20 பிப்., 2012

மூடுபனி...


மெர்குரி விளக்குகளின் கீழ்
இடம்மாறும் 
நெடுஞ்சாலை நிழலென
தேய்ந்து
வளர்ந்து
இந்த நகரத்தில்
சுற்றுகிறதென் வாழ்வு..
...........................................................

நுரைத்திருந்த கோப்பைகளின்
வழியே ஊடுறுவும்
பொன்னிறக் குமிழிகளாய்
ஒரு 
நீள் இரவு நகர்கிறது
காலியாகும் பாட்டில்கள்
கலைந்த சித்திரமாய்
மேசைக்கடியில் 
ஓர் உடைந்த காதலை
ஒப்புவிக்கிறது...
.............................................................
கூட்டம் அதிகமாக இருந்த 
டாஸ்மாக் பார் ஒன்றில்
நின்றவாரே
V.S.O.P 
முழு பாட்டில்
நெத்திலி ஃப்ரை - 2
ஆம்லெட் - 2
ஆஃபாயில் - 4
கொஞ்சம் கலைஞர்
கொஞ்சம் ஜெயலலிதா
கொஞ்சம் சினிமா
நிறைய வம்பு
போதைக்கு ஊறுகாய்..

.........................................................

முன்னெப்போதும் இல்லாத
உற்சாகம் எனக்கு
நீ செத்துப் போனதால்
கொஞ்சம் வருத்தமும் இருந்தது
நான்
கொன்றிருக்க வேண்டும் ..

10 கருத்துகள்:

சிராஜ் சொன்னது…

KRP அண்ணே,

உங்க கவிதை எதும் நம்ம சிற்றறிவிற்கு எட்டவே மாட்டேங்குதே. ஒரு வேலை இது நவீன பின் நவீனத்துவ கவிதைகளோ???? உங்களுக்காவது வெளங்குதா????

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//கொஞ்சம் கலைஞர்
கொஞ்சம் ஜெயலலிதா
கொஞ்சம் சினிமா
நிறைய வம்பு
போதைக்கு ஊறுகாய்..///

நச்சு....

rajasundararajan சொன்னது…

//மெர்குரி விளக்குகளின் கீழ்
இடம்மாறும்
நெடுஞ்சாலை நிழலென
தேய்ந்து
வளர்ந்து
இந்த நகரத்தில்
சுற்றுகிறதென் வாழ்வு..//

உள்ளுறைப் பொருட்களையே ஆர்வம் கொள்பவன் ஆயினும், இப்படிக்கொத்த மொழிகளை மையலுறாமலும் இருக்க முடியவில்லை.

Marc சொன்னது…

அருமைக் கவிதை வாழ்த்துகள்

Thava சொன்னது…

ரொம்ப..ரொம்ப நல்ல கவிதை சகோ..சிறப்பான வரிகள்..நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

பெயரில்லா சொன்னது…

அவங்க பேர் என்ன... போனைக்குடு..போன் நம்பர் என்ன? இவரு கேப்டனாம். நல்லா பாருங்க. இவரு கேப்டனாம்...

பெயரில்லா சொன்னது…

அண்ணே நம்ம உடன்பிறப்பா? ரத்தத்தின் ரத்தமா?

dheva சொன்னது…

நகரத்து வாழ்வில் தேய்ந்து விரியும் நிழல் - எதார்த்தம்

டாஸ்மார்க் ஊறுகாய் - ரகளை


கொலை - அட்டகாசம்

நகரத்து வாழ்வில் தேய்ந்து விரியும் நிழல் - எதார்த்தம்

டாஸ்மார்க் ஊறுகாய் - ரகளை

கொலை - அட்டகாசம்.

அடிக்கடி இந்த ப்ளோவுலயே எழுதுங்க செந்தில்... அருமை..!

ஹேமா சொன்னது…

செத்துப்போனதில் உற்சாகம்,டாஸ்மார்க் பிதற்றல் இரண்டும் அட்டகாசம் !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கருத்து ! சூப்பர் ! வாழ்த்துக்கள் !