19 பிப்., 2012

கடவுள்களும்,கந்தசாமிகளும்...

பிள்ளையார் 
பிரச்சினை இல்லை
அருகம்புல் வைத்தால்
சரியாப்போச்சு
முருகன் கோபக்காரன் 
சஷ்டி விரதம் முக்கியம்
சனி பாவம் தீர்க்க
அதே சனியன்று
எல்லாக் கிரகத்துக்கும் சேர்த்து
பனிரெண்டு முறை சுற்றினால் சுபமே..

கர்ப்பக் கிரகம் வெளியேயும்
ஏதேதோ சாமிகள்
கற்பூரமோ
நெய்விளக்கோ 
அல்லது 
வலது கையை எடுத்து 
உதட்டருக்கே ஒரு ”ச்” சோ..

இப்படியாக 
சாமிகளை வணங்கி
வேண்டும் வரம்
கிடைக்காமல் போனால்
பித்ருக்கள் சமாதானம் ஆக
அமாவாசை விரதம் இரு
குலதெய்வம் தேடி ஓடு
கூடவே ரெண்டு ஆடு
குவார்ட்டர் பிராந்தி
படுகை சுருட்டு ஒரு கட்டு..

கடவுளுக்கும் தெரியவில்லை
மனுசனுக்கும் விளங்கவில்லை
எதைக் கொடுத்து
எதைப் பெறுவதென்று...

7 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

suuuper mapla

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

உங்கள சாமி கண்ண குத்தப்போகுது

Yaathoramani.blogspot.com சொன்னது…

சாமிக்குத் தேவையில்லாததைக் கொடுத்து
மனிதன் சினமூட்டுவதால்
சாமியும் பதிலுக்கு மனிதனுக்குத்
தேவையானதைக் கொடுக்காமல்
வெறுப்பேற்றுகிறதோ
மனம் கவர்ந்த பதிவு

Thava சொன்னது…

சிறப்பாக உள்ளது சகோ..நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

ஹேமா சொன்னது…

இண்ணைக்கு சிவராத்திரியம் ஐரோப்பிய நாடுகளில.நம்ம நாடுகளில எல்லாம் நாளைக்காம்.இதெப்பிடின்னு கேக்கக்கூடாது.இப்பல்லாம் இரண்டு நாள் பொங்கல்,தீபாவளி அதுபோல சிவராத்திரியும்.பாருங்கோ செந்தில் சிவனும் நாடுவிட்டு நாடு அலைகிறார் நமக்கெல்லாம் அருள்தர.அவரைப் பகிடி பண்ணக்கூடாது !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பதிவு ! நன்றி நண்பரே !

உணவு உலகம் சொன்னது…

கவரும் கவிதை.