6 மே, 2011

மரணகானா விஜி...

நான் கடவுளை நம்புவதில்லை
வீதிகள்தோறும் உண்டியல்
வைத்து பிச்சையெடுக்கும்
கேவலமானவனிடம்
நானெப்படி வைக்கமுடியும்
வேண்டுதல்களை..


விளிம்புநிலை மனிதர்கள் பற்றி நாம் அனைவருமே கேள்விபட்டோ அல்லது படித்தோ இருக்கலாம். சென்னை போன்ற பெருநகர வாசிகளுக்கு அவர்களை சந்தித்த அனுபவம்கூட இருக்கலாம். கோடிகளை கொள்ளையடித்து வாழும் கூட்டங்களுக்கு மத்தியில்தான் இதே மனிதர்களும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு கட்சிக்காக தன் அடிப்படை நேர்மையைக்கூட அடகுவைத்துவிட்டு கோசம் போடும் அடிமைகள் நிறைந்த இதே ஊரில்தான் வாழ வழியற்று சோற்றுக்கே சிரமப்பட்டு சுடுகாட்டில் உறங்கும் தன்மானம் கொண்ட மனிதர்களும் வாழ்கிறார்கள்.

ஒரு சான் வயிற்றுக்கும் ஒருவேளை உணவுக்கும் உடலை விற்றுப்பிழைத்தாலும் சகமனிதர்களின் துன்பத்துக்காய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது ஆதரவுக்கரம் நீட்டும் இவர்களைப்பற்றி அன்றாடம் சுக ஜீவனம் நடத்திவிட்டு வாய்கிழிய அரசியலும், பொருளாதாரமும் பேசும், அட்ச்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வரிசைகட்டும் நமக்கு தெரியாமல்போவதில் வியப்பொன்றும் இருக்கமுடியாது.

பதிவுகளிலும், பேஸ்புக்கிலும்(facebook), பஸ்சிலும்(buzz) வெட்டி அரட்டையும், பொன்ட்டாட்டிகளின் பெருமையும், கேவல வாழ்வை நடத்தும் அரசியல்வாதிகளை போற்றியும் அவர்களின் ஊழலுக்கு ஆதரவாக அலுவலக நேரத்தில் முதலாளிகளுக்கு துரோகம் செய்துகொண்டு மாய்ந்து மாய்ந்து சப்பைக்கட்டு கட்டும் ஜால்ராக்களும், சினிமாப் பாடல்களையும், சினிமாவையும் வைத்தே காலம்தள்ளும் மொக்கைகளும்  தம்மை சுற்றி நடக்கும் இம்மாதிரி விசயங்களை கண்டுகொள்வதே இல்லை. கோவில்களில், இல்லாத கடவுளுக்கு கோடிகளை இறைக்கும் மனிதர்கள் வாசலில் நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்களை கேவலமாக பார்ப்பதும் இங்குதான் நடக்கிறது.

இனியாவது ஒரு சகமனிதனின் துன்பம் பார்த்தால் குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது வாங்கிக்கொடுங்கள். மரணகானா விஜி என தலைப்பு வைத்துவிட்டு அவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என நினைப்பீர்கள். நான் சொல்லுவதைவிட அவரே அவரின் கதையை சொல்லியிருக்கிறார். நேரம் ஒதுக்கி படித்துப்பாருங்கள். உங்கள் கண்களில் ரத்தம் வழியும்..

தொடர்புள்ள சுட்டிகள்:

http://maranaganaviji.com
http://madrasbhavan.blogspot.com/2011/05/1.html
http://madrasbhavan.blogspot.com/2011/05/2.html
http://maranaganaviji.com/pdf/maranaganaviji-Sudukadum-sila-sundarikalum.pdf
http://maranaganaviji.com/pdf/maranaganaviji-Nan-Santhitha_Maranakkal.pdf

17 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் கானா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>கோவில்களில், இல்லாத கடவுளுக்கு கோடிகளை இறைக்கும் மனிதர்கள் வாசலில் நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்களை கேவலமாக பார்ப்பதும் இங்குதான் நடக்கிறது.

திருப்பதி கோயில் வருமானம் மட்டும் ஒரு தமிழ்நாட்டையே சீராக்க போதுமே..

Chitra சொன்னது…

மரணகானா விஜி என தலைப்பு வைத்துவிட்டு அவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என நினைப்பீர்கள். நான் சொல்லுவதைவிட அவரே அவரின் கதையை சொல்லியிருக்கிறார். நேரம் ஒதுக்கி படித்துப்பாருங்கள்.


.....வாசித்து பார்க்கிறேன் .

Unknown சொன்னது…

வாசிக்கிறேன் பாஸ்! நான் ஏற்கெனவே ஏதோ சில வார இதழ்களின் மூலம் இவரைப் பற்றி தெரிந்துகொண்டேன்!

சக்தி கல்வி மையம் சொன்னது…

படித்து பார்க்கிறேன் ,,,

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே...வாசித்து பார்கிறேன் நன்றி!

நிரூபன் சொன்னது…

பதிவுகளிலும், பேஸ்புக்கிலும்(facebook), பஸ்சிலும்(buzz) வெட்டி அரட்டையும், பொன்ட்டாட்டிகளின் பெருமையும், கேவல வாழ்வை நடத்தும் அரசியல்வாதிகளை போற்றியும் அவர்களின் ஊழலுக்கு ஆதரவாக அலுவலக நேரத்தில் முதலாளிகளுக்கு துரோகம் செய்துகொண்டு மாய்ந்து மாய்ந்து சப்பைக்கட்டு கட்டும் ஜால்ராக்களும், சினிமாப் பாடல்களையும், சினிமாவையும் வைத்தே காலம்தள்ளும் மொக்கைகளும் தம்மை சுற்றி நடக்கும் இம்மாதிரி விசயங்களை கண்டுகொள்வதே இல்லை. //

சரியான சாட்டையடி, எமது சமூகம், மக்கள் வாழ்வு பற்றி வலையில் எழுதினால், அதனை யாருமே கண்டு கொள்ள்கிறார்கள் இல்லையே,
அதிகமாக ஏதும் சொன்னால், எழுதுபவனை, துரோகி என்று ஒரு நிமிடத்தில் வாரி அணைத்து விட்டல்ல்லவா செல்கிறார்கள்.

நிரூபன் சொன்னது…

மரணகானா விஜியின் பாடல்களை கேட்டிருக்கிறேன், ஆனால் அவருக்கென்று இணையத்தளங்கள் இருப்பது தெரியாமற் போய் விட்டதே,
பகிர்ந்தலுக்கு நன்றிகள் சகோ

பெயரில்லா சொன்னது…

மரணகானா விஜி என தலைப்பு வைத்துவிட்டு அவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என நினைப்பீர்கள். நான் சொல்லுவதைவிட அவரே அவரின் கதையை சொல்லியிருக்கிறார். நேரம் ஒதுக்கி படித்துப்பாருங்கள்.////

வசித்து பார்த்தேன்
அவர் சம்பந்தமான சுட்டிகளை பதிவிறக்கமும் செய்து கொண்டேன்

பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

விஜியை பற்றி பதிவிட்டதற்கு நன்றி அண்ணா. நேரில் மேலும் சில விசயங்களை பேசுவோம்.

யுவகிருஷ்ணா சொன்னது…

//பதிவுகளிலும், பேஸ்புக்கிலும்(facebook), பஸ்சிலும்(buzz) வெட்டி அரட்டையும், பொன்ட்டாட்டிகளின் பெருமையும், கேவல வாழ்வை நடத்தும் அரசியல்வாதிகளை போற்றியும் அவர்களின் ஊழலுக்கு ஆதரவாக அலுவலக நேரத்தில் முதலாளிகளுக்கு துரோகம் செய்துகொண்டு மாய்ந்து மாய்ந்து சப்பைக்கட்டு கட்டும் ஜால்ராக்களும், சினிமாப் பாடல்களையும், சினிமாவையும் வைத்தே காலம்தள்ளும் மொக்கைகளும் தம்மை சுற்றி நடக்கும் இம்மாதிரி விசயங்களை கண்டுகொள்வதே இல்லை.//

உங்களைத் தவிர உலகத்தில் ஒருத்தனும் யோக்கியம் கிடையாது என்கிற நிலைமை நீடிப்பது வருத்தத்துக்கு உரியது செந்தில். இந்த அவலநிலையை நீக்க நாம ஏதாவது செய்யணும்

:-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானும் படிச்சி பார்க்குறேன் செந்தில்...

Jana சொன்னது…

ஜெஸ்..விஜி பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேனக். பின்னர் தொலைக்காட்சி ஒன்றில் அவரது நீண்ட பேட்டியை பார்த்திருக்கின்றேன்.
வாழ்க்கையில் என்னத்தை சாதிக்க இருக்கு என்று இரப்போருக்கு அவரே நல்லதொரு மோட்டிவேட்

R. Gopi சொன்னது…

செந்தில்

தென்னை மரம் பற்றிப் படிச்சிட்டு எக்ஸாம் போனான் பையன். ஆனா வந்த கேள்வி என்னன்னு பாத்தீங்கன்னா பசு மாட்டைப் பத்தி. பையன் படு ஸ்மார்ட். தென்னை மரம் பத்தி முழுசா எழுதிட்டு, "இப்படியாப்பட்ட தென்னை மரத்தில் பசுமாடு கட்டப்பட்டிருந்து"ன்​னு எழுதி முடிச்சான்.

உங்களுக்கு​ப் பதிவர்களையும் பஸ்ஸர்களையும் திட்டனும்னா வெளிப்படையாவே திட்டுங்களேன். எதுக்கு "மரண கானா விஜி"ன்னு ஒரு முகமூடி?

ஜோதிஜி சொன்னது…

செந்தில் நிறையவே சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு விட்டீர்கள். வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

///செந்தில் நிறையவே சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு விட்டீர்கள். வாழ்த்துகள்.//

Angel சொன்னது…

நான் ஏற்கனவே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவருடைய பேட்டியை
பார்த்து ரொம்பவே மனம் வருந்தினேன் .
பகிர்வுக்கு நன்றி .