21 மே, 2011

வெளி...


பிரதி சனிக்கிழமை தோறும்
ஆஞ்சநேய விரதமிருந்து 
அடைந்தான் ஒரு காதலை 
நேயர் விருப்பமல்ல 
நம் காதல் என 
நிராகரித்தவளை
பின் தொடர்கிறேன்
நான் அனுதினமும்..

எப்படியெல்லாம் 
இருக்கக் கூடாதோ! 
அப்படியெல்லாம் 
இருக்கப் பழகினேன் 
ஒரு நாய்க்  குட்டியென
வழியெல்லாம் பின்தொடர்ந்து..

நீ எனக்கு கடவுள் 
நான் உனக்கு 
நான்தான்..

அசூயை நிரம்பிய தினமொன்றில் 
நிகழ்ந்தது நம் சந்திப்பு
அசந்தர்ப்பமான வார்த்தைகளால் 
நிரப்பப்பட்ட அக் காலம் 
இன்றுவரைக்கும் 
நமக்கிடையே நீட்டிக்கும் 
இடைவெளிகளை 
இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறது..

இடைவெளி 
நீளும் காலம்
வெளி..

11 கருத்துகள்:

rvelkannan சொன்னது…

அருமை செந்தில்
//நீ எனக்கு கடவுள் நான் உனக்கு நான்தான்..//
கவிதையில் அட்டகாசமான வரி

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//ஒரு நாய்க் குட்டியென
வழியெல்லாம் பின்தொடர்ந்து..//

ஆஹா, அருமை. [பின்]தொடருங்கள்.

ஹேமா சொன்னது…

கடவுள் அதே இடத்திலும் நான் நானாய் இருப்பதும் அருமை !

போளூர் தயாநிதி சொன்னது…

//அசூயை நிரம்பிய தினமொன்றில்
நிகழ்ந்தது நம் சந்திப்பு
அசந்தர்ப்பமான வார்த்தைகளால்
நிரப்பப்பட்ட அக் காலம்
இன்றுவரைக்கும்
நமக்கிடையே நீட்டிக்கும்
இடைவெளிகளை
இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறது..//அட்டகாசமான வரிதொடருங்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ok

சசிகுமார் சொன்னது…

அருமை

vasu balaji சொன்னது…

அருமை! இடைவெளி
நீளும் காலம்
வெளி.:)

சிராஜ் சொன்னது…

செந்தில்... அற்புதமான கவிதை.... ஆமாம், நீங்கள் இந்த கவிதையை எந்த புத்தகத்தில் இருந்து சுட்டீர்கள்? பெயர் சொல்லமுடியுமா? ப்ளீஸ்....

Jana சொன்னது…

சிறப்பான ஒரு கவிதை...
//அசூயை நிரம்பிய தினமொன்றில்
நிகழ்ந்தது நம் சந்திப்பு//

அசூயை????

ஈரோடு கதிர் சொன்னது…

அருமை