5 ஜன., 2012

அறிவுப் புரட்சி செய்...


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
வெற்றிபெறுவோம்
புரட்சியின் விதிகள்
வரையறுக்கப்படாதவை..

எல்லா இடங்களிலும் 
நசுக்கப்படும் மக்களுக்காக புரட்சி 
பின் 
நசுக்கப்படும் புரட்சி ..

மறுக்கப்பட்ட நீதிக்காக புரட்சி 
புரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவனுக்கு 
பிடிக்காத வார்த்தை 
புரட்சி.. 

கடவுள், பக்தன் 
முதலாளி, தொழிலாளி 
அரசு, மக்கள் 
எப்போதும் லாபம் 
தரகர்களுக்கு மட்டும் ..

எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும் 
பணக்காரனுக்கு அஜீரனத்தாலும் ..

உன் குடும்பத்தின் 
பட்டினி போக்கிப் 
பின் 
வீதிக்கு வா
போராடு
சிறை செல் 
மரித்துப் போ
மாவீரன் என  
சுவரொட்டியில் சிரி..

சே
மாவோ 
லெனின் 
மார்க்ஸ் 
பெரியார் 
கொள்கைகளை வீதியில் முழங்கு 
குல தெய்வத்துக்கு 
கெடா வெட்டு ..

இனி 
ஆயுதம் துணை வராது 
அரசாயுதம் அழிக்கும் உன்னை 
அறிவுப் புரட்சி செய் 
அனுதினமும் தொழில் செய் 
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..

புரட்சி என்பது 
மாற்றத்தைக்  கொண்டு வர 
முதலில் நீ மாறு...

9 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

பொரட்சியாவது பொடலங்காயாவது... நான் பக்கா கேப்பிடலிஸ்ட் தம்பி...

பெயரில்லா சொன்னது…

கேப்பிடல்ல இருந்தா கேபிட்டலிஸ்ட்டா? என்றா இது நாயம்?

Sankar Gurusamy சொன்னது…

புரட்சி என்பதே இப்போதைய அகராதியில் புரட்டு என்பதின் மரூஉ தான். தன் சொந்த வாழ்வில் சில விஷயங்களை செய்யாமல் மற்றவர்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் எவர் செய்யும் புரட்சியும் புரட்டே.. அழகாக ஆழமான கவிதை.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

http://anubhudhi.blogspot.com/

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது…

கேப்பிடல்ல இருந்தா கேபிட்டலிஸ்ட்டா? என்றா இது நாயம்?
அப்படின்னா கிராமத்துல இருக்க நான் என்ன வில்லேஜிஸ்டா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புரட்சி என்பது
மாற்றத்தைக் கொண்டு வர
முதலில் நீ மாறு..

சிந்தனை பயனுள்ளது..

Unknown சொன்னது…

//பொரட்சியாவது பொடலங்காயாவது... நான் பக்கா கேப்பிடலிஸ்ட் தம்பி...//

Okay .... the generation gap. Revolution is like a gourd in your opinion

சசிகலா சொன்னது…

புரட்சி என்பது
மாற்றத்தைக் கொண்டு வர
முதலில் நீ மாறு...

சிறப்பான வரிகள் அருமை

சுரேகா.. சொன்னது…

யுடான்ஸ் வாழ்த்துக்கள் தலைவரே!!


கவிதை கனமானது!!
தூக்கிச்சுமக்க இங்கு யாருக்கும்
இதயமே இல்லை! :)

பெயரில்லா சொன்னது…

//சுரேகா.. சொன்னது…
யுடான்ஸ் வாழ்த்துக்கள் தலைவரே!!


கவிதை கனமானது!!
தூக்கிச்சுமக்க இங்கு யாருக்கும்
இதயமே இல்லை! :)//

உனமை!