21 நவ., 2010

வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...


If you were just intent on killing people you could do better with a bomb made of agricultural fertilizer. -Ian Hacking 

நகரத்தின் புழுதிகளை சுமந்து சுமந்து என் கைகளும், முகமும் எங்கள் கிராமத்து வயல்களில் வேலை பார்த்த மகளீரின் கரங்கள் போல் ஆகிவிட்டன. அன்றாடம் இரு சக்கர வாகனத்தில் சென்னை வீதிகளில் சர்க்கஸ் பழகும் அத்தனை பேருக்கும் இப்படித்தான் ஆகிவிட்டது, அதுவும் மழைவிட்ட மறுநாள் அடிக்கும் வெயிலில் கிளம்பும் புழுதி இலவசமாய் எங்கள் தலைகளுக்கு டை அடித்துவிட்டுப்போகும், அதனால் ஷாம்பூ கம்பெனிகள்தாம் வாழ்கின்றன. சமீபத்தில் என் நண்பன் விக்கிரவாண்டி அருகே ஒரு அரைகிரவுண்டு வாங்கப்போவதாக சொன்னான். அங்க வாங்கி என்னடா பண்ணுவே என்றேன். சும்மா ஒரு முதலீடு செஞ்சு வைக்கத்தான் என்றான். நான் ஊருக்கு போகிறபோதெல்லாம் செங்கல்பட்டு தாண்டியபின் இரு புறமும் சவுக்கு காடுகளையும், திண்டிவனம் தாண்டியபின் முந்திரிக்காடுகளையும், சேத்தியாதோப்பு தாண்டியபின் பசேலென நெற்பயிர்களையும் பார்ப்பேன், பகலில் பயணம் செய்யும்போது இதனை வழிநெடுக பார்க்கையில் மனதிற்கு இதமாக இருக்கும். ஆனால் கடந்த இருபது வருடத்தில் மெல்ல பொலிவிழந்து பொட்டல் காடுகளாய் கற்தூண்கள் நட்டுவைக்கப்பட்டு வீட்டுமனைகள் ஆக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலும் நகர வாசிகள் தங்கள் முதல் முதலீடுகளை தங்கத்திலும், அதற்கடுத்த முதலீடுகளையும் வீட்டுமனைகளிளும்தான் போடுகிறார்கள். தங்கம் அதன் விலையில் பல மடங்கு ஆகிவிட்ட நிலையிலும், அதன் ஸ்திரத்தன்மை என்பது கேள்விக்குறிதான்,காரணம் சமீபத்தில் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கத்தை தூக்கப்போவதாக சொன்னதும், அதன் விலை கிராமுக்கு Rs.1200 க்கு வந்துவிடும் என வியாபாரிகள் சொன்னதை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் நிலம் அப்படி அல்ல போட்ட காசுக்கு மேல் கண்டிப்பாக கிடைக்கும். காரணம் ஒரு நிலம்போல் மற்றொரு நிலத்தை நாம் உருவாக்கவே முடியாது.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் சர்க்கரை வள்ளிகிழங்கு விளைவித்து அதனை வண்டி கட்டி பக்கத்து ஊர்களில் எடுத்து சென்று விற்ப்பார்கள். நெல்லை வாங்கிக்கொண்டு கிழங்கை தருவார்கள், பின்னர் சிங்கப்பூர் சம்பாத்தியம் அதனை நிறுத்திவிட்டது. படிப்படியாக எல்லா நிலங்களிலும் தென்னை மரம் நடப்பட்டு விட்டது. இதனால் தற்போது நாடு திரும்பிவிட்ட எங்கள் ஊர்க்காரர்கள் பாலங்களில் அரட்டைகச்சேரிகளும்,மாலையானால் டாஸ்மாக் பார்களிலும் பொழுதை கழிக்கிறார்கள். மற்றவர்களும் தங்கள் வயல்களை குத்தகைக்கு விட்டுவிட்டு நகரங்களுக்கு நகர்ந்துவிடார்கள். நான் உட்பட, நானும் விவசாயத்தை மறந்து தொழிலதிபர் கனவுக்கு மாறி, நிரந்தரமாக சென்னைவாசியாகிவிட்டேன், ஆனால் தற்போது வியாபாரம் பற்றிய விசயங்களை தேடித்தேடி படிக்க படிக்க இனி இந்த உலகின் நடக்கபோகும் அடுத்த புரட்சி என்பது, தண்ணீருக்கும், உணவுக்கும் நாம் கொடுக்கபோகும் விலைதான். நீங்கள் கவனமாக பார்த்தீர்கள் என்றால் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்புக்கு நாம் செலவிட்ட தொகை இன்றைய கணக்கில் பைசாக்களாக குறைந்துவிட்டது. ஆனால் இன்றைக்கு ஒரு கிலோ சர்க்கரை விலை எக்கச்சக்கமாக ஏறி விட்டது. இதற்க்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று பணவீக்க விகிதம், இன்னொன்று உணவுப் பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகத்துள் கொண்டுவந்தது. சர்க்கரை மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் நம் வீட்டிற்க்கு வாங்கிகொண்டிருக்கும் மளிகை பொருட்களின் விலை அதிகமாகிகொண்டே வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

நம் உணவுத்தேவை என்பது மிகுந்துவிட்டது, ஆனால் உற்பத்தியோ குறைந்துகொண்டே வருகிறது. இதற்க்கு முக்கியமான காரணம் எல்லா விளைநிலங்களும் இன்றைக்கு மொத்தமாக அரசியல்வாதிகளின் கைக்கு மாறிவருகிறது. இன்னும் நில உச்சவரம்பு சட்டம் உயிரோடு இருக்கிறது. ஆனால் எல்லா அரசியல்வாதிக்கும் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கபட்டுவிட்டன. விவசாயிகளும் அதிக விலை கிடைக்கிறதே என தங்கள் நிலங்களை விற்றுவிட்டார்கள். சமீபத்தில் மானாமதுரைக்கு போயிருந்தேன் அங்கு ஒரு வட இந்திய சேட்டிடம் ஆயிரத்து முந்நூறு ஏக்கர் நிலங்கள் கைவசம் வைத்திருப்பதாக சொன்னார். அவர் ஒரு சென்ட் நிலத்தை ஐம்பது ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இப்பொது சென்ட் ஐந்நூறுக்கு விற்க தயாராக இருப்பதாக சொன்னார். நான் இடத்தை சென்று பார்வையிட்டேன், அருமையான விளைநிலம் ஆனால் ஆண்டுக்கணக்காக அவை விவசாயம் செய்யபடாமல் இருந்தது. அதற்கான காரணத்தை விசாரித்த போது அங்கு வசிக்கும் மக்கள் மிக சொற்பம், அவர்களுக்கான தேவைகளும் மிக குறைவு அதனால் சும்மா கிடக்கும் நிலம்தானே என விற்றுவிட்டு நகைகள் வாங்கிவிட்டனர். 

ஆனால் இவர்களுக்கு போதுமான வழிப்புணர்வு இருந்தால் அந்த நிலத்தை விற்றிருக்கமாட்டார்கள். அமெரிக்காவில் ஐநூறு ஏக்கர் நிலத்தை மூன்று பேர் மட்டுமே உள்ள குடும்பத்தினர் நிர்வாகிப்பார், காரணம் அவர்களுக்கு கிடைக்கபெற்ற அரசு மானியங்களும், கடனில் கொடுக்கப்பட்ட விவசாய எந்திரங்களும், ஆனால் குடும்பத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கும் நம் ஆட்கள் வெறும் ஐந்து ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என புலம்புவார்கள். ஒரு காலத்தில் முறையாக கூட்டு விவசாயம் செய்த முன்னோர்கள் கொண்ட பரம்பரை கால மாற்றத்தில் வயலில் இறங்காமலே சாப்பிட நினைப்பதால்தான் இந்த நிலைமை. கூட்டு விவசாயம் என்பது ஒரு குழுவாக சேர்ந்துகொண்டு ஒருவர் வயலில் மற்றவர்கள் வேலை செய்து கொடுப்பது. இப்போதோ ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை (தஞ்சை, நாகை, திருவாரூர்) எடுத்துகொண்டால் ஒரே நேரத்தில் அத்தனை பேரும் ஒரே பயிரை விவசாயம் செய்வார்கள். பின் ஆட்கள் எப்படி கிடைப்பார்கள். அதிலும் இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். அதிலும் ஒழுங்காக பட்டம் பார்த்து விதைக்காமல் பருவ மாற்றங்களில் சிக்கி நிவாரண நிதி கேட்டு அரசிடம் கையேந்துவார்கள். அரசு ஒதுக்கிய தொகையை கிராம நிர்வாக அதிகாரி, கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் பங்கிட்ட பிறகு கிடைக்கும் மிச்சத்தை வாங்கி சரக்கடிச்சுட்டு உலக அரசியல் பேசுவார்கள்.

உங்களுக்கு விவசாய ஆர்வம் இருந்தால் விவசாயம் செய்ய வாருங்கள், நம் மரபு விதைகளை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யுங்கள். நம்மிடம் இருந்த அற்புதமான விதைகளை நாம் இணைந்து மீண்டும் உருவாக்கி ஒரு புதிய புரட்சியை செய்வோம். எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற ஏமாற்றுக்காரர்களின் முகமூடியை கிழிப்போம். நம்மாழ்வார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் வழி நடந்து தரமான, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விளைய வைப்போம். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி ஏக காலத்தில் நிறைய உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகளை அநேக விவசாய ஆர்வலர்கள் இலவசமாக நமக்கு சொல்லித்தருகிறார்கள். எங்கோ ஒரு நாட்டில் பிறந்து புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில்லில் குடிவந்து நம் மரபு விதைகளை பாதுகாக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்திய விகடன் தீபாவளி மலரில் வந்துள்ளது.மேலும் விகடன் வெளியீடான "பசுமை விகடன்" முழுக்க முழுக்க இயற்க்கை விவசாயத்தை பற்றி மட்டும் கட்டுரைகள் கொண்ட தமிழின் தலை சிறந்த இதழ். அதனை நாம் தொடர்ச்சியாக வாசித்து வந்தாலே நமக்குள் விவசாய ஆர்வம் ஊற்றெடுக்கும். இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள். கரங்களை இணைத்துகொள்வோம்.

அடுத்த கட்டுரையில் விவசாயம் எந்ததெந்த வகையில் நமக்கு லாபகரமாக இருக்கும் என்பதனைப்பற்றி எழுதுகிறேன்

49 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

உண்மை உறைத்தாலும் ஒன்னும் செய்யக்கூடிய நிலமையில் நாம் இல்லை என்பது தான் சோகம்.

ஜோதிஜி சொன்னது…

தேவையான பதிவும் தெளிவான புகைப்படமும்.

அன்பரசன் சொன்னது…

//நான் உட்பட, நானும் விவசாயத்தை மறந்து தொழிலதிபர் கனவுக்கு மாறி, நிரந்தரமாக சென்னைவாசியாகிவிட்டேன்//

ஹி ஹி

அன்பரசன் சொன்னது…

//இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள். கரங்களை இணைத்துகொள்வோம்.//

கண்டிப்பா தல.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தேவையான பதிவு

சதுக்க பூதம் சொன்னது…

உங்கள் பதிவு நன்றாக உள்ளது. ஆனால் நவீன விவசாயம் பற்றிய உங்களுடைய கருத்தில் சிறிது மாறுபாடு உள்ளது. நவீன விவசாயம் என்பது தற்போதைய காலத்தின் கட்டாயம். உலக மக்கள் தொகை வளரும் வேகத்தில் உணவு உற்பத்தியை பாரம்பர்ய விவசாயம் கொண்டு வளர்ப்பது நடைமுறை சாத்தியம் அல்ல. அது மட்டுமல்ல.தற்போது உணவு உற்பத்தி மட்டும் போதுமானது அல்ல. இந்தியாவில் நமது தேவைக்கு ஏற்ற உணவில் 10 சதம் நாம் உற்பத்தி செய்ய தவறிவிட்டால் உணவு பொருட்களின் மதிப்பு 200 மடங்கு உயரும். கடந்த சில ஆண்டுகளாக அதிக மக்கள் தொகை கொண்ட சீனா மற்றும் இந்தியாவில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இருந்தாலும் குலோபல் வார்மிங் காரணமாக ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகளில் உணவு உற்பத்தி குறைந்ததின் விளைவாக உணவு விலை இரு மடங்காகியது.
இந்தியாவின் உணவு தேவையில் 10% வெளி மார்கெட்டை நோக்கினால் அதன் விலை எவ்வளவு உயரும் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள்.
உண்மையில் இயற்கை விவசாயம் என்பது மேலை நாடுகளின் உதவியோடு பரப்பபடும் பிரச்சாரம் என்றும் கருத்து உள்ளது. இந்தியா தன் உணவு தன்னிறைவை இழந்தால் உலக உணவு பொருளின் விலை தாறுமாறாக ஏறும். அமெரிக்காவில் பல்லாயிரம் ஏக்கர் நிலம் விவசாயத்துக்கு ஏற்றதாக ஆனால் விவசாயம் செய்ய கூடியதாக உள்ளது. அங்கு விவசாயத்திற்கு முதலீடு கிடைத்து பெரிய அளவில் விவசாயம் செய்ய இது உதவும். மேலை நாடுகளில் மக்களின் வருமானத்தில் 10% தான் உணவுக்கு செலவிடுகிறார்கள். அங்கு விலை ஏறினால் பெரிய பாதிப்பு இருக்க போவது இல்லை. ஆனால் இந்தியாவில் மக்களின் வருமானத்தில் பெரும் பங்கு உணவுக்கு தான் செலவிடுகிறார்கள், அதன் விளைவு பசியும் பட்டினியும் தான் இருக்கும்.

அது மட்டுமன்றி இரு வருடம் Food Aid என்ற பெயரில் உணவு பொருளை இங்கு கொட்டினால் பிரகு இந்திய விவசாயம் சமாதி தான்.அது தான் ஆப்ரிக்காவில் நடந்தது.


//மேலும் விகடன் வெளியீடான "பசுமை விகடன்" முழுக்க முழுக்க இயற்க்கை விவசாயத்தை பற்றி மட்டும் கட்டுரைகள் கொண்ட தமிழின் தலை சிறந்த இதழ்.//

ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து பணம் சம்பாதிக்கும் பசுமை விகடன் உண்மை கதை உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இயற்கை விவசாயம் தான் எதிர்காலம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் நடத்தும் விவசாய பண்ணையில்(ஜெமினி பார்ம் என்று நினைக்கிறேன்) கலிபோர்னியாவை சேர்ந்த அமெரிக்க வேளாண் வல்லுனர்களை கொண்டு அமெரிக்காவில் உள்ள நவீன விவசாய உத்திகள் கொண்டும், அமெரிக்காவிலிருந்து வேதி பொருட்களை வரவழித்தும் நவீன விவசாயம் செய்து லாபம் பண்ணி கொண்டு உள்ளனர்.

vinthaimanithan சொன்னது…

உங்கள் பதிவுகளில் மணிமகுடமான பதிவு இது. வரிக்கு வரி பேச வேண்டுமானால் தனிப்பதிவுதான் போடவேண்டும். எழுதிய விரல்களுக்கு முத்தங்கள்!

vinthaimanithan சொன்னது…

சதுக்கப்பூதம் எழுதியுள்ள கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியவைதான்.

ஆனால் இயற்கையை ஏதோ அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபி என நினைத்து ரசாயனங்களால் மண்ணைக் கொலை செய்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. நீர்வள மேலான்மையை முறைப்படுத்தி நவீன விவசாய எந்திரங்களால் கூட்டுப்பண்ணை முறையில் அதே சமயம் இயற்கையோடு இயைந்து விவசாயத்தை வளர்க்க வேண்டும்.

vasu balaji சொன்னது…

விந்தை மனிதன் சொன்னதுபோல் மிகச் சிறப்பான கட்டுரை செந்தில். தொடருங்கள்.

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

என்ன சொல்லுறதுன்னு தெரியல . சபாஷ் . . .
எனக்கும் ஒரு கனவு உண்டு நெறைய நிலம் வாங்கி போட்டு இயற்கையான முறை விவசாயம் செய்யணும்ன்னு . பார்க்கலாம் . .
உங்க பதிவ பத்தி சொல்லனும்னா நீங்கள் சொன்னது அதனையும் உண்மை . மக்கள் இடம் கண்டிப்பா விழிப்புணர்வு எற்படுதணும் .
தேங்க்ஸ் யுவர் போஸ்ட் . . .

a சொன்னது…

விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு...
முயற்சிகளுக்கு வாழ்துக்கள் செந்தில்..........

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

// இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள்//

எனக்கும் இப்பிடி ஒரு கனவு உண்டு :) தொடருங்க..

இயற்கையோடு இயைந்த விவசாயத்தில் ஆர்வம் உண்டு.. நமக்காகத் தான் வளர்க்கிறோம் என்றாலும், அந்தச் செடிகளும் இயல்பா வாழனும் இல்லையா?

ஹேமா சொன்னது…

தேவையான பதிவு செந்தில்!

ப.கந்தசாமி சொன்னது…

//சதுக்க பூதம் சொன்னது…//

நான் வழிமொழிகிறேன்.

PB Raj சொன்னது…

எல்லா விளைநிலங்களும் இன்றைக்கு மொத்தமாக அரசியல்வாதிகளின் கைக்கு மாறிவருகிறது... செந்தில் அருமையான பதிவு...

எனக்கும் விவசாயத்தின் மீது விருப்பம் உண்டு..ஆனால் எங்கள் நம்ம ஊரில் தான் நிலம் வாங்குவது கடினம் நீங்கள் சொன்ன மாதிரி அரசியல்வாதிகள் கையில் போய் விட்டது...

Unknown சொன்னது…

மிகவும் அவசியமான பதிவு, தெளிவான நடையில்......வாழ்த்துக்கள்.

Ravichandran Somu சொன்னது…

அருமையான பதிவு. நல்ல தகவல்கள்...தொடரவும்.

இன்னும் 5-10 வருடங்களில் இந்தியாவில் விவசாயத்தில் கார்ப்பரேட் கம்பெணிகள் இறங்கிவிடும் என்பது என் கணிப்பு.

//இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். //

எனக்கும் இந்த ஆசை இருக்கிறது. 10 வருடங்களுக்குப் பிறகு:)

அமெரிக்காவில் வேலை பார்த்த என் கல்லூரித் தோழன் (University Gold Medalist in Mechanical Engineering) திடிரென்று ஒரு நாள் குடும்பத்தோடு இந்தியா சென்று விட்டான். இப்போது தேனியில் 25 ஏக்கர்கள் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறான்!

குடுகுடுப்பை சொன்னது…

பஞ்சாயத்து தலைவர் பங்கிட்ட பிறகு கிடைக்கும் மிச்சத்தை வாங்கி சரக்கடிச்சுட்டு உலக அரசியல் பேசுவார்கள்.
//

தஞ்சாவூர்க்காரனோட அடையாளமே வெறும்பேச்சுதானே?

Unknown சொன்னது…

அருமையான பதிவு.நான் எனது ஊரில் இப்பொழுதுதான் தொடங்க ஆயத்தங்கள் செய்துகொண்டு இருக்கிறேன்...

காமராஜ் சொன்னது…

அன்பின் செந்தில்.

பேருந்துகளில் பயணம் செய்யும் போது மனம் பதறுகிறது.நேற்று திருமங்கலம் போய்விட்டு திரும்பவந்த போது ரோட்டடியில் உள்ள நிலங்கள் ஒரு குறிப்பிட்ட நிலக்கொள்ளைக்காரக்கம்பெனியின் பெயரில் வளைத்துப்போடப்பட்டுள்ளது.என் மனைவி கேட்டாள் 'பாருங்க எல்லா இடத்திலும் இவிங்களே ப்ளாட் பொட்றாங்க யாருங்க இவிங்க'.என்று அவன் பணவசதியை பெருமிதப்பட்டாள். எனக்கு அங்கு விளைம்ந்த கம்பு சோளம் பருத்தி உளுந்து காணாமல் போன வருத்தம் மேலிட்டது.

இப்போது கடைகளில் கிடைக்கிற மஞ்சள் நிற மோரிஸ் பழம் ரிலையன்ஸ் பழம் என்று மாது சொன்னான். இருக்கிற விவசாயிகள் கூலிக்காரர்களைக்குற்றம் சொல்லிவிட்டு நிலத்தை விற்றுக்கொண்டிருக்கும்போது அந்த வெண்ணெய் மட்டும் விவசாயம் எப்படிச்செய்கிறான். இந்தியா ஒரு பெரிய ஆபத்தை நோக்கி கண்மண் தெரியாத வேகத்தில் போகிறது.கவலைப்பட பத்து சதமக்கள் கூடத்தயாராக இல்லை.

பால்காரர்கள் குறைந்துகொண்டே போய் பன்னாட்டு பால் பண்ணைகள் பெருகிவருகிறது.
கோமணங்கட்டிய விவசாயிக்கு 2000 ரூ தள்ளுபடி செய்தால் அறிவுலகம் பதறுகிறது.எம் ஏ எம் சிதரம்பரத்துக்கும்,சத்யத்துக்கும் 750 கோடி மானியம் கொடுத்தால் அது குறித்து தெரிந்து கொள்ளக்கூட இங்கு வழியில்லை.நமக்கு ஊழலானாலும் சரி,தள்ளுபடியானாலும் சரி மெகா சைசில் தான் தேவைப்படுகிறது.

110 கோடி மக்களில் நிலம்,மானம்,மரியாதை எல்லாவற்றையும் ரிலையன்ஸ்,டாடா,மிட்டல் வகையறாக்கள் கைகளுக்கு தாரை வார்த்துவிட்டு எல்லாவற்றுக்கும் காத்திருக்க காலம் நெருங்குகிறது.

தாமதிக்கிற ஒவ்வொரு பொழுதும் நமது தலையில் நாம் வைத்துக்கொள்கிற கொள்ளி.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

மிகவும் அவசியமான பதிவு,

NaSo சொன்னது…

/இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள்.//

நான் தயாராகிக்கொண்டே இருக்கிறேன் அண்ணா.

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்பு நண்பா... வணக்கம். மிகச் சரியான நேரத்தில் இந்த பதிவை பதிந்துள்ளீர்கள். உண்மையை உரத்துப் பேசும் உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது. ஆனாலும் நம் மக்கள் நாம் சொன்னால் கேட்க மாட்டர்கள். இவர்களுக்கு எல்லாமே வெளிநாட்டான் எவனாவது சொன்னால் மட்டுமே புத்தியில் எட்டும். என்ன செய்ய....250 ஆண்டுகால அடிமைத்தனம் இன்னும் நம்மிடையே "பழக்கதோசமாக" தொடர்கிறது.

# உங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் உங்களுக்கு ஒரு தகவல்.... இயற்கையான முறையில் விளையும் தானியங்களில் மட்டுமே இயற்கையின் இடர்பாடுகளைத் தாங்கி வளரும் தன்மையும், எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது...என்றும், பாரம்பரிய உணவுதானியங்களை பயிரிடுங்கள் என 2000 ங்களின் ஆரம்பத்தில் ஒரு இதழில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தேன். ஆனால் அவர்களே இந்திய வம்சாவளித் தானியங்கள் பலவும் இன்று அழிக்கப் பட்டு விட்டன என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

# உங்களுக்கு பின்னூட்டமிட்ட சதுக்கப் பூதம், மற்றும் விந்தை மனிதன் இவர்களுடைய கருத்துக்கள் யோசிக்க வேண்டிய விசயங்கள்.

# நம் தேசம் பசுமையாய் இருக்க நாம் நம்மால் இயன்றதை செய்வோம். இதை முன்னிருத்தி நான் ஏற்கனவே சில பதிவுகளை போட்டிருக்கிறேன். அவசியம் படியுங்கள். தலைப்பு......... "பிழை",

தங்களை நேரில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்... அலைபேசி, மற்றும் மெயில் முகவரி அனுப்புங்கள். மிக்க நன்றி.

தல தளபதி சொன்னது…

விவசாயத்தபத்தி ஒன்னும் தெரியலன்னாலும் உங்க எழுத்து நடை நல்லாருக்கு வழக்கம்போல, உங்ககிட்டருந்து கத்துக்கவேண்டிய விஷயம் இது.

மாணவன் சொன்னது…

அருமையாக மிகத் தெளிவாக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அண்ணே,

சரியான நேரத்திற்கு எழுதியுள்ளீர்கள்...

தொடரட்டும் இந்த சிறப்பான பணி

உமர் | Umar சொன்னது…

எங்கே தொடங்க? எங்கே முடிக்க?

// இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று பணவீக்க விகிதம், இன்னொன்று உணவுப் பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகத்துள் கொண்டுவந்தது.//

முதல் காரணத்தை ஒத்துக்கொள்கின்றேன். இரண்டாவது காரணம் அதுவல்ல.

மூன்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற சில நிகழ்வுகள். விளை பொருட்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், பெரு மழை, வெள்ளத்தில் விளைச்சல் மூழ்கியது. மழைக்கு முன்னர் ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.38 /-. மழையால் உற்பத்தி குறைந்ததால், தேவையை ஈடு செய்ய முடியாத பண்டிகை நேரத்தில் விலை இரு மடங்காகியது. இன்று வரையிலும் பருப்பின் விலை அதே 70 க்கு மேல்தான் உள்ளது.

அதே வருடம், இந்தியா தவிர்த்த எள்ளு விளைவிக்கும் நாடுகளில், எள்ளு விளைச்சல் குறைந்தது. அப்பொழுது, உள்ளூர் சந்தையில் இருந்த எள்ளு அனைத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்பொழுது எள்ளு மற்றும் நல்லெண்ணையின் விலை இரு மடங்காகியது.

இதேபோன்று ஒவ்வொரு பொருளின் விலையேற்றத்திற்கு பின்னும், ஏதேனும் ஒரு நிகழ்வு இருக்கின்றது. அவற்றை ஆராய்ந்து அதற்கேற்ற முடிவுகளை மேற்கொள்ளுவதன் மூலமே விலையேற்றத்தை கட்டுக்குள் வைத்தும் விவசாயத்தை பாதுகாக்கவும் முடியும்.

ஆடிப் பட்டம் தேடிப் பார்த்து விதைக்கணும் என்று சொன்னதை யாரும் பின்பற்றுவது இல்லை. கடந்த சில வருடங்களாக, மிகச் சரியாக அறுவடை நேரத்தில் பெரு மழை பெய்து விளைச்சல் மூழ்கி விடுகின்றது. உலகம் முழுவதுமே பருவ நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழலில், இன்றும் நாம் அதே ஜூலை 12 ல் தண்ணீர் திறப்பதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு மாற்றமாக ஒரு மாதம் முன்னரே மேட்டூரில் நீர் திறப்பதை ஆலோசித்து, விதை விதைப்பதை சற்று முன்கூட்டியே செய்ய ஆலோசித்து அறுவடை சமயத்தில் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாமே.

விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் உள்ளூர் சந்தைக்கு மிஞ்சியது போகவே ஏற்றுமதிக்கு என்னும் நிலையை எடுத்தாலும், உணவுப்பொருட்களின் திடீர் விலையேற்றத்தை தவிர்க்க முடியும்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கும் விலையேற்றத்தில் பங்கு உண்டு. ஆனால், அது மட்டுமே காரணம் என்பது போல் பேசிக்கொண்டிருந்துவிட்டு உண்மையான காரணங்களை நாம் இங்கு விட்டு விடுகின்றோம்.

சதுக்கபூதம் அவர்களும், காமராஜ் அவர்களும் நல்ல பின்னூட்டங்களை இட்டுள்ளனர். காமராஜ் அவர்கள் தொட்டுள்ள விஷயத்தைப் பற்றி பேசத் தொடங்கினாலே, விவசாயத்தையும் விலையையும் கட்டுக்குள் வைக்க வழி பிறக்கும்.

(டைப் பண்ண முடியல. பின்னூட்டம் பாட்டுக்கும் நீண்டுக்கிட்டே போகுது. பார்ப்போம் அப்புறமா வந்து தொடர்கின்றேன்)

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அற்புதம் பாஸ், தொடருங்கள் காத்திருக்கிறேன்.

ஜெயந்தி சொன்னது…

விவசாயத்திலயிருந்து எல்லாமே தறிகெட்டு போய்க்கிட்டிருக்கு.

சசிகுமார் சொன்னது…

அவசியமான பதிவு செந்தில் சார்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .பசுமை விகடனில் வரும் "பூச்சிகளும் உங்கள் நண்பனே" என்று செல்வம் என்பவர் எழுதுவர் அவர் என் நண்பரே .பல சமயங்களில் நான் அவருக்கு powerpoint presentation போட்டு கொடுக்கும் போது உங்கள் கருத்துகளை அவர் சொல்லுவார் .........இன்னும் விழிப்புணர்வு வர நாள் ஆகுமோ என்றே அச்சம் இருக்கிறது எனக்கு ................

Raja சொன்னது…

Good post

Unknown சொன்னது…

// மழைவிட்ட மறுநாள்
அடிக்கும் வெயில்..
கிளம்பும் புழுதி..
இலவசமாய் எங்கள்
தலைகளுக்கு அடித்துப்போகும் -'டை' வாழ்கின்றன
'ஷாம்பூ கம்பெனிகள்!' //

கவிதையா எழுதுறீங்க பாஸ்! :))
முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க!

Unknown சொன்னது…

அருமையான பதிவு

சிவானந்தம் சொன்னது…

செந்தில், விவசாயத்துறையை பற்றி நான் ரொம்ப கவனமாக எழுத வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே தினமலரில் `இது உங்கள் இடம்` பகுதியில் `குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதா?` என்ற தலைப்பில் நான் ஒரு கடிதம் எழுத, அதை படித்த தினமலர் வாசகர்கள், என்னை நையபுடைத்து விட்டார்கள். நான் எழுதிய கடிதம் கொஞ்சம் பெரியது என்பதால் தினமலர் அதை சுருக்கி வெளியிட, நான் சொல்ல நினைத்த கருத்து அவர்களுக்கு முழுமையாக போய் சேரவில்லை. அவர்களுக்கு நான் விளக்கமாக பதிவு போடப்போகிறேன். உங்களின் இந்த பதிவிலும் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதைப்பற்றியும் விளக்கமாக எனது பதிவில் பாப்போம்.

ராஜ நடராஜன் சொன்னது…

உங்களது விவசாயம் செய்யலாம் வாங்க மன அலைகளுக்கு தக்கபடி விவசாயமே கனவாக இருக்கும் ஒரு சிலரை பதிவுலகம் மூலமாக அறிவேன்.

இருக்கும் நிலங்களை ஒன்றுக்கு ஒன்று இலவசம்ன்னு நிலங்களை வீட்டுமனையாக்கும் திட்டங்களையே தொலைக்காட்சிகள் பரப்பொளி செய்கின்றன.நகர் நகரமா அவ்வளவு பெரிய நிலங்களுக்குப் பின்னால் மொத்த நிலத்தையும் வாங்க பணமுதலீடு எங்கிருந்து வருகின்றன என்பதெல்லாம் தோண்டிப்பார்க்க வேண்டிய விசயம்.

எல் கே சொன்னது…

நீங்கள் எழுதியதில் மிகச் சிறந்த பதிவு இது செந்தில். தொடர்ந்து இது மாதிரியான பதிவுகள் வர வேண்டும் உங்கள் வலைப்பூவில்

தமிழ் உதயன் சொன்னது…

உங்கள் பதிவிலேயே என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது. நாளைக்கு உணவுக்கும் தண்ணீருக்கும்தான் இந்த உலகம் அடித்து கொள்ள போகிறது என்பதை உணர் வைத்துள்ளிர்கள்.

சத்ரியன் சொன்னது…

//கரங்களை இணைத்துகொள்வோம்//

நிச்சயமாக செய்தே ஆகனும் செந்தில்.

Unknown சொன்னது…

//எல்லா விளைநிலங்களும் இன்றைக்கு மொத்தமாக அரசியல்வாதிகளின் கைக்கு மாறிவருகிறது...//

உண்மை தான். எல்லா இடங்களிலும் கண் கூடாக பார்க்க முடிகிறது. யொசிக்க உங்கள் வலைப்பூவின் தலைப்பு தான் எஞ்சி நிற்கிறது.

Unknown சொன்னது…

உங்கள் பதிவுகளிலிருந்து நல்ல வாசிப்பு அனுபவத்தை பெற முடிகிறது. நன்றிகள்..

THOPPITHOPPI சொன்னது…

இன்றைய சூழலில் விவசாய தேவை பற்றிய பயனுள்ள பிதிவு. விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் எல்லாம் இப்போது நோகாமல் கோடிஸ்வரன் ஆக முயற்ச்சித்து வருகிறார்கள்(நிலங்களை விற்க). இன்று விவசாயியே தன நிலத்தை விற்று மகனை படிக்கவைக்கதான் ஆசைபடுகிறான் வெளிநாட்டுக்கு அனுப்ப.

ராஜன் சொன்னது…

இன்னும் பத்து வருடத்தில் ஒரு கிலோ அரிசி 100௦௦ ரூபாய் விற்கும் , அப்பொழுது விவசாயம் Corporate நிறுவனம் கையில் இருக்கும் , Reliance agri limited என்று வந்தால் கூட ஆச்சரியம் இல்லை , அதற்கு முன் முந்துவோம்.

ஈரோடு கதிர் சொன்னது…

பசுமை விகடன் மிக நல்ல காரியம் செய்கிறது...

அடுத்து விவசாயிகளைக் குறை கூற ஒன்றுமேயில்லை... எல்லோரும் விட்டுவிட்டு நகர்புறத்துக்கு ஓடும் போது, இன்னும் பொறுத்துக்கொண்டு காலம் தள்ளும் அவர்கள் வணக்கத்துகுரியவர்கள்... பாழாய்ப் போகும் அரசு கொஞ்சமாவது வழிகாட்டித் தொலையலாம்

அரசூரான் சொன்னது…

நானும் விவசாயம் பண்ணனும்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன்... பார்ப்போம்.

Vetirmagal சொன்னது…

உங்கள் பதிவைப் படிக்கும் போது , 'அருமை' என்று மனதில் எண்ணம் ஓடியது.

http://csm-fanaa.blogspot.com/2010/10/banana-bounty.html

என்கிற பதிவு உங்கள் கருத்துக்களை நடைமுறையில் பின்பற்றுகிறார் என்று நினைக்கறேன்.

podang_maan சொன்னது…

//பசுமை விகடன் மிக நல்ல காரியம் செய்கிறது...

அடுத்து விவசாயிகளைக் குறை கூற ஒன்றுமேயில்லை... எல்லோரும் விட்டுவிட்டு நகர்புறத்துக்கு ஓடும் போது, இன்னும் பொறுத்துக்கொண்டு காலம் தள்ளும் அவர்கள் வணக்கத்துகுரியவர்கள்... பாழாய்ப் போகும் அரசு கொஞ்சமாவது வழிகாட்டித் தொலையலாம் //

இதெல்லாம் வேலைக்காவுதுங்க. அவனவன் பொழப்ப பாக்குறத விட்டுட்டு விவசாயம், உணவுப் பஞ்சம், புரட்சின்னு பேசிட்டு பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே..

யாராவது இவருக்கு அட்வைஸ் பன்னுங்கப்பா வேற வருமானம் வற்ற வேலய பாக்கச் சொல்லி

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அருமையான பதிவு....

தனி காட்டு ராஜா சொன்னது…

//இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள். கரங்களை இணைத்துகொள்வோம்.//


அண்ணா .... இன்னும் 3 வருடம் கழித்து விவசாயம் செய்யலாம் என்று உள்ளேன் ....
அப்போ உங்கள contact பண்ணலாம் என்று உள்ளேன் ...
கண்டிப்பா பதிவு உலகத்துல இருக்க மாட்டேன் ....
வலை சரத்துல அறிமுக படுத்துன மாதிரி ,தம்பிக்கு கொஞ்சம் விவசாயத்த பத்தி டீப்பா அறிமுகம் செய்து வையுங்க..

தனி காட்டு ராஜா சொன்னது…

:)
For Following....