மதிப்பீடுகளின்
எள்ளலில் தொக்கி நிற்கும் நட்பில்
இன்னும் மிச்சமிருக்கிறது
கொஞ்சம் புன்னகையும்,
நிறைய கோபமும்.
புறமுதுகின் வசனங்கள்
ஆடிகளிலும் தலைகீழாகத் தெரிய
இன்னொரு ஆறுதலில்
குமுறும் செய்திகள் காற்றில் பரவ
துண்டிக்கப்படும் கணத்தில்
துடிக்கும் பல்லியின் வாலென
படபடக்கும் இதயத்தை நிறுத்த
தேவைப்படுகிறது ஒரு துளி
கண்ணீர்.
துவங்குவது போல் முடிவதேயில்லை
எப்போதும் நட்பு.
எல்லா நட்புகளிலும்
சிறிய குறைகளேனும்
இருந்து கெடுத்துவிடுகிறது.
அவனையெல்லாம்
மனுசனா மதிக்கறதேயில்லை என்றான்
இவன்
அதையே சொன்னான்
அவனும்.
பிரிந்தபின்னும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
மாற்றி மாற்றி
நேசத்தையும் துரோகத்தையும்.
அன்பை மட்டுமே தரும்
நட்பு
இனிமேலும் வாய்க்காது
உலகில்.
சுலபமாக மறைத்துவிட முடிகிறது
எல்லோராலுமே
தத்தமது துரோகங்களை.
எள்ளலில் தொக்கி நிற்கும் நட்பில்
இன்னும் மிச்சமிருக்கிறது
கொஞ்சம் புன்னகையும்,
நிறைய கோபமும்.
புறமுதுகின் வசனங்கள்
ஆடிகளிலும் தலைகீழாகத் தெரிய
இன்னொரு ஆறுதலில்
குமுறும் செய்திகள் காற்றில் பரவ
துண்டிக்கப்படும் கணத்தில்
துடிக்கும் பல்லியின் வாலென
படபடக்கும் இதயத்தை நிறுத்த
தேவைப்படுகிறது ஒரு துளி
கண்ணீர்.
துவங்குவது போல் முடிவதேயில்லை
எப்போதும் நட்பு.
எல்லா நட்புகளிலும்
சிறிய குறைகளேனும்
இருந்து கெடுத்துவிடுகிறது.
அவனையெல்லாம்
மனுசனா மதிக்கறதேயில்லை என்றான்
இவன்
அதையே சொன்னான்
அவனும்.
பிரிந்தபின்னும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
மாற்றி மாற்றி
நேசத்தையும் துரோகத்தையும்.
அன்பை மட்டுமே தரும்
நட்பு
இனிமேலும் வாய்க்காது
உலகில்.
சுலபமாக மறைத்துவிட முடிகிறது
எல்லோராலுமே
தத்தமது துரோகங்களை.
15 கருத்துகள்:
துவஙுகுவதுபோல் முடிவதில்லை
நட்பு எப்போதும்
சத்தியமான வார்த்தை
சில வடுக்களை உண்டாக்கிச் செல்வதால்
ஏற்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
இழந்தவர்கள் படுகிற அவஸ்தை
பெற்ற சுகத்தைவிட கூடுதலானது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
புனைவு ???
நட்புக்கு நிகர் இவ் உலகில் வேறென்ன உள்ளது
நச்!
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது.
//துடிக்கும் பல்லியின் வாலென
படபடக்கும் இதயத்தை நிறுத்த
தேவைப்படுகிறது ஒரு துளி
கண்ணீர்.//
அருமை.
///
பிரிந்தபின்னும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
மாற்றி மாற்றி
நேசத்தையும் துரோகத்தையும்.
////
உண்மை தான்..
நட்பும் காதலும்
விலக விலகவே விஸ்வரூபம் எடுக்கும்...
நட்பெனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமையில்லாத செயலே....
வாழ்த்துக்கள்..
//எல்லா நட்புகளிலும்
சிறிய குறைகளேனும்
இருந்து கெடுத்துவிடுகிறது//
சரிதான்.
//
பிரிந்தபின்னும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
மாற்றி மாற்றி
நேசத்தையும் துரோகத்தையும்.
//
அட....
நூறு சதம் உண்மையான மனிதரை காண்பது மிகவும் கடினம் சார், மனிதரை அவரினி குறையுடனே ஏற்றுக் கொள்ள பழகிவிட வேண்டியதுதான்
உண்மைதான்..!
இந்தக் கவிதையின் அனைத்து உணர்வுகளையும் நான் சிற்சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்..
/////துவங்குவது போல் முடிவதேயில்லை
எப்போதும் நட்பு.
////////
எல்லோருக்கும் பொருந்தும் அழகான வரிகள்
/சுலபமாக மறைத்துவிட முடிகிறது
எல்லோராலுமே
தத்தமது துரோகங்களை./
அட்சர லட்சம் பெரும்:).
nice
கருத்துரையிடுக