16 மே, 2011

பயோடேட்டா - ஜெயலலிதா...

பெயர்                 : ஜெயலலிதா
இயற்பெயர்      : கோமளவல்லி 
தலைவர்           : எம்.ஜி.ஆர் (பேருக்கு மட்டும்)
துணைத் தலைவர் : சசிகலா (அறிவிக்கப்படாத)
மேலும்
துணை தலைவர்கள்
: தினகரன்,திவாகரன்,இளவரசி, வெங்கடேஷ்
                                            மற்றும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் 
வயது                  : பக்குவப்பட்டிருக்க வேண்டிய வயது
தொழில்             : முன்னாள் மந்திரிசபையின் ஊழல்களைத் தோண்டியெடுப்பது
பலம்                    : தன்னை மட்டுமே நம்புவது 
பலவீனம்            : எம்.ஜி.ஆரை சொல்லி ஒட்டு கேட்க வேண்டியிருப்பது 
நீண்ட கால சாதனைகள்  : கலைஞரின் சொச்ச முடியையும் கொட்ட வைத்தது 
சமீபத்திய சாதனைகள்    : 148
நீண்ட கால எரிச்சல்           : ஆண்கள் 
சமீபத்திய எரிச்சல்             : தேமுதிகவுக்கு 29
மக்கள்                            : வேறு வழியில்லாமல் ஓட்டுப் போடுபவர்கள்
சொத்து மதிப்பு            : மூனாவது ரவுண்ட் இப்பதானே ஆரம்பிச்சு இருக்கோம்
நண்பர்கள்                      : முன்பு வைகோ , இப்போது விஜயகாந்த் , தா.பா, மோடி
எதிரிகள்                         : காலில் விழாதவர்கள் 
ஆசை                               : உலக ஜனாதிபதி ஆவது 
நிராசை                           : பிரதமர் ஆவது 
பாராட்டுக்குரியது        : குருட்டு தைரியம் 
பயம்                                 : அப்படின்னா?.. 
கோபம்                            : பெண்டிங்கில் இருக்கும் நீதிமன்ற வழக்குகள்
காணாமல் போனவை : வளர்ப்பு மகன் 
புதியவை                          : புனித ஜார்ஜ் கோட்டை
கருத்து                               : கட்சிக்காரார்களுக்கு தனியாக இருக்க கூடாதது 
டிஸ்கி                                 : சோனியா டீ பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்காங்க,
                                                 கலைஞர் ரொம்பத்தான் படுத்திட்டாரோ!

22 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூடான பயோடேட்டா...

saro சொன்னது…

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.Share

Unknown சொன்னது…

interesting

ராஜ நடராஜன் சொன்னது…

நெடுஞ்சாண் கிடை யோகா கத்துக்க ஆசைப்படுறவங்க அணுக வேண்டிய முகவரி:

ரத்தத்தின் ரத்தங்கள்
அம்மா பேட்டை நெடுக்கு சந்து
ஜார்ஜ் கோட்டை வளாகம்
சென்னை 13.

மாணவன் சொன்னது…

super :)

பனித்துளி சங்கர் சொன்னது…

அமையாரையும் நீங்க விட்டுவைக்கவில்லையோ !? நல்ல இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அண்ணே ஆரம்பிச்சுட்டீங்களே...?

Chitra சொன்னது…

மக்களின் வோட்டு சக்தியை , அனைத்து கட்சியினரும் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புவோம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

ஆரம்பிச்சாச்சா ? இனிமேல் வலையில் எல்லோரும் மம்மியைத்தான் கொண்டாடுவார்கள் . பாவம் தாத்தாவை விட்டுவிட்டார்கள்.
இவர்களை விட்டால் நமக்கும் வேறு யார் இருக்கிறார்?

rajamelaiyur சொன்னது…

பின்னிடிங்க

rajamelaiyur சொன்னது…

வீட்டுக்கு ஆட்டோ வரும் ஜாக்கிரதை

rajamelaiyur சொன்னது…

இன்று இன் வலையில்
IPL ல நம்ம பதிவர்கள்
http://rajamelaiyur.blogspot.com/2011/05/ipl.html

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

//மக்கள் : வேறு வழியில்லாமல் ஓட்டுப் போடுபவர்கள்//

உண்மை

Unknown சொன்னது…

கலக்கல்கள்:

//தொழில் : முன்னாள் மந்திரிசபையின் ஊழல்களைத் தோண்டியெடுப்பது//
//சமீபத்திய எரிச்சல் : தேமுதிகவுக்கு 29/./
//ஆசை : உலக ஜனாதிபதி ஆவது
//காணாமல் போனவை : வளர்ப்பு மகன்//

ILA (a) இளா சொன்னது…

:)

Thenammai Lakshmanan சொன்னது…

பயோடேட்டா அருமை.. அதில் கருத்து சூப்பர்..:)

Karuthu Kandasamy சொன்னது…

சும்மாவே ஆடும், உடுக்கையை வேறு அடித்து விட்டிருக்கிறார்கள் ! பார்ப்போம் !

Jayadev Das சொன்னது…

\\தொழில் : முன்னாள் மந்திரிசபையின் ஊழல்களைத் தோண்டியெடுப்பது\\ அப்படித் தோண்டி எடுத்து, வழக்கு நடத்தி யாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்த மாதிரி தெரியலையே?

பெயரில்லா சொன்னது…

super sir

rajasundar சொன்னது…

pl keep it up

ganesan sivanandam சொன்னது…

nalla kudukkiraruya detailu

Vinoth Ganesan சொன்னது…

semaya solirukeenga