22 டிச., 2010

வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க - பகுதி இரண்டு...

இதற்கு முந்தய பதிவில் விவசாயம் செய்ய அனைவரையும் வரவேற்றிருந்தேன். இந்த பதிவில் அதன் எதிர்கால பலன்களையும், விவசாயம் செய்வதற்கான சிறந்த வழிமுறைகள் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றியும் ஓரளவுக்கு அலசலாம். இன்றைய தேதியில் விவசாயம் என்பது, கிராம விவசாயிகள், தனித்தனியாக மிகக்குறைந்த அளவே நிலத்தில் பயிரிட்டு அப்படி பயிரிட்ட வெள்ளாமைகளை ஒழுங்காக அறுவடை செய்ய இயலாத நிலைதான் பரவலாக இருக்கிறது. பெரிய விவசாயிகள் எனப்படும் நிலசுவாந்தார்கள் தங்கள் பரந்துபட்ட வயல்களுக்கு நிறைய ஆழ்துளை கிணறுகளை போட்டு இலவச மின்சாரத்தை பயன்படுத்தி கண ஜோராக விவசாயம் செய்வார்கள். எங்கள் பகுதிகளில் தமக்கு போக எஞ்சிய நீரை மணிக்கு இவ்வளவு என வாங்கிகொண்டு விற்கவும் செய்வார்கள். கூட்டுறவு சங்கங்கள், மற்றும் அரசு வங்கிகள் இவர்களுக்கு மட்டும்தான் இருக்கும் அனைத்து கடன்களையும் கொடுக்கும் பின் அது தள்ளுபடியாகும் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த நிலசுவாந்தார்கள் பெரும்பாலும் தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளில் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் இருக்கிற சொற்ப நிலங்களையும் தங்கள் மகள்களின் திருமணத்திற்காக அல்லது பிள்ளைகளின் படிப்புக்காக பெரிய விவசாயிகளிடம் விற்றுவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். பொருளாதார புரட்சி அடைந்து விட்டோம், நாடு மறுமலர்ச்சி அடைந்து விட்டது எனக்கூவும் பொருளாதார வல்லுனர்கள் ஏ.சி அறையில் அமர்ந்துகொண்டு அட்டவணை தயாரிப்பதுடன் சரி, ஆனால் நாடு உண்மையில் ஊழலில் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. சரி விவசாயத்திற்கு வருவோம், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அதில் பல் நோக்கு விவசாயம் செய்வதால் ஒரு நான்கு பேர் இருக்ககூடிய குடும்பத்தால் நிம்மதியாக வாழமுடியும். பல்நோக்கு விவசாயம் என்பது ஒரே நேரத்தில் தொடர்புள்ள நிறைய பயிர்வகைகளை பயிரிடுவது. பொதுவாகவே அன்றாடம் காய்கறிகளுக்கு என தனியாக ஒரு விற்பனை வாய்ப்பு இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தையும் பிரித்து மிகுதியாக கீரை வகைகளையும், காய்கறிகளையும் இயற்க்கை முறையில் பயிரிட்டு அருகில் இருக்கும் நகரத்திற்கு எடுத்து சென்று நேரிடையாக விற்பனை செய்தால் இடைதரகர் ஏதும் இல்லாது மக்களுக்கும் நல்ல பொருள் கிடைக்கும், விவசாயிக்கும் அதிக லாபம் கிடைக்கும், கூடுதலாக இரண்டு பசுமாடுகளும், கொஞ்சம் ஆடுகளும், கோழிகளும் வளர்த்து வர அது தனியாக லாபத்தை தரும்.

இன்னொன்று இன்றைக்கு நிறைய கிராமங்களில் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி நிலங்களை  குத்தகைக்காக விடுகிறார்கள். அப்படி கிடைக்கும் நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து பயிர்செய்து பார்க்கலாம். விவசாயம் முழுக்க இயற்க்கை சார்ந்தது என்பதால் நீங்கள் விவசாயம் செய்த பகுதியில் எந்தந்த சீசனில் அதிக மழை பெய்யும் என்பதை அங்குள்ள பெரிசுகளை கேட்டால் பட்டியல் தருவார்கள், மேலும் அந்த பகுதி நிலங்களில் அதிகமாக விளைந்த பயிர்வகைகளையும் தெரிந்து கொள்ளலாம், மண் பரிசோதனை மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். குறைந்தது இருபது ஏக்கர் நிலம் இருந்தால் ஒரு மாடல் விவசாயப்பன்னையை நம்மால் அமைத்துவிடமுடியும். எல்லா எந்திரங்களும் மானிய விலைகளில் அரசால் தரப்படுகிறது, அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். என்னால் அப்படியெல்லாம் உழைக்க முடியாது என்பவர்கள்.கனி வகைகளை தரும் மரங்களை நட்டு வைத்து குறிப்பிட்ட காலம் வரைக்கும் மட்டும் காப்பாற்றினாலே போதும் பின்னாளில் அது மிகசிறந்த பலனை தருவதோடு நிலத்தின் மதிப்பையும் பன்மடங்கு உயர்த்தும்.

பண்ணை தொழில் முறையில் நீர்பிடிப்பு அதிகமுள்ள பகுதி என்றால் நிறைய குளங்களை வெட்டி மீன் வளர்க்கலாம், முறையாக பராமரிக்காத மீன் குளத்தில்கூட இயற்கையாக அதில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு வளரும் மீன்களால் பலன் இருக்கும், ஆனால் தஞ்சை மாவட்டம் முத்துபேட்டையில் நிறைய விவசாயிகள் மீன் வளர்ப்பதை முழுநேர தொழிலாக செய்து வருகிறார்கள். ஒரு நேரத்தில் செயற்கை இறால் வளர்ப்பால் கோடிசுவரர் ஆனவர்கள் இந்தபகுதியில் அதிகம். ஆனால் மீன் வளர்ப்பை போல் இறால் வளர்ப்பதை அலட்சியமாக செய்ய முடியாது. அப்படி செய்தால் அது மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். 

எல்லா கிராமங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி விவசாயம் செய்வதால்தான் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடுமையான மழைப்பொழிவை சமீப காலமாக சந்திக்கிறோம் அதனால் பயிர்கள் மூழ்கி மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்துகின்றன. ஆனால் அதைபற்றிய எச்சரிக்கை இல்லாமல் தொடர்ந்து இழப்பு ஏற்ப்பட்டு நிவாரணத்துக்கு கையேந்துகிறோம். அரசும் நம்மை அப்படி வைத்து பார்க்கத்தான் விரும்புகிறது என்பதால், தொலைநோக்கு பார்வையால் இதனை எப்போதும் அவர்கள் சரி செய்யவே மாட்டார்கள். எனவே மாற்றங்கள் என்பது தனிமனிதனில் இருந்துதான் துவங்க வேண்டும். தனித்தனியாக நாம் விழிப்புணர்வு பெறும்போது ஒரு கட்டத்தில் நமக்கு நமக்கான இலக்கு தெளிவாக புரிந்துவிடும்.

பல்நோக்கு விவசாயம் பற்றிய கருத்தரங்குகள் இப்போது அடிக்கடி குறைந்த கட்டணத்தில் நடைபெறுகின்றன. அதில் சந்தை வாய்ப்புகள் உட்பட பயிற்பராமரிப்பு மற்றும் விவசாய மேலாண்மை பற்றி சிறந்த பயிற்சிகளை அனுபவம் வாய்ந்த விவசாயிகளைக்கொண்டே சொல்லித்தருகிறார்கள். விவசாயத்தை முழுநேர தொழிலாக மேற்கொண்டால், ஒரு நிம்மதியான இயற்க்கைத்தன்மையுடன் இணைந்த வாழ்வைப்பெறலாம், உணவு உற்பத்தி சார்ந்த விசயம் என்பதால் நமக்கான அடிப்படை உணவுதேவைகளை நாமே உருவாகிக்கொண்டு அதனை வியாபாரம் செய்து பலன் பெறுகையில் ஏற்ப்படும் மனநிறைவு அலாதியானது. 

கூடிய மட்டும் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் ஒரு மாடல் பண்ணையை ஏற்ப்படுத்தி நேரடியாக விவசாயம் செய்து பார்க்கலாம் என அதற்க்கான முன் ஏற்ப்பாடுகளை இப்போதில் இருந்தே துவக்கி இருக்கிறேன். என்னில் மிகுதியாக படித்த விசயங்களை பகிர்ந்துகொள்வதைவிடவும் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில்தான் உண்மைத்தன்மை இருக்கும் என் நம்புபவன் நான். 

இதுபற்றிய உங்கள் அனைவரின் கருத்துகளையும் அறிய விழைகிறேன்...  

37 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

இன்னும் 5 வருடங்களுக்கு பின் விவசாயம் தான் மிகப்பெரிய தொழில்..

விவசாயத்தை தேடி மீண்டும் வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகம்...

பணம் இருப்பவர்கள் இப்பவே தோட்டம் வாங்கிப்போட்டால் பின்னால் மிக வசதியாக இருக்கும்...

மாணவன் சொன்னது…

// விவசாயத்தை முழுநேர தொழிலாக மேற்கொண்டால், ஒரு நிம்மதியான இயற்க்கைத்தன்மையுடன் இணைந்த வாழ்வைப்பெறலாம், உணவு உற்பத்தி சார்ந்த விசயம் என்பதால் நமக்கான அடிப்படை உணவுதேவைகளை நாமே உருவாகிக்கொண்டு அதனை வியாபாரம் செய்து பலன் பெறுகையில் ஏற்ப்படும் மனநிறைவு அலாதியானது.//

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் தெளிவான பார்வையுடன்...

சிறப்பாக எழுதியிருக்கீங்கண்ணே
தொடருங்கள்......

test சொன்னது…

//விவசாயத்தை முழுநேர தொழிலாக மேற்கொண்டால், ஒரு நிம்மதியான இயற்க்கைத்தன்மையுடன் இணைந்த வாழ்வைப்பெறலாம்//
உண்மை! உண்மை!

vasu balaji சொன்னது…

கொஞ்ச நாளாவே மனசுல இருக்கிற நினைப்புதான்.:)

ravikumar சொன்னது…

Article is useful. In long term it is good for the society & individual too

Arun Prasath சொன்னது…

உண்மையான கட்டுரை அண்ணே....

COVAIGURU சொன்னது…

thank you very much,may i contact you for more details

Unknown சொன்னது…

பக்கத்துல நமக்கும் ஒண்ணு பாத்து வை மாப்ளே. நானும் வரேன்..

இயற்கை விவசாயம், நம் உடலுக்கும் பாக்கெட்டுக்கும் நல்லது. விரைவில் செய்வோம்...

Jayaprakashvel சொன்னது…

மற்றெல்லா தொழில்களையும் போலவே விவசாயம் செய்ய மிகுந்த முன்னனுபவம் தேவை. என் தந்தை கடந்த நாற்பதாண்டுகளாக தனியாக விவசாயம் செய்கிறார். ஒரு சின்ன தப்பால் கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேலான ரூபாய்களை இழந்து விட்டார். நீங்கள் சொல்வது போல பல்னொக்கு விவசாயம் உன்மையில் பலன் தரக் கூடியது. குறைந்த பட்சம் நான்கு சொந்த ஆட்களாவது முழுனேரமும் செய்தாலொழிய முப்பது ஏக்கரை சமாளிக்க முடியாது. கூலிக்கு ஆட்கள் கிடைப்பதும் அவர்களிடம் வேலை வாங்குவதும் மிகவும் கடினமானது. இயந்திரங்களே ஆனாலும் இயக்க ஆள் தேவை. என் அப்பா ஒரு பவர் டில்லர் வைத்துள்ளார். அதை இயக்கும் வலு அவருக்கு இப்போது இல்லை. எனவே வேறு ஒருவர் தெவைப்படுகிரது. அதன் தேவை அதிகம் இருந்தாலும் ஆள் பர்ராக்குறை காரணமாக குறைந்த உபயோகத்திலேயே உள்ளது. விவசாயம் செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தைப் பாராடுகிறேன். முன்னனுபவம் இருந்தால் தைரியமாக இறங்கவும். வேறு ஒருவரின் ஆலோசனைகள் நமக்கு எல்லா விதங்கலிலும் பயன் தந்து விடாது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

goodpost sir.y dont u join in indli?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

wish to yr success

ஈரோடு கதிர் சொன்னது…

நல்ல விசயம்...
நிறையப் பேசலாம் இது குறித்து!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

தகவல்களுக்கு நன்றி. முடிந்ததா? தொடருமா?

உமர் | Umar சொன்னது…

நல்ல கட்டுரை.

சிறு விவசாயிகள் பலர் ஒன்று சேர்ந்து கூட்டுறவாக விவசாயம் செய்து நல்ல பலன் ஈட்டுவதாகக் கேள்விப்பட்டேன்.

வினோ சொன்னது…

அண்ணா, தனி மனிதனால் தான் மாற்றம் வரும்.. இந்த தொழிலும் அப்படியே...

தமிழ் உதயம் சொன்னது…

எல்லா கிராமங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி விவசாயம் செய்வதால்தான் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. ////

ஏன் இதை உணராமலே, அதையே தொடர்கிறார்கள். அருமையான பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

உண்மையான கட்டுரை

ரமேஷ் வீரா சொன்னது…

அண்ணா , கண்டிப்பாக விவசாயம் செய்வோம் ..........அன்புடன் தம்பி ரமேஷ் ...

பனித்துளி சங்கர் சொன்னது…

நம்மில் பலர் மறந்து போனதை மீண்டும் ஞாபகப்படுத்தி இருக்கும் உங்களின் விவசாயம் செய்யலாம் வாங்க என்ற தலைப்பில் விரிவானதொரு அலசல் . . சிறப்பானப் பதிவு தோழா

Unknown சொன்னது…

பருவம் பார்த்து பயிர் செய் என்பது தான் இனி வரும் காலங்களில் பெரும் சவாலாக இருக்கப்போகிறது. இன்னமும் இந்திய விவசாயியின் வாழ்க்கை சூதாட்டமாகவே இருக்கப்போகிறது, தற்போதைய வெங்காய நிலவரம் உணர்த்தும் விஷயத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு கணக்கில் வெங்காயம் தவிர்த்தது இப்போது சிலரை யோசிக்க வைத்திருக்கிறது. இப்போதைய நிலையை வைத்து வெங்காயத்தில் இறங்குபவர்கள் அடி வாங்க கூட நேரலாம். கணிப்பு முக்கியம் என்பது எம் கருத்து.

Unknown சொன்னது…

மாறிப்பொழியும் மழை, அரசியல் முடிவுகளால் மாறும் ஏற்றுமதி இறக்குமதி, வேலை ஆட்களின் பற்றாக்குறை, இவை பற்றிய பார்வைகள் இனி வரும் பதிவுகளில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

Unknown சொன்னது…

விவசாயத்திற்கு மிக அதீதமான உடல் உழைப்பு தேவைப்படும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆசைக்கு அரை நாள் வேலை பார்த்து விட்டு, ஒரு நாள் அசதியாய் கிடந்த அனுபவம் இருப்பதால்,

பட்டணத்தில் பொட்டி தட்டுபவர்கள், விவசாயம் செய்யப்போகும் போது, இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும், நாள் முழுக்க வேலை இருக்கும், அதற்கு உடம்பு வளைய வேண்டும். நாலு காட்சியில் அறுவடைக்கு வந்துவிட இது என்ன சினிமாவா?

Unknown சொன்னது…

//என்னில் மிகுதியாக படித்த விசயங்களை பகிர்ந்துகொள்வதைவிடவும் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில்தான் உண்மைத்தன்மை இருக்கும்//

True.

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல்:)

அன்பரசன் சொன்னது…

//இன்னொன்று இன்றைக்கு நிறைய கிராமங்களில் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி நிலங்களை குத்தகைக்காக விடுகிறார்கள்.//

இதேநிலைதான் எங்க ஊர்லயும்...

ஜோதிஜி சொன்னது…

செந்தில் இது போன்ற பதிவுகள் எழுதும் போது வலையுலகத்தில் விவசாயம் குறித்து உள்ள தளங்களை அறிமுகம் செய்து வையுங்கள். என் தளத்தின் கீழே சிலவற்றை இணைத்துள்ளேன். இன்னும் நிறைய தளங்கள் உண்டு.

a சொன்னது…

arumayana thodakkam.....

Er Rajamanickam சொன்னது…

krp sir,
himmavathi farm, karnataka Mr.pugalendhi is doing co-operative farming,it is a great success andhra govt.inviteing him and asked to do it in andhra too.
for furthur details
pugalendhi: 09488793322
rajamanickam:9894612304

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

//குறைந்தது இருபது ஏக்கர் நிலம் இருந்தால் ஒரு மாடல் விவசாயப்பன்னையை நம்மால் அமைத்துவிடமுடியும்//

இருபது ஏக்கருக்கு எங்க போறது? :)

மிக அதிக உடல் உழைப்பு தேவைப்படும்..

//கீரை வகைகளையும், காய்கறிகளையும் இயற்க்கை முறையில் பயிரிட்டு அருகில் இருக்கும் நகரத்திற்கு எடுத்து சென்று நேரிடையாக விற்பனை செய்தால்//

இதற்கு நிலத்துக்கு அருகேயே வீடு இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் திருடிச் சென்று விடுவார்கள்.. இதற்கும் நிறைய உழைப்பு தேவைப்படும்.. கிணறோ இல்லை ஆழ்துளை நீரோ தேவைப்படும்..

தொடருங்க..

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசே இப்போது ஒரு லட்ச ருபாய் வரை கடன் தருகிறது.நல்ல பதிவு செந்தில்

'பரிவை' சே.குமார் சொன்னது…

தெளிவான பார்வையுடன் சிறப்பாக எழுதியிருக்கீங்க.

தொடருங்கள் அண்ணா.

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஏழு இல்ல எட்டு வருடங்களுக்கு முன் பஸ் பயணத்தின் போது ஒருவரை சந்தித்தேன் ....அவரது தொழில் மண்புழு விற்பனை மற்றும் வளர்பத்தர்க்கு சொல்லித்தருவது ...........தினமும் குறைந்த பட்சம் 800 வருமானம் வருமாம் அப்போதே

ராஜன் சொன்னது…

அருமையான உண்மை கட்டுரை , எல்லோரும் விவசாயம் செய்வது சுலபம் அல்ல , அதற்கு அனுபவம் வேண்டும் , ஆனால் விவசாயி நேரடியாக எப்படி உதவுவது அல்ல அவர்கள் விவசாயத்தில் எப்படி நம் பங்கு கொள்ளவது , உதாரணம் ஒரு விவசாயி இடம் வைத்து உள்ளார் ஆனால் பணம் முதலிடு இல்லை என்றால் எப்படி அவர்களுக்கு உதவுவது என்று பதிவு போட்டால் நன்று .

ssk சொன்னது…

விவசாயம் தனி மனிதன் செய்வதற்கு லாயக்கு இல்லாத தொழில். சில வருடம் முன்பு இது போல் ஆசை பட்டு இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அடி பட்டு உள்ளேன். கால நிலை பாராது உடல் உழைப்பு தேவை. தொழிலாளர் தேவை. அவர்களுக்கு ஊதியம் தர வேண்டும். அறுத்தவைகளை கடைவீதி கொண்டு செல்ல வாகனம் மற்றும் பல செலவுகள். அடி மாட்டு விலைக்கு வாங்கும் கடை காரர்கள். இதற்குள் பயிறு போன்ற தானிய வகைகள் கேட்டு விடும் அபாயம்.மின் மோட்டார் பழுது ஆயிரகணக்கில் செலவு. மின்சாரம் இருந்தாலும். தண்ணீர் இல்லாமல் பயிர் கருகுதல், விதை செலவு, உரம் மற்றும் பூச்சி மருந்து செலவு, குழந்தைகளின் படிப்பு முதலான காரணத்தால் குடும்பத்தை கூட்டி சென்று, கிராமத்தில் வாழ முடியாது எனவே நான் மட்டும் தினம் போய் வரும் நிலை. அதனால் ஏற்படும் போக்கு வரத்து செலவு.
இதையெல்லாம் மீறி லாபம் என்பது மிக சொற்பம்.
உலகில் உள்ள தொழில்களில் மிக சிரமமானது இது.

வெறும் ஆத்ம திருப்தி வேண்டுமானால் இதை செய்யலாம். மற்ற படி வேறு தொழில் பரவாயில்லை.

நீங்கள் சொல்லியபடி அதிக நிலம் வைத்து அறிவியல் முறையில், கூட்டு பண்ணை முறையில், லாபம் வரலாம். மேலும் பலர் நமக்காக உதவி செய்ய இருந்தால் இது சாத்தியம்.

nerkuppai thumbi சொன்னது…

பலருடைய உள்ளக் கிடக்கை. விவசாயம் குறித்து ஏதாவதொரு செய்தியைப் பார்த்தபின் அல்லது ஒரு விவசாயியின் தற்கொலை, கிராமம் பாழ் ஆகிறது என்று ஒரு திரைப்படம் பார்க்கும் பொது வருவது : நாமும் கிராமம் சென்று விவசாயத்தை நல்ல முறையில் செய்து நாட்டு முன்னேற்றத்துக்கு நம் பங்கு ஆற்ற வேண்டும் என்று தோன்றும் ஒரு நினைவுக்கீற்று.
செயல் படுத்த முனைவோர் சிலரே. அவர்கள் முயற்சி வெற்றி அடைந்ததா என தகவல் இல்லை. பின்னோட்டம் இட்ட அன்பர் ssk, jayaprakashvel தங்கள் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.
என்னைப் போல பலரும் ஆர்வமாக உள்ளோம். தயை கூர்ந்து, ஒரு பத்து ஏக்கர் நிலத்தை வாங்கி/லீசுக்கு எடுத்து நிர்வாகம் செய்ய தேவையான ஆட்கள், பண முதலீடு, பயிர்கள் சாய்ஸ், பொருளாதார புள்ளிவிவரங்கள் எவரேனும் கொடுத்தால் குறைந்த பட்சம் பத்து பேர் சீரியஸாக இதை செயல் படுத்த கூடும்

Sowmiya Narayanan சொன்னது…

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை (திருச்சி - ஜீயபுரம் அருகே உள்ள கருப்பூரில்) தோப்பு/தோட்டம் அமைக்கலாம் என்று வாங்கினேன்.வாங்கிய பிறகு தன் அங்கே நெல்லை தவிர வேறு ஏதும் செய்வது மிக கடினம் என்று உணர்ந்தேன்.நான்கு ஆண்டுகளாக நெல்லை பயிர் செய்து வருகிறேன்.ஓரளவு லாபம் கிடைப்பது ஆகவே எண்ணுகிறேன்.ஆனால் என்னுடைய நிலத்தில் உளுந்து சரியாக வருவது இல்லை.
நான் ஒரு கணினி பொறியாளன்.ஆட்களை வைத்து செய்து வரும் எனக்கே லாபம் கிடைக்கும் போது நேரடியாக ஈடுபட்டால் விவசாயம் மிக சிறந்த ஒரு தொழில் ஆகவே எனக்கு தோன்றுகிறது.

Raj Muthu Kumar சொன்னது…

அண்ணே, சூப்பரா சொன்னீங்க. ஜீரோ பட்ஜெட் விவசாயம் சொல்லித்தரும் சுபாஷ் பலேகர் படியுங்கள். மன்சூர் கான் (அமீர் கான் மாமா) தன் சினிமா கனவுகளை விட்டு விட்டு மாடல் பண்ணை உருவாக்கி இருக்கிறார். அவருடைய வலைமனை உங்களுக்கு உதவியாக இருக்கும். www.acres-wild.com .