27 டிச., 2010

அதது..அததாய்...



அசூயையாய் விருப்பமற்று
"ம்" கொட்டினாலும் 
யாரிடமாவது இறக்கிவைக்கத்தான்
வேண்டியிருக்கிறது
மனக்கவலைகளை...

எப்படியாவது
ஒரு குறை வந்து
விரிசலை உண்டாக்கிவிடுகிறது 
பக்கத்துப் பக்கத்து
வீடுகளுக்கு...

நள்ளிரவில்
லிப்ட் கேட்பவர்களை
பயத்தோடுதான்
அணுகவேண்டியிருக்கிறது...

எப்போதும்
நிற்கும் இடத்தை விட்டு
தள்ளி நிறுத்தப்படும் பேரூந்தில்
ஓடித்தான்
தொற்றிக்கொள்கிறேன்...

உண்டியல்கள் வைத்து
வசூல் பண்ணியாவது 
காப்பாற்றத்தான் வேண்டியிருக்கிறது
கடவுள்களை...

இப்படியாக நகர்கிறது
வாழ்க்கை...
மனிதம் வாடியும்
மனிதம் நாடியும்..

28 கருத்துகள்:

THOPPITHOPPI சொன்னது…

1

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்லாயிருக்கு .

Raja சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள்...நல்ல கவிதை... வாழ்த்துக்கள் செந்தில்...

மாணவன் சொன்னது…

//உண்டியல்கள் வைத்து
வசூல் பண்ணியாவது
காப்பாற்றத்தான் வேண்டியிருக்கிறது
கடவுள்களை...

இப்படியாக நகர்கிறது
வாழ்க்கை...
மனிதம் வாடியும்
மனிதம் நாடியும்.. //

நிகழ்வுகளை வரிகளில் பதிவு செய்துள்ளீர்கள் அருமை அண்ணே

பகிர்வுக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல கவிதை அண்ணா..

வினோ சொன்னது…

/ உண்டியல்கள் வைத்து
வசூல் பண்ணியாவது
காப்பாற்றத்தான் வேண்டியிருக்கிறது
கடவுள்களை... /

காப்பவனை காப்பாற்ற வேற என்ன வழி இருக்கு...

க ரா சொன்னது…

kalakal :)

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு செந்தில்.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

சூப்பர் கவிதை...தலைவரே.

Unknown சொன்னது…

மனிதம் நாடும் வாழ்க்கையே தேவை...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Nice...

அன்புடன் நான் சொன்னது…

கவிதை சிறப்பு.... பாராட்டுக்கள் தோழரே.

அன்பரசன் சொன்னது…

//எப்படியாவது
ஒரு குறை வந்து
விரிசலை உண்டாக்கிவிடுகிறது
பக்கத்துப் பக்கத்து
வீடுகளுக்கு...//

அது எங்கதான் இல்லீங்க???

அன்பரசன் சொன்னது…

கவிதை நிதர்சனம்

vasu balaji சொன்னது…

குட் ஒன்

எம் அப்துல் காதர் சொன்னது…

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!

http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

ஹேமா சொன்னது…

இதைத்தான் நான் எப்போதும் சொல்வது வழக்கம்...வாழ்வு எனக்காக நகர்கிறதா இல்லை வாழ்வுக்காக நான் நகர்ந்துகொண்டிருக்கிறேனா என்று !

Paul சொன்னது…

//உண்டியல்கள் வைத்து
வசூல் பண்ணியாவது
காப்பாற்றத்தான் வேண்டியிருக்கிறது
கடவுள்களை...//

அழகான வரிகள்..!! :)

பெயரில்லா சொன்னது…

நல்லாயிருக்கு அண்ணா.. அவரவர் தடத்தில் அவரவர் தேடல்..

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

"நள்ளிரவில்
லிப்ட் கேட்பவர்களை
பயத்தோடுதான்
அணுகவேண்டியிருக்கிறது..."

உண்மையான உண்மை !நல்ல கவிதை

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் காரணிகளை கவிதையாக்கியிருக்கிறீர்கள். ரொம்ப நல்லாயிருக்கு.

Unknown சொன்னது…

நல்ல கவிதை

அருண் பிரசாத் சொன்னது…

நல்லா இருக்குங்க அண்ணே!

பாவாடை வீரன்... சொன்னது…

ஆமாம்.அவசர வாழ்க்கையில் மூச்சு மட்டுமே பயமில்லாமல் வருகிறது.

சண்முககுமார் சொன்னது…

நல்ல கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் செந்தில்...



இதையும் படிச்சி பாருங்க

வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்

குறையொன்றுமில்லை. சொன்னது…

மிகவும் சரியாகச்சொன்னிர்கள்.

அருண் சொன்னது…

//மனிதம் வாடியும் மனிதம் நாடியும்//
அருமை,கவிதை நிதர்சனம்.

வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…

அருமை நண்பரே!