10 டிச., 2010

நான் இறந்து போயிருந்தேன் ...

நான் இறந்து போயிருந்தேன் 
சுற்றி அழும் கூட்டம் ஏதுமற்று 
தனியாக 
வழிதவறிய 
மலை உச்சியின் நேர் கீழே 
என் உடல் ..

இன்னும் சற்று நேரத்தில் 
இறந்து போகும் என் செல்பேசியும் 
தொடர்ந்த அழைப்புகளுக்கு 
பதிவு செய்யப்பட்ட 
பதில்களை கேட்டு வெறுத்துப்போன 
மனைவி 
சபித்துக்கொண்டே அடுப்பை அணைப்பாள்.

நாளையோ 
அதற்கடுத்த நாளோ 
என்னை தேடும் உத்திகள் மேற்கொள்ளப்படும்
அதற்குள் 
மலை எறும்புகளுக்கோ 
ஓநாய்களுக்கோ உணவாகி 
எலும்புகளாய் கிடைப்பேன்..

அதுவரை 
என்னை நேசித்தவர்களின் 
நம்பிக்கைகளில் 
நான் உயிருடன்தான் இருப்பேன்.. 

54 கருத்துகள்:

எல் கே சொன்னது…

அசத்தல்

Arun Prasath சொன்னது…

எத நெனச்சு எழுதினது அண்ணா இது? சோகமா இருக்கே...

மாணவன் சொன்னது…

//அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்.. //

அருமை அண்ணே

தொடருங்கள்.....

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்.. //

உண்மைதான்...

karthikkumar சொன்னது…

கவிதை அருமை

a சொன்னது…

கொஞ்சம் கனமான கவிதை.......

Ramesh சொன்னது…

செம... காணாமல் போணவர்கள் அப்படிங்கற பட்டியல்ல இருக்கற எத்தனை பேர் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என நான் நினைத்திருக்கிறேன்.. நல்ல பதிவு...

test சொன்னது…

நல்லாருக்கு பாஸ்! :-)

Mohan சொன்னது…

நல்லாருக்குங்க!

செல்வா சொன்னது…

//நாளையோ
அதற்கடுத்த நாளோ
என்னை தேடும் உத்திகள் மேற்கொள்ளப்படும்
அதற்குள்
மலை எறும்புகளுக்கோ
ஓநாய்களுக்கோ உணவாகி
///

கலக்கல் அண்ணா ..!!

ஜெய்லானி சொன்னது…

வித்தியாசமான கவிதை :-)

gamelover சொன்னது…

கவிதை நல்லாருக்கு...

அருண் பிரசாத் சொன்னது…

ஏண்ண்ந்ந் இப்படி? மனசு கனமாகிடுச்சு அண்ணே!

VELU.G சொன்னது…

//அதுவரை என்னை நேசித்தவர்களின் நம்பிக்கைகளில் நான் உயிருடன்தான் இருப்பேன்..
//

உண்மைதான்

சில விஷயங்கள் நடந்திருந்தாலும் அது நமக்குத் தெரியும் வரை அது நடக்கவில்லை என்றுதான் நிணைப்போம்

நாமே இவ்வுலகின் மையம். நமக்குத் தெரிந்தது மட்டுமே இவ்வுலகில் நடக்கிறது. மீதம் எது நடந்தாலும் நம்மைப்பொறுத்தவரை அப்படி ஏதும் இல்லை என்றுதான் நிணைப்போம்.

நல்ல கருத்துள்ள கவிதை

சசிகுமார் சொன்னது…

சூப்பர் சார்

வெட்டிப்பேச்சு சொன்னது…

உண்மையிலேயே மிக அருமை நண்பரே..

இது போல் நம்மிடையே எத்துனையோ இறந்துபோனவைகள் வெறும் நம்பிக்கைகளில் மட்டுமே..

வாழ்த்துக்கள்.

வினோ சொன்னது…

அண்ணா மீள் பதிவா?

எங்கயோ படித்த மாதிரி நியாபகம்..

sakthi சொன்னது…

நல்லதொரு கவிதை

Amudhavan சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு இனம் புரியாத ரகசிய சோகம் மறைந்திருப்பதுபோல் இருக்கிறதே.....வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

//அதுவரை என்னை நேசித்தவர்களின் நம்பிக்கைகளில் நான் உயிருடன்தான் இருப்பேன்..//
கவிதையை முடித்திருந்த விதம் நல்லாயிருக்குங்க..
படம் அருமை. நீண்ட நாள்களுக்கு பிறகு மிக ரசிக்க வைத்த படம்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கனமான கவிதை.......

vasu balaji சொன்னது…

ச்சிக்குனு இருக்கு:)

தமிழ் உதயம் சொன்னது…

தொலைந்து போவதும், கண் காணா மரணங்களும் உறவுகளுக்கு மிக பெரிய அவஸ்தை.

வைகை சொன்னது…

இன்று வரை உயிரோடு இருக்கும் நேதாஜி போல !

அன்பரசன் சொன்னது…

வழி தவறியவனின் நிலையை சொல்றீங்க.
நல்லா இருக்கு தல.

மாதேவி சொன்னது…

நெகிழ்ச்சி.

Chitra சொன்னது…

அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்..


...Super!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கவிதை அருமை

தினேஷ்குமார் சொன்னது…

அண்ணா கவிதை நல்லாருக்கு

ஏதோ சோகம் மறைந்து கொண்டிருக்கிறது தங்கள் உண்மையில் பகிர்ந்து கொள்ளுங்கள் அண்ணா

ஈரோடு கதிர் சொன்னது…

நிதர்சனம்!

குறையொன்றுமில்லை. சொன்னது…

கொஞ்சம் கனமான அசத்தலானகவிதை.

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

வெறுப்பும் , விருப்பமும் ஒன்று சேர்ந்த கதம்பம் ,கவிதை,அருமை

RK நண்பன்.. சொன்னது…

////அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்..////

Touching Lines Anna...
excellent Poem...

Especially The photo is awesome...

காமராஜ் சொன்னது…

ரொம்ப சிந்திக்கவைக்கிற எழுத்து.

Nesan சொன்னது…

நல்ல கவிதை

Unknown சொன்னது…

கலக்கல் நண்பரே

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

"நேசித்தவர்களின் நம்பிக்கைகளில் நான் உயிருடன்தான் இருப்பேன்"
சத்தியமான வார்த்தைகள் .நல்ல கவிதை செந்தில்

பனித்துளி சங்கர் சொன்னது…

இறந்த பின்னும் நட்பிற்கு உயிர் கொடுக்கும் வகையில் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி சகா

AKM சொன்னது…

வித்தியாசமாய் எழுத வேண்டுமென்ற சிந்தனை என்றால் ஒகே.. வேறு வகை அழுத்தம் எனில் நண்பர்களையோ மருத்துவர்களையோ மனம் விட்டு சந்தித்து பேசுவது நலம்.. இதை உங்களிடம் பழகாத ஒரு “நண்பன்” என்ற உரிமையில் எழுதுகிறேன்.. நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் ஏகேஎம்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பதிவு செய்யப்பட்ட
பதில்களை கேட்டு வெறுத்துப்போன
மனைவி
சபித்துக்கொண்டே அடுப்பை அணைப்பாள்///
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நல்ல கவிதை

ஹேமா சொன்னது…

ம்ம்...இறந்தபிறகும் மனங்களில் வாழும் மனிதர்களாய் வாழ்வதே வாழ்வு செந்தில் !

க.பாலாசி சொன்னது…

ம்ம்ம்.. சரிதான்..

பெயரில்லா சொன்னது…

தேன் துளியல்ல! பெரும் புயல்!

vinthaimanithan சொன்னது…

ஜொர வேகம் ரொம்ப அதிகமானா இப்படியெல்லாம் இல்யூஷன் தோணுமாம் :))))))

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 8-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை.

DR சொன்னது…

நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். இருந்தாலும் ரெண்டு இடத்திலும் வாக்களித்து விட்டேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

பாஸ் யார் மீது கோபம், அதன் வெளிபாடு இப்படி ஒரு கவிதையாக வரவேண்டுமா?

தினேஷ்குமார் சொன்னது…

அண்ணா எனது நூறாவது படைப்பு தங்கள் பார்வைக்கு

http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html

RK நண்பன்.. சொன்னது…

KRP anna how are you? ippo odambu eppadi irukku??

4 days gape vittuteenga.... seekiram aduttha pathivu podunga....

take care..

RK நண்பன்.. சொன்னது…

VIJAY TV programmes la romba expect pannunen but loosu pasanga cut pannittanga...

anyhow cable anna & jacki nalla pesunanga..

பெயரில்லா சொன்னது…

//அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்.. //கலக்கல்

"தாரிஸன் " சொன்னது…

//என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்.. //

நல்லாருக்குங்க...........