30 மே, 2011

எக்குதப்பாய்...

என் எதிரே
புத்தரைக் கண்டேன்
அவரைக் கொன்றுவிடும் உத்தரவை
அவரே 
எனக்கு தந்திருந்ததால்
கத்தியை இறக்கினேன்
கண்ணாடியில் பட்ட கத்தியால்
என் கழுத்து அறுபட்டு 
இறந்து கொண்டிருக்கிறேன்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&


அவராகத்தான்
இருக்குமென்று நினைத்து
அவரை நெருங்கினேன்
அவர் இல்லை.
அவர் இல்லையென்றானபோது
அவரைத் தேடி அலைகிறேன்..


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


யாரும் அறியவில்லை என 
நான் அவளை 
பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் அறியாவண்ணம்
அவளைப் பார்ப்பதை
அவள்
பார்த்துவிட்ட பின் 
அவள் அறியாவண்ணம்
பார்ப்பதில்லை இப்போது,,,

12 கருத்துகள்:

பாட்டு ரசிகன் சொன்னது…

முதல் வணக்கம்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சமாதனங்கள் இங்க சமாதியாக்கபட்டு விட்டது. புத்தரும் இனி பயந்தாக வேண்டும்....

நமக்குள் இருக்கும் புத்தரை நாமேதான் கொன்றுக் கொண்டிருக்கிறேபம்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அவர் கிடைத்தாரா..
அவர் கிடைத்து விட்டால் அவரை தேட வேணடிய அவசியம் இல்லை அவர் கிடைக்காத வரை அவரை தேடிக்கொண்டேதான் இருக்க வேண்டும்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அறியா வண்ணம் பார்பதில்தான் அழகு இருக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எக்குத்தப்பாய் இருக்கிறது கவிதை...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

முக்கனிகள் போல மூன்றுமே அருமையாக புரிய வைக்கின்றன இதுவரை புரியாத பல விஷயங்களை.

பாராட்டுக்கள்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

:)))

ஹேமா சொன்னது…

அருமை செந்தில்....உங்களுக்குள் புத்தனைக் கண்டு கொன்றொழித்தும் விட்டீர்கள் !

அருண் பிரசாத் சொன்னது…

கடைசி கவிதை நச்

Sivakumar சொன்னது…

God Bless You!!

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

அர்த்தங்கள்
ஏதுமற்ற
பெருவெளியில்

அது
அதுவாக
இருக்கும்வரை

இது
இதுவாகவே
இருந்தது...

இன்னதென்று
விளக்க முடியாத
ஒரு
அற்புத கணத்தில்

அது
இதுவாக
மாறிப்
போனபோது

இது
எது
ஆவதெனத்
தெரியாமல்
குழம்பி நின்றது..!!!

சுரேகா.. சொன்னது…

பின்றீங்களே தலைவா!!

புத்தரும்...
அவளும்..
அருமை!!