செவ்வகப் பெட்டிக்குள்
பாம்புகளின் ஆட்டம்
புணர்தலின் வேட்கையோடு பார்க்கும்
வரவேற்பறைக் கண்கள்
சாரைகள் இரண்டு (ஆண்,பெண்)
ஸ்லோபாய்சன் தடவிய தமிழை
காலர் மைக்குகளின் வழியே
துப்பிக்கொண்டிருக்க
மயில் ஆடும் திணைக்களத்தில்
மான் ஆடும் ஆங்கிலத்தில்
அனுதினமும்
பாம்பாட்டியின் மகுடிச் சத்தம்
கேட்டு மயங்கிய
நாகப்பாம்புகளின் தலைவனுக்கு
உறக்கத்திற்கு முந்தைய நிமிடத்தில்
புதிய டயாப்பரை மாட்டினான்
கட்சியின் கடைசித்தொண்டன்..
10 கருத்துகள்:
இந்த கவிதை நல்லாருக்குண்ணே.. இதுக்கு முந்தைய சில உரைநடை மாதிரி இருந்தது. கருத்தில் தவறிப்பிருப்பின் மன்னித்தருள்க :)))
இதற்கான விளக்கம் எப்போது வரும்...
அண்ணா , அருமையான கவிதை , யார்மேல் இந்த கொலை வெறி?...
தமிழகத்தின் ஊடகத்தின் அரசியல்....
இங்கேயும் ஒரு தமிழ் ருஷ்டி புதுப்பாடல் எதுவோ பாடுகிறது.
புரிந்தாலும்,புரியாவிட்டாலும்
கட்சி பத்வாக்கள் கைவசம்:)
ONNUM PURIYALAI...
BOSS...PURIYARA MATHIRI EZHUTHUNGALEN...
அதிகாலை வேலையில் சிரிக்க வச்சாச்சு?
என்ன ஆச்சு? அம்புட்டு தானா?
Coming Soon...
http://faceofchennai.blogspot.in/
யாரையோ தாக்குறீங்க ! -ன்னு புரியுது ! நன்றி !
இந்த கவிதை எனக்கு புரியல....
கருத்துரையிடுக