18 மே, 2011

ஈழம் : "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி" ...

யூத இன மக்களுக்கு தனது பத்து தலைமுறைகளின் வரலாறு தெரியும் எனச் சொல்வார்கள். தனது பாரம்பரியத்தின் மேல் மிகுந்த மரியாதையும், அர்ப்பணிப்பும் உடையவர்களில் முதன்மையானவர்கள் யூதர்களே. அதனால்தான் ஜெர்மனியில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும் உலகெங்கும் சிதறிப்போனாலும், தனக்கென்று ஒரு தாயகத்தை கட்டமைத்தவர்கள் அவர்கள். இவர்களைப் போலவே உலகின் தொன்மையான வீரமிக்க இனங்களில் ஒன்றான தமிழினத்தின் இன்றைய நிலை பல்லாயிரம் மடங்கு மோசமாக இருக்கின்றது.

வீரம் செறிந்த இந்த பரம்பரையின் தாய்ப் பூமிகளுள் ஈழ தேசமும் உண்டு. திராவிட பாரம்பரியமும், தனித்த கலாச்சாரமும் கொண்ட தமிழர்களின் வாழ்வில் ஊடாக வந்த ஆரியர்கள் தந்திரமாக தங்களை திராவிட கலாசாரத்திற்குள் நுழைத்து அதனை வேரறுத்து விட்டனர். சோழ மன்னர்களில் குறிப்பாக ராஜராஜ சோழன்தான் ஆரியர்களின் செல்லப் பிள்ளை. ராஜராஜன் ஆட்சியில்தான் ஆரியர்கள் மிக செழிப்பாக வாழ்ந்தனர். அதிலும் சைவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது ராஜராஜனின் ஆட்சியில்தான். வீரனான ராஜராஜனைக் காட்டிலும் பெரு வீரம் மிக்கவன் அவன் மகன் ராஜேந்திரன் ஆனால் இன்றளவும் "பொன்னியின் செல்வன்" , "உடையார்" என ராஜராஜனின் சரித்திரமும், வீரமும் பார்ப்பனர்களால் பரப்பப் படுவதற்கு காரணம் ராஜராஜனின் ஆட்சியில் அவர்களுக்கிருந்த அதீத அதிகாரம்தான்.

கடல் கடந்து தேசங்களை வென்ற ராஜராஜன் அங்கெல்லாம் பரவியிருந்த புத்த மதத்தை தழுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த ஆரியர்கள். அவனை அங்கெல்லாம ஆளவிடாமல் பிடித்த மண்ணை அவர்களிடமே ஒப்படைத்து கப்பம் கட்டச் சொல்லி தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக மட்டுமே அறிவிக்க வைத்தனர். இதில் ஈழம் ராஜராஜனுக்கு முன்பிருந்தே தமிழர்களின் தாயகமாக இருந்த பூமிதான்.

மன்னர்களின் ஆட்சி நடந்தபோதே ஈழத்தின் ஒரு பகுதில் குடியேறிய வட இந்திய மக்களால் தனித்து ஒரு அரசாங்கம் நிறுவப்பட்டு பின்னாளில் அவர்களால் புத்த மதம் ஏற்கப்பட்டு மகாவம்சம் எழுதப்பட்டு அப்போதே ஈழம் சிங்களவர்களின் பூமியென சித்தரிக்கப்பட்டது. வெள்ளையர் ஆட்சிக்குப் பின் தமிழ் மன்னனால் பிடிக்கப்பட்ட அதே ஆசிய நாடுகளுக்கு கூலித் தொழிலாளிகளாக தமிழர்களே அழைத்துச் செல்லப்பட்டதுதான் கொடுமையே! அப்படி ஈழத்தின் மலையகத்திற்கும் அழைத்து செல்லப்பட்டவர்கள்தான் இன்றைய மலையக தமிழ் மக்கள். டச்சுக்காரர்களும், பிரிட்டீசாரும் ஆட்சி செய்தபோதும் வன்னிய தமிழ் மன்னன் தன்னுடைய பகுதியை அவர்களுக்கு அடிபணியாது ஆண்டிருக்கிறான். பின்னாளில் ஒட்டு மொத்த ஈழ மண்ணையும் பிரிட்டிசார் கைப்பற்றி ஒருங்கிணைந்த இலங்கையாக அறிவித்தார்கள்.

வெள்ளையர்கள் மண்ணைவிட்டு போன நாள் முதலாகவே சிங்களவர்க்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. பொன்னம்பலம் தலைமையிலான தமிழர்கள் காந்தியின் வழியிலேயே போராடி வந்தனர். ஒரு கட்டத்தில் மலையக மக்களின் உரிமை பறிக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாண மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை என இன்றுவரை பேசப்படுகிறது. அதன்பின்னர் நடந்த தொடர்ச்சியான நடந்த அகிம்சா போராட்டங்கள் ஆயுதங்களால் அடக்கப்படுகிறது. படிப்படியாக தமிழர் பிரதேசங்களில் சிங்களர் குடியேற்றம் நடத்தப்படுகிறது.

அதனை எதிர்த்து போராடிய தமிழர்களின் நிறுவனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது. தமிழ் பெண்களை வீதியில் வைத்து ராணுவத்தினர் கற்பழித்து கொன்றனர். அதற்கு மேல் பொறுக்காத இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாணவர் பெருமன்றத்தை துவங்கி ஆயுதபோராட்டத்தை துவங்குகின்றனர்.  பல்வேறு குழுக்களாக உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் பிரச்சினை வந்தது. அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இந்தியாவில் அவர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கிறார்கள்.

விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவராக பிரபாகரன் பொறுப்பேற்றவுடன் ஏனைய குழுக்களை ஓரங்கட்டினார். தமிழர்களின் ஒட்டுமொத்த அடையாளமாக புலிகளே முன்னின்றனர். தொடர்ந்து வெற்றிகளை குவித்த அவர்களின் தமிழீழ தாயக கோட்பாடு இந்திரா காந்தி படுகொலை மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஈழத்தை கடந்து இந்தியாவின் தமிழகத்தில் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னிறுத்தி இந்திய அரசாங்கத்தை அசைத்துப்பார்க்க வேண்டிய நாம் சினிமா திரைகளுக்குள் முடங்கிக் கிடந்தோம். இந்து ஆங்கில தினசரி, தினமலர் தமிழ் தினசரி, துக்ளக் 'ஷோ' போன்ற பார்ப்பன ஊடகங்கள் இன்றுவரைக்கும் தமிழர்களுக்கு எதிரான பரப்புரைகளை செய்துவருகிறது. தமிழனின் குரலாக ஒலிக்க வேண்டிய தினத்தந்தி ஆட்சியாளர்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தது. பார்பனரின் ஊடகம் என்றாலும் இன்றுவரை ஈழபிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டிவரும் 'விகடன்' குழுமத்தை தமிழக மக்கள் மறக்கக் கூடாது.

தமிழனின் தன்மான பிரச்சினை பற்றி கவலைப்படாமல் தலைவனின் குடும்ப நலனுக்காய் இன்றுவரைக்கும் குரல் கொடுக்கும் உடன் பிறப்பு "கொளந்தைகளும்" தலைவியின் கொள்கையே தன் கொள்கையை முழங்கும் " ரத்தத்தின் ரத்தங்களும்" ஈழமக்களின் கண்ணீரை பற்றி கவலைப்படாதது வருத்தம் அளிக்க வேண்டிய விசயம். ரஜினிக்கு உடம்பு சரியில்லை என்றால் நாடே பரபரப்பாகிறது, ஊடகங்கள் கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது. ஆனால் எம் தமிழ் இனம் உயிரோடு கொளுத்தப்பட்ட போது பாரா முகமாய் இருக்கிறது, தமிழக தமிழர்களின் அடிமை மனோபாவம் இப்படித்தான் இருக்கும்.

தனித்து முழங்கும் சீமானையும் அவரின் தம்பிகளையும் கொச்சை படுத்தும் இணைய உடன்பிறப்புகளே. உங்கள் தலைவன் கடிதம் எழுதுவதற்கு தமிழக மக்கள் கொடுத்த பதிலடியை பார்த்தாவது திருந்துவீர்கள் என நம்புகிறேன். ஒருத்தர் ஜெயலலிதா வெற்றி பெற்றவுடன் இனி தமிழக மீனவன் சாக மாட்டான்.அவன் மீன் பிடிக்கப்போனால் மீன்கள் தானாக வந்து படகில் விழும் என கிண்டல் செய்தார். ஐந்து வருடங்கள் உங்கள் தலைவன் ஆட்சியில் இருந்தபோது அதுவும் மத்தியிலும் செல்வாக்கோடு இருந்தபோது முன்னூறு மீனவனுக்குமேல் சுட்டுக் கொல்லப்பட்டும், ஏராளமானவர்கள் அவமானப்படுத்தப்பட்டும், படகுகள் உடைக்கப்படும் அல்லல்பட்டபோது ஆறுதலுக்கு கூட போகவில்லை என்பதை சுலபமாக மறந்துபோவது ஆச்சர்யம் இல்லை.

எந்த இந்திய அரசாங்கத்தால் ஆதரவு அளிக்கப்பட்டதோ அதே இந்திய இத்தாலி கொடுங்கோல் சோனியா ஆதரவுடன் முள்ளி வாய்க்காலில் வைத்து ஒன்ரரை லட்சம் மக்களை அழித்தது சிங்கள அரசு. பிரபாகரனால்தான் தமிழ் மக்கள் நிம்மதி போனது என்று பரப்புரை செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கும் சிங்களனுக்கு கூட்டிக் கொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழக காங்கிரஸ் அடிமை நாதாரிகள் சோனியாவின் செருப்பாக இருப்பதையே வாழ்வின் கடமையாக நினைக்கிறானுங்க. 

ஈழம், தமிழர்களின் தாயக பூமியென்று கூட தெரியாத மக்களுக்காய் நமது தகவல் தொழில்நுட்ப சகோதரர்களால் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய ஆவணம் இது. ஈழ வரலாற்றைப் பற்றி தெரியாத அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய காணொளி தொகுப்பு இது. மிக நேர்த்தியாக, கடின உழைப்போடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக உழைத்த அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும் என் வந்தனம்.

13 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

Wow . . What a informative post . . .

rajamelaiyur சொன்னது…

Great work . .

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

நல்லதொரு பதிவு

பெயரில்லா சொன்னது…

வெடித்த நிலத்தில் எஞ்சி நிற்கும் வேர்களுக்கு நீர்ப் பாய்ச்சாமல் - கனியைப் பறிக்க முடியாது ........ நியாயமான பதிவு ... வேர்களுக்கு வலுச் சேர்க்க வேண்டும் என்பது எனது நியாயமானக் கோரிக்கை ... நீர்ப் பாய்ச்ச மனம் வைப்பார்களா என்பது தான் ?

vasu balaji சொன்னது…

தகவலுக்கு நன்றி செந்தில்.

சசிகுமார் சொன்னது…

நல்ல பதிவு செந்தில் சார்.

RK நண்பன்.. சொன்னது…

பல அறிந்திராத தகவல்கள்...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

raja சொன்னது…

ரஜினிக்காக கதறி அழுது கூப்பாடும் இந்த ஜென்மங்கள் தங்களை பெற்ற பெற்றோர்கள் தாங்கள் ஈணும் குழந்தைகளுக்காக கூட இந்த அளவுக்கு கூச்சல் போடாமல் டாஸ்மாக்கை தேடி சமாதானம் ஆகும். என் குருநாதர் சொல்வார் பண்டைய காலத்தில் உச்சத்தில் இருந்த சமூகம் இப்பொழுது கீழே இறங்கி மலினப்பட்டு போய் இருக்கிறது. காலச்சக்கரம் சுழல்கிறது. என்று. நடந்துகொண்டிருப்பது தான். மீண்டும் மேலேறும் எனும் நம்பிக்கையுடன் நீங்களும் விடாமல் எழுதுங்கள்.. அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்.

ஹேமா சொன்னது…

வெளிநாடுகளில் அகதிகளாக இருந்தாலும் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கையேந்தி உலகிடம் ,உலகத்தமிழிடம் கேட்டபடிதான் உயிரற்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நன்றி செந்தில் !

தனிமரம் சொன்னது…

உங்களிடம் எங்களின் வலிகள் புரிந்து கொள்ளும் திறமைக்கு ஒரு வாழ்த்துக்கள் நண்பரே!

vasan சொன்னது…

2009 மே மாத‌ம், அழிந்து கொண்டிருக்கிற‌து ஒரு ஒரு இன‌ம்
அழித்துக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு எல்லா உத‌வியும் செய்கின்ற‌
மத்திய‌ மாநில‌ அரசுத் த‌லைக‌ள் இர‌ண்டும் பாராளும‌ன்ற‌ தேர்த‌லுக்கு
ஓட்டுக் கேட்டு தீவுத்திட‌லில் "ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் ஆத‌ர‌வு"
என நீலிக்கண்ணீர் வ‌டித்த‌து. ஜெயித்த‌து.

இந்த மே மாத‌த்தில், திமுக கூட்ட‌ணியின் மகா தோல்விக்கு,
"ஈழ‌த்தமிழ‌ர்க‌ளின் மீதான த‌வ‌றான கொள்கையை"
ஒரு காரணமாக் கூட‌ காட்ட‌ விரும்பாத‌ ஊட‌க‌ங்க‌ள் தான்
இன்னும் இங்கே கோலேச்சிக் கொண்டிருக்கிற‌து.

ந‌டிப்பையும், ந‌ட‌ப்பையும் இன்னும் அறியா
மாக்க‌ளாய் தான், நாம் இங்கே இருக்கிறோம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கன்மான மனம் கனக்க வைக்கும் பதிவு.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

"இன்றுவரை ஈழபிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டிவரும் 'விகடன்' குழுமத்தை தமிழக மக்கள் மறக்கக் கூடாது."

nenjil entrum nantrikal



samithurai