27 மே, 2011

ஆறுதல்...


பெட்ரோல் வாசனை வீசும் 
நகரத்தின் சாலைகளில் 
எல்லோரையும் துரத்துகிறது 
ஏதோ ஒரு அவசரம்..

சம்பிரதாய வணக்கங்களை 
கடந்து வந்தமரும் 
அலுவலக மேஜையின் 
மீதமர்ந்திருந்த 
கணினியில் 
எலக்ட்ரான் விழிகளால் 
பிடிக்கப்பட்ட உன் பிம்பம் 
சலனமாக..

மூளையில் பதிந்திருக்கும் 
ஆறுதலை
விரல்கள் வழி அனுப்பி வைத்தேன்..

பதிலுக்கு சிணுங்கிய 
செல்பேசியில் வந்திருந்தது 
:) 

11 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

காலம் சுருங்கிவிட்டது நண்பரே...

இனி எல்லாம் குறுகிக்கொண்டேதான் செல்லும்..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அதைக்கொண்டே ஆறுதல் அடைந்துக் கொள்ளுங்கள்..

Jana சொன்னது…

உங்கள் வலைப்பதிவின் தலையங்கத்திற்கும் இது பொருந்துதே தலை :)

கவிஞர்களே… கொஞ்சம் மரபுக்கவிதைகள் ப்ளீஸ்…
http://janavin.blogspot.com/2011/05/blog-post_27.html

Mahan.Thamesh சொன்னது…

நல்ல கவிதை

ஹேமா சொன்னது…

இதுதான் சுட்டு விரலுக்குள் உலகம் !

! சிவகுமார் ! சொன்னது…

.

! சிவகுமார் ! சொன்னது…

டாட்

கலாநேசன் சொன்னது…

!

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அழகிய கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

எல்லா விழயத்திலும் கலக்குறிங்க

SOS சொன்னது…

அட!...