4 மே, 2011

ஒசாமாவும், போட்டோ ஷாப்பும் பின்னே ஒபாமாவும்...

சமீபத்திய பரபரப்பு படமான ஒசாமாவின் கொலை எல்லா ஊடகங்களிலும் வெற்றிகரமாக ஒட்டப்பட்டது. அந்தப்படத்தை தயாரித்து உலகுக்கு வழங்கிய புதிய தாதா அண்ணன் ஒபாமாவுக்கு எனது மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டு கதைக்குள் நுழைவோம். அதாகப்பட்டது அதன் திரைக்கதையின் சிறப்பம்சமே அதிலிருக்கும் அதிபயங்கர மயிர்க்கூச்செரியும்  திருப்பங்களுக்கு உதவிய துனைக்கதைகளே!. எல்லா ஹாலிவுட் ஆக்சன் படங்களைப்போலவே..

1. எதிரி நாட்டுக்குள் அவர்கள் ரேடாரில் பார்க்க முடியாத வகையில் நுழைவது. இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு அது யு.எஸ்ல வாங்குனதுதான்.
 
2. ஹெலிகாப்டரில் இருந்து அதிபயங்கர ஆயுதங்களுடன் இறங்கி வில்லனை வேட்டையாடும் காட்சி. இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு அதற்கு பக்கத்திலேயே ஆர்மி அகாடமி!. 

3. வில்லனை கொன்றபின் அவன் உடலை கைப்பற்றியும் சிலரைக் கைது செய்தும் எதிரி நாட்டு ராணுவம்  தூங்கி முழிப்பதற்குள் வெளியேறுவதும். இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு ஒரு ஹெலிகாப்டர் வேற ஒர்க் ஆகல.

4. வில்லனை கடலில் தூக்கி போடுவது. இனி ஒசாமாவே நெனச்சாலும் அவரோட பாடிய கண்டுபிடிக்க முடியாது!
5. கடைசியாக ஹீரோ டெலிவிசனில் உரையாடிய பின் அவரோட இமேஜ் 56% அதிகரித்தது.
                                            
                                                        &&&& சுபம் &&&&&

ஒசாமாவை கொல்றது ரொம்ப ஈசிங்க, ஒபாமா, நீங்க, நானு அல்லது  யாரும் கொன்னுடலாம். எப்புடின்னு முழிக்காதீங்க மேலே இருக்கிற மூன்று ஒசாமா படத்தில் முதலில் இருப்பது அவர் எப்போதோ பேசியபோது எடுத்த படம். மூன்றாம் படம் போட்டோ ஷாப்பின் ஆரம்பம். நடுவில் இருப்பதுதான் எல்லா ஊடகங்களாலும் காட்டப்பட்ட படம்.

இங்க இருக்கிற மூக்கையும், உதடுகளையும் நல்லாப் பாருங்க.


இப்படியெல்லாம் சொல்றது நானில்லை. நம்ம David Vaughan Icke. இவரைப்பத்தியும். இவர் எழுதிய புத்தகம் பத்தியும் நாளை பார்க்கலாம்..

தொடர்புடைய சுட்டி:
http://www.prisonplanet.com/media-runs-fake-photo-to-illustrate-bin-laden-death-propaganda.html

26 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் புலனாய்வு?

ராஜ நடராஜன் சொன்னது…

மூக்கு வித்தியாசம் ஒன்னும் பெரிசா தெரியலை.ஆனா டோராபோரா நேரத்திலேயே ஒசாமா மூஞ்சி டொக்கு விழுந்துதான் இருந்தது.இந்த பத்து வருசத்துல இன்னும் அதிகமா டொக்காகி யிருக்கனும்.

சிசு சொன்னது…

நெசந்தானா....
எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியலியே......

Maggie சொன்னது…

USA didn't release the official image of Osama yet... this photo is fake and it's there in the net since 2009.
-mahin

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

எனக்கு ”ஒண்ணுமே புரியலே உலகத்திலே” ன்னு பாடத்தோணுது.

அடுத்த பதிவு வரட்டும். காத்திருக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

மொத்தத்தில விஜயகாந்படம் போல...)

பெயரில்லா சொன்னது…

why the USA didn't release any official photos?

பெயரில்லா சொன்னது…

This is just a game, can i say this as a OBAMA ELECTION GAME?

http://www.youtube.com/watch?v=nvzMLJ0HpdI&feature=player_embedded

Jana சொன்னது…

எல்லா இடத்திலையும் சுத்துமாத்துக்கள்தான் :)

Unknown சொன்னது…

ஏற்கனவே நிலவில் காலடி வைத்த முதல் பற்றிய முதல் மனிதன் என்ற சர்ச்சைக்குரிய படத்தின் அடுத்த வாரிசு இதுவா?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

உலகை ஏமாற்றுவதில் அமெரிக்க ராணுவத்தினருக்கு ஆஸ்கார் போல ஏதாவது விருது இருந்தால் பரிந்துரை செய்யலாம்

Unknown சொன்னது…

ஒபாமா கொல்லப்பட்டது என்ற செய்தியை குறித்த உங்களது பார்வையை, அதாவது தற்போதைய சூழல் பற்றிய அலசலை அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கலாமா?

ILA (a) இளா சொன்னது…

இதை வெளியிட்டது அமெரிக்க பத்திரிக்கை இல்லை The Dawn என்கிற பத்திரிக்கை. அது எங்கே இருந்து வருதுன்னு கண்டுபுடிச்சீங்கன்னா உங்க பதிவு புஸ்ஸுன்னு ஆகிப்போயிரும்

Unknown சொன்னது…

இந்த படத்தினை அமெரிக்கா அதிகாரபூர்வமாக வெளியிட்டவில்லை... இது எதோ பத்திரிகையின் கைங்கரியம்.
அமெரிக்க தனியே அறிவித்தல் மட்டுமே கொடுத்துள்ளது... ஆதாரம் எதனையும் வெளியிடவேயில்லை :)
சரிபார்த்துக்குங்கா மாப்பு :)

Unknown சொன்னது…

பாலா இந்த வார துக்ளக்கில் ஒரு கேள்வி.... ஐ.நா குழு இலங்கையை போர்க்குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டி இருக்கிறதே... ? எனும் கேள்விக்கு சோ வின் பதில் ... ஐ.நா குழு தவறான கருத்து சொல்லி இருக்கிறது.. இலங்கையில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டு இ...ருக்கிறார்கள்.. என்று பதில் சொல்லியிருக்கிறார்... ( படித்த அந்த கணமே எனக்கு கண்களில் நீரும் மனம் மிக கொடூரமாக எண்ணி வன்மத்தில் திரும்பியது.. அடக்கிக்கொண்டேன்... என்ன பாலா சோவுக்கும் ஒரு பேத்தி இருப்பதாக படித்திருக்கிறேன்.. இவ்வளவு கொடூரமான நபர் எப்படி பாலா பத்திரிகை நடத்துகிறார். இதையும் தமிழானான நானும் படித்து விட்டு எதுவும் செய்யமுடியாமல் கையறு நிலையில் நிற்கிறேன். இவர்கள் மிருகங்களை விட கொடூரமானவர்களா....?

kumar சொன்னது…

நீங்களும் நானும் வன்மம் காட்டுவது ஒருவகை.ஆனால் பிராமணர்கள் காட்டும் வன்மம் அலாதியானது.
அதை ஆராய ஆரம்பித்தால் தலையில் ஒரு மயிரும் மிஞ்சாது.

VJR சொன்னது…

kama, its too late. cho is always like this.

Unknown சொன்னது…

அண்ணே போட்டோ டூப்புதான். உண்மையான படத்தை வெளியிட மாட்டேன்னு ஒபாமா சொல்றாரே...

Unknown சொன்னது…

கே.ஆர்.பி, இந்த போஸ்டை நீக்குறது நல்லது. :))

sriram சொன்னது…

செந்தில்
அமெரிக்கா புகைப்படமோ விடியோவோ கொடுக்கவில்லை, பத்திரிக்கைகள்
வாய்க்கு வந்ததை எழுதியும் கைக்கு கிடைத்ததை பிரசுரித்தும் வருகின்றன,
ஒபாமா சொன்னதில் சில உண்மைகளும் பல பொய்களும் இருக்கலாம்
ஆனால் பிராபகரன் சாவில் இருந்த அளவுக்குக் கூட ஒசாமிவின் சாவில் சந்தேகங்கள் இல்லை.
ஒரு விசயம், தன் நாட்டில் பயங்கரவாதம் நிகழ்த்திய ஒருத்தனை பத்து வருடங்கள் ஆனாலும் ஓட ஓட விரட்டிக் கொல்லும் தில்லும் கெத்தும் அமெரிக்காவுக்கு இருக்கு. Quarterly Review மாதிரி மூணு மாசத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு சிடியா தேர்ந்தெடுத்து பட்டாசு வெடிக்கறவ்னைப் பிடிச்சு மூணு வேளையும் பிரியாணி போடுற நாம அமெரிக்காவின் கதையில் உள்ள ட்விஸ்ட்டுகளை பத்தி பேச மட்டுமே செய்யலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

a சொன்னது…

என்னாதிது???

Unknown சொன்னது…

//5. கடைசியாக ஹீரோ டெலிவிசனில் உரையாடிய பின் அவரோட இமேஜ் 56% அதிகரித்தது//

இதுக்குத்தான் இவ்வளவு கூத்தும், மாப்ளே! இந்தியாவோட ரொம்ப ஒட்டுனதுலேருந்து அமெரிக்க அரசியல்வாதிகள் போக்கு சரியில்ல ;))))

பெயரில்லா சொன்னது…

எனக்கு ”ஒண்ணுமே புரியலே உலகத்திலே” ன்னு பாடத்தோணுது//

enakkum...........

நீச்சல்காரன் சொன்னது…

இந்தப் படங்கள் அதிகாரப் பூர்வமாக வெளிவந்தவைகள் அல்லாத பட்சத்திலும் ஒசாமாவின் மரணத்தை பலர் உறுதிசெய்துள்ளனர்.

Santhose சொன்னது…

When a bullet went through Osama's eye difinetely his face should be broken into two pieces. I hear this one from ex US Marine. Because of that US don't want to release his photo.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

ஒசாமா சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படம் என்று எதையோ வெளியிட்ட எந்தவொரு ஊடகமாவது தனது தவறுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறதா?? # ஊடக அதர்மம்
www.twitter.com/AMuthuPrakash