்ம் கட்டளையெல்லாம் இடக்கூடாது ....பிடித்திருந்தால் படிங்க இல்லன்ன போல்லோவுப்
பண்ணாதிங்க .... எப்படி கூவுறது எல்லாம் டைம் பாஸ்

நினைவிருக்கட்டும். "புனிதர் என்று யாரும் இங்கே இல்லை".... எப்படியே போனா ஒரு மலையாளியும் நீங்க எழுதின மாதிரி ஒரு "தமிழன் "
பயோடேட்டா எழுதிருப்பருன்னு தான் தோன்னுது.....

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

யாரு எத எழுதனும்ம்னு யாரும்ம் கட்டளையெல்லாம் இடக்கூடாது ....பிடித்திருந்தால் படிங்க இல்லன்ன போல்லோவுப்
பண்ணாதிங்க .... எப்படி கூவுறது எல்லாம் டைம் பாஸ்

------------

ஹாஹா:))

பொதுவிடத்தில் மலம் கிடப்பதை பார்த்துவிட்டு மூக்கை பிடிக்காமல் முகம் சுழிக்காமல் செல்ல சொல்கின்றீர்கள்..

ஏதோ ஒரு த்அடவை என்றால் சரி..

தினமும் , தெரு முழுக்க பரவி கிட்ப்பதும் , அதையே பெருமையாக பேசிக்கொள்வதையும் என்ன சொல்ல?...:))

மலம் பரப்புவதில் யார் பெரிது , அதிக மலம் பரப்புபவர், மலம் பரப்புபவருக்கான ஆதரவாளர்கள் அதிகம் யாருக்கு ன்னு போட்டி வைத்து இனி அதுக்கு அவார்டும் கொடுங்க .. யார் வேண்டாம் என்கிறார்கள்..?:))


ஆனால் மலத்தை , மலம் னு விமர்சனம் செய்ய கூடாதுன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லீங்க...:)

அது யார் வேணா செய்வார்கள்...

ராஜன் சொன்னது…

அந்த ஊருல போலீஸ் , காவல் நிலையம் இல்லையா ! எப்படி இதை பொதுமக்கள் அனுமதிதார்கள் !

Bibiliobibuli சொன்னது…

கலாச்சார காவலர்கள் பொங்குவது ஒருபுறமிருக்கட்டும் செந்தில். நீங்கள் எதை எழுத வேண்டுமென்று யாரும் உங்களை வற்புறுத்தவோ அல்லது இதை எழுதக்கூடாது என்று தடுக்கவோ முடியாது.

ஆனாலும்,

//இதற்கு நீங்கள் தேடிப்போய் அடையகாட்டி விளம்பரபடுத்துவது நீங்கள் இதுகாறும் செய்து வந்த பொறுப்பான காரியங்களுக்கு உவப்பானதல்ல.//

ராஜா சொன்னது தான் என் கருத்தும்.

I am sorry. I did not expect this from Senthil, a respectful man.

ILA (a) இளா சொன்னது…

//I am sorry. I did not expect this from Senthil, a respectful man.//
ரிப்பீட்டு..
உண்மையச் சொல்றேங்க. இதே மாதிரி இன்னும் எங்க ஊர்ல நடக்குது. எந்த ஊருன்னு கேட்குறீங்களா? பவானி-சங்ககிரி போற வழியில செங்கமா முனியப்பன் கோவில். இது மாதிரி மேடையில நடக்கும். ஆனா ஒரு நாளைக்கு முன்னாடியே கரகாட்டம்னு ஒன்னு நடக்கும். டாப் லெஸ்....

பெயரில்லா சொன்னது…

கேபிள் சங்கர் ஒரு வக்கிரம் பிடிச்ச புளொக்கர். அவருக்கு நீங்க சப்போர்ட்டா செந்தில் சார்.

நர்சிம், முகிலனுக்கு எதிராக பொங்கி எழுதறவங்க, இவர மாதிரி ஆன ஆட்களை எப்படி விட்டு வைக்கிறார்கள்.

நான் எதிர் கருத்து சொன்ன போது கூட ரொம்ப கேவலமாக அவரும் அவரோட ஆளுங்களும் எழுதி இருந்தாங்க. வெங்கட் சார் மட்டும் தான் சப்போட் பண்ணினார்.

வேற யார் கண்ணிலும் படவே இல்லையா? சப்போட்டு பண்ண யாருமே வரல.

என்கிட்ட எங்க சமூகம் எப்படி வரட்சி பிடிச்சிருக்கு, இதெல்லாம் பாக்கறதால மட்டுமே நிறைய மாற்றங்கள் வரும் என்கிற அலம்பற வேறு. இத்தனைக்கு மேலைத் தேய நாடுகளில் என்ன நடக்குது என்று கூட தெரியாமல் மேலைத்தேய நாடுகளில் விடுவது போல மக்களை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட வேண்டும் என்று அலப்பறை வேறு.

ஏதோ இந்த ஏஜோக்ஸ், கண்ட விளம்பரங்களும் தான் மக்களுக்கு நிறைய விசயங்களை கத்துக் கொடுக்கும் என்கிற மாதிரி பில்டப். செக்சும் பசி போல ஒரு உணர்ச்சி அதை அடக்க கூடாது, புடுங்க கூடாதுன்னு அட்வைஸ் வேறு.

படிப்பறிவு இல்லாத சனங்கள் கிட்ட எய்ட்ஸ் பத்தியும், குழந்தை உருவாகுவது பற்றியும் எடுத்து விளக்க இவராலயும் இவரோட அடிவருடிகளாலும் முடியாது. ஆனால், ஏஜோக், கண்ட விளம்பரங்கள் போட்டு விளக்கம் கொடுக்கிறார்களாம். ஏனைய்யா, இன்டனெட் இருக்கறவன் தான் நீங்க போடற கண்றாவிகள் எல்லாம் பாக்கறான். அவனுக்கு நீங்க என்ன விளிப்புணர்வு ஏற்படுத்த போறேன்னு ஏஜோக்ஸ் புடலங்காய் எல்லாம் போடறீங்க?

பயணமும் எண்ணங்களும் சொல்வது போல ,

//பொதுவிடத்தில் மலம் கிடப்பதை பார்த்துவிட்டு மூக்கை பிடிக்காமல் முகம் சுழிக்காமல் செல்ல சொல்கின்றீர்கள்..

ஏதோ ஒரு தடவை என்றால் சரி..

தினமும் , தெரு முழுக்க பரவி கிடப்பதும் , அதையே பெருமையாக பேசிக்கொள்வதையும் என்ன சொல்ல?...:))

மலம் பரப்புவதில் யார் பெரிது , அதிக மலம் பரப்புபவர், மலம் பரப்புபவருக்கான ஆதரவாளர்கள் அதிகம் யாருக்கு ன்னு போட்டி வைத்து இனி அதுக்கு அவார்டும் கொடுங்க .. யார் வேண்டாம் என்கிறார்கள்..?:))

ஆனால் மலத்தை , மலம் னு விமர்சனம் செய்ய கூடாதுன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லீங்க...:)

அது யார் வேணா செய்வார்கள்... //


இந்த வீடியோவில பண்றதை விட கேபிள் சங்கர் பண்ணுறது கொடிய வியாதி. அதை சுட்டிக்காட்ட வக்கில்லாமல் சப்போட் வேற செய்கிறீர்களா செந்தில் சார். உங்கள் முகம் தெரியாது. ஆனால் உங்கள் புளொக் படிக்கும் போது எனக்கு உங்கள் டிஸ்பிளே பிச்சரில் உள்ள சேகுவரேவின் முகமே தெரியும். உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை.

கேபிள் சங்கருக்கு சப்போட் பண்ணி எந்த பருப்பாவது வாந்தி எடுக்க வேண்டும் என்றால் வேற இடத்தில் வாந்தி எடுங்கள். இங்கே வேண்டாம்.


I completely agree with Raja & Rathi.

Prathap Kumar S. சொன்னது…

செந்தில்ஜீ
ராஜா, ரதி, அனாமிகா இவர்களின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை உங்களால் மறுக்கமுடியாது.

பெயரில்லா சொன்னது…

தேவா சார் சொன்ன மாதிரி ஏதாவது தீர்வை தேடுங்கள்.

அவுஸ்ரேலியாவில் மூன்று வருடம் குப்பை கொட்டும் எனக்கு பல்கலைக்கழகத்திலும் வெளியிலும் நடக்கும் பல விடயங்களை அவதானித்தில் தெரிந்தது ஒன்றே ஒன்று தான். என்னை கிணற்று தவளையாக வளர்க்க மாட்டோம் என்று முட்டாள் தனமாக வளர்க்கவில்லை.

தேவையான அளவு கலாசாரத்தின் பெருமதியையும், தேவையான அளவு விளக்கத்தையும் நன்றாகவே ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்.

கேபிள் சங்கர் போன்றவர்களுக்கு கருப்பில்லாவிட்டால் வெள்ளை என்பது மட்டும் தான் தெரிகிறது. அதற்கு இடையே நிறை நிறங்கள் இருப்பது தெரிவதில்லை. நான் புத்திசாலி என்று காட்டிக்கொள்ள நினைக்கும் கிணற்று தவளைகளைப் பார்த்து ஐயோ பாவம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் மாடுகளை என்ன செய்வது. Just ignore them என்று சொல்லமுடியவில்லை. கல்லால் அடிக்கவே தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

புளொக் பக்கம் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைத்து வந்தால் இந்த பதிவு திருப்பவும் என்னை ஒட வைக்கிறது.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அனாமிகா இன்னொரு வெளிச்சம் நீங்கள் பதிவுலகத்துக்கு...


உங்கள் துணிச்சலான விமர்சனத்துக்கு என் வாழ்த்துகள்...

அருமை உங்க பதில்..

பெயரில்லா சொன்னது…

சமீப காலமாக இணையத்தில் கேபிள் சங்கரின் "கொத்து பரோட்டா" ஜாக்கி சேகரின் "சான்வெஜ் & நான்வெஜ்" பார்த்துவிட்டு பொங்கும் தமிழ் கலாசார காவலர்கள், இதற்க்கு என்ன தீர்வு சொல்லபோகிறார்கள்..///

ஜாக்கிசேகரும் இந்த மேடையில் 'கலைச்சேவை' செய்வோரும் ஒன்றா??!!! நான் கூட ஜாக்கியை இவ்வளவு கேவலமா நினைக்கல. நினைக்கவும் மாட்டேன். மேலும் நான் கலாச்சார காவல் எல்லாம் செய்யலப்பா. பெரியவர்களுக்கானதை எழுதும்போது 'பிளாக்கர்'ரின் dults contenஐ தேர்வு செய்து எழுதவேண்டியதானே எனதான் கேட்டேன்!! :-)

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ஜாக்கிசேகரும் இந்த மேடையில் 'கலைச்சேவை' செய்வோரும் ஒன்றா??!!! நான் கூட ஜாக்கியை இவ்வளவு கேவலமா நினைக்கல.//

:))

ஜெய்லானி சொன்னது…

செந்தில் ஜி , இந்த படம் (வீடியோ )ரொம்ப பழசு ..இப்பதான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சுதா..? அதுவுமில்லாம இது நடந்தது ..தமிழ்நாட்டில இல்ல சிங்கப்பூரில ...புல் டீடெயில் போடவும் ...!!

தெரியாத ஆட்களிடமும் காட்டி ஏன் இப்படி ..? இதே சினிமாவை மக்கள் குடும்பத்துடன் போய் பார்க்க வில்லையா ..? என்ன அவர்கள் ஃபேமஸ் நடிகர்/ நடிகை இது யாரோ...!! அதுக்காக நான் அவர்களுக்கு சப்போர்ட் செய்யல ...!!
தமிழர் கலாச்சாரம் என்னன்னு இப்ப புக்கில கூட பாக்க முடியல ..!! காலத்தின் கோலம் எனபது இதுதானா :-(

problogger சொன்னது…

தமிழர் கலாச்சாரமா? அது எங்க கிடைக்கும் ?

Unknown சொன்னது…

அனாமிகா மேடம்.. நானும் உங்கள் நீங்கள் கேபிள் சங்கரின் நீங்கள் பின்னூட்டியதை பார்த்தேன். அதில் கேபிள் சங்கர் ஏதும் உங்களை பற்றி தவறாக கூறவில்லையே.. உங்களுக்கு பிறகு பின்னூட்டியவர்களுக்கும் உங்களுக்கும் தான் பிரச்சனையிருந்தது. இதற்கு அவர் என்ன செய்வார்? நீங்கள் ஒரு வரை பற்றி ஒரு கருத்து சொல்கிறீர்கள். நீங்கள் சொன்ன கருத்தை பற்றி இன்னொருவர் கருத்து சொல்கிறார். இதில் என்ன தப்பு...

அப்புறம் அந்த காமெடி பீஸு புன்னகை பூவின் மலம் மேட்டர் படித்து படித்து போரடித்துவிட்டது. அதனால் வேறு ஏதாவது புதுசாய் உதாரணம சொல்லவும்.

கேபிள் சங்கருக்காக நான் பரிந்துரைக்க வரவில்லை. ஆனால் அவர் எழுதுகிற எல்லாவற்றையும் படித்துவிட்டு அவரை பற்றி குறை சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு ஏ ஜோக்கை வைத்து பேசுவது.. ஏதோ உள்குத்து விவகாரமாய்த்தான் இருக்கிறது.. இவ்வளவு நடக்கிறதே உங்களையெல்லம் அவர் கண்டுக்கக்கூட மாட்டேனென்கிறார்.. நீங்க தான் ...

பெயரில்லா சொன்னது…

முதலில் பெயருடன் வந்து பேசுய்யா அடாங்காப்பிடாறி.


//அதில் கேபிள் சங்கர் ஏதும் உங்களை பற்றி தவறாக கூறவில்லையே.. உங்களுக்கு பிறகு பின்னூட்டியவர்களுக்கும் உங்களுக்கும் தான் பிரச்சனையிருந்தது. இதற்கு அவர் என்ன செய்வார்?//

அது சரி, பாவம் அவர் என்ன செய்வார். மனவக்கிரத்தை எல்லாம் கொட்டி முடிக்கவே அவருக்கு டைமில்லை. இதில இதெல்லாம அந்தாளுக்கு எங்க தெரியப் போகிறது.

//நீங்கள் ஒரு வரை பற்றி ஒரு கருத்து சொல்கிறீர்கள். நீங்கள் சொன்ன கருத்தை பற்றி இன்னொருவர் கருத்து சொல்கிறார். இதில் என்ன தப்பு...//
அது சரி. கருத்து சொல்கிறேன் என்று கேவலமாக எழுதுவதெல்லாம் கூட கருத்துச் சுதந்திரம் தான்???? Excellent conclusion.

//அப்புறம் அந்த காமெடி பீஸு புன்னகை பூவின் மலம் மேட்டர் படித்து படித்து போரடித்துவிட்டது. அதனால் வேறு ஏதாவது புதுசாய் உதாரணம சொல்லவும்.//
பழைய உதாரணமே புரியல்ல. உங்களுக்கெல்லாம் புது உதாரணம் தேவையா?

//கேபிள் சங்கருக்காக நான் பரிந்துரைக்க வரவில்லை. ஆனால் அவர் எழுதுகிற எல்லாவற்றையும் படித்துவிட்டு அவரை பற்றி குறை சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு ஏ ஜோக்கை வைத்து பேசுவது.. ஏதோ உள்குத்து விவகாரமாய்த்தான் இருக்கிறது.. //
அப்போ ஒரு குடம் பாலில ஒரு துளி விஷம் கலந்தா, "Its just a drop of poison ya" என்று சொல்லிட்டு குடிப்பீங்களா? Sabash.


//இவ்வளவு நடக்கிறதே உங்களையெல்லம் அவர் கண்டுக்கக்கூட மாட்டேனென்கிறார்.. நீங்க தான் ...//
அந்த ஆள் கண்டு கொண்டால் என்ன கண்டு கொள்ளாவிட்டால் என்ன? என் எதிர்ப்பை காட்டுவது என் கடமை என் இஷ்டம்.

உங்கள மாதிரி சேலைக்குப் பின்னால ஒழிய என்னால முடியாது.

Thenmerkuthendral சொன்னது…

ennamo nadakuthu marmamaa irukkuthu....

Thamarai சொன்னது…

இதை இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ள மட்டும் இல்ல.பேருந்து, பூங்கா போன்ற பொது இடங்களிலேயே நடக்குது.

நாம எப்போ பெண்களை வெளியே வர அனுமதித்தோமோ அப்பொழுதே நமது கலாச்சார சீரழிவயும், நோய்களுக்கும் ஆரத்தி எடுத்துவிட்டோம்.

இனி இப்படி புலம்புவதை விட்டுவிட்டு நாம் உள்ளே சென்று மறைந்து கொண்டால்தான் இவைக் காப்பாற்றப்படும்

TJ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
TJ சொன்னது…

ஆக ஆக அருமையான video
எல்லேருமா ரசித்துப் பாத்துட்டு எனப்பா பொய் சொல்லுரிங்க...
நம்மட இட்ன்லி தளத்தின் alexa rank 8327 india வுல 626
அத போல தமிழில் காமகதை எழுதும் ஒருதளத்தின் alexa rank 6676 india வுல 442
இதில இருந்தே தெரியுதே...பிறகேன் இந்த வெளிவேசம்...

Unknown சொன்னது…

இந்தியர்களின் வாழ்வினை கூர்மையாக கவனித்தால் காம உணர்வை தூண்ட இது போன்ற நடனம், கரகாட்டம்,பயன்படுத்தப்பட்டன சில சிலேடை வசனங்கள் (வயதானவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள்) பழைய ஆலயங்களில் உறவு கொள்வது போன்று சிற்பங்கள் உள்ளன இப்போது பெரும்பாலும் நீக்கி விட்டார்கள்
ஆனால் இப்போது தொழில் நுட்பம் வளர்ந்து வந்துவிட்டமையால் யாரும் பார்க்ககூடிய அபாயம் உள்ளது முக்கியமாக சிறுவர்கள் அவர்கள் மனரீதியாக பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது அதனால் இதை போன்ற பதிவுகளை/வீடியோ 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க அனுமதிக்கும் தொழில்நுட்பம் வேண்டும் என்பதே என் கருத்து
ஜாக்கி என்ன குஸ்வந்த்சிங்க விடவா எழுதி விட்டார் பஞ்சாப்பே அவரை கொண்டாடுது

Raja சொன்னது…

http://anbudan-raja.blogspot.com/
உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

ganesan sivanandam சொன்னது…

manam pathapathaikirathu.ethai parthukondirunthavargalin unarchigal eppadi erunthirukkum/YARAVATHU KAMA VERIYIL THAPPAHA NADANTHU KONDAL ATHARKKU YAR PORUPPU/antha ooril nallavarhale illaiya/kali muthi pochu

Unknown சொன்னது…

ulaga makkal palavitham, athil ithu oru vitham, onakku pudicha paaru illa pudikkiravanga pakkattum,pooviya pooiya.