10 மே, 2011

கீர்த்தனாவும், கெடா வெட்டும்...

எல்லாவற்றையும் வெவரமா  சொல்லணும்
பெரிய அத்தைக்கு 

நடுமாமா தண்ணி  போட்டால் மட்டும் 
தகராறு செய்வார்
பங்காளிக அத்தனை பேருக்கும் 
ஆளனுப்பி சேதி சொன்னாப்  போதும் 
மாமா வகையறாக்களுக்கு 
நேர்ல போய்த்தான்  கூப்பிட்டாகனும் 
ரெண்டு நாளாவே டவுனுக்கு போயி 
சாமானெல்லாம் வாங்கி வந்த பெரிய சித்தப்பா
அம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு
சித்தி பாவம் எதைச் சொன்னாலும் கேட்டுக்கும்

இந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும்
கறி பத்தல 
தண்ணி அடிச்சுட்டு, 
ரகள செஞ்சு, 
சவால் விட்ட சொந்தம் 
அடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருக்கணும்..

செல்வி அக்கா கல்யாணம் வரைக்கும் 
அதே கொறை தொடர
கறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல 
ராமசாமி மாமா மொறைக்க 
கல்யாண வீடு கதிகலங்கிப் போச்சு..

கூடப் படிச்ச மாமெம் பொண்ணு கீர்த்தனா 
குடும்ப உத்தரவால் பேசவே இல்ல என்கிட்டே 
போடி போக்கத்தவளேன்னு நானும் பேசல 
அதாச்சு வருசம் ரெண்டு ..

நேத்தைக்கு
பெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்குப் போனா 
மாமென்காரனுக்கு  டீ ஊத்திக்  கொடுக்கிறாரு அப்பா
மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல 
கடந்து போன மாமெம் பொண்ணு  கீர்த்தனா
வெக்கப்பட்டா பாருங்க 
இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு 
குலதெய்வத்துக்கு இந்த தடவ 
பத்து கெடா வெட்டுறேன்னு
வேண்டிகிட்டே
ன் ..

15 கருத்துகள்:

Chitra சொன்னது…

மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல
கடந்து போன மாமெம் பொண்ணு கீர்த்தனா
வெக்கப்பட்டா பாருங்க
இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு
குலதெய்வத்துக்கு இந்த தடவ
பத்து கெடா வெட்டுறேன்னு
வேண்டிகிட்டேன் ..


...... ஜூப்பரு!

PB Raj சொன்னது…

மண்ணின் மனம்

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

ஆஹா!

Yoga.s.FR சொன்னது…

அதென்ன "ஜூப்பரு",இப்புடி ஒரு வார்த்தய தமிழுல கேள்விப்பட்டதேயில்லியே?நல்லாருக்கு,சூப்பராயிருக்குன்னு சொல்லுவாங்க.///கீர்த்தனா,மாட்னியா?///

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வேண்டுதலில்தான் குடும்பங்கள் இணைகிறது...

வேண்டுதலில்தான் குடும்பங்கள் பிரிகிறது...

மண்வாசனை மிகுந்த குடும்பக்கவிதை...
மனதை பரிக்கொடுத்தேன்...

a சொன்னது…

அச்சு அசல் நிகழ்வுகள்...
நேரில் நின்று பார்த்த உணர்வு........

ஹேமா சொன்னது…

இதுதான் நம் குடும்பங்களின் சிறப்பு !

பெயரில்லா சொன்னது…

அடிச்சிப்பதும் அனைச்சுப்பதும் உறவுகளுக்க சகஜமுங்க...)

பெயரில்லா சொன்னது…

very nice

ILA (a) இளா சொன்னது…

அருமை, அட்டகாசம், கிராமத்து மணம், கிராமத்துக்கு மக்களின் மனம் :).

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

கடைசி வடையா இருக்கும்னு நினைக்கிறேன்....

சண்முககுமார் சொன்னது…

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

”அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேர்ந்துக்கறா; அடிச்சத்துக்கொண்ணு, புடிச்சத்துக்கொண்ணு புடவையை வாங்கிக்கறா....பட்டுப்புடவையை வாங்க்கிக்கறா” பாட்டு போல உள்ளது.

நசரேயன் சொன்னது…

வெட்டுங்க வெட்டுங்க

மதுரை சரவணன் சொன்னது…

கிடா வெட்டுங்க பாசு அத தவிர வேற வேலை...சூப்பரு கவிதை வாழ்த்துக்கள்