14 ஜன., 2012

மழை நாட்கள்...


உன்னைப் பார்த்த முதல் கனத்தில்
உன்மேல் காதல் வரவில்லை
காரனம்
நீ எனக்கு
முதல் பெண் அல்ல,
நானும் உனக்கு அப்படித்தான் என நினைக்கிறேன்..

நீயும்,
நானும்
சில சந்திப்புகளால்
காதல் வயப்பட்டோம்..

நீ எனக்காகவும்,
நான் உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிக்கொண்டது மாதிரி
நடித்தோம்..

நீ என்னை மிகவும் நேசித்தாய்
நானும் அப்படிதான்.,
உயிருக்கு உயிராக என்று வைத்துகொள்ளலாம்..

நீ
பேச,
சாப்பிட,
உடுத்த,
பரிசளிக்க
நான்தான் செலவு செய்தேன்..


நீ அடிக்கடி கோபப்பட்டாய்..
நான் விலகி செல்ல ஆரம்பித்தேன்..


நீ சில காரணங்களை சொன்னாய்
நானும் சொன்னேன்.


நீ யாரையோ திருமணம் செய்துகொண்டாய்,
நானும் ஒருத்தியுடன் வாழ்கிறேன்..


விதி நம்மை
ஒரு நேர்கோட்டில் நிருத்தியபோது
நாம் 
நம் குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தோம்
அவர்கள்
விளையாட்டின் சுவாரஸ்யத்தில்
நம்மை மறந்தபோது
என் கைகளை
இறுகப்பற்றிக்கொண்டாய்
நம் கண்களில் 
கொஞ்சம் கண்ணீரும் 
கொஞ்சம்  காதலும் 
எட்டிப்பார்த்தது..

16 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஒரு அருமையான இழந்த காதல் சரித்திரத்தை
ஒரு அழகானக் கவியாகத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
மனம் கவர்ந்த பதிவு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
த.ம 2

சிராஜ் சொன்னது…

இனிமே KRP க்கு போட்டியா, ஒவ்வொரு தடவை அவர் கவிதை வெளியிடும் பொழுதும் அவர் தளத்திலே அதே தலைப்பில் நானும் கவிதை எழுதலாம் என்று இருக்கிறேன்...

இது பதிவர் வரலாற்றில் முதல் முயற்சி... பார்த்திவிட்டு இதை தொடரலாம வேண்டாமா என்று சொல்லுங்கள் நண்பர்களே... KRP ய கவிதை எழுதாம தடுக்க எனக்கு வேற வழி தெரியல....

சிராஜ் சொன்னது…

மழை நாட்கள்....

இடி இடித்தது...
மின்னல் வந்து வந்து சென்றது...
மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது....
சாலைகள் எல்லாம் வெள்ளை முலாம் பூசியது போல் தண்ணீர்....

இரு சக்கர வாகனத்தில் நான்...
பள்ளம் தெரியாமல் விழுந்துவிட்டேன்....
மனிதர்கள் மட்டுமா....
நாம் அறியாமலே...
காலை வாருகிறார்கள்...
மழை நாட்களும்தான்.....

நிகழ்காலத்தில்... சொன்னது…

சிராஜ் உங்க கவிதை கேஆர்பி கவிதை க்கு கிட்டக்கூட வரலை :))

வெற்றி அடைந்த காதலுக்கும், தோல்வி அடைந்த விலகிப்போனதிற்கும் இடையில் என்ன நடந்தது என்று புரிந்தும் புரியாமல் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கும் காதலை அப்படியே எழுத்தில் கொண்டு வரத்தான் செய்கிறார் கேஆர்பி.,

dheva சொன்னது…

எக்ஸலண்ட்...!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கவிதைக்குள்ளே ஒரு முழுநீள கதையையே கொண்டு வந்துட்டீங்களேண்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அந்த ஃபீலிங் நல்லா வந்திருக்கு!

vimalanperali சொன்னது…

நேர் கோட்டில் நிறுத்துகிற விதிகள் நம் சமகால சமூகத்தின்,மனிதவாஅழ்வின் அசைக்க முடியாத நிகழ்வாயும்,பதிவாயும்/கடைசி வரிகள் உலுக்கி விட்டன.

Philosophy Prabhakaran சொன்னது…

தலைவரே... நல்லா கவிதை சமைச்சிருக்கீங்க...

சிராஜ் சொன்னது…

/* சிராஜ் உங்க கவிதை கேஆர்பி கவிதை க்கு கிட்டக்கூட வரலை :))
*/

ஐயோ சிவா,

நானெல்லாம் கவிதை அளவுக்கு வொர்த் கிடையாது. KRP யோடு என்னை ஒப்பிடவேண்டாம். KRP யோட கவிதை தலைப்பை பார்த்தவுடன், 2 நிமிடங்களில் நான் எழுதியது.

இது தான் நான் எழுத முயன்ற 3 கவிதை. இதெல்லாம் சும்மா தமாசுக்கு...

ஹேமா சொன்னது…

மாறாத காதல் மழை !

அன்புடன் நான் சொன்னது…

எனக்கு முன் பாதி வாய்த்தது ... பின்பாதி இன்னும் வாய்க்க வில்லை.
கவிதையில் உணர்வும் உயிர்ப்பும் இருந்தது.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் உழவர் தின வாழ்த்துக்கள்.

பட்டுக்கோட்டையான் சொன்னது…

அண்ணே அருமையான கவிதை , காதல் மனிதனை மனிதனாக்குகிற ஒரு ஆயுதம், அந்த ஆயுதத்தால் தன்னைத்தானே அளித்தவர்களில் நம்முடைய தமிழனுக்கு பெரும் பங்குண்டு......

பட்டுக்கோட்டையான் சொன்னது…

அண்ணே அருமையான கவிதை , காதல் மனிதனை மனிதனாக்குகிற ஒரு ஆயுதம், அந்த ஆயுதத்தால் தன்னைத்தானே அளித்தவர்களில் நம்முடைய தமிழனுக்கு பெரும் பங்குண்டு......

பட்டுக்கோட்டையான் சொன்னது…

தங்களுக்கும் தங்களை சார்தவர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Muthuvel sivaraman சொன்னது…

நல்லா கவிதை