காதல்
நம் பதின்மத்துக்குள்
ஒரு அழையா விருந்தாளியென
நுழைந்துவிடுகிறது
பின்
நம் மன வீட்டின் கதவுகளை
நீக்கிவிட்டு
அங்கே
ஒரு வளரும் கல்லறையாக
மாறிவிடுகிறது
வணங்கவும்
பூஜிக்கவும்
வையவும்
நம்மை கட்டாயப்படுத்தும்
அக் காதல்
ரகசியதிலிருந்து தன்னை
காமமாக விடுவித்துக்கொள்கிறது
அவசியம் மறைக்கவேண்டிய
உறுப்புகளை
ரகசியமாக தடவியும்
அந்தரத்தில் புணர்ந்தும்
தன்னை தீவிரப்படுத்தும்
அதே காதல்
ஒரு அன்பில்
புணர்தலில்
நிராகரிப்பில்
இன்னொரு ஆத்மாவை
நம்முள் நுழைக்கிறது
அது
வாரிசுகளை உருவாக்கி
தன் வம்சத்தை பெருக்குகிறது
ஒரு அழையா விருந்தாளியாக
நுழைந்த காதல்
உறுப்புகள் துவண்ட நாளில்
நம் மன வீட்டின் அத்தனை சுவர்களையும்
உடைத்துக்கொண்டு
ஒவ்வொரு பெரிசுகளின்
வாய் வழியாக
வண்டை வண்டையாக
இடம் மாறி
தன் இருப்பை
நிலை நிருத்துகிறது..
8 கருத்துகள்:
நின்னுக்கோரி வ....ர..ணு...ம்!
தலைப்பும் அதற்கு அழகிய விளக்கமாக அமிந்த கவிதையும்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
சரிதான்..நாடிநரம்புகள் துவண்ட பெருசுகள் வேறு என்ன செய்யமுடியும்?அதைப்பற்றி பேசத்தான் முடியும் அதுவும் ஒரு வடிகாலாக இருக்குமோ?
கவிதை நீட்
>>தன் இருப்பை
நிலை நிருத்துகிறது..
தன் இருப்பை
நிலை நிறுத்துகிறது..
மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in
இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in
இறுதியில் நிலைத்து நிற்கிறது அல்லவா அது போதும் அருமை
மிகவும் நல்ல கவிதை செந்தில் !
காதல் வேறு
இயலாமையை வெளிப்படுத்துவது வேறு
காதலின் புரிதல் என்பது
முதுமை வரை தொடரும்
ஏனெனில்
காதலென்பது உணர்வு
கருத்துரையிடுக