1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.
நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.
இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர். - புத்தர்
ரவி மடக்க நினைத்து தோற்றுப்போன அந்தப்பெண் பளீரென வசீகரமாக இருப்பாள். ரவிக்கும் எனக்குமே அவள் உறவுப்பெண். பார்க்கும் யாருக்கும் அவள்மேல் ஒரு சபலம் உண்டாகும். ரவிக்கு இதுபோன்ற விசயங்கள் சர்வ சாதாரணம், எங்க செட்டில் அப்போது அவனுக்குத்தான் இப்படியான பெண் தொடர்புகள் அதிகம். எங்கள் கிராமத்தின் மிகுந்த கட்டுபாடுகளையும் மீறி இந்த விசயத்தில் அவன் கொடிநாட்ட காரணமே வறுமை மிகுந்த கூலியாட்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் எங்கள் தெருவை அடுத்து வசித்து வந்ததுதான். மாற்றானுடன் அந்த வீட்டு பெண்கள் உறவு வைத்துக்கொள்வதை அவர்கள் வீட்டு ஆண்மக்களே பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
அன்று ஆற்று மணலில் இதற்காக வந்த பெண்மணி மறுநாள் காலை எங்கள் வீட்டு வயல்வேலைக்கு வந்திருந்தாள். மதிய சாப்பாட்டு நேரத்தில் எல்லோரும் சீக்கிரம் தங்கள் வேலையை பார்க்க போய்விட இவள் மட்டும் வெற்றிலை போட்டுவிட்டு வருகிறேன் என கடைசியாக சாப்பிட்டுக்கொண்டிருந்த என்னோடு பேச ஆரம்பித்தாள். சின்னத்தம்பி (வீட்டின் கடைக்குட்டி நான் என்பதால் எல்லோரும் அப்படிதான் அழைப்பார்கள்)
"நீங்க இதுவரைக்கும் பொம்பளை வாசனையே புடிச்சது இல்லையா?" என நேரடியாகவே கேட்டாள். நான் தலைகுனிந்து கொண்டேன்.
"இதுல வெக்கப்பட என்ன இருக்கு சின்னத்தம்பி, உனக்கு எப்ப தோணுதோ, அப்ப கூப்பிடு, நான் வர்றேன், அதுக்காக நீ எனக்கு காசெல்லாம் தரவேணாம்" என்றாள்.
நானோ " உனக்கு நான் எவ்வளவு வேனுன்னாலும் பணம் தர்றேன், ஆனா எனக்கு அந்தப் பெண்ணை பேசி விட முடியுமா? என நான் மடக்க நினைத்த பெண்ணின் பெயரை சொன்னேன்.
"ஆத்தாடி! ஆசயப்பாரேன்.. அதெல்லாம் நம்மால ஆவாதுப்பா.. அது உங்க சாதிப் பொண்ணு வேற, அப்புறம் நாளை பின்னே எதாச்சும் ஆச்சுன்னா, உங்க வீட்டு கவுரவமே கப்பலேறும், ஆளா விடுடா சாமி" என வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டாள்.
ஆனால் அடுத்த இரண்டாம் நாளே தான் அந்தப்பெண் மற்றும் சிலரோடு உள்ளிக்கோட்டைக்கு முதல் காட்சி சினிமாவுக்கு போவதாகவும், அவளுக்கும் என் மேல் ஆசை இருப்பதாகவும் எப்படியாவது என் நண்பர்களை தவிர்த்துவிட்டு சினிமாவுக்கு வந்துடு என சொல்லிவிட்டு போனாள்.
எனக்கு ஆர்வம் இருந்த அதே அளவு பயமும் வந்துவிட்டது, ஆனால் இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது என முடிவு செய்தேன். எங்கள் ஊரில் இருந்து சரியாக மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளிக்கோட்டை கிராமம். அங்குதான் ஒரு திரையரங்கம் இருந்தது. எங்கள் ஊரிலிருந்து படம் பார்க்க அங்குதான் நாங்கள் போயாக வேண்டும். எங்கள் ஊரில் ஓடும் ஆற்றின் கரையிலேயே நடந்துபோனால் அது நேராக அந்த திரையரங்கத்தில் கொண்டுபோய்தான் விடும். ஆற்றின் இருபுறமும் வயல் காடுகளும் சவுக்கு தோப்புகளும் இருக்கும், தனியாக யாரும் போகமுடியாது. அதிலும் பெண்கள் தனியாக போகவே மாட்டார்கள். காரணம் பேய் பயம், காலகாலமாக உலவி வந்த பேய்க்கதைகள் எல்லோரையும் பயமுறுத்தி வைத்தன.
அன்று முன்கூட்டியே எனக்கு உள்ளிக்கோட்டையில் முக்கியமான வேலை இருக்கிறது என நண்பர்களிடம் சொல்லிவிட்டு தனியாக போய்விட்டேன். படமும் பார்த்தோம். சொன்னபடி அவர்கள் இருவரும் வந்திருந்தனர். இடைவேளையில் என்னிடம் சாதரணமாக வந்து பேசுவது மாதிரி, வீட்டுக்கு போகுபோது புதுப்பலத்தில் இருந்து சீதாரம் போகிற வழியில் கொஞ்ச தூரம் போனால். தென்னை தோப்புகள் இருக்கும், அந்த இடத்தில் முன்கூட்டியே போய் காத்திருக்க சொன்னார்கள்.
அன்று எல்லாம் கட்சிதமாக முடிந்தது.
அதன்பிறகு எனக்கும் குளிவிட்டுப்போய்விட் டது. ஆனால் எப்போதுமே நான் மிககவனமாக இருக்கும் விசயம் என்னவென்றால் யாரும் கர்ப்பமாகிவிடகூடாது என்பதில்தான். பக்கத்து ஊரின் அரசு மருத்துவமனையில் வேண்டிய அளவுக்கு நிரோத் இலவசமாக கிடைக்கும்.
இப்படியாக... படிப்படியாக என் விளையாட்டுகள் பல பெண்களை நாடியது. நண்பர்களுக்கும் விசயம் தெரிந்தது. ஆச்சர்யமாக அதன்பிறகுதான் என்னை வெகுவாக மதிக்கவே ஆரம்பித்தனர். என் சீனியர் நண்பர்களை நான் வாடா, போடா என அழைக்க ஆரம்பித்தேன். அவர்களும் எரிச்சலுடன் பொருத்துகொண்டனர். குறிப்பாக நண்பர்கள் ரவியும், செங்குட்டுவனும் என்னை தங்கள் வயது ஒத்தவனாக மதிக்க ஆரம்பித்தனர்.
'இரவுக்கு ஆயிரம் கண்களடா' என்ற பாட்டு என் வாழ்விலும் உண்மையாகியது. என் வீட்டினருக்கு விசயம் கொண்டு செல்லப்பட்டது. அம்மா என்னிடம் அன்றுதான் குடும்பத்தின் கவுரவம், நான் எவ்வளவு பெரிய தப்பை செய்கிறேன் என என்னிடம் மிகுந்த துயரத்துடன் சொன்னார்.
என் அம்மா என்னிடம் கடைசியாக "தம்பி சிகெரெட் பிடித்தால் உன் உடம்பு மட்டுமே பாழாகும், குடி உன்னுடன் உன் நண்பர்களையும் பாழாகும், ஆனால் இன்னொரு பெண்ணின் தொடர்பு இரண்டு குடும்பங்களை ரோட்டில் கொண்டுவந்து நிறுத்தும், இதற்க்கு மேல் நான் உனக்கு எதுவும் சொல் விரும்பவில்லை" என்றார்.
என் வாழ்நாளில் அதன்பிறகு நான் என் மனைவியைத் தவிர எந்த பெண்ணையும் இன்றுவரைக்கும் தொட்டதில்லை. அதற்கு இன்னொரு காரணம் ஒன்றும் உண்டு அது என்னுடைய தீராக்காதல் 'கீதாஞ்சலி' வாழ்வில் நாம் நமக்கென்று ஒரு காதலை அதிலும் முதல் காதலை சாகும்வரைக்கும் மறக்க முடியாது. எனக்கு இருந்த முதல் காதல் வயதுக்கோளாறு ஆனால் கீதாஞ்சலிதான் நான் சந்தித்த, அவளுடன் வாழ விரும்பிய முதல்பெண். முதன்முதலில் இவளை பார்க்கிறபோது எனக்கு தெரியாது நான் இவளை காதலிப்பேன் அதனால் பைத்தியமாகி தற்கொலைவரைக்கும் போவேன் என்று. ஆனால் விதி என்னை வலிந்து பிரச்சினைகளுள் தள்ள ஆரம்பித்தது அப்போதுதான், அவளுடன் பழகிய அந்த ஆறுமாத காலத்திற்குப்பின் இன்றுவரைக்குமே எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இப்போதும் கூட அருமையான குடும்பம், நல்ல உள்ளம் கொண்ட சில நட்புகளால் மட்டுமே நான் என் சுயத்தை காப்பாற்றி வருகிறேன்.
ஆனால் பிரச்சினைகள் என் வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை ..
தொடரும் ...
13 கருத்துகள்:
என்ன சொல்றதுன்னு தெரியலைங்க
விக்கி உலகம் கூறியது...
என்ன சொல்றதுன்னு தெரியலைங்க//
enakkumthaan
என்னத்தை சொல்ல......
முதலில் சொன்ன விசயம்....
ஆனால் சொல்லுகிறவிதம்
நன்றாக உள்ளது.
தொடர.
வாழ்த்துக்கள்
\\தம்பி சிகெரெட் பிடித்தால் உன் உடம்பு மட்டுமே பாழாகும், குடி உன்னுடன் உன் நண்பர்களையும் பாழாகும், ஆனால் இன்னொரு பெண்ணின் தொடர்பு இரண்டு குடும்பங்களை ரோட்டில் கொண்டுவந்து நிறுத்தும்,\\
உண்மையிலும் உண்மை....
வாழ்த்துகள்
நம்மை திசைதிருப்புவதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை முள்ளா... மலரா..? உங்களை அன்னை திசைதிருப்பியுள்ளார்.....
துணிச்சலான பகிர்வு தோழர்.....
நல்லாருக்கு...ஆனா அவசர அவசரமா எழுதினமாதிரி இருக்கு.
தொடர்கிறேன் நண்பரே...கலக்குங்க.
என்ன சொல்றது பாஸ்! சொன்னவிதம் அருமை!
துணிச்சலான பகிர்வு. கலக்குங்க.
துணிச்சலான எழுத்துக்கள். வாழ்த்துக்கள்.
துரோணா -3ற்கு காத்திருந்தேன். உங்கள் துணிச்சல்கள் உண்மையில் பிடித்திருக்கின்றது.
//\\தம்பி சிகெரெட் பிடித்தால் உன் உடம்பு மட்டுமே பாழாகும், குடி உன்னுடன் உன் நண்பர்களையும் பாழாகும், ஆனால் இன்னொரு பெண்ணின் தொடர்பு இரண்டு குடும்பங்களை ரோட்டில் கொண்டுவந்து நிறுத்தும்,\\//
அந்த தாய்க்கு உண்மையை எடுத்துரைக்கும் தைரியம் அதிகம். சுத்தி வளைச்சு பயந்து பயந்து சொல்வதற்கு நேரடியாக இப்படி பேசியதே ஆணி அறைந்தாற்போல.
கருத்துரையிடுக