விகடனில் சுஜாதாவின் "கற்றதும், பெற்றதும்" மிகப்பிரபலமான ஒன்று. மனுஷ்யபுத்திரன் முதல் ஏகப்பட்ட அறிமுகங்கள் சுவாரஸ்யமான தகவல்கள் என சுஜாதா ஒரு பல்நோக்கு அல்லது பல்துறை வல்லுனராக கொடுத்த தகவல்கள், நகைச்சுவைகள், சினிமா விருதுகள் என மிகப்பிரபலமான பகுதி அது. அதன்பிறகு அதை ஒட்டி இணையத்திலும் அதே மாதிரியான வாரத்தொகுப்புகளை முன்னால் பிரபலங்கள் சிலர் துவங்கவே அதில் இன்றளவும் கேபிளின் "கொத்து பரோட்டா" முன்னிலை வகிக்கிறது. பெரும்பாலான வாசக(கி)ர்கள் கொத்து பரோட்டாவின் அடல்ட் கார்னர் ரசிகர்கள், ஏன் நீ இல்லையா? எனக் கேட்பவர்களுக்கு சாரி அதெல்லாம் ரொம்ப பழசு:)))
சுஜாதவை இலக்கியவாதியாக ஒத்துக்கொள்ளாத சிலர் சுஜாதா எதை எழுதினாலும் பத்திரிகைகளில் போடுவார்கள். இன்னமும் அவரின் வண்ணான் குறிப்புகளைத்தான் போடவில்லை என நக்கலடிக்கவே, சாவி ஒருநாள் அதனையும் வெளியிட்டார். ஆனால் அதிலும் வாத்யார் சுவாரஸ்யமாகவே எழுதியிருந்தார். இப்போது இணையத்தில் தேடியபோது அந்தக்குறிப்புகள் கிடைக்கவில்லை.
நமது நரேன் என்று அழைக்கப்படும் முன்னாள் வலையுலக பிரபலம் "உருப்படாதது" என்ற பெயரில் வலைப்பக்கம் வைத்திருக்கும் இவர், தற்போது காலக்கூத்து என்ற பெயரில் எழுதுகிறார். இவர் எழுதிய "கருப்பு பணம்" இந்திய அளவில், ஏன் உலக அளவில் நடமாடும் கருப்பு பணத்தின் வெளுப்பான பக்கங்களை உங்களுக்கு காட்டக்கூடியது. நிதித்துறை புலியான இவர்தான் எனக்கும் நிதி ஆலோசகர். இவர் கட்டுரை.காமில் எழுதும் "லாண்டரி குறிப்புகள்" எனக்கு மறுபடியும் வாத்யாரை நினைவுக்கு வரவைக்கிறது, அதே நக்கலும், நையாண்டியும், தகவல்களுமாய் வாத்யார் விட்ட இடத்தை தொடருகிறார்.
நானும் நாட்டு நடப்பு என்ற தலைப்பில் இதுபோல ஒன்றை முயற்சி செய்தேன். ஆனால் அந்த மாதிரியான ஜோக்குகளை சேர்க்காததால் பிரபலம் அடையவில்லை என நினைத்தேன். ஆனால் ரசிக்கிற மாதிரி எழுதவில்லை என லாண்டரி குறிப்புகள் படித்தபின்தான் எனக்கு புரிந்தது. ஆனால் என்ன இன்னொருமுறை உங்களை வதைக்க முடிவு செய்யலாம் என்றிருக்கிறேன்.
அடுத்து இணைய இதழ்களில் மே முதல் சிறகு.காம் வந்துகொண்டு இருக்கிறது. இந்த இதழில் அசத்தலான கட்டுரைகளுடன் கூடங்குளம் போராட்டக் களத்தின் நாயகன் உதயகுமாரின் நேர்காணலுடன் வந்திருக்கிறது. அவசியம் படியுங்கள்.
எச்சரிக்கை : உடான்ஸ் நட்சத்திர பதிவராக என்னை இந்தவாரம் கேபிள் அறிவித்திருக்கிறார். எனவே ஒருவாரம் உங்களை தொடர்ந்து தொந்தரவு செய்யவேண்டியிருக்கும்.
14 கருத்துகள்:
துதி பாடும்...துதிபாடும்..டும் டும்..டும்..சரிகம..துதிபாடும் கூட்டம் உனை நெருங்காதைய்யா..வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா.
விதி கூட உன் வடிவை நெருங்காதைய்யா.
நீயே உனக்கு என்றும் நிகரானவன்......
உடான்ஸ் ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துகள்!
வாழ்த்துகள்........
உடான்ஸ் ஸ்டார் !!
Last week ORB Raja. This week KRP Senthil.
Mannargudi kottam Yudaansukkul vanthuduchaa :))
முதல் தடவை வந்திருக்கேன்! ஹாப்பி நியூ இயர்.
Udanz----thanakku thaane
thandanai kuduthukkuthaa...?????
Ithu udanz -ku
nallatha
kettathaaa???????
உடான்ஸ் ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துகள் தல...
நன்றிகள்!!!...
@சிவகுமர்
@மோகன் குமார்
@நக்கீரன்
@சரியில்ல
@சங்கவி
இன்னமும் அவரின் வண்ணான் குறிப்புகளைத்தான் போடவில்லை என நக்கலடிக்கவே, சாவி ஒருநாள் அதனையும் வெளியிட்டார். ஆனால் அதிலும் வாத்யார் சுவாரஸ்யமாகவே எழுதியிருந்தார். இப்போது இணையத்தில் தேடியபோது அந்தக்குறிப்புகள் கிடைக்கவில்லை.//
அண்ணே அந்த மெக்சிக்கோ சலைவைகாரி ஜோக் சொல்லாம விட்டுட்டீங்களே.....
எச்சரிக்கை : உடான்ஸ் நட்சத்திர பதிவராக என்னை இந்தவாரம் கேபிள் அறிவித்திருக்கிறார். எனவே ஒருவாரம் உங்களை தொடர்ந்து தொந்தரவு செய்யவேண்டியிருக்கும். //
வாழ்த்துக்கள் அண்ணே....!!!
சிவகுமார் ! கூறியது...
துதி பாடும்...துதிபாடும்..டும் டும்..டும்..சரிகம..துதிபாடும் கூட்டம் உனை நெருங்காதைய்யா..வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா.
விதி கூட உன் வடிவை நெருங்காதைய்யா.
நீயே உனக்கு என்றும் நிகரானவன்....//
ராஸ்கல் எனக்கு உடனே பணம் அனுப்புய்யா, நான்ஸ்டாப்பா பேசியே என் செல்போனில் பணம் போச்சு அவ்வ்வ்வ்....
நீங்க ஆ,ரம்பம் செய்யுங்கள்.
//முன்னால்// "முன்னாள்" எனத் திருத்துக.
வாழ்த்துகள் செந்தில்.நீங்கள் எப்போதுமே நட்சத்திரம்தான்.இந்த வாரத்தில் ஒளி இன்னும் அதிகமாகும்.உங்கள் எந்தப் பதிவானாலும் அதில் ஒரு ஞாயம் இருக்கும் !
நன்றி..
@ நாஞ்சில் மனோ
@நிசாமுடீன் (”முன்னாள்” மாற்றிவிட்டேன்)
@ஹேமா
@ரத்னவேல்
நன்றி செந்தில். இது எதிர்பாராதது :))
கருத்துரையிடுக