என்னிடம் இருக்கும்
ஆயுதங்களை
யாருக்காவது தர விரும்பினேன்
எவரும் முன்வராத
மூன்றாம் நாள் இரவில்
ரத்தக் கறைகள்
படிந்த கத்தி
விசும்பத்துவங்கியது
இரண்டு குண்டுகள்
மட்டுமே மீதமிருந்த
துப்பாக்கி
தன்னைத் தானே சுட்டு
தற்கொலை செய்துகொள்ளப்போவதாக
மிரட்டியது
பயண்படுத்தாத மீத ஆயுதங்கள்
தம்மை கயாலான் கடையில்
போட்டுவிடாதே
எனக் கெஞ்சியது
வேறு வழியே இல்லாமல்
அருகில் இருந்த காவல் நிலையத்தில்
ஒப்படைத்தேன்
அவர்கள்
என்னைப் பிடித்து வைத்துக்கொண்டு
இதுவரை யாரும் சிக்காத வழக்குகளை
என் பெயரில் முதல் தகவல் அறிக்கை
தயாரித்து
ஒப்புதல் கையெழுத்தோடு
சிறையில் தள்ளினார்கள்
கம்பிகளுக்குப் பின்னால்
ஒரு சுயசரிதை எழுதிக்கொண்டிருந்தபோது
அறை நண்பர்கள்
தங்கள் ஆயுதமாக மாறிய கதையினை
சிலர் அதனை சாகசமாகவும்
சிலர் கண்ணீரோடும்
சிலர் கிடைக்காத கூலிக்காக
கோபத்துடனும்
பகிர்ந்தனர்
எங்கள் கதை வெளியிடும்
வாரப்பத்திரிக்கை
வெளியே சூடாக விற்பதாகவும்
அதற்கான சன்மானமாக
லட்ச ரூபாயும் தந்தனர்
அனைவருக்கும் நான் அதனை
சரியாக பகிர்ந்தளிக்கவில்லை என
ஒரு நள்ளிரவில்
என்னைக் கொலை செய்துவிட்டனர்..
3 கருத்துகள்:
கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவுன்னு சொல்றமாதிரி என்ன ஒரு கற்பனை !
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
அருமையான கவிதை சகோ... நெஞ்சை பிழிகிறது சகோ...
Super....superooooooooooooooo
super......
Realy....
கருத்துரையிடுக