5 மே, 2011

நடுக்கடல் பகலில்...

நடுக்கடல் பகலில்
மேலும்,கீழும்
ஒரே நீலம்..

பிறந்த இடத்திற்க்கே
வந்து சேர்ந்தது
நிலத்தை விரும்பாத
பெருமழை..

வயிற்றுப் பாட்டுக்கென
நான் மீனையும்
பெருமீன் சிறுமீனையும்..

அப்போதுதான்
தன் கடைசிக் கலவியை
முடித்திருந்தது
வலையில் சிக்கிய மீன் ஒன்று..

ஒரே கடல்
பல பெயர்கள்
செத்த கடலென்றும்
ஒரு பெயருண்டு..

நடுக்கடல்
எனக்குமேலே பறந்துசென்றது
ஒரு பறவை
அருகில் இருக்கக் கூடும்
ஒரு தீவு..

கையளவு
நீரள்ளி குடிக்கமுடியாத!
கடலென்ன கடல்..

சுலபமாக
தின்றுவிடுகிறோம்
மீன்களையும்
மீனவன் கதைகளையும்
செரித்தும் விடுகிறது..

கடலை
வென்றவன் என்றது
ஒரு படகு
பாய்மரத்தைப் பார்த்து
காற்று நகைத்தது..

பெருங்கடலில்
சிறுமீன்கள் தேடும்
கட்டுமரக்காரனாய்
வாழ்வும், நானும்..

14 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>பெருங்கடலில்
சிறுமீன்கள் தேடும்
கட்டுமரக்காரனாய்
வாழ்வும், நானும்..

பஞ்ச்சிங்க் லைன்ஸ் சார்

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

அருமையான கவிதை..ரசித்துப் படித்தேன்..

வானம்பாடிகள் சொன்னது…

good one:)

Nagasubramanian சொன்னது…

outstanding!

ரஹீம் கஸாலி சொன்னது…

இன்றைய மீனவர்களின் வாழ்வை படம்பிடித்து காட்டும் கவிதை...நிதர்சனம்...

இன்றைய நம்ம பதிவு http://ragariz.blogspot.com/2011/05/gazalisblogger-meetting-in-chennai.html
கே.ஆர்.பி.செந்திலும், கேபிள் சங்கரும் பின்னே நானும்....

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

சுலபமாக
தின்றுவிடுகிறோம்
மீன்களையும்
மீனவன் கதைகளையும்
செரித்தும் விடுகிறது..//// வலி நிறைந்த வரிகள்...
என்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் !?

yogesh சொன்னது…

வாழ்க்கை ஒரு கட்டுமரம்...... பஞ்ச்சிங்கா முடிச்சிருக்கீங்க....

சசிகுமார் சொன்னது…

//கடலை
வென்றவன் என்றது
ஒரு படகு
பாய்மரத்தைப் பார்த்து
காற்று நகைத்தது..//

யதார்த்தம்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மனம் மயக்கும் வரிகள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மீனவர் வாழ்க்கையின் சங்கடங்களை எடுத்துரைக்கும் வலி மிகுந்த பதிவு.

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! சொன்னது…

////கையளவு
நீரள்ளி குடிக்கமுடியாத!
கடலென்ன கடல்..//////

தீர்க்க இயலாத தாகத்தை அழகாய் வார்த்தைகளில் சேர்த்த விதம் ரசிக்க வைக்கிறது சகா

thirumathi bs sridhar சொன்னது…

மீன் உண்பவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும்

கலாநேசன் சொன்னது…

//கையளவு
நீரள்ளி குடிக்கமுடியாத!
கடலென்ன கடல்..

சுலபமாக
தின்றுவிடுகிறோம்
மீன்களையும்
மீனவன் கதைகளையும்
செரித்தும் விடுகிறது..//

நிதர்சனம்.

வழிப்போக்கன் சொன்னது…

"பெருங்கடலில்
சிறுமீன்கள் தேடும்
கட்டுமரக்காரனாய்
வாழ்வும், நானும்.." - பொருள் பொதிந்த வரிகள்...!!!