சண்டை : 1
நேற்று (12.01.2012) மாலை புத்தகக் கண்காட்சியில் உயிர் எழுத்து அரங்கின் முன்னால் வசுமித்ரன், சங்கரராம சுப்பிரமணியன் இருவரும் இலக்கிய விவாதங்கள் முற்றிய நிலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். தீவிர இலக்கியவாதிகள் முன்னிலையில் நடந்த இந்த சண்டை சுற்றியுள்ள நண்பர்களால் விலக்கிவிடப்பட்டாலும் அந்த நேரத்தில் அவ்விடத்தில் இருந்த சிலர் இவர்களை பார்த்த விதம் வருத்தமாக இருந்தது. என்னதான் படித்தவர்களாக இருந்தாலும் மனதளவில் இன்னும் மாறாமல் இருக்கும் இவர்கள் படைப்பாளிகளாக இந்த சமூகத்துக்கு என்ன கொடுத்துவிட முடியும்?.
இந்த சண்டைக்கு நீண்டநாள் கருத்து மோதல் காரனமாக சொல்லப்பட்டாலும், ஊர் கூடியிருக்கும் ஒரு பொது அரங்கில் அதிலும் புத்தகக்கண்காட்சியில் நடந்த இந்த கேலிக்கூத்து படைப்பளிகள் அனைவரையும் சேர்த்து அசிங்கப்படுத்திவிட்டது. படித்தவர்கள் பண்புள்ளவர்களாக இருப்பார்கள் என்பது எழுதுவதற்கு மட்டும்தான் போலும்.
குழிப்பணியாரம்:
விமலாதித்த மாமல்லன் தலைமையில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் (கேண்டீனில்தான்) நான். கேபிள், நரேன், கவிராஜன், ரோசா வசந்த், லக்கி, அதிஷா, ஜெயராஜ் பாண்டியன் அனைவ்ரும் மாமல்லனின் பேச்சில் மயங்கியதை பார்த்ததும், மாமல்லன் அனைவருக்கும் குழிப்பணியாரம் வாங்கித்தருவதாக அடம்பிடித்தார். ஆனால் கேண்டீனில் மாவு தீர்ந்ததால் நாங்கள் தப்பித்தோம். மாமல்லனை தன் கேமராவால் விதவிதமாக சுட்டுத்தள்ளினார் ஜெயராஜ் பாண்டியன். அதில் ஒரு போட்டோவில் மாமல்லன் வெடிச்சிரிப்புடன் அபாரமாக இருந்தார். விரைவில் பேஸ்புக்கில் வரும்.
சண்டை: 2
இரவு 9 மணிக்குமேல் நண்பர்கள் ஜெயராஜ் பாண்டியன், நரேன், கேபிளுடன் ஆற்காடு மெஸ்சுக்கு சாப்பிடப்போனோம், உனவு முடித்ததும் ஜெயராஜ் பாண்டியன் கிளம்பிவிட்டார். அதன்பிறகு நான். நரேன், கேபிள் மூவரும் இந்திய சினிமாவை புரட்டிப்போடப்போகும் மூன்று திரைக்கதைகளை அலசிக்கொண்டிருந்தோம்.
இரவு பதினோரு மணிக்கு மேல் எங்களை ஒரு இருபது வயதுப் பையன் முழுப்போதையில் தள்ளாடியவாறு கடந்துபோனான். ஆற்காடு சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு ஒரு தற்காலிக வேகத்தடையாக இருந்தான். அவன் சாலையை கவனிக்காமல் தன் மொபைலில் யாருடைய நம்பரையோ தேடிக்கொண்டிருந்தபோது பில்ராத் போகும் சாலை வழியாக வந்த ஆட்டோ ஒன்று குடிமகனை உரசிக்கொண்டு திரும்பியது. அப்போதும் தன் மொபைலில் தீவிரத்தேடலில் இருந்தவனை ஆட்டோ ஓட்டுனர் சென்னையின் பிரத்யோக கெட்ட வார்த்தையில் திட்டவே, குடிமகன் பதிலுக்கு திட்ட, குடிமகனின் ஒல்லி தேகம் ஆட்டோ ஓட்டுனருக்கு ஒரு நம்பிக்கையை வரவைத்து ஆட்டோவை நிறுத்திவிட்டு குடிமகனை ஒரு அறை விட, போதை குடிமகனையும் உசுப்பிவிட இருவரும் சாலையில் கட்டிப்புரண்டபோது, சண்டையை அருகில் இருந்தவர்கள் பிரித்துவிட்டனர். ஆனால் இருவரின் செல்போனும் கானாமல் போயின. குடிமகன் செல்போனை கேபிள் எடுத்துக்கொடுத்தார். ஆட்டோக்காரன் செல்போன் கானாமல் போய்விட்டது. ஆட்டோக்காரன் தன்னுடைய கேமாரா மொபைல் தொலைந்த துக்கத்தில் புலம்பிக்கொண்டிருந்தபோது குடிமகன் ஆட்டோக்காரனிடம் வந்து மண்ணிப்புக் கேட்டான். காலம் கடந்த ஞானம்.
இதனால் அறியப்படும் நீதி:
இந்த இரண்டு சண்டைகளுமே நம் மக்களிடம் சகிப்புத்தன்மை என்பது எந்த அளவுக்கு கானாமல் போய்விட்டது என்பதையே காட்டுகிறது.
வாழ்க ஜனநாயகம்...
31 கருத்துகள்:
நெலமெ இப்படி ஆச்சே!!!
நான் ஏன் போராளியாகவில்லை?
ஹ்ம்ம். என்ன எழுத்துப்பிழை ஜாஸ்தி ஆகிடுச்சி ? ஏதேனும் உள்குத்து ??
இதனால் அறியப்படுவது யாதெனில்..இலக்கியவாதிகள் சில பலருக்கு முளைத்த கொம்பு காளைக்கொம்பல்ல. பூனைக்கொம்பே....!!
இலக்கியத்தை ஆட்டோவுடன் ஓப்பிட்ட உங்கள் ஞானத்தை மெச்சுகிறேன்..
குடி குடியை மட்டும் கெடுக்காது.... மானம் மருவாதி அல்லாத்தையும் கெடுக்கும்.... இது எல்லாருக்கும் தெரியும்.ஆனால் இதை யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டோம்.
இந்த சமூக தீங்கை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் செந்தில். அதுதான் ஒரே வழி.
குடி குடியை மட்டும் கெடுக்காது.... மானம் மருவாதி அல்லாத்தையும் கெடுக்கும்.... இது எல்லாருக்கும் தெரியும்.ஆனால் இதை யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டோம்.
இந்த சமூக தீங்கை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் செந்தில். அதுதான் ஒரே வழி.
செத்தா குடி, பிறந்தா குடி, பிறந்த நாளா குடி, கல்யாண நாளா குடி, வேலை கெடச்சா குடி, வேலை போனால் குடி... அய்யா இலக்கியங்களா, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழியா இல்லை??? ஏழைகளுக்கு நோட் புக் வாங்கி குடுங்க, சாப்பாடு போடுங்க, படிப்பு செலவுக்கு பணம் குடுங்க.. ஆயிரம் வழி இருக்கு. அத விட்டுட்டு குடிக்கிறீங்க.. இது தப்புன்னு கூட புரியாத நீங்க, சமுதாயத்தில வேற எந்த தப்ப திருத்தி கிழிக்கப்போறீங்க???
சில நல்ல இலக்கியவாதிகள் மட்டுமே விதிவிலக்கு. மற்றபடி எல்லாம் ஒரு மாதிரியாத்தான் திரியறாங்க.
இலக்கியவியாதிகள் என்றால் கொம்பு முளைத்து விடும் போல... அதனால் தான் பொது இடங்களில் முட்டிகொள்கிறார்கள்.
Vanakkam.....
Just....follow up...
விதி விலக்குகள் எங்கேயும் உண்டு சிவா... அவர்கள் மதிப்பிர்க்குரியவர்கள்....உதாரணம் நம்ம KRP .
பாகிஸ்தான் பார்டர் பக்கம் கூட நின்னுட்டு வந்துடலாம் போல. படைப்பாளிங்க சிலர் கூடுற எடத்துல நின்னா உள்ளாடைய தவிர எல்லாத்தையும் கிழிச்சிருவாங்க போல. ஒரே திகிலா இருக்கு. கே.ஆர்.பி கொடுத்து வச்சவர். நமக்கு இந்த சீன் எல்லாம் கண்ல பட மாட்டேங்குதே?
//சிராஜ் சொன்னது…
விதி விலக்குகள் எங்கேயும் உண்டு சிவா... அவர்கள் மதிப்பிர்க்குரியவர்கள்....உதாரணம் நம்ம KRP .//
அது என்னவோ உண்மைதான். கே.ஆர்.பி. அங்க சொல்லி இருக்க வேண்டிய டயலாக் "உங்க சண்டைல நான் குடுத்த 100 ரூவாய மறந்துடாதீங்க"
கே.ஆர்.பி. - விந்தை மனிதன் ரெண்டு பேரையும் கட்டிப்புரள வச்சி வேடிக்கை பார்க்க ஆசையா இருக்கு. அந்த நன்னாள் எந்நாளோ..!!
வாழ்க ஜனநாயகம்!
சொல்லமுடியாது அந்தக் குடிமகனும் எதிர்காலத்தில் இலக்கியவாதியாக வரலாம்! :-)
புலவர்களுக்குள் சண்டை வேண்டாம்!
நக்கீரா என்னை நன்றாகப் பார்..!
எவ்வளவு பார்த்தாலும் நீர் எழுதிய பாட்டு குற்றம் குற்றமே!
பாருடா இந்த அநியாயத்தை சிராஜ் எல்லாம் வந்து புத்தி சொல்றாராமாம் ..
வாடி நாம ரெண்டு பெரும் கட்டி உருள வேண்டி இருக்கு ....
அந்த ஒல்லியான இருபது வயது இளைஞன் நம்ம பிலாசப்பி தானே...............
ஏன் இத்தனை எழுத்துப்பிழைகள்?
//இந்த இரண்டு சண்டைகளுமே நம் மக்களிடம் சகிப்புத்தன்மை என்பது எந்த அளவுக்கு கானாமல் போய்விட்டது என்பதையே காட்டுகிறது// சகிப்புத்தன்மை என்னைக்கோ காணாம போயிடுச்சு. இப்போ செல்போனும் காணாம போக ஆரம்பிச்சுடுச்சு.
இலக்கியவாதியா இல்லாம இருக்குறதே நல்லது தானோ??? :)
அஞ்சா சிங்கம்,
முடிந்தால் சனிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்கு வரவும். சந்தித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.
மற்றபடி நாம சந்திச்சாவே சண்டை தானா ஸ்டார்ட் ஆயிடும்... அதுவும் பக்கத்தில குத்தி விடறதுக்கு சிவா இருந்தா கேட்கவா வேண்டும்????
/*
பாருடா இந்த அநியாயத்தை சிராஜ் எல்லாம் வந்து புத்தி சொல்றாராமாம் ..
வாடி நாம ரெண்டு பெரும் கட்டி உருள வேண்டி இருக்கு .... */
ஏன் நாங்க புத்தி சொன்னா கேட்க மாட்டீங்களா??? இலக்கியங்களா சொன்னாதான் கேப்பீங்களா??? ( நான் KRP ய சொல்லல)
//தீவிர இலக்கியவாதிகள் முன்னிலையில் நடந்த இந்த சண்டை //
செந்திலன்னே வன்மையாகக் கண்டிக்கிறேன். நானு அங்க இல்லவே இல்ல
புத்தகக் கண்காட்சிக்கு வர இலக்கியவியாதிகளுக்கு தடை விதிக்கணும் போல இருக்கு.
அதாவது, இலக்கியவாதிகள், குடிகாரர்,ஆட்டோ ஒட்டுபவர் எல்லோரும் ஒரே குட்டை மட்டைகள் என்கிறீர்கள்.
// யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
அதாவது, இலக்கியவாதிகள், குடிகாரர்,ஆட்டோ ஒட்டுபவர் எல்லோரும் ஒரே குட்டை மட்டைகள் என்கிறீர்கள்.//
கரெக்ட்டுங்க
just read....!don't go after them!!sometimes bus conductors who are giving right change with smiling face make my entire day happy more than a good book does!a polite auto driver charges reasonable amount during peak hour shows me the face of god!Start encouraging good behavior of the ordinary rather than praising unknown pretending intellectuals!...ha...ha....thanks....
இர்ண்டாவது சண்டை கூட மனிதாபி மானம் உள்ளவர்கள்
சண்டைபோல அல்லவா உள்ளது
அருமையான பதிவு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
த.ம 10
கருத்துரையிடுக