22 பிப்., 2012

வசந்த கால கோலங்கள்....


சொற்கள் நடனமிடும் 
கவிதையாய்
வரி வரியாய் 
வாசம் ததும்பும்
வசனங்கள் நிறைந்தது
நம் காதல்..

பிரதி வெள்ளிக்கிழமை 
சாயங்காலம் 
சரியாக ஐந்து மணிக்கு 
பிரகார வெளியில் 
இரு ஜோடி காலணிகள்..

உள்ளே சாமியும் 
ஓங்காரமும் 
ஓம்காரத்தின் உள்ளுணர்வும் 
கடந்து வரும் 
தெய்வீகம் நீ...

நீ பேசும்போது
புருவ மடல்களில்,
ஆடும் செவியின் 
தொங்கல்களில் நான்..

சலிக்கவே இல்லாத ''நின்னையே பா’ரதி'’
பிங்க் நிற சல்வார்,
முதல் கடிதம்,
சிவப்பு ரோஜா.. 

எல்லாமே 
நினைவுகளில் மட்டும்
என்றானபின்
இப்போதும் இருக்கிறதா?
உன் கணவனோடு 
நான் கை குலுக்கிய 
புகைப்படம்..

5 கருத்துகள்:

கோவை நேரம் சொன்னது…

அருமை...

Philosophy Prabhakaran சொன்னது…

சொம்பு ரொம்ப அடி வாங்கியிருக்கும் போல இருக்கே...

Thava சொன்னது…

சிறப்பான பகிர்வு சகோ..நல்ல பதிவு..நன்றி.
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான வரிகள் ! நன்றி !

Yaathoramani.blogspot.com சொன்னது…

எல்லாமே
நினைவுகளில் மட்டும்
என்றானபின்
இப்போதும் இருக்கிறதா?
உன் கணவனோடு
நான் கை குலுக்கிய
புகைப்படம்..//

அருமை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்